புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
92 Posts - 67%
heezulia
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
3 Posts - 2%
prajai
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
3 Posts - 2%
Barushree
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
sram_1977
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
nahoor
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
146 Posts - 74%
heezulia
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
8 Posts - 4%
prajai
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
3 Posts - 2%
Barushree
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
nahoor
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 14, 2012 10:08 pm

இந்தப் படமும் சுப்ரமணியபுரம், நாடோடிகள், போராளி வரிசையில் நண்பர்களைப் பற்றியது தான். இந்த ஆண்டு இதுவரை காமெடி படங்கள் ஹிட்டாகி வந்த போது நல்ல பரபரப்பான இந்தபடம் சிறந்த என்டர்டெயின்மண்ட் படமாக அமைந்துள்ளது. விளம்பரம் குறைவு என்பது திரையரங்கிலேயே தெரிந்தது.

சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  2

எல்லோரையும் எல்லாத்தையும் பாசிட்டிவாகவே நினைக்கும், நண்பர்களுக்காக எதுவும் செய்யத் துணிந்த ஹீரோவின் கதை இது. நண்பனின் காதலுக்காக ஹீரோயினிடம் தூது போகிறார் சசிகுமார். போன இடத்தில் ஹீரோயின் சசியையே காதலிப்பதாக சொல்ல அவரும் ஏற்றுக் கொள்கிறார்.

ஹீரோயினுக்காக சண்டை போடப் போய் விபத்தாக ஒரு கொலை நடந்து விடுகிறது. கொலைப்பழி சசியின் மேல். காதல் விவகாரம் ஹீரோயின் வீட்டுக்கு தெரிந்து அவசர அவசரமாக மற்றொருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. இவ்வளவையும் சமாளித்து ஹீரோவும் ஹீரோயினும் இணைந்தார்களா என்பதே படத்தின் தோராயமான கதை.

ஏற்கனவே எனக்கு மிகவும் பிடித்த சசிகுமார் இந்தப் படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். நண்பனின் காதலுக்கு ஜடியா கொடுத்து அதற்காக விதவிதமான முறையில் பேருந்தில் ஏறும் போது தியேட்டர் கலகலக்கிறது.

ஹீரோயின் கும்கி படத்திற்கான ஆடியோ வெளியீட்டில் பார்த்த போது சுமாரான பெண்ணாகவே தெரிந்தார். ஆனால் ஸ்கிரீன் பிரசன்ஸ் அருமையாக இருக்கிறது. அந்த அம்மை தழும்பை இயல்பாக விட்டிருப்பதும் ரசிக்க வைக்கிறது. நல்ல எதிர்காலம் இருக்கிறது. பக்கத்து வீட்டு பெண்ணைப் போன்ற அழகு தான் கவர்கிறது.

சூரி படத்தில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இடைவேளைக்கு பிறகு திரைக்கதையின் தேவை கருதி இவரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. ஆனால் முன்பாதியை குத்தகைக்கு எடுத்து கலாய்க்கிறார்.

விஜய் சேதுபதி தனியாக பல படங்களில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் போது இதில் எப்படி ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

படத்தின் வெற்றி முக்கியமான விஷயங்களில் ஒன்று படத்தின் வசனம் தான். இறுதியில் நண்பன் குத்தினால் சாகும் போது கூட காட்டி கொடுக்காதது தான் நட்பு, இது போல் பல.

சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Sundarapandian-movie-stills00-011

பாடல்களில் ஏற்கனவே கேட்காததால் வரிகள் நினைவுக்கு வரவில்லை. ஆனால் படத்தில் வரும் இரண்டு மாண்டேஜ் பாடல்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இனிமேல் தான் ஹிட்டாகும் என்று நினைக்கிறேன்.

சுப்ரமணியபுரத்திலிருந்து நண்பனின் துரோகம், நாடோடிகளில் இருந்து நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற கான்செப்ட், தூங்கா நகரத்திலிருந்து கிளைமாக்ஸ் என பல படங்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் பார்ப்பதற்கு வலிந்து திணித்தது போல் இல்லாமல் இயல்பாக இருக்கிறது.

படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்ன சிபி செந்தில் மாதிரி மனப்பாடம் செய்து வசனம் போடும் அளவுக்கு எல்லாம் என் ஞாபக சக்தி கிடையாது. இந்த விமர்சனத்தில் கூட ஹீரோயின் என்றே போட்டு இருக்கிறேன். படத்தில் ஹீரோயினி்ன் பெயர் கூட ஞாபகம் இல்லை. இது தான் நம்ம லட்சணம்.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம். நானே இன்னொரு முறை வீட்டம்மாவையும் அழைத்து சென்று பார்க்க இருக்கிறேன். சில குறைகள் படத்தில் இருந்தாலும் அவற்றை குறிப்பிட்டு சொல்வது எல்லாம் தேவையில்லாத ஒன்று.

சுந்தர பாண்டியன் - குடும்பத்துடன் பார்க்கக் கூடிய சிறந்த பொழுதுபோக்கு படம்
*****
ஆம்செந்தில் வலை பூ

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 14, 2012 10:10 pm

நட்பின் ஆழம் புரியும். காதல் பரவசமாய் சிறகடிக்கும். கிராமம் பசேலென கண்களில் ஒட்டிக் கொள்ளும். உயர்ந்த மனிதர்களின் முகத்தை இதுவென்றுக் காட்டும். பெற்றோரான தாய் தந்தைக்குக் கூட "கடவுளே நல்ல பையனா விரும்பினான்னா மகளை அவனுக்கேக் கட்டிவைக்கலாமே" என காதலுக்கு சிபாரிசுசெய்து கடவுளையும் வேண்டச்சொல்லும்.

தப்பு பண்றவந்தான் மனுஷன்; அதை மன்னிக்கறவனும் மனுசனாயிருக்கனும்னு ஒரு பாடம் மனதிற்குள் பதிவாகும். உறவுகள் கூடி சிரிக்கிறது தான் குடும்பம், அக்கம்பக்கத்தார் சூழ அரவணைத்து வாழ்வதுதான் வாழ்க்கைன்னு இப்படத்தின் பாத்திரத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பார்க்கையில் ஒரு சாத்வீக குணம் யதார்த்தமாக உள்ளூறும்.

ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லி குறையினைப் பெரிதாக எடுத்துக்காட்டி அடித்துக்கொண்டு வெட்டிமாளுவதை விட சம்மந்தப் பட்டோர் கூடி பேசி சரிதவறுகளை அலசிப் பார்த்துக்கொண்டால், நியாயத்தராசினை நான்குக் கைகொண்டு தூக்கிப் பிடித்துவிட்டால் வரயிருந்த இழப்புகள் விட்டு நீங்கி வெற்றியைத் தரும் வாய்ப்பாக மாறிப் போகுமென உலகைப் புரட்டிப் போடுமொரு அறிவுரையை காதல் தீயிட்டுக் கொளுத்தி இளைஞர்களின் கண்களில் வீசுகிறார்.

காதலின் ரசத்தைக் காட்டி அதன் இருட்டைப் போக்குமொரு வெளிச்சத்தில் வசனங்களைத் தீட்டி பசுமை குறையாத வெளியெங்கும் வீசும் காற்றுப் போன்று மனதெங்கும் படரும் நல்லுணர்வுகளை இள ரத்த வெப்பத்தில் சுடும் காதலினுள் தோய்த்து திரைச்சுருளெங்கும் வண்ணவண்ணமாக அடைத்திருக்கிறார் இந்த "சுந்தர பாண்டியனின்" இயக்குனர் திரு. எஸ். ஆர். பிரபாகரன். அந்த வண்ண வண்ணங்களில் மிளிர்கிறது இயக்குனர் சசியின் லட்சிமிமேனனின் சூரியின் இன்னும் நாயக நாயகியின் குடும்பமாக நண்பர்களாக வந்துப் போகும் அனைவரின் நடிப்பும்.

சிரிக்கவைக்கும் வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, உணர்ச்சிவசப்பட வைக்கும் திருப்பங்கள், ஆமென்று ஒவ்வொரு பாத்திரங்களையும் ஏற்றுக்கொள்ள வைக்கும் நடிப்பு, மனம் துள்ளும் பாடல்களின் வரிகள் காட்சிகள் ஒளிப்பதிவென மீண்டும் நல்லதொரு திரைப்படத்தில் கரைந்துப் போகப் போகின்றன நம் இளநெஞ்சங்களெல்லாம்.

அத்தகைய மிக அழகான காட்சிப் பதிவு, திகட்டாத உணர்வினை காட்சிகளோடு ஒன்றிப்போன மனசாகப் பார்த்து நரம்பின் அசைவெங்கும் அதிரவைக்கும் ரசனைமிகுந்த பின்னணி இசை, லாவகமாக ஒரு இளைஞன் செய்யக்கூடிய கதாநாயக வித்தைகள், இத்தனைக் கோபம் வந்தால் இந்த இடத்தில் நானும் இப்படியேனும் சண்டைப் போடுவேனென ஏற்றுக் கொள்ளத்தக்க போலித் தனம் கூடுதலில்லா சண்டைக் காட்சிகள்,

நம்மூர் கிராமத்துக் குறும்புதனில் சொட்டும் இனிப்பும் குசும்புமாக கலந்த நட்பு வட்டத்தோடு நகைச்சுவை படமெங்கும் படர்ந்த, 'அகன்ற மார்பினன் சுந்தப் பாண்டியனின் தீரம்' அழகிய சசியின் புன்னகைப் பார்வையில் வெளிப்படும் மிக நல்ல காதல் திரைப்படம்.

மனைவிக்கு வலிவந்ததும் இங்கும் அங்குமென ஓடும் கால்களோடு மனதும் ஓட, பெற்றெடுத்த பிள்ளையை வாங்கி உயிர்நுகரும் வாஞ்சையோடு முத்தமிட்டு' விழுந்தால் பயந்து' எழுந்தால் தோள்தந்து' சரிந்தால் இதயத்தில் தாங்கும்' எந்த அப்பனுக்கு தன் மகளையும் மகனையும் பிடிக்காமல் போகும்?

தவறெனில் கோபப்படும் தாய் தந்தைகளின் ஒவ்வொரு அனல் வார்த்தைக்குப் பின்னும் பிள்ளைகளின் நலன் நோக்கிக் கதறுமொரு சப்தம்தான் உண்டென எத்தனைப் பிள்ளைகளுக்குப் புரிகிறது? அது புரியும் பிள்ளைகளுக்கு அப்பாக்கள் இப்படித் தான் பெரிய மனதினர்களாக இருப்பார்களென ஒரு மாதிரியை இந்தப் படத்தின் மூலம், நாயகன் நாயகியாக நடித்திருக்கும் இரு பாத்திரங்களின் தகப்பனார்களின்மூலம் காட்டுகிறார் இயக்குனர்.

எப்பொழுதும் திட்டிக் கொண்டிருக்கும் அப்பா அவளின் ஒவ்வொரு சந்தோச நகர்வுகளையும் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, முடிவில் 'சரிம்மா நீ விரும்பியவனையே கட்டிக்கோ போ'ன்னு சொல்லும் போது அந்த மகளின் சந்தோசத்தின் அளவு 'கடலின் இரு கரைகளை எட்டித் தொட கைவிரித்து இன்னும் ஏழு கடலைத் தேடுமளவிற்கும், கூடுதலாகப் பெரிது' என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள லட்சுமி மேனனின் நடிப்பும் அழுகையும் அவளுடைய அப்பாவின் அரவணைத்துக் கொள்ளும் நெருக்கமும் மனதை ஒரு நல்லுணர்வில் ஆழ்த்துகிறது.

வேறென்ன இருக்கு மனசுல, வெறும் கர்வமும் சுயநலமும் பேராசையும் மேலதானே அப்பிக் கிடக்குது, அதை சட்டுன்னு உதறி விட்டுட்டா நீ நானு இந்த ஊரு உலகம் எல்லோருமே நல்லவங்க தானே?ன்னு ஒரு கேள்வியை உள்ளுக்குள்ளே மிக நாசுக்காக எழுப்புகிறது இப்படத்தின் நிறைய காட்சிகள்.

அப்படி ஒரு காட்சியில், "மகனுக்கு பிடித்துப் போச்சு, அவனுக்கு பிடித்த நல்ல வாழ்க்கை அமையனும், அப்பாவே வந்து வீடு ஏறி ரொம்ப நேர்த்தியா கம்பீரமா மிடுக்கு குறையாம பண்பு மிளிரப் பேசி இப்படிப் பட்ட என் பைய்யனுக்கு உன் பொண்ணக் கொடுங்களேன்னு கேட்கிறார். அதைக்கண்டு அந்த நாயகி காதலில் அடக்கிவைத்திருந்த தனது ஆழ்கடல் மனதை எடுத்து வெளியே உணர்வாக வலிமையோடு வெளிப்படுத்துகிறாள். அவளின் தந்தைக்கு பேச நாவெழவில்லை, தன் வீரத்தை கோபத்தை எல்லாம் பாசத்திற்குள் அடக்கிக் கொண்டு கண்கள் சிவக்க நின்று பார்க்கிறார்.

அடுத்தடுத்தாற்போல் நாயகனின் தந்தை மிக திறமாக அங்கே தனது ஆளுமையைத் திரையிடுகிறார். உண்மையிலேயே அந்த காட்சி மிக நல்ல காட்சி. அதுபோல மிக நல்ல இயக்கத் திறமைன்னு மெச்சத் தக்க மத்தாப்புகள் இக்காட்சிகளைப் போன்று இப்படத்தின் நிறைய இடங்களில் பல வண்ணங்களாக அழகாக கொளுத்திப் போடப்பட்டுள்ளது.

அதிலும், அந்த கடைசி காட்சி, உண்மையிலேயே இயக்குனரைப் பாராட்டவைக்குமொரு சவாலான உத்திதான். ரொம்ப நல்லா ஆரம்பித்து ரொம்ப நல்லாவே முடித்திருக்கிற இந்தப் படத்தைப் பத்தி அப்படி இன்னும் ஆகா ஓகோன்னு எல்லாம் எழுத வேண்டியதில்லை.

அது ஆகா ஓகோ தான். ஆனால் படம் என்ன சொல்ல வருதுன்னு சிந்திக்கத் தவறக்கூடாது.

பொதுவாகச் சொன்னால் காதல் தவறில்லை. காதலெனும் இயற்கையான அந்த உணர்வுகுறித்து நாம் நம் தேவைக்கேற்ப மட்டுமான நமக்கொத்ததுபோன்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்வதில் அல்லது புரிதலை நமக்கு வேண்டியப்படி ஒரு சமுதாயமாகச் சேர்ந்து நாம் அமைத்துக் கொண்டதன்பேரில் மட்டுமே இளையப் பருவத்தினருக்கான பல சிக்கல்கள் நேரிடுகிறது.

முதலில், அறிவோட நிதானமா தன் வாழ்க்கைப் பற்றி எதிர்காலம் பற்றி தன் குடும்பம் பற்றி உற்றார் உறவினர் ஊரென நம் அக்கம்பக்கத்து மனிதர்களைப் பற்றியெல்லாம் சிந்தித்து தன் ஒவ்வொரு அடிகளையும் எடுத்துவைக்கும் நல்ல பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் பக்குவப்பட்டிருக்கனும்.

அப்பா புரிந்து அம்மா புரிந்து யாரின் மனசும் வலிக்காம நடந்துக்குற குணமும், வெல்லும் திறமும் பெருக பிள்ளைகள் வளரனும்.

காதலின் புள்ளி எதையுமே யோசிக்காம உள்ளே வந்து விழுந்துவிட்டாலும் அதன் தொடர்புள்ள அனைத்தைப் பற்றியுமே சிந்தித்து அதனைச் சாதகமாக்கிக் கொள்ளும் சாதுர்யத்தை காதலர்கள் வளர்த்துக்கனும்.

பெண்களை தரக்குறைவாக மதிப்பிடுவது, பெண்கள் பற்றி நாராசமாகப் பேசுவது, பெண்களென்றால் தக்க மதிப்புகளை விட்டு துச்சமாகக் கருதுவது, அவர்களுக்குப் பிடிக்காத வகையில் கிண்டலடிப்பது, வெறுப்பேற்றி கோபப் படுத்தி ரசிப்பது போன்ற குணங்களையும், ஆண்களை சும்மா அலைய விடுவது, மனது புரிந்ததும் ஏற்றோ அல்லது பிடிக்கலை இப்படிச் செய்யாதே என்று முகத்திற்கு நேரே சொல்லிவிடவோ எச்சரிக்கவோ தயங்குவதும், பிடித்திருந்தால் காதலித்திருந்தால் வீட்டில் பேசி' புரியவைத்து' ஒப்புதல் வாங்கி' தனது வாழ்க்கையை தான் விரும்பியதுபோல் அமைத்துக்கொள்ள முனையாததும், குறைந்தபட்சம் அது சரியா தவறா என்று கூட வீட்டில் கலந்துக் கொள்ளாததும், வெறுமனே ஆண்களைப் பெண்களும் பெண்களை ஆண்களும் கவரும் வண்ணம் பீடிகைப் போடுவது அல்லது அலங்காரத்தை உடல் வசீகரத்தை இன்னொரு மனம் பித்தாகித் தவிக்க அமைத்துக் கொள்வதையுமெல்லாம் இனி வரும் காலத்து இளநெஞ்சங்கள் தவிர்த்தல் வேண்டும். அல்லது அத்தகைய உடல்கூறு புரிந்த விசயங்களைத் தெரிந்துவைத்துக் கொண்டு சட்டென அதிலெல்லாம் விழாத ஒரு திடநிலையை எல்லோரும் கொள்ளல் நலம்.

அல்லாது தோற்றத்தை மாற்றிக் கொள்வதும், தாடியில் சோகத்தை வெளிப்படுத்துவதும், மது அருந்துவதும் புகைப்பிடிப்பதும் மேலும் நம்மை பலமிழக்கச் செய்து மனதின் வடிகால் வழியே வாழ்வையே இழக்கச் செய்யுமேயொழியே நல்ல மனநிலையை' வாழ்விற்கான தீர்வைத் தராது..

மாறாக, தனது அன்றாட விருப்பங்களை சொல்லாவிட்டாலும், வெறுப்புக்களை சிக்கல்களை வீட்டில் அப்பா அம்மா அக்கா அண்ணன் போன்ற மூத்தொரிடத்தில் சொல்லி தன் பார்வையை நடத்தையை சூழலை சரிபடுத்திக் கொள்ள முனைதல்வேண்டும். பெண்களை தனது தோழிகளாகவும் நம் தங்கையை காதலியை மனைவியை நாம் வைத்துக் கொள்ள விரும்புவது போன்றும் பண்போடு நடத்தல் வேண்டும். ஒரு ஆண் தனைப் பார்ப்பதை பார்வையாக நேரேடுத்து பேசி தெளிவாக பதில் சொல்லி கடந்துப் போதல் வேண்டும்.

அதேநேரம் வீடும் தனது பிள்ளைகளின் மீது அக்கறைக் கொள்ளுமளவு அவர்களின் உணர்வுகளையும் புரிந்துக் கொள்ளல் அவசியம். ஒரு பெண்ணை ஆண் பார்ப்பதும் ஆணைப் பெண் பார்ப்பதும் ஒரு இனக்கவர்ச்சி. அதில் தவறுகள் நேர்ந்திடா வண்ணம் வாழ்வின் தன்மைகளை' ரசங்களை' மதிப்பீட்டை' பாசத்தை' நட்பை' புரிந்துணர்வை' குறைகளை' வலிகளை' ஆபத்துக்களை' தெளிந்து வெளிவரும் வழிகளை நாம் தான் நம் குழந்தைகளுக்கு நட்புநிறை மனசோடு அவர்களின் மொழியோடு ஒன்றி நின்று சொல்லித் தரனும்.

காதல்னா முதல்ல என்ன? "தனித் தனியா முளைத்து இரண்டும் ஒன்றெனக் கலந்துப்போகிற, ஒரே சிந்தனையாய் ஒன்றிப்போகிற, உயிரிகளிணையும் அன்பை எதற்கும் விட்டுக் கொடுத்திடாத, பிரிந்தால் உயிர் போய்விடுமொரு வலியையடையும், ஒரு மனசுக்குளிருக்கும் இரு சிறகுகளில்லையா?

பின்ன அந்த ரெண்டு சிறகும் ஒருங்கே முளைக்கனுமில்லையா? அது முளைத்திருப்பது ரெண்டுப் பேருக்கும் தெரியனுமில்லையா? அதைத் தெரிந்துக் கொள்ள தெளிவாப் பேசிக்கிற அளவுக்கு நாம் நம் ஆண் பெண் நட்பினை வளர்க்கணும். ஆண் பெண் உறவினை ஏற்றத் தாழ்வுகளின்றி புரிதலோடு பழகுமொருப் புள்ளிக்கு நம்மை நாம் நகர்த்தனும். ஒருவரை ஒருவர் புரிந்து ஒரு ஆண் பெண்ணிடமோ அல்லது பெண் ஆணிடமோ கனமா பேசுற, சுயமா எடுத்து தன் மன உணர்வுகளை சொல்லி புரியவைக்கிற, அதேநேரம் ஒருத்தருக்கு பிடிக்கலைன்னா ஒருத்தர் உடனே விட்டு விலகி அவரின் மனதை நோகடித்திடாத நற்பண்பு மிக்கதொரு மனநிலைக்கு வரனும்.

அப்படி ஒரு இடத்திற்கு வந்துட்டோம்னா, நம்ம காதல் ஜெயிக்கும். நம்ம இளைஞர்கள் வெற்றியின் வாலிப்பில் காதல் புரிவர். அப்படிப்பட்ட காதல் கண்ணியமாக ஏற்கப்படும். ஏற்கப்படாத இடத்தில் இந்த "சுந்தர பாண்டியனைப் போல" எதற்கும் துணிந்து நாமும் நிற்போம். நம் துணிவில், காதலில், பண்பில், நடத்தையில் பிறப்பின் முதிர்ச்சியைக் கற்குமிவ்வுலகு; கவலைப் படாதீர்.

அவ்வழியே, அத்தகைய பண்புகளின் நாடியைப் பிடித்து நமக்குத் திரைப்படங்களாக்கித் தரும் இதுபோன்ற திரையிலக்கியங்களின் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும்,

நடிகர்களுக்கும் இதர திரைத் துறைச் சார்ந்த அத்தனைக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து திரைத்துறையின் தேவைக்குரிய அளவுமட்டும் நம் முழு வரவேற்பினை திரைப்படங்களுக்கு நல்குவோம்..

அதோடு, 'குத்தினவன் நண்பன்னு தெரிந்தா அதை வெளியிலக் கூடச் சொல்லாததுதான் நட்பு' என நட்பின் பெருமித குணத்தோடு முடியுமிப்படம் நிச்சயம் எல்லோருக்கும் வெகு சாதாரமாகப் பிடித்துவிடக் கூடிய சிறந்ததொரு திரைப்படம்தானென்றும் மெச்சுவோம்..

-------------*-------------*--------------

இப் படத்தின் இதர குறைகளும் நிறைகளும்:

குறைகள்:

புகைப் பிடித்தல் மது அருந்துதல் போன்ற காட்சிகளை "வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல" எனும் வசனங்களோடு மீண்டும் மீண்டும் அதன் ஆசைகளைத் தூண்டுவதாகவே காட்சியமைத்துள்ளது. படத்தை நாம்தானே எடுக்கிறோம்? யதார்த்தம் என்பதற்காக தீயப் பழக்கங்களைத் தான் சேர்த்துக்கனும்னு இல்லையே. நல்ல செயல்களை பழக்கவழக்கங்களை அத்தகைய செயல்களின் வீரியன்களைக் காட்டி செய்யக்கூடாதென்பது போன்ற காட்சிகளை திணித்தாவது சமுதாயத்திற்குத் தீமைகளை விளைவிக்கக் கூடிய அத்தகைய செயல்களை செய்யத் தூண்டும் காட்சிகளைத் தவிர்க்கலாமே.

முதல் காதல் மறக்காது, காதலில் இது வெற்றி இது தோல்வி, தோற்றால் குடிக்கணும் புகைப் பிடிக்கணும் தன் நிலை மறந்துத் தவிக்கணும் போன்ற உத்திகள் அடங்கிய அதே பழைய காட்சிகளின் உட்புகுத்தல்கள் என்னதான் இன்றும் இளைஞர்களால் ஏற்றுக் கொண்டு விசில் பறக்கவைக்கிறது என்றாலும் அதெல்லாம் இனி தேவையா? என்று யோசித்திருக்கலாம்.

அடுத்து, அடமாக அதிக பாட்டிகளைக் காட்டி அவர்களில் சிலரை நகைச்சுவையின் பொருட்டாக ஏளனப் படுத்தும் காட்சிகளை இத்தகைய சிறந்த இயக்கத் திறனுள்ள படத்தில் தவிர்த்திருக்கலாம். மாறாக பெரியோரை மதிக்கத் தக்க பண்புகளை வளர்த்தல் நலம். இதலாமென்ன பெரிய விசயமா? ஊர்ல இல்லாததா? எனலாம், ஆனால் இப்படி சின்னஞ்சிறு துளி துளிகளாகத் தான் விழப்படுகிறது பண்பைக் கெடுக்கும் நஞ்சுகள் நம் கலச்சாரத்திற்கிடையே.

அடுத்து அப்புக்குட்டி இறக்கும் தருனமாக வரும் காட்சியில் அவனுடைய நண்பர்கள் கடைசிவரை போலிசு போலிசு என்றே கதறுவது. ஒரு கட்டத்தில் காவலாளிகள் வந்துவிட்டதும் அப்புக்குட்டியின் உடலை வண்டிக்குள் ஏற்றுகையில் அவன் பெயரைச் சொல்லி வருந்துவதாக அங்கே மாறியிருப்பின், ஒரு லேசான செயற்கைத் தனம் அங்கே ஒட்டிக்கொண்டிருந்திருக்காது. இருப்பினும் எல்லோரும் கவனிக்கத் தக்கதுமல்ல. இதுபோல் எல்லோருக்கும் புரிபடாத வகைகளில் இடைபுகுந்திருக்கும் மிக சில குறைகளையே வருங்காலப் படங்களை இன்னும் திறமாக செய்வற்தகென்று சொல்லிவைக்கலாம்.

நிறைகள்:

அழகான காட்சிகளுக்கு அகப்படக்கூடிய, பார்க்கப் பார்க்க ஈர்க்கும் ரம்மியமான இடங்களின் தேர்வும் மற்றும் அதைப் பதிவுசெய்த ஒளிப்பதிவுத் திறனும், அதுபோல், பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் கனகச்சிதமாக நடிகர்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பென்பதையும் மீறி வாழவிட்டிருப்பதும் சிறப்புதான். குறிப்பாக அந்த சுந்தரப் பாண்டியனின் அப்பாவும் அர்ச்சனாவின் அப்பாவும் மனதில் நிற்கிறார்கள். (பாட்டிகள் இதில் அடக்கமில்லை)

முழுக்க முழுக்க காதல் படம்தானே என்று இரு உதடுகள் உரசி வெப்பமேற முத்தமிட்டுக்கொள்வது போன்ற காட்சியையும் மற்றும் அரைகுறை ஆடைகளில் மார்புக்கூடு தழுவி கழுத்துவரை நெளிந்து பார்ப்போரை காமப்பசிக்கு ஆளாக்கும் பாடல்கள் தான் காதல் பாடல்களென சித்ரவதை செய்யாது ரசிக்கும் காட்சிகளை காதலின் மனது பதறும் அதேவேளை அன்பு வெளிப்படும் அருமையான காட்சிகளோடு பாடலையும் காதல் கதையையும் இயக்கியது.

லட்சுமி மேனனின் நடிப்பை நேர்த்தியாக பயன்படுத்தியது. தன் காதலை வீடு ஏற்றுக் கொள்ளுமென்று புரிந்ததும் ஒரு மகள் படும் சந்தோசத்தை ஒரு மயிலாடும் ஆட்டம் போல் அழகாகக் காட்டியது. குறிப்பாக மருமகளே தண்ணிக் கொண்டுவாவென்று சுந்தரபாண்டியனின் தந்தை சொன்னதும் நாயகி தன் முகத்தில் காட்டிய நடிப்பு' அவரையும் இயக்குனரையும் மெச்ச வைக்கும்.

அதுபோல் நாயகி நாயகன் இருவரின் உயரத்தை சமநிலையாக காண்பிக்க நேராக இருவரையும் காண்பிக்கும் காட்சிகளிலெல்லாம் குனிந்து இழுப்பது ஏதேனும் விளையாடுவது போன்ற காட்சிகளை அமைத்துக்கொண்ட இயக்குனரின் ஒளிப்பதிவாளரின் புத்திசாலித் தனம்.

கடைசியில் தன்னைக் கொல்லவந்த மூவருமே தன் உயிருக்குயிரான நண்பர்கள் என்று தெரிய வருகையில், குறிப்பாக அந்த மூன்றாம் நண்பன் பின்னாலிருந்து கத்தியில் குத்துகையில் மனசு அவனின் துரோகத்தை எண்ணி அழும் ஆழியை அவனின் கன்னத்தில் வழியுமொரு சொட்டுக் கண்ணீராகக் காண்பித்தது.

மிக முக்கியமாக, தனியாக நகைச்சுவைக்காக இடமமைத்து நம்மை மிரட்டாமல் படத்தினூடையில் யதார்த்தமாக வரும் வசனங்கள் மூலமாக எல்லோரையுமே சிரிக்க வைக்கும் எளிய வார்த்தைகளின் ஜோடனையும் அதற்கேற்றாற்போல் நடித்துள்ள சூரியின் நடிப்பும் ரசனைக்குரியது.

ஒரு சாதாரண பாத்திரமாகவும், அதேநேரம் நம் நண்பர்களுக்கிடையே ஒரு நாயகத்துவமுள்ள ஒரு தோழனைப் போலவும், கண்ணியமான காதலனாக, நல்ல மனிதனாக நல்ல நடிகனாகவும் சசியைக் காட்டியதும் அவர் நடித்துள்ளதும் அழகு! பாராட்டுக்குரியதும்!!

அனைவருக்கும் நன்றிகளுடன்..
--
வித்யாசாகர்
****
டைம்ஸ் ஆப் தமிழ்நாடு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 14, 2012 10:35 pm

ஆக எதிர்பார்த்தது போலவே சசி படம் பார்க்கலாம்
என்ற நம்பிக்கையை தக்க வைத்து கொண்ட படம்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 16, 2012 12:51 am

சிறந்த விமர்சனம்! படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஒரு திருட்டு விசிடி ஆர்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!



சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 16, 2012 12:51 am

சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  15-sundarapandiyan4-300



சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 8:09 am

தினமலர் விமர்சனம் - சுந்தர பாண்டியன்

இதுநாள்வரை நட்பு, நண்பர்களின் காதலுக்கு உதவி, அதற்காக அடிதடி, அடாவடி ஆகிய கதையம்சம் கொண்ட படங்களிலேயே கவனம் செலுத்தி வந்த சசிகுமார், முதன்முதலாக காந்தார காதலனாக களம் இறங்கி கலக்கி இருக்கும் கலர்புல் படம்தான் "சுந்தரபாண்டியன்".

மதுரை, தேனிபக்கம் குறிப்பிட்ட சமூகத்தை ‌சார்ந்த பெரிய இடத்துப்பிள்ளை நாயகர் சுந்தரபாண்டியன் எனும் சசிகுமார். நண்பனின் காதலுக்கு உதவப்போய் இவரே நாயகி அர்ச்சனா அலைஸ் லெஷ்மி மேனனின் மனம் கவர்ந்தவராகிறார். அப்புறம்? அப்புறமென்ன? அர்ச்சனா அலைஸ் லெஷ்மியின் காதலன், முறைமாமன், அம்மணி அர்ச்சனா கல்லூரிக்கு போகும் வரும் வழிகளில் முறைக்கும் மாமன்கள்... எல்லோரும் மனதளவில் விரோதியாகப்போகும் சுந்தரபாண்டியனை, எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட இருந்தே குரல்வளை அறுக்க பார்க்கின்றனர். ஆனால் அவர்க‌ள் அத்தனை பேரையும் நண்பர்களாகவே பார்க்கும் சுந்தரபாண்டியன், தன் காதல் திருமணத்திற்கு முதல்நாள் புகட்டும் பாடம் தான் "சுந்தரபாண்டியன்" மொத்தபடமும்! இப்படி ஒரு காதலுக்கும் - நட்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த அழகிய கதையை எத்தனைக்கு எத்தனை அற்புதமாக தந்திருக்கிறார் இப்படத்தின் அறிமுக இயக்குநரும், சசிகுமாரின் உதவி இயக்குநருமான எஸ்.ஆர்.பிரபாகரன் என்பது தான் இப்படத்தின் பெரியபலம்!

ரஜினி ரசிகர் சுந்தரபாண்டியனாக சசிகுமார், பேருந்தில் அலப்பறை பண்ணுபவர்களை அடக்கும் ஒரு சில காட்சிகளும், பில்-டப் ப்ளாஷ் போக்குகளும்‌ போதும் அவரது இயல்பான எடுப்பான நடிப்பிற்கு கட்டியம் கூறுவதற்கு! மனிதர் என்னமாய் நடித்திருக்கிறார்?! சசியின் நடிப்பையும் துடிப்பையும் பார்த்து நாயகி அர்ச்சனா எனும் லெட்சுமி மேனனுக்கு மட்டுமல்ல... பொதுவான தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் சசிகுமார் மீது இனம்புரியா காதல் வருவதுதான் சுந்தரபாண்டியனின் வெற்றி! க்ளைமாக்ஸில் நல்ல நட்பிற்கு விளக்கம் அளிக்கும் காட்சிகளில் சுந்தரபாண்டியன் சசிகுமாரையும் மீறி, இயக்குநர் பிரபாகரனும் அவரது வசனங்களும் ஸ்கீரினில் தெரிவது சசிகுமாருக்கும், சுந்தரபாண்டியனுக்கும் கிடைத்திருக்கும் பெரிய வெற்றி ‌என்றால் மிகையல்ல!

கதாநாயகி அர்ச்சனாவாக அறிமுகமாகியிருக்கும் லெட்சுமி மேனன், தமிழ்சினிமாவில் தற்போது நிலவும் குடும்ப பாங்கான கதாநாயகியர் பற்றாக்குறையை பக்காவாக நிரப்புவார் என நம்பலாம்! அம்மணி காதல் காட்சிகளிலும் சரி, கல்தா கொடுக்கும் காட்சிகளிலும் சரி, அவ்வளவு ஏன்? அப்பாவின் ஒப்புதலுக்காக கண்ணீர் மல்க நிற்கும் காட்சிகளிலும் கூட தன் இயல்பான திமிரான நடிப்பால் படத்தை மேலும் ஒருபடி மேலே தூக்கி பிடித்திருக்கிறார் பலே! பலே!

சசிகுமார் - லெஷ்மி மேனன் ஜோடி மாதிரியே ஆரம்ப காதலன் அறிவழகனாக வரும் இனிகோ பிரபாகரன், முறைபையன் ஜெகனாக வரும் விஜய் சேதுபதி, எல்லோருக்கும் சீனியர் புவனேஷ்வரன் ‌எனும் குட்டையனாக வலம் வந்து, பாதியிலேயே பரிதாபகரமான முடிவை தேடிக் கொள்ளும் அப்புக்குட்டி, நண்பன் முருகேசனாக வரும் பரோட்டா சூரி, பரஞ்ஜோதி - செளந்தர ராஜா, அப்பா கேரக்டர்கள் நரேன், தென்னவன், அம்மா கேரக்டர்கள் துளசி, சுஜாதா, தோழி நீது நீலாம்பரன் உள்ளிட்ட எல்லோரும் சம்பந்தப்பட்ட பாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பது படத்தின் பெரும்பலம்!

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் நான்கு மட்டுமல்ல, பின்னணி இசையும் சுகராகம்! சி.பிரேம் குமாரின் ஒளிப்பதிவு, வி.டான்போஸ்கோவின் படத்தொகுப்பு, திலிப் சுப்பராயனின் சண்டை பயிற்சி, தினேஷின் நடனம் உள்ளிட்டவைகளும் படத்தின் பெரும் பலம்! இவையெல்லாவற்றையும் விட ‌எஸ்.ஆர்.பிரபாகரனின் எழுத்தும்-இயக்கமும், எம்.சசிகுமாரின் நடிப்பும், தயாரிப்பும் சுந்தரபாண்டியனின் முன்பாதியை காமெடியாகவும், பின்பாதியை கருத்து நெடியாகவும் சீன் பை சீன் தூக்கி நிறுத்தி இருக்கின்றனர் பேஷ் பேஷ்!

ஆக மொத்தத்தில் குறை என்று பெரிதாக எதுவும் சொல்ல முடியாத "சுந்தரபாண்டியன் - சூப்பர்பாண்டியன்!"



சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 8:10 am

நீண்ட நாட்களுக்குப் பிறகு அற்புதமான படத்தைப் பார்த்த திருப்தி ஏற்பட்டுள்ளது.



சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Sep 24, 2012 8:25 am

புரட்சி wrote: புகைப் பிடித்தல் மது அருந்துதல் போன்ற காட்சிகளை "வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல" எனும் வசனங்களோடு மீண்டும் மீண்டும் அதன் ஆசைகளைத் தூண்டுவதாகவே காட்சியமைத்துள்ளது. படத்தை நாம்தானே எடுக்கிறோம்? யதார்த்தம் என்பதற்காக தீயப் பழக்கங்களைத் தான் சேர்த்துக்கனும்னு இல்லையே. நல்ல செயல்களை பழக்கவழக்கங்களை அத்தகைய செயல்களின் வீரியன்களைக் காட்டி செய்யக்கூடாதென்பது போன்ற காட்சிகளை திணித்தாவது சமுதாயத்திற்குத் தீமைகளை விளைவிக்கக் கூடிய அத்தகைய செயல்களை செய்யத் தூண்டும் காட்சிகளைத் தவிர்க்கலாமே.

முதல் காதல் மறக்காது, காதலில் இது வெற்றி இது தோல்வி, தோற்றால் குடிக்கணும் புகைப் பிடிக்கணும் தன் நிலை மறந்துத் தவிக்கணும் போன்ற உத்திகள் அடங்கிய அதே பழைய காட்சிகளின் உட்புகுத்தல்கள் என்னதான் இன்றும் இளைஞர்களால் ஏற்றுக் கொண்டு விசில் பறக்கவைக்கிறது என்றாலும் அதெல்லாம் இனி தேவையா? என்று யோசித்திருக்கலாம்.

இதைத்தவிர... படம் அருமை !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 8:31 am

ஹலோ பாஸ், இன்று தமிழகத்தில் குடிப்பழக்கம் இல்லாத ஆண்கள் யாராவது இருக்கிறார்களா எனக் கூறுங்கள்! சாலை ஓரங்களில் அமர்ந்து குடிக்கிறார்கள். பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் வழியெங்கும் மதுபானக் கடைகள். மாலை நேரமானால் எங்கு கூட்டம் உள்ளதோ இல்லையோ பார்களில் குடிமகன்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, சினிமாத்தனம் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் இந்தக் காட்சிகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுவதற்கில்லை.



சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 8:32 am

தலைவர் விஜயகாந்த் கூற்றுப்படி "தமிழ்நாட்டில் படிக்காதவன் இருக்கலாம், ஆனால் குடிக்காதவன் யாருமே இல்லை"



சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக