புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
25 Posts - 69%
heezulia
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
361 Posts - 78%
heezulia
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமதம்


   
   
ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sat Oct 06, 2012 8:56 am

ஒரு உருவம் மறைந்து மறைந்து அலுவலகத்தில் நுழைந்தது. கண்காணிப்பாளரின் அறையை கடக்கும் போது ஒரு அசைவை உணர்ந்த அவர் திரும்பி பார்த்தார். அதற்குள் அந்த உருவம் அவரை கடந்து விட்டது. வேலை பளு காரணமாக அவர் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. கண்காணிப்பாளரிடம் இருந்து தப்பிய மகிழ்ச்சியில் தன் இடத்தை அடைய முற்பட்ட போது அந்த உருவம் உயர் அதிகாரியிடம் பிடிபட்டது. அது வேற யாரும் இல்லை. அந்த அலுவலத்தில் பணி புரியும் கார்த்திக்.

பிறகு எதற்கு ஒளிந்து மறைந்து வந்தான் என்று யோசிக்கிறீர்களா? அலுவலத்திற்கு தாமதமாக வரும் அவனை யாரும் பார்த்து விட கூடாது என்பதற்காக தான். அலுவலத்திற்க்கு தாமதமாக வருவது அவ்வளவு பெரிய குற்றமா என்று கேட்காதீர்கள்!! கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் இவன் 25வது தடவையாக தாமதமாக வருகிறான். அவனின் வெள்ளி விழாவை யாரும் கண்டு பிடித்து விட கூடாது என்றே ஒளிந்து மறைந்து வந்தான். கார்த்திக் தன் உயர் அதிகாரியின் அறைக்கு அழைக்கப் பட்டான். என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

அவனுக்கு அந்த கஷ்டத்தையே கொடுக்கலை அவர். உள்ளே நுழைந்ததில் இருந்து ஒரே வசவு மழை. வாயிலேயே வயலின் வாசித்தார். கார்த்திக்கு காதில் பஞ்சு வைத்து அடைத்துக் கொள்ளலாம் போல இருந்தது. இருந்தாலும் தன் ஐம்புலங்களையும் அடக்கி வைத்துக் கொண்டிருந்தான். முகத்தை பாவம் போல வைத்து கொண்டு நின்றிருந்தான். கார்த்திக்கின் மனக் குரல். அதான் மைண்ட் வாய்ஸ் இது. (பாழப்போன வேலைக்காக கண்டவன் திட்டுறதெல்லாம் காது கொடுத்து கேட்க வேண்டிருக்கு. நான் என்ன வேணும்னா பண்றேன். எனக்கு நேரம் சரி இல்லை. 7 ½ சனி நடக்குது. ஆடி போய் ஆவணி வந்தா டாப் பா வருவேன்னு எங்க அம்மாவே சொல்லிட்டாங்க. இவன் வேற கழுத்தறுக்கிறானே! சரி சமாளிப்போம்).

ஒரு வழியா வயலினோட வாய் அந்து போய் சத்தம் நின்றது. பாவம் அவருக்கும் வாய் வலிக்கும்ல. கடைசியாக வயலின் கொடுத்த சத்தம் இது. “5 நாள் சம்பளம் இல்லாமல் உன்னை வேலை நிறுத்தம் செய்யறேன். 6வது நாள் ல இருந்து சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வராவிட்டால் உன்னை மொத்தமாக வேலையை விட்டு நிறுத்தி விடுவேன்” என்று கூறியவரிடம் “சாரி சார். ஓகே சார்” என்று உளறிக் கொட்டினான் கார்த்திக். “கெட் அவுட் ஆஃப் மை ரூம்” என்று அலறினார். வெளியே வந்த கார்த்திக் “அப்பப்பா! இந்த ஆளு பிறக்கும் போதே ஸ்பீக்கர்ற முழுங்கிட்டார் போல இருக்கே. என்ன சத்தம். என்ன சத்தம். முடியலை” என்று புலம்பினான்.

தன் சக பணியாளர்களிடம் ஏதோ விருதை வாங்கியதை பகிர்ந்துக் கொண்டதை போல “ என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. நான் வீட்டுக்கு போறேன். வீட்டுக்கு போறேன்” என்று சந்தோஷமாக அறிவித்து விட்டு வீட்டுக்கு கிளம்பினான். வீட்டிற்கு சென்றதும் அவன் அப்பா, “என்னடா அதுக்குள்ள ஆஃபிஸ் ல இருந்து வந்துட்ட?” என்றார் ஆச்சரியத்துடன். காரணத்தை கூறியதும் வீட்டில இருந்த வயலினும் வாசிக்க தொடங்கியது. இது 24 வருடமாக கேட்டு கேட்டு சலித்துப் போன ராகம் தான் என்பதால் கார்த்திக் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அதற்குள் சமையல் அறையில் இருந்து வந்த அவன் அம்மா “விடுங்க. அவன் என்ன வேணும்னா பண்றான். அவன் கிரகம் தான் அவனை இப்படி ஆட்டி வைக்குது. பாவம் புள்ளை. காலையில சாப்பிடாம கூட ஆபிஸ் கிளம்பிட்டான். நீ வா டா!! சாப்பிடலாம்” என்று முடிப்பதற்குள் சாப்பிட அமர்ந்தான் கார்த்திக். “நல்லா கொட்டு. நீ எங்க அவனை உருப்பட விட போற” என்று தனியே புலம்பினார் கார்த்திக் அப்பா.

சாப்பிட்டு முடித்து தன் அறைக்கு சென்றவன் 1,2,3,4,5 என சுவற்றில் கிறுக்கினான். தன் வேலை நிறுத்த நாட்களை எண்ணிக் கொள்வதற்காக. நன்கு உண்டு உறங்கி என முதல் நாள் எப்படியோ கழிந்தது. சுவற்றில் இருந்த 1 என்ற எண்னை வட்டமிட்டு 1 நாள் முடிந்ததை குறித்துக் கொண்டான். 2 வது நாளில் இருந்து பொழுது கழிவதே பெரும்பாடாக இருந்தது. இனியேனும் எப்படியாவது காலம் தவறாமல் அலுவலகம் செல்வதென்று முடிவெடுத்தான். 5 நாட்கள் முடிந்தது. அன்று இரவு தூங்கும் முன் தன் அலைபேசியில் அலறிமணியை 6 மணிக்கெல்லாம் வைத்து விட்டு படுத்தான். ஏனோ அவன் தூங்கும் முன் சிறு சந்தேகம் ஏற்பட்டது. ஒரு வேலை அலைபேசி அலறிமணி அடித்தும் தான் விழிக்காவிட்டால் உயரதிகாரியின் வயலினை யார் கேட்பது என்று!!!

உடனே எழுந்து தன் வீட்டில் இருந்த எழுப்பு மணி கடிகாரம் இரண்டிலும் அலறிமணியை 6 மணிக்கு ஒலிக்க செய்துவிட்டு, தன் அம்மாவிடமும் காலையில் சீக்கிரம் தன்னை எழுப்பும் படி கூறி விட்டு உறங்க சென்றான். அலறிமணி வேலை செய்யுமோ செய்யாதோ என்ற குழப்பத்திலே இருந்தவன் உறங்க 3 மணி ஆனது. அனைத்து அலறிமணியும் சரியாக 6 மணிக்கு வேலை செய்தது. ஆனால் அவன் காதுகள் தான் வேலை செய்யவில்லை. பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவன் தந்தை எழுந்து, “ஏன் டி. உன் புள்ளை எனக்கு அலாரம் வச்சானா, அவனுக்கு வச்சானா. பாரு. எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி தூங்குறத.” என்று ஆரம்பித்தார். “காலைலே பிள்ளையை திட்ட ஆரம்பிச்சுட்டீங்களா? போய் பால் வாங்கிட்டு வாங்க. காபி போட்டு தரேன்” என்று சமாதானப் படுத்தி அனுப்பிவிட்டு, கார்த்திக் அறைக்கு சென்று, “தங்கம் எழுந்துரு பா” என்று 2,3 தடவை எழுப்பி பார்த்தாள். இடியே விழுந்தாலும் அவன் காதுகளில் கேட்பதாக இல்லை. அவளும் சமையல் அறை சென்று தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.

மணி 8 ஆனது. செய்திதத்தாள் படித்துக் கொண்டிருந்த அவன் அப்பா, “6 மணிக்கு அலாரம் வச்ச உன் புள்ளை இன்னுமாடி எழுந்திருக்கிறான்?” என்றார். “தெரியலைங்க. நான் கூட போய் எழுப்பி பார்த்தேன். எழுந்திருக்கலை” என்றாள் அவன் அம்மா. “இப்போ பாரு உன் புள்ளை எப்பிடி எழுந்திரிக்கிறானு என்றவர் ஒரு வாளி நிறைய தண்ணீரை எடுத்து வந்து கார்த்திக் மேல் ஊற்றினார். பதறி எழுந்தவன் திடுக்கிட்டு மணியைப் பார்த்தான். 8.30 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினால் தான் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியும். அலறிமணியையும், அம்மாவையும் திட்ட கூட அவனுக்கு நேரம் இல்லை. அவசர அவசரமாக ஒரு கையில் பல் துலக்கிக் கொண்டு, ஒரு கையில் முக சவரத்தை செய்துக் கொண்டிருந்தான். அரையும் குறையுமாக இரண்டையும் முடித்து குளியலறைக்குள் சென்றான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் அப்பா, “துரை இவ்வளோ அவசரமா எங்க கிளம்புறார்னு” என்று கேட்க, “தெரியலைங்க. என்கிட்டயும் ஏதும் சொல்லலை” என்றாள் அவன் அம்மா.

குளித்து முடித்து உடை அணிந்து கிளம்ப மணி சரியாக 8.30 ஆனது. எப்படியாவது சரியான நேரத்திற்கு செல்ல நினைத்து உணவு உண்ணாமலே வீட்டை விட்டு வெளியேறினான். தமிழ்நாட்டின் மின்தடையும் அவன் நேரத்தை வீணடித்தது. மின்தூக்கி வேலை செய்யாததால் படிக்கட்டுகளில் பறந்தான் எதிரே வந்த பக்கத்து வீட்டு நண்பன் இளங்கோ, “என்னடா கார்த்தி காலையிலே எங்க கிளம்பிட்ட?” என்று முடிப்பதற்குள் அவனை விலக்கிக் கொண்டு தன் இரண்டு சக்கர வாகனத்தை கிளப்பினான். வாகனமும் பொறுமையை சோதித்தே கிளம்பியது. வழியில் போக்குவரத்து நெரிசலும் அவனை விடவில்லை. அனைத்து பிரச்சனையும் சமாளித்து அவன் அலுவலக வாசலை அடைந்த போது மணி சரியாக 9. சரியான நேரத்திற்கு வந்து வயலின் வாயில் விழுகாததை நினைத்து மகிழ்ச்சியுடன் கதவை திறக்க முயன்றான். பல முறை முயன்றும்’ கதவு திறக்கவில்லை. அப்போது அங்கு வந்த அலுவலக காவலாளி, “சார் சார் என்ன பண்றீங்க.?” என்று கேட்க, “யோ ஏன் யா 9 மணி ஆகியும் கதவு திறக்காம என்னய்யா பண்ற?” என்றான் கார்த்திக். “இன்னைக்கு ஞாயிறுக் கிழமை சார். அது தெரியாம என்கிட்ட ஏன் கோவப்படுறீங்க?” என்றான் அலுவலக காவலாளி. நொந்து போன கார்த்திக் “என்னைக்காவது நான் சரியான நேரத்திற்கு வந்து பாத்துருக்கியா? அப்புறம் ஏன்?” என்று தலையில் கை வைத்து அருகில் இருந்த இருக்கையிலேயே அமர்ந்து போனான் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 11:41 am

கார்த்திக்கின் அவஸ்தைகள் அருமை.

நாங்கல்லாம் கார்த்திக் மாதிரி இல்லாமல் நேரத்துக்கு ஈகரைக்கு வந்துருவோம் - சிவா வயலின் வாசிச்சா கொடுமையா இருக்கும் அதான். புன்னகை




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக