புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Oct 04, 2012 6:03 pm

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.


பொழிப்புரை :
கண்ணுதலாய்! நீ ஆட்டுவித்தால் ஆடாதார் ஒருவர் ஆர்? அடக்குவித்தால் அடங்காதார் ஒருவர் ஆர்? ஓட்டு வித்தால் ஓடாதார் ஒருவர் ஆர்? உருகுவித்தால் உருகாதார் ஒருவர் யார்? பாட்டுவித்தால் பாடாதார் ஒருவர் யார்? பணிவித்தால் பணியாதார் ஒருவர் ஆர்? காட்டுவித்தால் காணாதார் ஒருவர் ஆர்? நீ காட்டாவிடில் காண்பார் ஆர்?

குறிப்புரை :
 பரம்பொருளின் எட்டுக்குணங்களில் ஒன்று பேரறிவுடைமை. பரம்பொருள் சிவபெருமானின் நெற்றிக்கண்ணானது இந்த பேரறிவுடைமையைக் குறிக்கும். அதனால் கண்ணுதலாய் என பரம்பொருள் விளிக்கப்பட்டார்.
 ஆட்டுவித்தலாவது, உயிர்களை அவற்றது, `யான் எனது` என்னும் செருக்குக் காரணமாகப் பல்வேறு உடம்பாகிய பாவையுட் படுத்து, வினையாகிய கயிற்றினால் கீழ் மேல் நடு என்னும் உலக மாகிய அரங்கினிடத்து, வினையை ஈட்டியும் நுகர்ந்தும் சுழலச் செய்த லாகிய கூத்தினை இயற்றுவித்தல்.
 அடக்குவித்தல், மேற்கூறியவாறு ஆட்டுவித்தலால் ஆடி வரும் உயிர்கட்கு எய்ப்புத் தோன்றாதவாறு, ஆடலை இடையே சிறிது காலம் நிறுத்தி, யாதும் செய்யாதவாறு அமைந்திருக்கச் செய்தல்; இஃது, உலகம் முழுவதையும் அழிக்கும் முற்றழிப்பினால் நிகழும்.
 ஓட்டுவித்தலாவது, பின் நின்று ஆட்டுவிக்கின்ற தன்னை உள் நோக்கி உணராவண்ணம் உயிர்களைப் பிற பொருள்களை நோக்கிப் புறத்தே ஓடுமாறு ஓட்டுதல்; இது, `மறைத்தல்` என்னும் தொழிலினால் ஆவதாகும்.
 உருகுவித்தலாவது, புறமே ஓடிப் பயன் காணாது உவர்ப் பெய்திய உயிர்களைப் பின்னர் உள்நோக்கித் தன்னை உணருமாறு செய்து, தன்னையும் தனது உதவியினையும் நினைந்து நினைந்து அன்பு கூர்ந்து மனம் உருகுமாறு செய்தல்.
 பாட்டுவித்தலாவது, அவ்வுருக்கத்தின்வழித் தோன்றும் வாழ்த்துக்களையும் புகழ்ச்சிகளையும் வாயார எடுத்துப் பாடுமாறு செய்தல். இப்பாட்டுக்கள் தாமே பாடுவனவும், முன்னுள்ளனவுமாய் அமையும்.
 பணிவித்தலாவது, அன்புமிக்கெழுந்து பெருக தன்முனைப்பு அடியோடு நீங்குதலால், தன்முன்னே நிற்றல் இன்றி, நிலஞ்சேர வீழ்ந்து பணியச்செய்தல். உருகுவித்தல் முதலிய மூன்றும் முறையே மன மொழி மெய்கள் என்னும் மூன்றும் தன்வழி (இறைவழி)ப் படச் செய்விப்பனவாதல் காண்க. இம் மூன்றும், `அருளல்` என்னும் தொழிலால் அமைவன.
 “காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே” என்றது, `உயிர்கள் உன்னைக் காணாமை, நீ காட்டுவியாமையேயாம் எனவும், ``காண்பாரார் காட்டாக்கால்`` என்றது, `நீ காட்டுவியாத பொழுது, உயிர்கள் தாமே உன்னைக் காண வல்லன அல்ல` எனவும், `உயிர்கள் இறைவனைக் காண்டல் அவன் அருளால் அன்றி ஆகாது ஆதலின்` முத்திக் காலத்திலும் உயிர்கட்கு முதல்வனது உதவி இன்றியமையாதது` என்பதனை உடம்பாட்டினும் எதிர்மறையினும் வைத்து இனிது விளங்க அருளிச்செய்தார்.

ஆறாம் திருமுறை/திருநாவுக்கரசர் பாடியது / 095 /பொது/பாடல் எண்:3

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 04, 2012 6:20 pm

பாடலின் விளக்கத்தோடு குறிப்புகளையும் தந்தவிதம் அருமை . தொடருட்டும்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Oct 04, 2012 10:24 pm

நன்று !

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Oct 05, 2012 7:37 pm

"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா" ....

ஆகா .... நம்ம திருநாவுக்கரசு சாமிகள்கிட்ட இருந்து "கண்ணதாசன்" இந்த வரியை சுட்டுட்டாரா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 05, 2012 11:08 pm

பகிர்வுக்கு நன்றி சாமி.

சுட்டாலும் கவிஞரின் பாடல் தானே இந்த வரிகளை மக்களிடம் பிரபலம் ஆக்கியது.




mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Wed Oct 10, 2012 9:35 pm

பாடலின் விளக்கத்தோடு குறிப்புகளையும் தந்தவிதம் அருமை . தொடருட்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக