ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்

3 posters

Go down

எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  Empty எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்

Post by கேசவன் Tue 2 Oct 2012 - 20:50

இயந்திரங்கள் மூன்று வகைகள் உள்ளன..

ஒன்று: வெளியில் இருந்து எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்குபவை..

இரண்டு: தனக்குக் கொடுக்கப்படும் எல்லா ஆற்றலையும் வீணாக்காமல் மாற்றுபவை

மூன்று: உராய்வு (FRICTION ) இன்றி இயங்குபவை.

முதலில் எளிமையான ஒரு மாடல்..

படத்தில் காட்டியிருப்பது போல ஒரு வலுவான காந்தம் ஒரு இரும்பு குண்டை சரிவின் வழியாக மேலே இழுக்கிறது. காந்தத்திற்குப் பக்கத்தில் ஒரு துளை இருப்பதால் குண்டு கீழே விழுந்து விடுகிறது. கீழே விழுந்த வேகத்தைப் பயன்படுத்தி கீழே உள்ள சரிவில் இறங்கி மீண்டும் முதல் துளை வழியே மேலே ஏறுகிறது..மீண்டும் காந்தம் அதை இழுக்கிறது,,,மீண்டும் துளை..இப்படியே குண்டு காலம் காலமாக இயங்கிக் கொண்டிருக்கும்..ஆகா நல்ல ஐடியா..வெயிட்..இது வேலை செய்யாது...ஏனென்றால் பந்து கீழே விழுந்து மீண்டும் மேலே ஏறுகிறதே? அப்போது அதற்கு ஒரு சிறிய அளவு வெளிப்புற ஆற்றல் தேவைப்பட்டால் தான் அது துளையின் வழியாக மேலே ஏறுமாம்..அதாவது சிறிய பேட்டரி மூலம் இயங்கும் ஒரு கையை (ARM ) வைத்து பந்தை கொஞ்சம் மேலே தள்ளிவிடுவது..இல்லையென்றால் பந்து சந்திக்கும் உராய்வு அதை மேலே ஏறுவதற்கு முன் தடுத்து நிறுத்தி "கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பா" என்று நிறுத்தி விடும்..அல்லது பந்து காந்தத்தால் இழுக்கப்பட்டு துளையில் விழாமல் அப்படியே போய் ஒட்டிக் கொண்டு விடும்..
எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  Magnet

அடுத்ததாக 'unbalanced wheel ' எனப்படும் எப்போதும் சமநிலை பெறாத சக்கரம் ..கீழே காட்டியுள்ளது போல...சக்கரத்தின் வலது புறம் பாருங்கள், சக்கரத்தின் மையத்திற்கும் குண்டிற்கும் உள்ள தூரம் அதிகமாக உள்ளது. சக்கரத்தின் இடது புறம் இந்த தூரம் குறைவாக உள்ளது. இதனால் இந்த சக்கரம் பாலன்ஸ் செய்யப்படாமல் உள்ளது. எனவே ஒரு முறை சுற்றி விட்டு விட்டால் விஷ்ணு பகவானின் சுதர்ஷன சக்கரம் மாதிரி இது எப்போதும் சுழலும் ...ஆனால் சுழலவில்லை..ஏன் சுழலவில்லை என்று யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.
எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  3_animation

அடுத்ததாக நீங்கள் DRINKING BIRD எனப்படும் 'குடிக்கும் பறவையைப் 'பார்த்திருக்கக் கூடும்..படம் கீழே...அது நிற்காமல் தண்ணீர் குடிக்கிறது..பின்னர் மேலே எழுகிறது.பின்னர் மீண்டும் குனிந்து குடிக்கிறது... இது ஒரு வகையில் பார்த்தால் நம்மால் சாத்தியமான என்று சொல்லலாம்..
எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  Mini_drinkingbird2
இது ஒரு வெப்ப இயந்திரம். ஒரு கண்ணாடிக் குழாய் (பறவையின் உடல்) இரண்டு ஒரே அளவான கண்ணாடிக் குமிழ்களை இணைக்கிறது. கண்ணாடிக் குமிழ்களில் இருந்து காற்று நீக்கப்பட்டுள்ளது. பறவை மெத்திலீன் குளோரைட் எனப்படும் எளிதில் ஆவியாகும் ஒரு திரவத்தால் நிரப்பப்படுகிறது. பறவையின் மூக்கு தண்ணீரை சுலபமாக உறிஞ்சும் ஒரு வகை சவ்வினால் செய்யப்பட்டுள்ளது. முதலில் பறவையின் மூக்கை நன்றாக ஈரம் செய்தோம் என்றால் அந்த ஈரம் மெதுவாகக் காற்றில் ஆவியாக ஆரம்பிக்கிறது. இதனால் பறவையின் தலைப்பாகம் குளிர்கிறது. (ஆவியாவதற்கு வெப்பம் செலவாகி விடுவதால்)இது உள்ளே இருக்கும் மெத்திலீன் குளோரைட் ஆவியை படிமம் ஆக்குகிறது (condense ) சில சமயங்களில் நீராவி குளிர்ந்து உங்கள் பாத்ரூம் கண்ணாடி மீது அழுக்கு மாதிரி படியுமே அதுமாதிரி! வெப்பவியல் விதிகளின் படி வெப்பநிலை குறைந்தால் அங்கே அழுத்தமும் குறையும்..திரவ விதிகளின் படி திரவம் அழுத்தம் அதிகமான இடத்தில் இருந்து அழுத்தம் குறைவான இடத்திற்குப் பாயும்..அது மேலே இருந்தாலும்..எனவே பறவையின் அடிப்பாகத்தில் உள்ள திரவம் அழுத்தத்தை சமன் செய்ய தலைக்கு வருகிறது...இப்போது தலை கனமாகி விடுவதால் பறவை குனிகிறது..குனியும் பறவையின் மூக்கு கோப்பையில் உள்ள நீரை உறிஞ்சி மறுபடியும் ஈரமாகிறது.பறவையின் அடிப்பாகத்தில் இருந்த ஆவி தலைக்கு விரைகிறது தலையில் இருந்த திரவம் மீண்டும் மேலே ஏறி அடிப்பாகம் கனமாகிறது பறவை மேலே எழுகிறது ..cycle repeats ..

ஒரு குறிப்பு..அமெரிக்கா போனால் இந்த பொம்மையை வாங்கி வந்து உங்கள் குழந்தைகளுக்கு ஆசையாக விளையாடக் கொடுத்து விடாதீர்கள்..கண்ணாடி உடைந்தால் உள்ளே இருக்கும் திரவம் தோலைப் பதம் பார்த்து விடும் ஜாக்கிரதை..

அடுத்து FLOAT BELT எனப்படும் ஒரு மாடல்..

திரவங்களுக்கு இயற்கையாகவே உள்ள ஒரு பண்பு அதில் போடப்படும் பொருட்களை மேலே தூக்கி விடுவது(Buoyancy )..இதை சாதகமாக்கிக் கொண்டு உருவாக்கியது தான் இந்த மாடல்.

எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  Buoyancy


இதில் மிதக்கும் பந்துகள் ஒரு பெல்ட்டால் இணைக்கப்பட்டுள்ளன..திரவம் அந்த பந்துகளில் ஒன்றை buoyancy தத்துவத்தின் படி மேலே தூக்கி விடும். இதனால் எல்லா பந்துகளும் கொஞ்சம் நகர்ந்து அடியில் உள்ள இன்னொரு பந்து திரவத்தினுள் நுழையும்.. அதையும் திரவம் தூக்கி விட இப்படியே போய்க் கொண்டிருக்கும்..வெயிட் , இதுவும் வேலை செய்யவில்லை..ஏனென்றால் பந்து திரவத்தில் நுழையும் போது அந்த 'கேப்' வழியாக திரவம் கசிவதை நிறுத்த முடியவில்லை..மேலும் பந்தை உள்ளே நுழைக்கத் தேவையான ஆற்றல் திரவம் பந்தை மேலே தூக்கும் ஆற்றலை விட அதிகமாக இருந்தது..


கடைசியாக இன்னொரு மாடலைப் பார்க்கலாம்.Brownian ratchet என்று இது அழைக்கப்படுகிறது.ஒரு திரவத்திலோ வாயுவிலோ அதன் மூலக்கூறுகள் வெறுமனே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் என்று முதலிலேயே அணு அண்டம் அறிவியலில் பார்த்திருக்கிறோம். இதை பிரௌனியன் இயக்கம் என்பார்கள்.படத்தைப் பாருங்கள்..

எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  Feynman_ratchet


இதில் ஒரு கியர் தெரிகிறது அல்லவா? அது ஒரு திசையில் மட்டும் நகரும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கியர் இன்னொரு paddle wheel என்று அழைக்கப்படும் ஒரு சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, அந்த பேடில் வீல் ஒரு திரவத்தினுள் முங்கி வைக்கப்பட்டுள்ளது. திரவத்தின் மூலக்கூறுகள் பேடில் வீலின் பக்கங்களை விடாது மோதுகின்றன. இதனால் அது சுழன்று (இந்த சக்கரங்கள் ரொம்பக் குட்டியாக இருப்பதால் சுழலுமாம்!) அதனுடன் இணைக்கப்பட்ட கியரும் சுழல்கிறது. கியர் ஒரு திசையில் மட்டும் சுழல்வதால் அதை வைத்துக் கொண்டு ஒரு சிறிய வெயிட்டைத் தூக்க முடியும்.

சரி இதுவும் சின்சியராக ஏனோ வேலை செய்யவில்லை. உனக்கும் பெப்பே உங்க அப்பனுக்கும் பெப்பே என்று அப்படியே அசையாமல் நின்று விட்டது.

இந்த அமைப்பின் இரண்டு பகுதிகளும் வெவ்வேறு வெப்பநிலையில் இருந்தால் மட்டுமே இது வேலை செய்யுமாம்.

எவ்வளவு தான் தோல்வி அடைந்தாலும் இன்னும் நிறைய பேர் இதற்காக ராப்பகலாக உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.இன்னும் சில பேர் ரொம்ப சாதுர்யமாக கஷ்டமான டிசைன் எல்லாம் செய்து ஸ்க்ரூ, பைப்புகள், கியர் என்று இஷ்டத்திற்குப் போட்டு ஆய்வு செய்ய வருபவர்களை மயங்கி விழச் செய்யும் அளவு ஏதேதோ செய்கிறார்கள்.பார்க்க படம்..


என்ன தான் நாம் தலைகீழாக நின்றாலும் இந்த perpetual motion machines எல்லாம் வெறுங்கையில் முழம் போடுவது, மந்திரத்தால் மாங்காய் விழவைப்பது போல psudo science தான்..
இதை வடிவமைப்பதற்கு நாம் இயற்கையின் நிறைய விதிகளை மீற வேண்டும்..ஆற்றலை நாமாக உருவாக்க முடியாது, வெப்பம் குளிர்ந்த இடத்தில் இருந்து சூடான இடத்துக்குப் போகாது போன்ற அடிப்படையான விதிகள்..நாம் போன அத்தியாயத்தில் பார்த்த மாதிரி நியூட்டன் விதியின் படி எந்த ஒரு பொருளும் ஒரு முறை இயக்கத்தில் செலுத்தப்பட்டு விட்டால் நிற்காமல் இயங்கிக் கொண்டிருக்கும்..இது ஒரு விதத்தில் perpetual motion தான்..ஏன் நம் பூமி சூரியனை சுற்றுவது கூட perpetual motion தான்..ஆனால் இதை வைத்து ஏதாவது உருப்படியான வேலை செய்யலாம் என்றால் உராய்வு, காற்றின் தடை, ஈர்ப்பு விசை போன்ற சமாச்சாரங்கள் குறுக்கே வந்து தடுத்து விடுகின்றன...


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  1357389எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  59010615எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  Images3ijfஎந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  Empty Re: எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்

Post by டார்வின் Wed 3 Oct 2012 - 13:22

சூப்பருங்க அருமையிருக்கு
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  Empty Re: எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்

Post by Guest Wed 3 Oct 2012 - 19:59

இந்த பொம்மையை பார்த்து இருக்கிறீர்களா என்று பதிவு போட்ட கேசவன் அண்ணனே அதை பற்றி விளக்க பதிவு போட்டு உள்ளார்கள் ..உங்கள் தேடல் தொடரட்டும் அண்ணே சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  Empty Re: எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்

Post by யினியவன் Wed 3 Oct 2012 - 20:02

புரட்சி wrote:இந்த பொம்மையை பார்த்து இருக்கிறீர்களா என்று பதிவு போட்ட கேசவன் அண்ணனே அதை பற்றி விளக்க பதிவு போட்டு உள்ளார்கள் ..உங்கள் தேடல் தொடரட்டும் அண்ணே சூப்பருங்க
நம்ம கேசவன் முருகப் பெருமானின் ஆற்றலில் இயங்குபவராச்சே!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  Empty Re: எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்

Post by கேசவன் Wed 3 Oct 2012 - 21:15

யினியவன் wrote:
புரட்சி wrote:இந்த பொம்மையை பார்த்து இருக்கிறீர்களா என்று பதிவு போட்ட கேசவன் அண்ணனே அதை பற்றி விளக்க பதிவு போட்டு உள்ளார்கள் ..உங்கள் தேடல் தொடரட்டும் அண்ணே சூப்பருங்க
நம்ம கேசவன் முருகப் பெருமானின் ஆற்றலில் இயங்குபவராச்சே!!!!
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  1357389எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  59010615எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  Images3ijfஎந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்  Empty Re: எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மின்சாரம் இல்லாமல் இயங்கும் பேன்...!!!
»  கேஎல்ஐஏ 2 குறைகள்: ஏர் ஏசியா தொடர்ந்து எல்சிசிடி-ல் இயங்கும்!
» பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிப்பு
» பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிப்பு.!!
» ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரெயில்; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum