ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  - Page 2 Empty தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!

Post by Guest Sat Oct 06, 2012 10:31 am

First topic message reminder :

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  - Page 2 Angkor-wat-temple-cambodia

பேஸ்புக்கில் கம்போடியாவில் அமைந்திள்ள உலகின் மிகப்பெரிய கோயிலான"அங்கோர்"தமிழர்களால் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டது என்றும் அதன் பெருமைகள் பற்றியும் சிறிது வாசித்திருந்தேன்.ஆவல் மேலிட அதனை பற்றி தகவல் சேகரித்து எழுதலாம் ஒரு பதிவாய் என்று தேட வெளிக்கிட்டால் சுவாரசியமான சில பயணக்கட்டுரைகளும் மேலும் சில செய்திகளும் கிடைத்தன.

இவற்றை எல்லாம் சேர்த்து தொகுத்து எழுதுவதை விட அவற்றை அவ்வாறே சுவாரசியம் குன்றாமல் பதிவிட்டால் வாசிப்போருக்கு சிறப்பாக இருக்கும் என்பதால் தேடலின் முக்கியமான சிலவற்றை தருகிறேன்.சில காலச்சுவட்டில் வெளிவந்தவை.காலச்சுவடு வாசகர்கள் ஏலவே வாசித்திருக்கக்கூடும்.ஆனால் காலச்சுவடு என்றாலே என்னவென்று தெரிந்தவர்களை விட தெரியாதவர்களே அதிகம் என்பதால் இப்பதிவு அங்கோர் கோயிலின் பெருமைகளை வாசித்தறிய,பகிர்ந்து கொள்ள உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.தொகுப்பு என்பதால் பதிவு மிக நீளமாய் இருக்கும்.ஆர்வமிருப்போர் உள்நுழைக.
-------------------------------
வடகம்போடியாவில் அமைந்துள்ள சிம் ரெப்(Siem Reap)ஐ விமானத்தில் சென்றடையலாம். சிம் ரெப்பில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆனால் பாங்காக்கிலிருந்து தற்சமயம் நன்கு சீரமைக்கப்பட்ட சாலைவழி அங்கே செல்வது ஒரு தனி அனுபவம். வறியவர்கள் மிகுந்த சிற்றூரான சிம் ரெப்புக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்?

அங்கிருந்து சில மைல்கள் தள்ளித்தான் முன்னொரு காலத்தில், அங்கோர் (Angkor) என்கிற ஒரு பெரும் நகரம் இயங்கிக்கொண்டிருந்தது. அப்பெரு நகரின் பேரழிவுகளாய் இன்றும் விரவி நிற்கின்றன அங்கோர் கோயில் கூட்டங்கள். மிகப் பெரியவை, பெரியவை, இடைப்பட்டவை, சிறியவை என்றெல்லாம் சொல்லத்தக்க சுமார் எழுபது கோயில்கள் இங்குள்ளன.

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  - Page 2 6

கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஆறாம் நூற்றாண்டுவரையிலான ஒரு காலகட்டத்தில் தென் கிழக்கு ஆசியா முழுவதும் இந்து மதம் அரசியல் செல்வாக்குடன் விளங்கியது. இக்காலத்திய கம்போடிய அரசர்கள் புனான் வம்சத்தினரென அழைக்கப்பட்டனர். கம்போடியாவில் வடக்குக்கும் தெற்குக்கும் பூசல்கள் நீடித்துவந்தன. கம்போடியாவின் ஒரு பகுதி ஜாவாவின் பிடிக்குள்ளிருந்தது. எட்டாம் நூற்றாண்டில் ஜாவாவிலிருந்து வந்த இளவரசன் கம்போடியாவை ஜாவாவிடமிருந்து பிரித்துத் தனிநாடாக்கி ஆளத் தொடங்கினான். அவன் பெயர் இரண்டாம் ஜெயவர்மன்.

கெமர் கலாச்சாரம் அவனிலிருந்து தொடங்குவதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அரசன் இறைவனாகப் போற்றப்பட்ட கலாச்சாரம் அது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்ட கோயில்தான் அங்கோர் வாட். இது மிகப் பெரும் இந்துக் கோயில் மட்டும் அல்ல உலகின் மிகப் பெரிய கோயிலும்கூட. இருநூறு ஹெக்டர் நிலத்தில் மேற்குத் திசை நோக்கிய இக் கோயில் விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிவனுக்கு அடுத்தபடியாக அதிகமான வழிபாட்டிற்குரியவர்களாக விஷ்ணுவும் புத்தரும் இருந்துள்ளனர்.

‘அங்கோர்’ என்கிற சொல் ‘நகர்’ என்கிற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கொள்ளப்படுகிறது. ‘வாட்’ என்றால் கோயில். ‘அங்கோர் வாட்’ என்பது நகரக் கோயில். கோயிலைச் சுற்றிலும் நம் நாட்டு அரண்மனைக் கோட்டைகளைச் சுற்றியுள்ளதுபோல் அகழி உள்ளது. வெளிப் பிரகாரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கோயில் உயர்ந்த கட்டடமாக எழுப்பப்பட்டுள்ளது.

கோயிலை மூன்று அடுக்குகளாகப் பார்க்க முடிகிறது. முதல் அடுக்கில் புடைத்த சுவர் சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. இரண்டாம் அடுக்கில் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் இறங்கிக் குளிப்பதற்கேற்பப் படிகள் உள்ளன. புத்தர் சிலைகளும் நிறையக் காணப்படுகின்றன.

அங்கிருந்து இரண்டாம் அடுக்கிற்குச் செல்ல மூன்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அடுக்கு பெரிய தளப்பரப்புடையதாக அதற்கு மேலுள்ள மூன்றாம் அடுக்கிற்கான பிரகாரமாக அமைந்துள்ளது. மூன்றாம் அடுக்கு விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது.

நான் சென்ற சமயம் அங்கே பராமரிப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், அந்தப் படிகள்மீது ஏறிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. படிகள் மிகவும் செங்குத்தாகவும் குறுகலாகவும் இருப்பதால் பல சமயங்களில் அவற்றின் மீது ஏறியவர்கள் சறுக்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். பொதுவாக அங்கோர் கோயில்களில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் காணப்படுகின்றன.

அங்கோர் வாட் கோயிலில் குருஷேத்திரப்போர் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. யுத்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நடக்கும்போது புடைப்புச் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ள அந்தப் பதினெட்டு நாள் நிகழ்ச்சிகளும் நம் கண்முன்னே ஒன்றன் பின் ஒன்றாக ரதங்கள் போன்று நகர்கின்றன.

அங்கோர் வாட் கோயிலை இரண்டாம் சூர்யவர்மன் முழுவதுமாகக் கட்டி முடிக்கவில்லை. எட்டாம் ஜெயவர்மன் காலத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் அது நிறைவுசெய்யப்பட்டது. இவ்வாறே பல கோயில்களும் நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டுள்ளன. பொருள் வசதி, மன்னர்களின் விருப்பம் போன்றவற்றைப் பொருத்துக் கட்டடப் பணிகளில் விரைவு, தாமதங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். சொல்லப்போனால் எல்லாக் கோயில்களுமே முடிக்கப்படாதவையாக இருப்பதாகக் கட்டடக்கலை ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  - Page 2 IMG_3437

அவ்வாறு முடிக்கப்படாத கோயில்களில் மிகவும் புகழ்பெற்றது பயோன். கிபி 1181இலிருந்து 1220 வரை வாழ்ந்த ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது பயோன். இது அங்கோர் தோமில் உள்ளது. அங்கோர் தோம் (பெரும் நகரம்), இப்போது கோயில்களை மட்டும் கொண்டிருக்கிறது. சுற்றிலும் காடுகள் நிரம்பியுள்ளன. இதன் தெற்கு வாயில் அழகானது. அகழியால் சூழப்பெற்றது. பாலத்தின் இரு பக்கங்களிலும் ஏழுதலை நாகத்தை வைத்து அசுரர்கள் கடைவதைப் பார்க்கலாம். திருபாற்கடலைக் கடையும் சிற்பங்களை அங்கோரில் பல இடங்களிலும் காண முடிகிறது.

அங்கோர் தோமில் சிகரம் வைத்தாற்போல் காணப்படுவது பயோன் கோயில். ஏழாம் ஜெயவர்மனால் தொடங்கப்பட்டு எட்டாம் ஜெயவர்மனால் முடிக்கப்பட்டது. ஏழாம் ஜெயவர்மன் புத்த மதத்தவர் என்பதால் லோகேஸ்வரரின் உருவங்கள் கோபுரங்களில் இருப்பதாக ஒரு சாரார் எண்ணுகின்றனர். ஆனால் அவை ஏழாம் ஜெயவர்மனின் உருவங்களாகக்கூட இருக்கக்கூடும் என்கிற யூகமும் வலுவானது.

அங்கோர் வாட்டைப் போன்று இதுவும் மூன்று அடுக்குகளில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கும் சதுர வடிவில் அமைந்துள்ளது. ஆனால் அதற்குள் வட்ட வடிவத்தில் கோவிலின் உட்புறம் படிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கையும் அடையப் பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மொத்தம் முப்பத்தியேழு கோபுரங்கள். பெரும்பாலான கோபுரங்களின் நான்கு பக்கங்களிலும் லோகேஸ்வரரின் (ஏழாம் ஜெயவர்மனின்?) முகங்கள். அவற்றைத் தவிரவும் பல்வேறு மூலைகளிலும் மனவெழுச்சியை உண்டாக்கும் முகங்கள் ஏராளமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அடுக்கிலும் நடந்து செல்லும்போது நாம் முகங்களால் சூழப்பட்டுக் கண்காணிக்கப்படும் உணர்வு வலுக்கிறது. அதன் உட்புற வாயில்கள் வழியே நுழைந்துவருவது மாயத்தை அனுபவிப்பதற்கு நிகரானது. படை வீரர்கள் ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டும் யானைகள் மீதேறியும் போர்க்களம் நோக்கிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள புடைப்புச் சிற்பங்களில் காணப்படுகின்றன.

அங்கோரிலுள்ள எந்தக் கோயிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படவில்லை. முடிக்கப்பட்ட பகுதிகளிலும் பல சிற்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புத்த கோயிலாக இருப்பினும் பயோனில், லிங்கங்களும் காணப்படுகின்றன. இவை பின்னர் அங்கே வைக்கப்பட்டிருக்கலாம். சிற்பங்கள் மக்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பதிவுசெய்து உருவாக்கப்பட்டுள்ளன.

கடைத்தெருவில் உள்ள பெண்கள், கோழிச்சண்டையைப் பார்க்கும் மனிதர்கள் எனப் பல்வேறு காட்சிகள் அங்கே தரப்பட்டுள்ளன. மூடிய கண்களும் திறந்த கண்களுமாகப் பெரிய தேவமுகங்களுக்கிடையே சாதாரண மனிதர்களின் இயல்பான வாழ்க்கைச் சித்திரங்கள் இடம்பெற்றுள்ள இக்கோயில்கள், வெறும் வழிபாட்டுத்தலங்கள் அல்ல என்பதை உறுதிசெய்கின்றன. ‘சுலபமாக நம்மால் பார்க்கவியலாத, சூர்ய ஒளி எளிதில் புகாத மூலைகளிலும் பல சிற்பங்கள் காணப்படுகின்றன.

வழிபாடு செய்ய இயலாவிடினும் இவ்வகையில் சிற்பங்களை வடித்ததன் மூலம் கெமர்கள் கடவுளர்களின் உலகத்தைக் கோயில்களில் உருவாக்கியதாக நம்பிக்கைகொண்டிருந்தனர்’ என்று அங்கோர் கோவில்கள் பற்றிய பிரதான ஆய்வாளர் எனப் பெயர் பெற்றுள்ள ஜார்ஜ் கோடிஸ் கருதுகிறார்.

இந்தக் காரணங்களுக்காகத்தான் இக் கோயில்கள் எழுப்பப்பட்டன என்று அறுதியிட முன்வரும் எவருக்கும் இவை பெரும் சவால்களைத் தோற்றுவிக்கின்றன. இவற்றில் நூலகங்கள் என்றழைக்கப்படும் கட்டடங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு கட்டடமும் இரண்டு கட்டுகள் கொண்டுள்ளது. அரசர் மற்றவர்களுடன் ஆலோசிக்கவும் ஆருடம் கேட்கவும் இந்த நூல கங்களைப் பயன்படுத்தி இருக்கலாம்.

இவை ஆடம்பரங்களற்ற கற்கட்டடங்கள். உருண்ட தூண்களால் தாங்கப்பெற்றுள்ளன. புடைப்புச் சிற்பங்கள் எதுவுமில்லை. இங்கே கல்வி கற்பிக்கப்பட்டிருக்கக்கூடும். எனவே கல்விக் கூடங்களாகவும் இவை பயன்பட்டிருக்கும்.
‘கடவுளர்களுக்கு நிகரானவர்கள் தாங்கள்’ என்று அரசர்கள் கருதியதால்

இவை நினைவுச் சின்னங்கள் என்று கருதவும் வாய்ப்புள்ளது. ஏழாம் ஜெயவர்மன் தன் தந்தையின் நினைவிற்காகக் கட்டிய கோயில் ‘தா ப்ரோம்’. அங்குள்ள லோகேஸ்வரரைத் தன் தந்தையின் சாயலில் அவர் வார்த்துள்ளார். அவருடைய மனைவிகளின் சிலைகளையும் அங்கே காணலாம். அவருடைய இரண்டாம் மனைவி, கல்வியைப் பரப்பப் பெரிதும் முயன்றவர் எனச் சொல்லப்படுகிறது. கெமர் சரித்திரத்திலேயே ஏழாம் ஜெயவர்மனுக்கு இணையாக இன்னொரு அரசன் தோன்றியதில்லை எனலாம்.

தொழுநோய் அரசன் என்னும் பெயரில் சிலை ஒன்றுண்டு. அதன் அசல் கம்போடியாவின் தலைநகரான ‘நாம் பெங்க்கி’லுள்ள பொருட்காட்சியகத்திற்குச் சென்றுவிட்டது. அங்கோர் தோமில் அதன் நகல் திறந்தவெளியில் மண்டபம் ஒன்றின் மீதுள்ளது. ஏழாம் ஜெயவர்மன்தான் அந்தத் தொழு நோயாளி எனச் சொல்பவர்கள் உண்டு.

அவர் பல மருத்துவமனைகளைக் கட்டியுள்ளதை வைத்து இவ்விதம் முடிவுக்கு வந்திருக்கலாம். நோயைத் தன் ஆட்சியில் கட்டுப்படுத்தவே மருத்துவமனைகளைக் கட்டினார் எனச் சொல்பவர்கள் உண்டு. அவர் திறமைசாலியாகவும் வலிமையுடையவராகவும் விளங்கினார் என்பதற்கு அவரது ஆட்சிக் காலம் சாட்சியாக விளங்குகிறது.


தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  - Page 2 1

சிம் ரெப் இறுதியாகத் தாய்லாந்தின் வசம் இருந்தது. அது சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுக்காரர்கள் கைக்கு மாறியது.
பிரெஞ்சுக்காரர்களால்தான் அங்கோர் கோயில்கள் உலகப் புகழ் பெறத் தொடங்கின. காடுகளைச் சுத்தம் செய்து அங்குள்ள கோவில்களை அவர்கள்தாம் புனருத்தாரணம் செய்தனர். பிரெஞ்சுக்காரர்கள் பல சிற்பங்களைத் திருடிச் சென்றனர் என்கிற குற்றச்சாட்டும் உண்டு. ஆந்ரே மால்ரா அங்குள்ள சிலைகளைத் திருடியதற்காகக் கைதுசெய்யப்பட்டார்.

பிரெஞ்சு காலனியின் சுவடுகளைச் சிம் ரெப்பில் பல இடங்களிலும் காண முடியும். சிம் ரெப்பில் உள்ள ஓட்டல்கள் புதுவையிலுள்ள கட்டடங்களை நினைவுபடுத்துகின்றன. பிரெஞ்சு மொழி பேசுகிற பழைய தலைமுறையினர் அங்கு நிறையக் காணப்படுகிறார்கள். பிரெஞ்சு வழிகாட்டிகள் எளிதில் கிடைக்கிறார்கள். கிட்டத்தட்ட எழுபது அங்கோர் கோவில்கள் சிம் ரெப் நகரில் காணப்படுகின்றன.

அங்கோர் வாட், அங்கோர் தோமிலுள்ள பயோன், தா ப்ரோம், தொம்மனான், பன்தே செராய், பே காங்க், நீக் பியன் போன்றவை மிக முக்கியமான கோயில்கள். இரண்டு நாட்களில் இவற்றையெல்லாம் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு மூன்றாம் நாளன்று ஏற்கனவே பார்த்தவற்றில் மிகவும் முக்கியம் எனக் கருதுபவற்றை மீண்டும் பார்த்துச் செலவிடலாம்.

கம்போடிய மக்கள் மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்கிறார்கள். சிறுவர்கள், சிறுமிகள் பலரும் பள்ளிக்குச் சென்றதில்லை. புத்த துறவிகளாக வாழும் விருப்பம் இளைஞர்கள் பலருக்கு இருக்கிறது. அதற்காகப் படிக்கச் செல்பவர்கள் குடும்பத்தினர் படுகிற துயரத்தைப் பார்த்துவிட்டு அதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்குப் போகிறார்கள்.

‘டுக் டுக்’ என்றழைக்கப்படும் வாகனங்களை (இது மோட்டார் சைக்கிளுடன் இணைக்கப்பட்ட, பயணிகள் மூவர்வரை அமர்ந்து செல்லும் நான்கு சக்கர வண்டி) ஓட்டுகிற ஆங்கிலம் பேசுகிற இளைஞர்கள் சிலர் இவ்வாறு துறவைத் துறந்தவர்கள்தாம். அரசர்கள்மீதான மரியாதை இன்னும் தொடர்கிறது. யாராவது சூர்ய வர்மன், ஜெயவர்மன் என்றெல்லாம் பெயர் சூட்டியிருக்கிறார்களா எனக் கேட்டால் அரசர்களுடைய பெயரை நாம் எப்படி வைத்துக்கொள்வது எனப் பதிலுக்கு நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள்.

தெருவோரக் கடைகளிலும் சுற்றுலா இடங்களிலும் இளைஞர்களே வேலைசெய்கிறார்கள். சிறுவர் சிறுமியர் நானாவிதப் பொருட்களையும் கைகளில் வைத்துக்கொண்டு ‘ஒன் டாலர், ஒன் டாலர்’ எனக் கூவிக்கொண்டிருக்கிறார்கள். சாலையோர உணவு விடுதிகளில் ஒரு டாலருக்கு நல்ல உணவு கிடைக்கும். உடனே எங்கும் கிடைப்பது அசைவம்தான். ஒரு லிட்டர் அளவு சுவையான இளநீர் தரும் தேங்காய்களும் ஒரு டாலருக்குக் கிடைக்கின்றன.

அமெரிக்க டாலர்தான் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வேண்டப்படும் செலாவணி. உள்நாட்டுக் கரன்சியான ரியெல் அவர்களுக்குள் சங்கேதமாகப் புழங்குகிறது. அதை வெளிநாட்டவர்கள் கொடுத்தால் சட்டை செய்வதில்லை. மக்கள் சுற்றுலாப் பயணிகளை ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். கெமர் மொழி பேசப்படுகிறது. ஆங்கிலத்தைப் புரிந்துகொள்கிற இளைய தலைமுறை அங்கு உண்டு. கம்போடியர்களைத் தவிர, சீனர்கள், வியட்நாமியர்களும் அங்கு வாழ்கின்றனர். நவம்பரிலிருந்து பிப்ரவரிவரை பயணத்திற்குகந்த காலமாகக் கருதப்படுகிறது.

அக்டோபர் மாதக் கடைசியில் நான் சென்ற சமயத்தில் மழைக் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. மழை தன் சொச்சத்தை அவ்வப்போது கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தவண்ணம் இருந்தது. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி தரை எங்கும் பச்சையாய்ப் பூத்திருந்தது. ஆனால் பூமத்தியரேகைக்கு அருகில் இருப்பதால் நாள் முழுதும் தணியாத வெப்பம். மழை விட்ட உடனேயே லேசாக வியர்த்தது.

தொடரும் ...

******
கவிஉலகம்


Last edited by புரட்சி on Sat Oct 06, 2012 10:37 am; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down


தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  - Page 2 Empty Re: தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 06, 2012 3:05 pm

விரும்பினேன் உங்களின் பதிவை. ஆயினும் ஒரு சிறு கருத்து. இது நம்ம தமிழர்களால் கட்டப்பட்டது என்பதை கம்போடிய அரசாங்கமோ, கெமர் மொழி பேசுகிறவர்களோ ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். தமிழர்களே கட்டியிருந்தாலும், ஒரு இடத்தில் கூட தமிழ் கல்வெட்டுகள் இல்லை. எல்லாமே சமஸ்கிருத மொழியிலும் கெமர் மொழியிலும் உள்ளதுதான் மிகவும் துரதிஷ்டவசமான ஒன்று. இப்போதுள்ள மேற்கத்திய ஆராச்சியாளர்கள் கூட, indian influence , southindian influence என்று அங்கும் இங்கும் எழுதுகிறார்களே தவிர thamil influence என்று ஆணித்தரமாக ஒருவரும் சொல்வதில்லை. சோகம் அப்படி ஏதாவது உங்களுக்கு செய்திகள் கிடைத்தால் பதிவிடவும் ....புரட்சித் தம்பி. புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  - Page 2 Empty Re: தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!

Post by சதாசிவம் Sat Oct 06, 2012 7:39 pm

அரிய பதிவு பகிர்தமைக்கு நன்றி
சூப்பருங்க


சதாசிவம்
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  - Page 2 Empty Re: தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!

Post by கரூர் கவியன்பன் Sun Oct 07, 2012 6:50 am

அங்கோர் கோவிலானது முதலில் இந்து மதக் கோவிலாகவே வழபாட்டு வந்திருக்கிறது பின்னாளிலே தான் அது பௌத்த கோவிலாக மாறியது. இக்கோவிலை முழுமையாக காண வானத்தில் தான் இயலும் .அவ்வாறு பார்க்கையில் மற்றுமோர் அதிசயம் காண முடியும் . நீர் மூலங்களை ஒன்றிணைத்து அவர்கள் அமைத்த கோவிலைச் சுற்றிய அகழிகளும் அந்த அகழியின் மூலம் செயற்கையான வயிக்கால் வெட்டி நகர் மழுவதும் நீர்ப்பாசானம் செய்திருக்கிறார்கள். மேலும் அவர்களது நகர அமைப்பு முறையானது மாறுபட்டதாகவும் நேர்த்தி வாய்ந்ததாகவும் உள்ளது. அங்கோர் கோவிலின் அருகில் ஒரு நீர் வீழ்ச்சி உள்ளது. இந்தியாவில் எப்படி கங்கை ஒரு புனித நதியாக போற்றப்படுகிறதோ அது போல தான் அங்கே இந்த நீர் ஈழ்ச்சி.

அங்குள்ள கட்டடக் கலையானது சிறப்பு வாய்ந்தது. கற்களின் இணைப்பின் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களில் இணைப்பிற்கான சுவடினை காண முயல்வது சற்று கடினம்.அந்த நீர் வீழ்ச்சி ஆறாக பிறவி எடுக்கும் இடத்தில் அதன் தரைப்பகுதியில் சிவலிங்கம் வரிசையாகபாறைகளில் செதுக்கப்பட்டிருப்பதை காணலாம். இவை நீர் இல்லாதா தருணங்களில் செதுக்கப்பட்டிருக்கலாம்.

இன்றைய அளவும் அங்கு கன்னி வெடிகள் அகற்றும் பணிகள் நிறைவு பெறவில்லை. அந்தப் பகுதி முழுவதும் அக்காலத்தில் முப்போகம் விழையும் நிலமாகவே இருந்திருக்கிறது.எனவே இப்பகுதியை கைப்பற்ற பல்வேறு போர்களும் நிறையவே நடந்திருக்கின்றன.

அங்குள்ள மக்கள் குறைவாகவே இருந்தபோதிலும் ஒவ்வெரு குடும்பத்திலிருந்தும் ஒரு ஆண் மகன் இக்கோவிலில் துறவியாக உள்ளனர். இங்கு முக்கிய வழிபாடாக பௌத்தம் இருந்த போதிலும் இந்து கடவுளுக்கும் வழிபாடு என்பது சிறப்பே. மேலும் அங்குள்ள மக்களிடமும் இந்து மத முறைகள் சிறிது இன்றும் காணப்படுவதும் உள்ளது.

இவை மற்றும் இன்றி இக்கோவிலைச் சுற்றி பல்வேறு தொலைவுகளில் சிறு சிறு கோவில்களும் நிறையவே உள்ளன.

எது எப்படியோ இந்தியாவுக்கும் அன்கோருக்கும், இந்து மதத்திற்கும் பௌத்த மதத்திற்கும் இணைவு பெற்ற ஒரு சான்றாக இன்றளவும் உயர்ந்து நிற்பது அங்கோர் என்பது உண்மை.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  - Page 2 Empty Re: தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum