ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒயர்லெஸ் பேஸ்மேக்கர்!

3 posters

Go down

ஒயர்லெஸ் பேஸ்மேக்கர்! Empty ஒயர்லெஸ் பேஸ்மேக்கர்!

Post by சிவா Wed Sep 26, 2012 11:47 am


இசை கேட்க, திரைப்படம் பார்க்க, கேம்ஸ் விளையாட என பொழுபோக்குக்காக பயன்படும் கருவிகள் எல்லாமே இப்போது ஒயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அதுமட்டுமில்லாமல், மிகவும் கச்சிதமான மற்றும் கையடக்க கருவிகளாகவும் அவை மாறிவிட்டன.

ஆனால் இந்த நவீன யுகத்தில், உயிர்காக்கும் மருத்துவ கருவிகளான பேஸ்மேக்கர்கள் மற்றும் இதர உட்பொருத்திகளுக்கு மட்டும் இன்னும் `ஒயர்லெஸ் காலம்' கனியவில்லை.

ஏனென்றால், இக்கருவிகள் பல அளவில் பெரியதாய் இருப்பதோடு மட்டுமல்லாமல் இன்னும் மின்கலங்களின் உதவியுடன்தான் இயங்கி வருகின்றன.

பழுதுபட்ட உடல் பாகங்களுக்கு மாற்றாகவும், உதவியாகவும் இருக்கும் பேஸ்மேக்கர் உள்ளிட்ட உட்பொருத்தி கருவிகளுக்கும் நல்ல காலம் பிறந்துவிட்டது. அட, உண்மைதாங்க. பேஸ்மேக்கர் போன்ற கருவிகளையும் இனி ஒயர்லெஸ் முறையில் இயக்கலாம் எனும் சந்தோஷச் செய்தியை, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்
கழக ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

மிகவும் சுவாரசியமாக, ஒயர்லெஸ் முறையில் இயங்கும் திறனுள்ள இந்த புதிய கருவி, நமது ரத்த நாளங்களுக்குள் நீந்திச்செல்லக் கூடிய அளவுக்கு மிகச்சிறியது என்பது கவனிக்கத்தக்கது.

இதன்மூலம், இத்தகைய உயிர்காக்கும் உட்பொருத்தி கருவிகள் இயங்கத் தேவையான மின்கலங்களுக்கு இனி அவசியமில்லை. அதைவிட முக்கியமாக, தற்போது பயன்பாட்டிலுள்ள உட்பொருத்திகளின் மின்கலங்கள் தீர்ந்துபோன பிறகு, அவற்றை நீக்கிவிட்டு புதிய மின்கலங்களை பொருத்த மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளையும் இனி தவிர்த்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 1.6 மில்லி மீட்டர் அகலமே உள்ள (அதாவது, ஒரு குண்டூசியின் தலைப்பகுதி போல) இந்த மிகச்சிறிய ஒயர்லெஸ் கருவி, தூண்டப்பட்ட மற்றும் கதிர்போல் பரவும் தன்மையுள்ள ஆற்றல் கடத்தல் மூலம் சாத்தியப்பட்டதாம்.

அதாவது, ஒரு டிரான்ஸ்மிட்டரில் இருந்து வெளியாகும் ரேடியோ கதிர்கள், உடலுக்கு உள்ளே பொருத்தப்பட்ட உட்பொருத்திக்குள் இருக்கும் ஒரு சுருள் கம்பிக்கு செல்கின்றன. இவ்வாறு அனுப்பப்படும் ரேடியோ கதிர்களே அந்த கருவியை இயக்குகின்றன என்று விளக்குகிறார் ஸ்டான்போர்டு ஆய்வாளர் அடா பூன்.

அது சரி, இதுவரை ஏன் மருத்துவத்தில் ஒயர்லெஸ் கருவிகள் இல்லை?

காரணம் அளவுதான் என்கிறார்கள். அதாவது, டிரான்ஸ்மிட்டரில் இருந்து வெளியாகும் ரேடியோ கதிர்களை பெற்றுக்கொள்ளும் சுருள் கம்பி சிறியதாக இருந்தால், அந்த கம்பியை அடைய, ரேடியோ கதிர்களின் ப்ரீகுவென்சி மிக அதிகமாக இருக்க வேண்டும்.

ஆனால் துரதிஷ்டவசமாக, மிக அதிகமான ப்ரீகுவென்சி உள்ள ரேடியோ கதிர்களால், சுமார் 5 செ.மீ தடிமனுள்ள மனித திசுக்களை ஊடுருவிச்சென்று இதயம் போன்ற பாகங்களின் உள்ளே இருக்கும் உட்பொருத்திகளை அடைய முடியாதாம். இதன் காரணமாகவே, மருத்துவ கருவிகளை ஒயர்லெஸ் முறையில் இயக்குவது இதற்கு முன்னர் சாத்தியப்படவில்லை என்கிறார்கள்.

ஆனால், அடா பூன் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர், `இதை இரண்டில் ஒன்று பார்க்காமல் விடப்போவதில்லை' என்று விடாப்பிடியாக முயற்சித்ததில், ஓர் அறிவியல் உண்மை தெரியவந்தது.

அதாவது, ஆய்வாளர்களின் இதற்கு முந்தைய நம்பிக்கைக்கு மாறாக, அதிகமான ப்ரீகுவென்சி உள்ள ரேடியோ கதிர்கள் மிக அதிகமான தூரத்தை கடக்கவல்லது என்பது கண்டறியப்பட்டது. அதன்படி, 1.7 ஜிகா ஹெர்ட்ஸ் ப்ரீகுவென்சி உள்ள ரேடியோ கதிர்கள், உயிருள்ள மனித திசுவை மிக ஆழமாக ஊடுருவிச் செல்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம், சுமார் 10 மடங்கு அதிகமான ஆற்றல் கடத்தலை, உட்பொருத்தியின் உள்ளிருக்கும் பத்து மடங்கு சிறிய ஆன்டென்னாவைக் கொண்டு சாத்தியப்படுத்த முடியும் என்கிறார் அடா பூன்.

உதாரணமாக, ஒரு குண்டூசியின் தலை அளவுள்ள ஒரு சுருள் கம்பியால், சுமார் 50 மைக்ரோவாட்ஸ் அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமாம். அதிர்ஷ்டவசமாக, சமீபத்திய பேஸ் மேக்கர் கருவிகளை இயக்க வெறும் 8 மைக்ரோ வாட்ஸ் அளவு மின்சாரமே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒயர்லெஸ் தொழில்நுட்பம் கொண்டு, மூளையில் நிரந்தரமாக பொருத்தக்கூடிய `ப்ரெயின் ஸ்டிமுலேட்டர்கள்' தொடங்கி, விழுங்கக்கூடிய எண்டோஸ்கோப் கருவிகள் வரை, பல்வேறு வகையான உட்பொருத்திகளை ஒயர்லெஸ் முறையில் இயக்க முடியும் என்பதே தற்போதைய சூடான செய்தி.

முனைவர் பத்மஹரி


ஒயர்லெஸ் பேஸ்மேக்கர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒயர்லெஸ் பேஸ்மேக்கர்! Empty Re: ஒயர்லெஸ் பேஸ்மேக்கர்!

Post by யினியவன் Wed Sep 26, 2012 12:36 pm

நல்ல கண்டுபிடிப்பு.

அப்ப கொஞ்ச நாளில் நமக்குள்ளும் கருவிகளை பொருத்தி
ரோபோவுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாம ஆயிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒயர்லெஸ் பேஸ்மேக்கர்! Empty Re: ஒயர்லெஸ் பேஸ்மேக்கர்!

Post by பூவன் Wed Sep 26, 2012 1:22 pm

யினியவன் wrote:நல்ல கண்டுபிடிப்பு.

அப்ப கொஞ்ச நாளில் நமக்குள்ளும் கருவிகளை பொருத்தி
ரோபோவுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாம ஆயிடும்.

நாம் அனைவரும் இப்போவே பாதி இயந்திர வாழ்க்கை தான் ...
இன்னும் மீதியும் போய்விட்டால் இயந்திரமாகவே ஆகிவிடுவோம் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒயர்லெஸ் பேஸ்மேக்கர்! Empty Re: ஒயர்லெஸ் பேஸ்மேக்கர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum