ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா?

2 posters

Go down

பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Empty பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா?

Post by சாமி Thu 11 Oct 2012 - 15:23

உலகெலாம் எனத் தொடங்குவது இறைவனோட வாக்கு. நாம் அவ்வளவுதான் என நினைக்கிறோம். மறைமலை அடிகளுடைய ஆசிரியராக இருந்த சூளை சோமசுந்தர நாயக்கர் இதுபற்றி ஒரு தனிக்கட்டுரையையே எழுதியிருக்கிறார். எட்டு புள்ளி அளவில் அச்சில் 40 பக்கம் அந்தக் கட்டுரை வரும்.

சூளை சோமசுந்தர நாயக்கர், சைவ சண்ட மாருதம் என்று பெயர் பெற்றவர். அவர் சொல்கிறார் பெரிய புராணம் 4286 பாடல்களும் நடராசப் பெருமானுடைய வாக்கு. சேக்கிழார் பாடியது என்று சொல்லாதே என்பார். இதற்கு தர்க்க ரீதியாக பல காரணங்கள் காட்டுகிறார். பலபட ஆராய்ச்சி செய்து கூறுகிறார்.

உலகெலாம் என்று ஆண்டவன் தொடங்கினான் என்றால் அதை எப்படி முடிக்கணும்னு இறைவனுக்குத்தானே தெரியும் என்று கேட்கிறார். நான் என் முன்னே உள்ள குடிநீர் பாட்டிலைக் காட்டி இந்த பாட்டிலை என்று சொல்ல ஆரம்பிக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கப்புறம் என்ன சொல்லப்போகிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். நான் தொடங்கி அப்படியே நிறுத்திவிட்டால் இந்தப் பாட்டிலை?. என்ன பண்ணச் சொல்றீங்க என்று அன்பர்கள் முகம் கேட்கும் கேள்விதான் எழுமே ஒழிய நான் சொல்ல வந்ததை வேறு ஒருவர் சொல்ல முடியுமா? அது போல உலகெலாம்… என்று ஆரம்பித்த கடவுளுக்குத்தான் தெரியும் அதை எப்படி முடிக்க வேண்டும் என்று. அவர்தானே சொல்லி முடிக்கணும். கடவுள் சொல்ல வந்ததை நாம் சொல்லி முடிக்க முடியுமா?

உலகெலாம் என்பதை கடவுள் வானொலியாக (அசரீரியாக) வெளியே சொன்னார். மற்றவற்றை சேக்கிழார் உள்ளிருந்து உள்ளொலியாக (சரீரியாக) சொன்னார் என்று பல காரணங்களைக் காட்டுவார் சூளை சோமசுந்தர நாயக்கர் அவர்கள்.
(மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதிய ‘திருமந்திரச் சிந்தனைகள் புத்தகத்தில் இருந்து)

ஆக பெரியபுராணம் சிவபெருமானால் சேக்கிழார் வாயிலாக பாடப்பட்டது என அறிகிறோம்.
பெரிய புராணம் முதல் பாட்டு
பாடல் எண் : 1
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.


பொருள்;
எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம்அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச்சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வாம்.

பெரிய புராணம் கடைசி பாட்டு
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.


பொருள்:
எக்காலத்தும் எவ்விடத்தும் சிவபெருமானிடத்துக் கொள்ளும் இன்பம் பெருகும் இயல்போடு, அப்பெருமானை ஒன்று பட்ட உணர்வினார் பத்திமை கொள்ள, அவ்வுயிர்தானும் மேன்மே லும் சிறந்து திருவருள் இன்பத்தில் திளைக்குமாறு, தில்லைப் பேர வையில் திருக்கூத்து இயற்றிவரும் பெருமானுடையவும் அப்பெரு மானின் அடியவருடையவும்ஆன, பொருள்சேர்புகழ் நுவலும் இந்நூல், உலகெலாம் நிலவி நிலைபெற்று விளங்கும் என்பதாம்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Empty Re: பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா?

Post by ஆரூரன் Thu 11 Oct 2012 - 21:57

உலகெலாம்… என்று ஆரம்பித்த கடவுளுக்குத்தான் தெரியும் அதை எப்படி முடிக்க வேண்டும் என்று. அவர்தானே சொல்லி முடிக்கணும். கடவுள் சொல்ல வந்ததை நாம் சொல்லி முடிக்க முடியுமா?

அருமை ! அருமை !!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum