ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 011 - தோடுடைய செவியன் (சிறுகதை சின்னத்திருவிழா)

2 posters

Go down

கதை எண். 011 - தோடுடைய செவியன் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty கதை எண். 011 - தோடுடைய செவியன் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by அசுரன் Thu Sep 27, 2012 11:40 pm

தோடுடைய செவியன்


தோடுடைய செவியன், விடையேறியோர் தூ வெண் மதி சூடி இ இ ....என்று சுவற்றின் ஓரமாக ஒதுக்கி வைக்கப்பட்ட சிறிய பூஜை அலமாரியின் முன் காலையில் மனமுருகப் பாடிக்கொண்டிருந்தார் வைத்தியநாதன். பேரன் ரித்துபன் ஓடி வந்து “தாத்தா தாத்தா ஸ்கூலுக்கு நேரமாச்சு வாங்க கிளம்பலாம்” என்று கையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான். தன்னுடைய ஒரே மகன் தில்லையப்பன் சென்னையில் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறான். மருமகளும் ஆட்களை வேலைக்கு எடுக்க உதவும் மனிதவள ஆலோசனை நிறுவனத்தில் பணி புரிவதால் இருவரும் ரொம்ப பிஸி. பேரனை காலையில் பள்ளிக்கு கூட்டிச் செல்வது முதல் மாலையில் திரும்ப அழைத்து வருவதெல்லாம் ஒய்வு பெற்ற தமிழாசிரியரான வைத்தியநாதனின் வேலை. மனைவி இறந்த பிறகு பேரன் ரித்துபனும், தேவாரப் பக்திப் பாடல்களும், சென்னையில் நடக்கும் தமிழ்ச் சங்க உரையாடலுக்கும், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நடைபெறும் ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்கும் அவ்வப்போது சென்று வருவது தான் அவரின் பொழுதுப்போக்கு
.

சிதம்பரம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் வைத்தியநாதன் என்றால் அவ்வளவு மரியாதை. திருநீறு பூசிய நெற்றி, பணிவான முகம், பாங்கான குணம், சீரான பேச்சு, நிமிர்ந்த நடை, தும்பை பூப்போல் வெண்மையான உடை,அவ்வுடைப் போல் மனம், காய்ச்சிய சீம்பாலில் தேன் கலந்தது போல் கற்கண்டான தமிழ்ப்பேச்சு. மாணவர்களிடையே பெரும்மதிப்பு பெற்ற இவர், தற்பொழுது சென்னை ஓ‌எம்‌ஆர் ரோட்டில் உள்ள அவரது மகனின் அடுக்ககத்தில் வேறு வழியின்றிக் காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கிறார்.

பேரனுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது அவரது மருமகள் சிவகாமிக்கு பிடிக்காது. “தமிழ் படித்து என்னத்த கிழிக்கிறது” என்பது அவள் எண்ணம். எவ்வளவு எடுத்துக் கூறியும் ஆயிரம் அழகிய தமிழ்ப்பெயரிருக்க பிடிவாதமாக ரித்துபன் என்று பெயர் சூட்டினாள். பையன் பெயருக்கும், குடும்பத்திற்கும் பொருத்தமாக இருக்குமென்றெண்ணி வெள்ளெந்தியாகப் பெண் பார்த்த உடனேயே திருமணம் செய்து வைத்தார். ஆனால் அவளோ தன் பெயர் மாடர்னாக இல்லையென்று சுருக்கி சிவமி என்று வைத்துக்கொண்டது மட்டுமல்லாமல், ஏதோ இவள் பரம்பரை முழுதும் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி ஆனது போல் இங்கீலீஷில் இளித்துக் கொண்டிருப்பாள். கம்பராமாயணக் கைகேயி போல் பிடிவாதமானவள்.இவர் மகனோ பெயர் தான் தில்லையப்பன்,சிவகாமியின் சொக்குப்பொடியால் சொக்கநாதனாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வாயில்லா வண்டு, மனைவிக்கு செய்கிறான் நாள்தோறும் தொண்டு. தந்தையிடம் தமிழ் படித்தாலும்,இன்றைய காலச் சூழலில் ஆங்கிலத்தில் பேசுவது தான் நாகரீகம் என்ற எண்ணத்தை உடைய சராசரித் தமிழர்களில் ஒருவர் தான் தில்லையப்பன்
.

மறுநாள் காலை தில்லையப்பன் வெகு சீக்கிரமெழுந்து அலுவலகம் சென்று விட்டான். “சம் ஃபாரின் கிளைண்ட்ஸ் ஆர் கம்மீங் டூ ஹிஸ் ஆஃபிஸ், ஹி லெஃப்ட் எர்லி” என்று தில்லையப்பன் சீக்கிரம் கிளம்பியதை மாமனாரிடம் கூறிவிட்டு, “ஈவினிங் லேட்டா வருவேன், லெவன் ஆகும்” என்று சொல்லிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டாள் சிவகாமி. மருமகள் வருவதற்கு தான் நேரமாகுமே அதற்கு முன் வந்துவிடலாம் என்றெண்ணிச் சற்றுத் தைரியம் வந்தவராய் மாலையில் பேரனைக் கூட்டிக் கொண்டு தொல்காப்பியர் தமிழ்சங்கத்தில் நடைபெறும் கூட்டத்துக்குச் சென்றார்.

சங்கத்தலைவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் தமிழன் இங்கே சாகிறான், அங்கே சாகிறான், நாம் ஒன்று படவேண்டும், பிளவு படக்கூடாதென்று பக்கம் பக்கமாகப் பேசினார். அதன் பிறகு பேசிய பொருளாளர், செயலாளர் ஆகிய அனைவரும் தலைவரின் பேச்சை ஒட்டிப் பேசியே நேரத்தை கடத்தினர்.கைக்கடிகாரம் திருமதி செல்வம் தொடர் வரும் நேரத்தை காட்டியது. பேரன் மெதுவாகத் தாத்தாவிடம், தாத்தா தாத்தா தொல்காப்பியர் யாரு என்று வினவினான். வைத்தியநாதன் மெல்லப் பேரனைக் நோக்கிக் குனிந்து "அவர் தமிழ் இலக்கண முன்னூலான தொல்காப்பியத்தை எழுதியவர்" என்று கூறிய உடனே பேரன் “அப்போ இவிங்க எல்லாம் தமில் இலக்கணம் பத்தித்தான் பேசுராங்களா” என்று கேட்டான். வைத்தியநாதனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. பேரனிடம் ஏதோ ஒரு சமாதானம் சொல்லிவிட்டு அழகிய தமிழில் பேச, அறிய, ஆராய ஆயிரம் தகவல்கள் இருக்கும் பொழுது இதுபோன்ற தமிழ்ச்சங்கங்களும் மொழியை வளர்க்கும் உபாயம் அறியாமல், அரசியல் பேசுவது சரியோ. மூவேந்தர், குறுநில மன்னர்கள், சிறுநிலத் தலைவர்கள் என்று தமிழில் பல்வேறு பிரிவுகள் காலம் காலமாக இருந்து வருகிறது, இந்நிலையில் மொழியால் ஒன்று படுவோம், ஒன்று படுவோம் என்று பேசுவது எவ்வகையில் சாத்தியம் என்று யோசிக்கத் தொடங்கினார்.

அந்தக் காலத்தில் சிதம்பரம் அண்ணாமலை மன்றத்திலும்,தில்லை பெரியகோவிலிலும் நடைபெற்ற தமிழ்ச்சொற்பொழிவுகளை நினைத்துப் பார்த்தார். கல்கி, கவிமணி, திரு.வி.க, தேவநேயப் பாவாணர், சி. பா. ஆ, சதாசிவ பண்டாரத்தார், மு.வ, புலவர் குழந்தை, குன்றக்குடியார் அப்பப்பா எத்தனை எத்தனை அருமையான தேன் சிந்தும் சிறப்பான பேச்சுகள், தமிழின் ஏற்றமிகு ஆய்வுக் கட்டுரைகள். இது போன்ற அரசியல் பேசுவது தான் இன்றைக்கு தமிழ்ப்பற்று என்றாகிவிட்டது.தமிழ் அதன் தன்மையால் வாழ்ந்து கொண்டிருக்கிறதே தவிர இது போன்ற பேச்சுகளால் இல்லை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து என்று அவரது கைபேசி அலறியது, மங்கலான வெளிச்சச்தில் பச்சை பட்டனை அழுத்தி ஹலோ என்றதும், மறுமுனையில் மகன் தில்லை அழைப்பது தெரிந்தது. “அப்பா நீங்க எங்கே இருங்கீங்க, உடனே என் ஆபீஸ் வரணும் என்று போனைத் துண்டித்தான்.

துரைப்பாக்கத்தில் இருக்கும் அவன் மகன் அலுவலகம் செல்ல ஆட்டோ தேடினார். ஆட்டோக்காரன் அவர் குடும்பம் தொடங்கிய காலத்தில் ஒரு மாதச் செலவுக்கு ஆகும் பணத்தை ஒரு சவாரிக்கு கேட்டார். என்ன அவசரமோ என்று நினைத்துப் பதற்றத்துடன் ஆட்டோ ஏறினார். ஆட்டோக்காரன். “தோ பாரு பெருசு, பெட்ரோல் விலை என்னா விக்குது தெரியுமா? ராக்கெட் கணக்கா சொய்யுனு மேல போய்க்கிட்டே இருக்கு. உன் மூஞ்சியை பாத்து கம்மியாக் கேட்டேன்” என்று ஆரம்பித்து எஃப்‌எம் ரேடியோ போல் விடாது பேசிக்கொண்டே வந்தான். இருவரும் நெரிசலாகச் செல்லும் ஷேர் ஆட்டோக்களையும், வானரப்படை போல் மக்கள் தொங்கிச் செல்லும் நெரிசலான மாநகரப் பேருந்தையும் வேடிக்கைப் பார்த்தவாரே, தில்லையின் அலுவலகம் வந்தடைந்தனர். ஏசிக் காற்றிலும் அவருக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. என்ன ஆச்சு, எதுக்கு கூப்பிட்டு இருப்பான் என்று அசைப்போட்டுக்கொண்டே வரவேற்பு அறைக்கு நுழைந்தார்.


இவருக்காகவே காத்திருந்த அவர் மகன், வாங்கப்பா வாங்க என்று கூறி, இவர் மார்டின், இவங்க காத்திரின் என்று மைதாமாவுக்கு ரோஸ் பவுடர் பூசியது போல் இருந்த இரண்டு வெள்ளையர்களை அறிமுகம் செய்து வைத்தான். வைத்தநாதனுக்கு சுடுநீரில் குளிக்கும் பொழுது குளியலறைக்கண்ணாடியில் படரும் நீராவி போல் உடலெல்லாம் நனையத் தொடங்கியது. ரித்துபன் அங்கிருக்கும் இம்போர்டெட் சோபாவில் அங்குமிங்கும் தாவி விளையாடிக் கொண்டிருந்தான். “அப்பா எங்க கம்பெனிக்கு ஒரு தமிழ் ப்ராஜக்ட் வந்திருக்கு. அதுக்கு கன்ஸல்ட் பன்னத்தான் உங்கள கூப்பிட்டேன். வெரி அர்ஜண்ட், அவங்க நாளை காலை கிளம்புறாங்க, அதுக்குள்ள டிசைட் பண்ணனும்”. இதைக்கேட்டவுடன் ஜாக்சனின் திரில்லராய் சென்ற அவரது மூச்சு ராஜாவின் ராகமாய் ரம்மியமான நிதானத்துக்கு வந்தது. வாங்க மீட்டிங் ரூம் போலாம் என்று கூறி, சிறிய திரையரங்கம் போல் இருந்த மீட்டிங் ரூம் நுழைந்தனர்.

வெள்ளைக்காரி பேசத் தொடங்கினார். “என் அப்பா ஆக்ஸ்ஃபோர்ட் லாங்குவேஜ் டிபார்ட்மெண்ட்ல ரிசர்ச் ஸ்காலர், பத்து மொழி பேசுவார், தமிழ் உட்பட, அவர் தான் எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தார்” என்று ஆங்கிலமும், தமிழும் கலந்து பேச்சைச் தொடர்ந்தாள். “சமீபத்துல அவர் இறக்கும்முன் அவருடைய ரிசர்ச் வொர்க என்கிட்ட கொடுத்தார். அதைப் படித்ததில் தமிழ் பழமையான, சுவையான, கிளாசிக்கல் லாங்குவேஜ்னு தெரிஞ்சுது. அதில் பல லிட்ரேச்சர் இருக்கு, அதை பரவலாய் வெளியுலகுக்கு கொண்டு வரவேண்டும் என்பது அவரது ஆசை. அதனால அவருடைய ரிசர்ச் வொர்க யுனஸ்கோ வேர்ல்டு எரிடேஜ் லாங்குவேஜ்ல சப்மிட் பண்ணி இந்த ப்ராஜக்டுக்கு ஸ்பான்ஸர் வாங்கிட்டேன். தமிழில் இருக்கும் அனைத்து நூல்களையும் இண்டெர்நெட்ல ஏத்தணும், இது தான் இந்த ப்ராஜக்டோட எய்ம். உங்க சன் கம்பெனிய தான் இந்த அசைன்மெண்ட்டுக்கு செலக்ட் பண்ணியிருக்கோம். இதுக்கு உங்க உதவி தேவைப்படுது
”.

கரும்பு தின்னக் கூலி வேணுமா என்று வைத்தியநாதன் நினைக்கையில், மைதாமாவுக்காரி டோன்ட் மிஸ்டேக் மீ நீங்க தகுதியானவரா என்று பார்க்கணும், ஏதாவது ஒரு பாடலும், அதன் சிறப்பையும் கொஞ்ச சொல்லுங்க என்றாள். சிதம்பரம் பள்ளியில் தமிழ்வேந்தன் என்று பேர் வாங்கியவனுக்கு வந்த சோதனையா இது என்று நினைத்து, தான் காலையில் பாடிய தோடுடைய செவியன் என்ற பாடலைப் பாடி அதற்குரிய விளக்கத்தை ஆங்கிலமும், தமிழும் கலந்தளித்தார். எனிதிங் ஸ்பெஷல் என்று மேலும் கேட்க, “ஏன் இல்லை, இதைப் பாடியவுடன் அன்னை பார்வதி விளையாட்டாக ஞானசம்பந்தனைப் பார்த்து பால் கொடுத்த என்னைப் பாடாமல் உன் அய்யன் சிவனை பாடுகிறாயே, இது சரியோ என்று கேட்க, திருஞானசம்பந்தர் அன்னையே, அய்யனோ அர்த்தநாரி, ஒரு புறம் தங்களையும், மறுபுறம் தானாகவும் இருந்து உலகை காக்கிறான். தாங்கள் இருக்கும் இடப்பகுதியில் தோடு தானே இருக்கும், அதனாலே தான் தோடுடைய செவியன் என்று தங்களின் பாகத்தை முதலில் பாடினேன், அன்னையே உலகுக்கு முதல் என்ற உண்மை தங்களிடம் பாலுண்ட எனக்கு தெரியாதா” என்று ஞானசம்பந்தர் சொன்னதாக வைத்தியநாதன் வெள்ளைக்காரிக்கு விவரித்தார். அகம், புறம், பரணி, பத்துப்பாட்டென்று தமிழின் சிறப்புகள் பலவற்றை விளக்கி,தமிழ் வாழ்க்கைக்குத் தேவையான பல அரியச்செய்திகளைச் சொல்கிறது என்பதை உணர்த்தினார். குட், வெரி குட் என்று வெள்ளைக்காரி தலையாட்டிக்கொண்டிருந்தாள்.


இறுதியாக திருக்குறளின் சிறப்புகளை கூறிக்கொண்டிருத்தார். அவள் இடைமறித்து கற்க கசடற, இதன் சிறப்பென்ன என்று கேட்டாள். உடனே அவர் “இக்குறளில் துணையெழுத்து இல்லை, ஒருவர் கல்வியை கசடற கற்றால் அவர் யாருடைய துணையும் இல்லாமல் வாழலாம் என்பதை திருவள்ளுவர் இலைமறைக்காயாக இக்குறளில் உணர்த்துகிறார்”. எக்ஸ்சலெண்ட், நீங்க தான் எங்க ப்ராஜக்ட் டெக்னிகல் கன்ஸல்டண்ட் என்று கூறி தில்லையப்பனிடம் மற்ற ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் நீங்க பார்த்துகோங்க, உடனே உங்க அப்பாவோட வொர்க் பண்ண வேண்டிய டீம் ரெடி பண்ணுங்க என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டாள்.

தில்லையப்பன், சே இணையதளத்தில் என்ன என்னவோ ஏற்றியுள்ளோம், ஏன் போன வாரம் மகாபலிபுரம் சென்றதைக் கூட யு டூபிள், பேஸ்புக்கில் ஏற்றினேன், இது போன்றதொரு விஷயம் நம்மறிவுக்கு எட்டவில்லையே என்று வெட்கப்பட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான். சிவகாமி “ஹவ் வாஸ் தே டே” என்று கேட்டுக்கொண்டே அவனருகில் வந்தாள். அவனும் நடந்த அனைத்தையும் கூறி, “என் கம்பெனிக்கு நல்லா பிழையில்லாமல் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த, இலக்கியப் பரிச்சயம் உள்ள அம்பது பேர் வேணும். பேசிக் டிகிரியும், கொஞ்சம் கம்புயூட்டர் அறிவு இருந்தால் போதும். சம்பளம் ஒரு பிரச்சனையே இல்லை, ஆனால் நல்லா தமிழ் தெரிஞ்சவனாக இருக்கணும், கொஞ்ச நாள் ஆப்சைட் போக வேண்டி வந்தாலும் வரும்” என்று கூறினான். எத்தனையோ வேலைவாய்ப்பு விளம்பரம் செய்து, ஆட்களை தேர்வு செய்ய உதவிய அவளுக்கு இது புதுமையாகவும், நம்ப முடியாததாகவும் இருந்தது. சிவகாமி தமிழின் பெருமையை மெல்ல உணரத் தொடங்கினாள்.


அடுத்த நாள் காலை வழக்கம் போல் வைத்தியநாதன் தோடுடைய செவியன் என்று பாடத்துவங்கியவுடன், "தாத்தா தாத்தா இந்தப் பாட்டை எனக்கும் சொல்லிக் கொடுங்க" என்று ரித்துபன் ஓடி வந்தான். அவர் பயத்துடன் மருமகளை நோக்க, அவளின் கைப்பேசியும் அந்நேரம் கணைக்க ஹலோ சிவமி ஷ்பீகீங் என்று எத்தனித்தவள், சிவகாமி பேசுறேன் சொல்லுங்க என்று பேசத்தொடங்கினாள். தன் மருமகளிடம் வந்த மாற்றம் இனி ஒவ்வொரு தமிழனிடம் வரும் என்ற நம்பிக்கையில் மகிழ்ந்த வைத்தியநாதன் தன் பேரனுடன் தோடுடைய செவியன் விடையேறியோர் தூ வெண் மதி சூடி இ இ இ என்று மனமுருக மீண்டும் பாடத் துவங்கினார்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கதை எண். 011 - தோடுடைய செவியன் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 011 - தோடுடைய செவியன் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by யினியவன் Fri Sep 28, 2012 1:02 pm

தமிழின் சிறப்பை தமிழனே அறிய
தமிழ் பெருமை பாடும் கதை அருமை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum