ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு!

5 posters

Go down

காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு! Empty காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு!

Post by சிவா Fri Oct 05, 2012 12:27 am

காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு! 408591_452235318160136_1409453361_n

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.

“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம்
என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....

நன்றி - ஏகலைவன். பா & முகநூல்


காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு! Empty Re: காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு!

Post by வின்சீலன் Fri Oct 05, 2012 12:32 am

இவர் தான் உண்மையான மக்கள் தலைவர்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு! Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு! Empty Re: காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு!

Post by சிவா Fri Oct 05, 2012 12:40 am

காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு! 523226_432657006784634_2052399760_n


காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு! Empty Re: காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு!

Post by பூவன் Fri Oct 05, 2012 12:42 am

நல்லதொரு தலைவர் , பகிர்வுக்கு நன்றி அண்ணா சூப்பருங்க சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Back to top Go down

காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு! Empty Re: காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு!

Post by mmani15646 Fri Oct 05, 2012 11:17 am

அத்தகைய ஏழைப்பங்காளரைத்தான் எதிரிக்கட்சியாக இருந்த கழக கண்மணிகள் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தனர்.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு! Empty Re: காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு!

Post by கரூர் கவியன்பன் Fri Oct 05, 2012 7:24 pm

இது போன்ற அரசியல் தலைவர்கள் இப்போ இப்படி இருந்தா எப்படி இருக்கும்ன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க ..
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு! Empty Re: காமராஜரும் மண்ணாங்கட்டியும்! - நெகிழ வைக்கும் நிகழ்வு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum