புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத அடிப்படையில் ஒடுக்கப்பட்ட நூற்கள் (Literature suppressed on religious grounds- Margaret Bald)
Page 1 of 1 •
மத அடிப்படையில் ஒடுக்கப்பட்ட நூற்கள் (Literature suppressed on religious grounds- Margaret Bald)
#850880- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
ஜெர்மானிய தேசத்தின் கிறிஸ்தவ நற்குடி மக்களுக்கான உரை
ஆசிரியர்: மார்ட்டின் லூதர்
பதிப்பிக்கப்பட்ட காலமும், இடமும்: 1520, சுவிட்சர்லாந்து
இலக்கிய வகை: இறையியல்
ஜெர்மானிய துறவியும், இறையியலாளருமான மார்ட்டின் லூதர் புரொட்டெஸ்டெந்து சீர்திருத்தத்தின் பிதாமகர் ஆவார். அவரது தொண்ணூற்றைந்து நியாயங்களை 1517ல் விட்டன்பர்க் கோட்டை திருச்சபைக் கதவில் அறைந்து, இடைக்கால திருச்சபையின் அமைப்பினை மாற்றிய ஒரு இயக்கத்தைத் துவங்கினார்.
ஆகஸ்ட் 18, 1520ல் அவர் மேற்குறிப்பிட்ட நூலைப் பதிப்பித்து, அதன் மூலமாக ஜெர்மானிய மேற்குடி மக்களையும், இளவரசர்களையும் சபையைச் சீர்திருத்த வருமாறு அழைத்தார். "மக்களின் இதயத்திலிருந்து வரும் கூக்குரல்", "போர்ப்பறைகளின் முழக்கம்", என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த உரையானது லுத்தருக்கும் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்குமான பிளவு உறுதியான பின்பு எழுதப்பட்டதாகும்.
அவர் மறுமலர்ச்சி கால திருச்சபையில் நிலவும் ஊழலைப் பற்றிய தனது கோபத்தை வெளிப்படுத்தினார். போப்பின் அதிகாரத்தை மட்டுப்படுத்தவும், மதசார்பற்ற ஆட்சியாளர்களின் கரத்தை வலுப்படுத்தவுமான சீர்திருத்தங்களை முன்மொழிந்தார். ஒவ்வொரு சிறிய கிராம சமுதாயமும் அதன் பணிகளை அதுவே கவனித்து, அதன் பாதிரிகளை சமுதாயமே தெரிந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். போப் புனித நூலின் இறுதியான உரையாளர் என்பதை அவர் மறுத்தார். ஒவ்வொரு இறைநம்பிக்கையாளனும் பாதிரியின் தன்மைகள் கொண்டவன் என்றார் அவர்.
"போப்புகளையும், பேராயர்களையும், பாதிரியார்களையும், துறவிகளையும், கன்னியாஸ்திரீகளையும் மத வகுப்பு என்றும், இளவரசர்களையும், பிரபுக்களையும், தொழிலாளரையும், விவசாயியும் மதசார்பற்ற வகுப்பு என்றும் பிரிப்பது போலியானதாகும். நமது திருமுழுக்கு நம்மனைவரையும் பாதிரிகளாக புனிதப்படுத்தி விடுகிறது", என்றார் அவர். போப் மட்டுமே புனித நூலின் உரையாளராகக் கொள்ளப்பட வேண்டும் என்ற கூற்றை வன்மையாக மறுத்தார் அவர். "மோசமான, ஆதாரமற்ற கண்டுபிடிப்பு" என்று அக்கூற்றை அவர் வர்ணித்தார்.
சபையைச் சுத்தப்படுத்தி லெளகீகமான அதன் அதிகாரங்களைப் பறித்து விடுவதன் மூலம், அதன் மதக்கடமைகளை ஒழுங்காகச் செய்ய முடியும் என்றார் அவர். கால்நடையாக அலைந்த இயேசுவையும், சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் போப்பரசரையும் ஒப்பிட்டு, சபை அப்போஸ்தலர்களின் எளிமைக்குத் திரும்ப வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். கார்டினல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும், சபையின் சொத்துகள் கைவிடப்பட வேண்டும், பாவமன்னிப்புச் சீட்டின் மூலமும், காணிக்கைகள் மூலமும் கிடைக்கும் வருமானம் குறைக்கப்பட வேண்டும், துறவிகளுக்கு பாவமன்னிப்பு கேட்பதிலிருந்தும் பிரசங்கிப்பதிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட வேண்டும். துறவிகள் சமூகங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். மாற்றப்பட முடியாத துறவுச் சபதம் நீக்கப்பட வேண்டும். பாதிரியார்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
ஜெர்மானியர் சம்பந்தமான திருச்சபை நீதிமன்ற வழக்குகள் ஒரு ஜெர்மானிய மூத்த பாதிரியாரைத் தலைவராகக் கொண்டு நடைபெற வேண்டும். ஜெர்மானிய அரசுகள் போப்புக்கு வரி செலுத்தாமல் அவர்களது ஆதிக்கத்தைத் தங்கள் பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றார் மார்ட்டின் லுத்தர்.
"மதத்துரோகிகளோடு புத்தகங்கள் மூலம் விவாதிக்கலாம், நெருப்பைக் கொண்டு அல்ல" என்றார் லுத்தர். அவருநடைய இந்த நூலுக்கும், 1520லயே வெளியான சபையின் பாபிலோனிய சிறையிருப்பு என்னும் நூலுக்குமான சபையின் எதிர்வினை கடுமையாக இருந்தது. இந்த இரண்டு பிரதிகளையும் பதிப்பித்த பின்பு போப் லுத்தரை மதத்துரோகியாக அறிவித்து அவரது நூல்களை எரிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Re: மத அடிப்படையில் ஒடுக்கப்பட்ட நூற்கள் (Literature suppressed on religious grounds- Margaret Bald)
#850906- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
செய்திக்கு நன்றி ...தொடருங்கள்
Re: மத அடிப்படையில் ஒடுக்கப்பட்ட நூற்கள் (Literature suppressed on religious grounds- Margaret Bald)
#850978ஒன்றா இரண்டா இவர்கள் எரித்தது ...... நாகரீகத்தின் உச்சத்தை தொட்டிருந்த மாயன்களின் விலைமதிக்க முடியாத அறிவியல் நூலகளையும் அடையாளங்களையும் அல்லவா சேர்த்து எரித்துள்ளார்கள்"மதத்துரோகிகளோடு புத்தகங்கள் மூலம் விவாதிக்கலாம், நெருப்பைக் கொண்டு அல்ல" என்றார் லுத்தர். அவருநடைய இந்த நூலுக்கும், 1520லயே வெளியான சபையின் பாபிலோனிய சிறையிருப்பு என்னும் நூலுக்குமான சபையின் எதிர்வினை கடுமையாக இருந்தது. இந்த இரண்டு பிரதிகளையும் பதிப்பித்த பின்பு போப் லுத்தரை மதத்துரோகியாக அறிவித்து அவரது நூல்களை எரிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
Re: மத அடிப்படையில் ஒடுக்கப்பட்ட நூற்கள் (Literature suppressed on religious grounds- Margaret Bald)
#851077- GuestGuest
ராஜா wrote:ஒன்றா இரண்டா இவர்கள் எரித்தது ...... நாகரீகத்தின் உச்சத்தை தொட்டிருந்த மாயன்களின் விலைமதிக்க முடியாத அறிவியல் நூலகளையும் அடையாளங்களையும் அல்லவா சேர்த்து எரித்துள்ளார்கள்"மதத்துரோகிகளோடு புத்தகங்கள் மூலம் விவாதிக்கலாம், நெருப்பைக் கொண்டு அல்ல" என்றார் லுத்தர். அவருநடைய இந்த நூலுக்கும், 1520லயே வெளியான சபையின் பாபிலோனிய சிறையிருப்பு என்னும் நூலுக்குமான சபையின் எதிர்வினை கடுமையாக இருந்தது. இந்த இரண்டு பிரதிகளையும் பதிப்பித்த பின்பு போப் லுத்தரை மதத்துரோகியாக அறிவித்து அவரது நூல்களை எரிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
காட்டு மிராண்டிகள் உண்மையில் இவர்கள் தான் , மாயன்கள் அல்ல
Re: மத அடிப்படையில் ஒடுக்கப்பட்ட நூற்கள் (Literature suppressed on religious grounds- Margaret Bald)
#851138- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
கற்றுக் கொள்ளுதலின் முன்னேற்றம்
ஆசிரியர்: பிரான்சிஸ் பேக்கன்
முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்ட காலமும், இடமும்: 1605, 1623, இங்கிலாந்து
இலக்கிய வகை: அறிவியல் நூல்
ஆங்கில தத்துவ ஞானியும், அரசியல்வாதியுமான பிரான்சிஸ் பேக்கன் பகுத்தறிவு மற்றும் தர்க்கவியல் அறிவியல் பார்வையின் முன்னோடியாவார். "அறிவே வலிமை" என்ற புகழ் கொண்ட வாசகத்தைச் சொன்னவராகவும் இவர் அறியப்படுகிறார். ஒரு மாபெரும் அறிவியல் நூலைப் படைக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் இரண்டு பாகங்களை மட்டுமே அவர் முடித்தார். முதல் பகுதியான கற்றுக் கொள்ளுதலின் முன்னேற்றம் (The advancement of learning) 1605ம் வருடத்தில் பதிப்பிக்கப்பட்டது. லத்தீனில் டி ஆக்மென்டிஸ் ஸைன்டியாரம் (De Augmentis Scientiarum) என்ற பெயரில் 1623ம் வருடம் விரிவுபடுத்தப்பட்டு பதிப்பிக்கப்பட்டது. இரண்டாவது பாகமான நோவம் ஆர்கனம் (Novum organum) 1620ம் வருடம் பதிப்பிக்கப்பட்டது.
கற்றுக் கொள்ளுதலின் முன்னேற்றம் என்ற நூலில் பேக்கன் அறிவின் பல்வேறு பிரிவுகளை வகைப்படுத்துதற்காக அறிவியலை ஆராயும் தனது நோக்கத்தையும், உண்மையைக் கண்டறியும் வழிகளை ஆராய்வதுமான தமது நோக்கத்தையும் வெளிப்படுத்தினார். ஆனால் முதலில் அறிவியல் கல்வியை "அதன் இழிவுகளிலிருந்தும், அறியாமையிலிருந்தும், மதவெறிகளால் ஏற்படும் அறியாமையிலிருந்தும், அரசியல் சிக்கல்களில் இருந்தும், கற்றறிந்தவர்களின் தவறில் இருந்தும்" விடுவிக்க வேண்டும் என்று அவர் கருதினார்.
புரிந்துகொள்ளும் முறையின் மூலமாகவே அறிவு அடைய முடியும், அதிகார முறையின் மூலம் அல்ல என்று அவர் கருதினார். "அதிகார முறை போதிக்கிறது. புரிந்துகொள்ளும் முறை தூண்டுகிறது. சொல்லும் விஷயங்கள் நம்பப் பட வேண்டும் என்கிறது அதிகார முறை. சொல்லப்படும் விஷயங்கள் ஆராயப்பட வேண்டும் என்பது புரிந்து கொள்ளும் முறை". அறிவைத் தேடும் அரிஸ்டாட்டிலிய கோட்பாட்டு முறையை விட அவர் சோதனை முறையையே நம்பினார். குறிப்பிட்ட விஷயங்களை ஆராய்வதிலிருந்து தொடங்கி பொதுப்படையான விஷயங்களை ஆராய வேண்டும் என்றார் அவர். போதுமான ஆதாரங்களில்லாத கோட்பாடுகளை அவர் புறக்கணித்தார். ஆய்வு அறிவின் முதற்படி என்றார் அவர். தனிப்பட்ட மனிதரின் விருப்பு வெறுப்புகளின் அடிப்பபடையிலும், பழக்க வழக்கங்களிலும் தோன்றிய தவறான நம்பிக்கைகளே மனிதனின் புரிதலை இப்போது தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
இறையியல் அறிவும், இயற்கை அறிவும் தனியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதன்மூலம் புனித தாமஸ் அக்வினாஸ் முன் வைத்த இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மூலம் இயற்கையைப் புரிந்து கொள்ளுதல் என்ற கோட்பாட்டை அவர் நிராகரித்தார். "இயற்கையைப் புரிந்துகொள்வதன் மூலம் கடவுளின் மர்மங்களை அறியமுடியும் என்று யூகிக்கவில்லை" என்று அவர் கூறினார். ஆனால் அறிவின் மதிப்பு அதன் உபயோகத்தில் இருக்கிறது என்று அவர் கருதினார். மனிதர்கள் இயற்கையை ஆளுவதனம் மூலம் பொருள்ரீதியிலான முன்னேற்றத்தை அடைய முடியும் என்று அவர் கருதினார்.
தணிக்கை வரலாறு
இக்கால சோதனையியலின் தந்தையாக பேக்கன் கருதப்படுகிறார். அவரது எழுத்தின் வேகமும், அவர் எவ்விஷயத்தையும் பற்றி முன்கூட்டியே எண்ணங்களை வைத்திராமல் ஆராய வேண்டும் என்று குறிப்பிட்ட விதமும் அவரைத் தொடர்ந்த தலைமுறை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பதினேழாம் நூற்றாண்டு மதபோதகர்கள் இயற்கையை ஆராய்வது பெரும்பாவம் என்று கருதினார்கள். மட்டுமல்லாமல் அவர் அரிஸ்டாட்டிலிய முறையை நிராகரித்ததை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
இடைக்கால அறிஞர்கள் மதவெளிப்பாடுகள் மூலமும், பழங்கால அதிகாரத்தின் காரணமாக எழுந்த கோட்பாடுகள் மூலமும் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, பேக்கன் அவற்றையெல்லாம் தாண்டி ஆய்வு மூலம் பொதுக்கோட்பாடுகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் நின்றார். ஸ்பானிய மதவிசாரணை மன்றம் பேக்கனின் அனைத்து நூற்களையும் 1640ல் தடை செய்தது. 1707ம் வருடத்தில் ஸ்பானிய தடைசெய்யப்பட்ட நூற்கள் பட்டியல் பேக்கனின் அனைத்து நூற்களையும் கொண்டிருந்தது. 1668ல் டி ஆக்மென்டஸ் ஸைன்டியாரம் ரோமில் தடைசெய்யப்பட்ட நூற்கள் பட்டியலில் திருத்தப்படும் வரை தடை என்ற குறிப்புடன் சேர்க்கப்பட்டது. ரோம பட்டியல் ஒழிக்கப்படும் ஆண்டான 1966 வரை பேக்கனின் நூல் அப்பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

#851596- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
பகுத்தறிவின் காலம் (Age Of Reason)
ஆசிரியர்: தாமஸ் பெயின்
பதிப்பிக்கப்பட்ட காலமும் இடமும்: 1794-95, பிரான்ஸ்
இலக்கிய வகை: தத்துவ உரை
ஆங்கில அமெரிக்க கோட்பாட்டாளரும், எழுத்தாளரும், புரட்சியாளருமான தாமஸ் பெயின் ஆங்கில கைப்பிரதி எழுத்தாளர்களுள் மிகவும் சிறப்பு பெற்றவர். பகுத்தறிவின் காலம் என்ற அவரது நூல் கிறிஸ்தவத்தை பகுத்தறிவின் அடிப்படையில் கடுமையாகத் தாக்கியது. அறிவின் அடிப்படையிலான இறையியல் கோட்பாட்டு நூல்களுள் மிகச் சிறப்பான இடத்தை இந்நூல் பெறுகிறது.
ஆங்கில குவேக்கர் ஒருவரின் மகனான பெயின் அமெரிக்காவுக்கு 1774ல் குடிபெயர்ந்தார். அங்கே விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டார். 1776 ஜனவரியில் பதிப்பிக்கபட்ட பொது அறிவு என்ற அவரது கைப்பிரதி அமெரிக்க குடியரசைத் தோற்றுவிக்கவும், அமெரிக்க விடுதலைக்காகப் போராடவும் மக்களுக்கு அறைகூவல் விடுத்தது.
1787ல் பெயின் இங்கிலாந்துக்குத் திரும்பினார். அங்கே 1791-92ல் மனித உரிமைகள் என்னும் நூலை வெளியிட்டார். அந்நூலில் அவர் பிரெஞ்சுப் புரட்சியை ஆதரித்தும், பிரிட்டனின் சமூக, அரசியல் சமத்துவமின்மையைக் கண்டித்தும் எழுதியிருந்தார். அந்நூல் அடுத்த பத்தாண்டுகளில் ஐந்து லட்சம் பிரதிகள் விற்பனையாகி, இங்கிலாந்தில் அதிகமாக வாசிக்கப்படும் நூல்களுள் ஒன்றானது. அரசுக்கெதிராக அவதூறாகப் பேசியதாக பிரிட்டிஷ் அரசாங்கம் பெயினைக் குற்றஞ்சாட்டியது. பெயின் பாரிசுக்குத் தப்பிப் போனார். அங்கே தேசியப் பேரவையின் உறுப்பினராக பிரெஞ்சுப் புரட்சியில் ஈடுபட்டார். 1794ல், "பயத்தின் ஆட்சியில்" மாக்ஸ்மிலியன் ராப்ஸ்பியராலும், ஜேகோபின்களாலும் பத்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பிற்பாடு பிரான்சுக்கான அமெரிக்க தூதரான ஜேம்ஸ் மன்றோவால் அவர் விடுவிக்கப்பட்டார்.
சிறைக்குச் செல்லும் போது பகுத்தறிவின் காலம் நூலின் முதலாம் பாகத்தின் கையெழுத்துப் பிரதியை பெயின் தனது நண்பரிடம் கொடுத்திருந்தார். அது 1794ல் பாரிசில் பதிப்பிக்கப்பட்டது. அவர் சிறையிலிருந்து விடுதலை பெற்றவுடன் 1795ம் வருடம் அதன் இரண்டாம் பாகத்தையும் எழுதி முடித்தார். பிரான்சில் தங்கியிருக்கும் போது, பிரஞ்சு மதகுருமார்களின் புரட்சிக்கு எதிரான, அரசனுக்கு ஆதரவான செயல்கள் மக்களை இறைமறுப்புக்கு நேராகக் கொண்டு செல்கின்றன என்று கருதினார். அவரது பகுத்தறிவின் காலம் நூலின் மூலம் உண்மையான மதத்தைக் கிறிஸ்தவ முறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அவரைப் பொறுத்தவரை கிறிஸ்தவ முறையானது புனித மோசடியாகவும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் இருந்தது.
அமெரிக்க ஐரோப்பிய அறிவுஜீவிகளான பெஞ்சமின் பிராங்க்ளின், தாமஸ் ஜெபர்சன், வால்டேர், ரூசோ ஆகியோரைப் போன்று பெயினும் அறிவின் அடிப்படையிலான கடவுள் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தார். இக்கோட்பாட்டின் மூலம் கடவுளின் இருப்பை இயற்கை ஒழுங்கின் மூலம் அறிந்து கொள்ளலாம். இக்கோட்பாட்டாளர்கள் நிறுவன மதம் தேவையற்றது என்று கருதினார்கள். இறைநம்பிக்கையை இயற்கைக்கு அப்பாற்பட்ட வெளிப்பாடுகளின் மீது கொண்டிருப்பதைக் கடுமையாக விமர்சித்தனர். கடவுளின் படைப்பு மட்டுமே அவரது வெளிப்பாடு என்று அவர்கள் கருதினார்கள்.
பகுத்தறிவின் காலம் நூலின் மூலம் பெயின் இக்கோட்பாட்டை பிரபலமாக்கி அறிவுஜீவிகளிடமிருந்து இக்கோட்பாடு சாதாரண மக்களையும் சென்றடைய வழிவகுத்தார். இந்த நூல் இறைமறுப்பாளர்களின் வேதாகமம் என விமர்சிக்கப்பட்டாலும், பெயின் இறைமறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் இந்த நூலை ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலேயே துவங்கினார். "நான் ஒரு கடவுளை மட்டும் நம்புகிறேன். அதைவிட அதிகமாக அல்ல. இந்த வாழ்க்கைக்கு அப்பாலும் மகிழ்ச்சி உண்டு என்பதை நம்புகிறேன்".
பெயின் தனது அனைத்து அரசியல் படைப்புகளிலும் மக்களை கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும், அரசாங்கத்தின் தவறான கோட்பாடுகளிலிருந்தும் காப்பதைத் தனது இலட்சியமாக அறிவித்திருந்தார். "மனிதனைப் பாதிக்கும் அடக்குமுறைகளிலும் மத அடக்குமுறையே மிக மோசமானது. வேறு எல்லா அடக்குமுறைகளும் நாம் வாழும் இவ்வுலகத்தோடு நின்று விடுகின்றன. ஆனால் மத அடக்குமுறை நமது மரணத்துக்கப்பாலும் நம்மைத் தொடர்கிறது", என்று பெயின் எழுதினார். நிறுவனமயமாக்கப்பட்ட மதமானது "மனிதனைப் பயமுறுத்தி அடிமைப்படுத்தி, அதிகாரக்குவியலுக்கும், லாபத்துக்கும் வழிகோலுகிறது.". உண்மையான இறையியல், "இயற்கைக் கோட்பாடு, அது அறிவியலைத் தழுவி நிற்கிறது."
இறைநம்பிக்கையுள்ளதாகச் சிலர் சொல்வதை பெயின் "தன் மனதிடம் தாமே பொய் சொல்வது" என்று பெயின் விமர்சித்தார். எல்லா தேச திருச்சபைகளும், மதங்களும் தங்களுக்கு கடவுள் சில நபர்கள் மூலம் சில பணிகளைத் தந்ததாகச் சொல்கின்றன. எல்லா திருச்சபைகளும் சில புத்தகங்களை இறைவனின் வெளிப்படுத்தல்கள் என்கிறன்றன. "நமக்கு இரண்டாம் நபரிடமிருந்து கிடைக்கும் எந்த விஷயத்தையும் வெளிப்பாடு என்று சொல்வது மிகப்பெரிய முரண்பாடாகும்" என்றார் பெயின்.
மர்மம், அதிசயம், முன்னுரைத்தல் ஆகியன மூன்று மோசடிகள் என்றும், புதிய ஏற்பாடும், பழைய ஏற்பாடும் கடவுளின் வெளிப்பாடு அல்லவென்றும் பெயின் தீவிரமாக நம்பினார். "எல்லாம் வல்ல இறைவன் மனிதனிடம் தொடர்பு கொண்டார் என்பதை நான் நம்பவில்லை. அவர் தனது படைப்புகளிலும், நாம் செய்த தவறுகளையும், நன்மைகளையும் உணரும்போதும் வெளிப்படுகிறார்", என்றார் பெயின். மனிதன் அறிவுக்காக "படைப்பின் வேதத்தையே" நாட வேண்டும் என்றும், முட்டாள்தனமான "திருச்சபையின் வேதத்தை" நாடக்கூடாது. "எனது சொந்த மனமே எனது திருச்சபை" என்றார் பெயின்.
பகுத்தறிவின் காலம் நூலின் முதலாம் பாகத்தில் பெயின் கிறிஸ்தவக் கோட்பாடுகளைப் பற்றி பொதுவாக விவாதித்தார். இரண்டாம் பாகத்தில் அவர் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளை தீவிரமாகக் கேலி செய்தார். மோசேயின் ஐந்து புத்தகங்கள் மோசேயின் காலத்தில் எழுதப்பட்டதில்லை என்றார் அவர். அவை "அநாமதேயமான நாடோடிக் கதைகளும், அபத்தங்களும், பொய்களும் கொண்டவை" என்றார். பழைய ஏற்பாடு முழுவதும் "ஆபாசக் கதைகளும், ஒழுக்கங்கெட்ட செயல்களும், கொடூரமான செயற்பாடுகளும் நிரம்பியவை.... மனிதனைத் தீயவழிக்கு இட்டுச் செல்லும் கொடூரங்களின் வரலாறு. என்னைப் பொறுத்தவரை நான் கொடூரமான எதையும் வெறுப்பது போல் அதையும் வெறுக்கிறேன்".
புதிய ஏற்பாட்டை விமர்சித்த தாமஸ் பெயின் சுவிசேஷங்கள் இயேசு மரணமடைந்து சில நூற்றாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டது என்றும், அவை அப்போஸ்தலர்களால் எழுதப்படவில்லை என்றும் கருதினார். இயேசு ஒரு மரியாதைக்குரிய மாமனிதர் என்ற பெயின் அவரைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். சபையின கிறிஸ்தவம் இயேசுவின் "எளிமை, ஏழ்மை" முதலிய போதனைகளுக்கு மாறாக "ஆடம்பரத்தையும், வருவாயையும் கொண்டுள்ளது என்றார். இயேசுவின் புனிதப் பிறப்பு கோட்பாடு, "தெய்வநிந்தனையும், ஆபாசமுமானது" என்றார். கடவுள் அதிசயங்கள் செய்வதாகக் கூறுவதை, "அவரை ஒரு கண்கட்டுவித்தைக்காரன் நிலைக்கு தாழ்த்துவது" என்று வர்ணித்தார்.
அனைத்து மத அமைப்புகளிலும், "கடவுளை இழிவுபடுத்துவதில், பகுத்தறிவை மறுப்பதில் முரண்பாடுகள் நிரம்பியதில் முதன்மையானது கிறிஸ்தவம்". மேலும், "வலிமையின் வடிவமாக அது கொடுங்கோலாட்சிக்கு உதவி செய்கிறது. செல்வம் சேர்ப்பதன் வழியாக அது பாதிரியாருக்கு உதவுகிறது. ஆனால் ஒரு நல்ல மனிதனின் மதிப்புக்கு அது இப்பொழுதும் எப்பொழுதும் உதவுவதில்லை" என்று எழுதினார்.
கிறிஸ்தவம் உண்மைக் கடவுளை வணங்காமல் ஒரு மனிதனை வணங்குவதால் அது இறைமறுப்புக்கு ஒப்பாகும் என்றார். "அறிவு அடிப்படையிலான இறையியலாளனுக்கு படைப்பே வேதமாகும். அங்கே அவன் கடவுளின் சொந்தக் கையெழுத்தில் அவரது இருப்பையும், வலிமையையும் பற்றி வாசிக்கிறான். வேறு எல்லா வேதங்களும் போலிகளேயாகும்."
தணிக்கை வரலாறு
பெயின் பகுத்தறிவின் காலம் நூலை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதினார். அறிவு இறையியல் அமைப்புகள் பல அவற்றை அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இலவசமாகவும் குறைந்த விலையிலும் விநியோகித்தன. அமெரிக்காவில் 1790களின் இடைப்பகுதியில் அந்நூல் 17 பதிப்புகளைக் கண்டு பத்தாயிரக்கணக்கில் விற்பனையாகியது. பகுத்தறிவின் காலம் அறிவு இறையியலாளருக்கு வேதமாகியது. பெயின் அவர்களின் கதாநாயகன் ஆனார். அவ்வமைப்பு குடியரசு அமைப்போடு சேர்ந்தே வளர்ந்தது.
ஆனால் இந்தப் புத்தகம் அட்லாண்டிக் மகாசமுத்திரத்தின் அந்தப் பக்கத்திலும் இந்தப்பக்கத்திலுமிருந்த மதகுருமார்களின் கடுமையான வெறுப்பைச் சந்தித்தது. இவ்வெறுப்பு பெயினின் இறப்புக்குப் பின்பும் நீடித்தது. ஒரு நூற்றாண்டு கழித்து தியோடர் ரூஸ்வெலட் பெயினை, "அசிங்கம்பிடித்த இறைமறுப்பாளன்" என்று விளித்தார். இந்நூல் மத அமைப்புகளை மட்டுமல்ல, அதுவரை மதப் பழமைவாதங்களை தாக்கிப் பேசிவந்த சிலரின் வெறுப்பையும் சந்தித்தது. ஏனென்றால் பெயின் வேதாகமத்தையும், கிறிஸ்தவத்தின் அனைத்து வடிவங்களையும் நிராகரித்திருந்தார்.
அதனுடைய அவதூறான முன்னோடியான "மனித உரிமைகள்" நூலைப் போல பகுத்தறிவின் காலம் நூலும் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அபயாகரமாக கருதப்பட்டது. ஏனெனில் அதுவும் பிரஞ்சுப்புரட்சியின் மத்தியில் எழுதப்பட்டது. தாமஸ் பெயின் பிரிட்டனின் சட்டத்துக்கு வெகுதூரம் உள்ள பிரான்சிலும், அமெரிக்காவிலும் இருந்தார். ஆனால் அவருடைய பதிப்பாளர்களும், நூல் விற்பனையாளர்களும் அவ்வாறில்லை. அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் விசாரிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலடைக்கப்பட்டார்கள்.
1797ல் லண்டனைச் சேர்ந்த தாமஸ் வில்லியம்ஸ் ஒரு சிறப்பு நீதிமன்றத்தில் பகுத்தறிவின் காலம் நூலைப் பதிப்பித்தற்காக இறைநிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டார். பெயினின் நூல் கிறிஸ்தவ உண்மைகளைத் தாக்குவதன் மூலம் அதன் அடிப்படையில் அமைந்துள்ள அரசையும், அரசியலமைப்பையும் இழிவுபடுத்துகிறது என்று அரசுத்தரப்பு வாதாடியது. மட்டுமல்லாமல் அந்நூல் ஏழைமக்கள் தங்கள் மறுமையில் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற நம்பிக்கையை இந்நூல் குலைத்ததாகச் சொல்லப்பட்டது. வில்லியமுக்கு ஒரு வருடம் கடுங்காவலும், ஆயிரம் பவுண்டு அபராதமும் விதிக்கப்பட்டது.
1812ல் பிரிட்டிஷ் அரசாங்கம் பதிப்பாளரான டேனியல் ஐசக் ஈட்டனை பகுத்தறிவின் காலம் நூல் புதிய பதிப்பொன்றைப் பதிப்பித்ததாலும் விற்றதாலும் இறைநிந்தனைக் குற்றம் சாட்டி கைது செய்தது. ஈட்டன் அதற்கு முன்பு மனித உரிமைகள் நூலைப் பதிப்பித்ததற்காக சிறையில் வைக்கப்பட்டிருந்தார். "நமது சமூக அமைப்புகளும், மத அமைப்புகளும் ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்றன. அவற்றைப் பிரிக்க முடியாது. அவற்றைப் பிரிக்க முயற்சிப்பது அரசாங்கத்தைச் சீர்குறைக்கும் திட்டம்" என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஈட்டன் பில்லரியில் (கழுத்தையும் கைகளையும் பலகையின் துளைகளுக்கிடையில் வைப்பது) நிற்குமாறு பணிக்கப்பட்டு, 18 மாதங்கள் நியூகேட் சிறையிலிருந்தார். சிறையிலிருந்து வெளிவந்தவுடன் மீண்டும் அந்நூலைப் பதிப்பித்து அரசாங்கத்தை வெறுப்பேற்றினார். மீண்டும் இறைநிந்தனைக்குற்றம் அவர் மீது நிரூபிக்கப்பட்டது. ஆனால் வயதின் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் அவர் தண்டிக்கப்படவில்லை.
பெயினின் கொள்கைகளை பதிப்பிக்கும் உரிமைக்காக ரிச்சர்டு கார்லைல் என்ற பதிப்பாளர் மிக அதிகமான விலையைக் கொடுத்தார். எழுத்து சுதந்திரத்தின் தீவிர ஆதரவாளரான அவர் 1817லிருந்து 1835 வரையிலான காலத்தில் பகுத்தறிவின் காலம் நூலையும், அறிவு இறையியல் கோட்பாட்டு நூல்களையும் பதிப்பித்ததற்காக ஒன்பதாண்டுகள் சிறையிலிருந்தார். அவர் 1818ல் பகுத்தறிவின் காலம் நூலை முதலில் படித்ததில் இருந்து அறிவு இறையியலாளராக மாறினார். தனக்கு முந்தைய பதிப்பாளர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள் என்பதை அறிந்த அவர் அந்த புத்தகத்தை மீண்டும் பதிப்பித்தார். அவர் மீது இறைநிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டது. இருந்தாலும் அவர் நூல் விற்பனையை நிறுத்தவில்லை. அவர் அக்டோபர் 1819ல் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டார். தனது சார்பாக வாதிடும் போது நீதிமன்றத்தில் பன்னிரெண்டு மணிநேரம் செலவிட்டு முழு நூலையும் படித்துக் காட்டினார். இவ்வடிவில் அந்நூல் அரசாங்க ஆவணங்களில் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். அவ்வடிவில் இந்நூல் வழக்கின் பிரபலத்தால் 10000 பிரதிகள் விற்றது.
கார்லைலின் மீதான இறைநிந்தனை வழக்கில் பகுத்தறிவின் காலம் நூலைப் பதிப்பித்ததற்காக அவருக்கு இரண்டு வருடம் சிறையும், ஆயிரம் பவுண்டு அபராதமும், எலிஹு பால்மரின் இயற்கைக் கோட்பாடுகள் என்ற நூலைப் பதிப்பித்ததற்காக இன்னும் ஒரு வருடம் சிறையும், 500 பவுண்டு அபராதமும் விதிக்கப்பட்டது. அவருக்குத் தண்டனை வழங்கப்பட்ட ஒரு மணிநேரத்தில் அரசாங்க அலுவலர்கள் அவரது கடையில் இருக்கும் பொருட்களைப் பறிமுதல் செய்து கடையை மூடினர். திவாலாகிப் போன அவர் அபராதம் கட்ட முடியாமல் ஆறு வருடங்கள் சிறையில் இருந்தார். தொடர்ந்த வருடங்களில் அவரது மனைவி, சகோதரி மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட அவரது பணியாளர்களும் தொடர்ந்து பகுத்தறிவின் காலம் நூலைப் பதிப்பித்ததால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் கூண்டிலேற்றப்பட்டு சிறையிலடைக்கப் பட்டனர்.
பெயினின் படைப்பை ஒடுக்குவதற்குப் பதிலாக கார்லைல் வழக்கு அதன் மீதான ஆர்வத்தைத் தூண்டியது. அடுத்த நான்கு வருடங்களில் இங்கிலாந்தில் 20000 பிரதிகள் விற்பனையாயின. தத்து ஆசிரியரான ஜேம்ஸ் ஸ்டூவர்ட் மில் 1824ல் இவ்வாறு எழுதுகிறார், "அடித்தட்டு மக்களிடையே இப்புத்தகத்தை வாங்கியவர் ஒருவர் என்றால் படித்தவர்கள் பலர் இருப்பார்கள். அதன் மூலமாகக் குறைந்தபட்சம் ஒரு லட்சம் மக்களை இப்புத்தகம் சென்றடைந்து அவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனக் கொள்ளலாம்".

#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1