புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

10-ல், 10-ம், 10-வது = எது சரி?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 18, 2012 10:54 am

யாரோ எதனாலோ, எப்போதோ வழுக்கி விழுந்த பின்வரும் இடங்களில் நாமும் நம் சோம்பலால் வழுக்கி விழுந்து கொண்டே இருக்கிறோம்.
10-ல், 10-ம், 10-வது
மேல் உள்ளவாறு எழுதுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவற்றை முழுமையாக எழுத்தால் எழுதிப் பார்த்தால் விளங்கும்.

10-ல் இதை முழுமையாக எழுத்து வடிவத்திலேயே எழுதினால் பத்து+ல் = "பத்துல்' என்று தானே எழுத வேண்டும். இதைப் படித்துப் பாருங்கள். பத்துல் என்றுதானே வருகிறது. பத்தில் என்று நினைத்துக்கொண்டு எழுதும் நாம், பத்துல் என்று எழுதுகிறோமே இது முறைதானா?

அவ்வாறே பத்தாம் வகுப்பு என்று எழுதும் போதும் 10-ம் என்று எழுதுகிறோமே, இதையும் மேற்கூறியவாறு முழுமையாக எழுத்து வடிவில் எழுதிப்பார்த்தால் "பத்தும் வகுப்பு' என்றாதானே வருகிறது. ஆகவே, இவற்றை முறையே 10-இல், 10-ஆம் என்றுதான் எழுத வேண்டும். எழுத்தில் முழுமையாக எழுதினால் இந்தச் சிக்கலே வராது. எண்ணும் எழுத்தும் கலந்து எழுதப்படும் போதுதான் இச்சிக்கல் வருகிறது.

இவ்வாறே 10-கு என்று எழுதினால் "பத்துகு' என்றுதானே வரும். ஆகவே, இதைச் சரியாக எழுத வேண்டுமானால் 10-க்கு என்று எழுதுவதே சரி. எனவே, இத்தகைய இடங்களில் நமக்கு ஐயம் வரும்போது அப்பகுதியை முழுமையாக எழுத்து வடிவில் எழுதிப் பார்த்தால் ஐயம் தெளிந்து கொள்ளலாம்.

10-ஆம் வகுப்பு என்று எழுதுவதைக் கைவிட்டுச் சிலர் 10-வது வகுப்பு என்று எழுதுகிற வழக்கத்தை மேற்கொள்கின்றனர். இதை முழுமையாக எழுத்தால் எழுதினால் பத்து+வது = பத்துவது வகுப்பு என்றுதானே வரும். ஆகவே, அதனை 10-ஆவது என்று எழுதுவதே சரி. இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றொன்றும் இருக்கிறது. 10-ஆம் வகுப்பு என்று சொல்வதுதான் சரியானதே தவிர, ஆம் என்பதற்கு மாறாக ஆவது என்பதைப் பயன்படுத்துவதற்கு மொழி மரபில் இடமில்லை. ஏனெனில், ஆகும் என்னும் சொல்தான் ஆம் என மருவி வழங்கப்படுகிறது. வது என்பது ஆவது என்பதிலிருந்து வந்ததென்று கூறவும் முடியாது. அப்படி ஒரு மரபு இருப்பதாகவும் தெரியவில்லை. அதன் பொருளும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. ஆகவே, "ஆவது' அல்லது "வது' என்று எழுதும் முறையை முற்றிலும் கைவிடுவதே பொருத்தமாகும்.

(புலவர் மா.நன்னனின் "தமிழைத் தமிழாக்குவோம் நூலிலிருந்து...)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 18, 2012 10:59 am

இதுக்குத்தான் பத்து பேர் பத்து விதமா சொல்லுறத கேட்டு எழுதகூடாது நாமலே சுயமா சிந்திச்சு எழுதனுங்கறது நன்றி சாமி ஐயா நல்லதொரு விளக்கம் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 06, 2012 7:46 pm

திரு நன்னனின் கட்டுரையை பகிர்தமைக்கு நன்றி.

தொடருங்கள் சூப்பருங்க



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 06, 2012 7:52 pm

பத்தைப் பற்றி பத்திரமாக பதிய வைத்ததற்கு நன்றி



[You must be registered and logged in to see this link.]


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 7:54 pm

பத்தை பற்றி பத்தி பத்தியாக எழுதி
புத்தியில் படியும் படி சொன்னதுக்கு
நன்றி அருமையிருக்கு



[You must be registered and logged in to see this link.]
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Oct 06, 2012 8:28 pm

10-ல், 10-ம், 10-வது = எது சரி?

10 இல், 10 ஆம், 10 ஆவது என்று எழுதுவது சரியாக இருக்குமோ?
பத்து+இல் = பத்தில்
பத்து+ஆம் = பத்தாம்
பத்து+ஆவது = பத்தாவது

இவ்வாறு உயிரெழுத்துக்கள் சேர்த்து எழுதுவது சரியானது என்பது ஏன் கருத்து.

உங்கள் கருத்து முரண்படுமானால் விளக்கவும்?



[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 9:03 pm

பத்துக்குள்ள இவ்ளோ விஷயம் இருப்பதை உணர்த்தியதற்கு நன்றி சாமி.

வடிவேலு பத்து போட்டது மாதிரி தான் நாமும் செஞ்சிட்டு இருக்கோம்ன்னு விளங்குது.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 06, 2012 9:06 pm

நல்ல விளக்கம், நன்றி சாமி!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 07, 2012 1:16 pm

10 இன் விளக்கம் அறிய தந்தமைக்கு நன்றி சாமி! மகிழ்ச்சி மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 07, 2012 1:31 pm

சிவா wrote:நல்ல விளக்கம், நன்றி சாமி!
சிவா நமக்குத்தான் இது பிரச்சினையே இல்லியே - நாம எயித்து பெயிலாச்சே... புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக