ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா)

4 posters

Go down

கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by அசுரன் Sat Sep 22, 2012 9:22 am


ஆசீர்வாதம்


அன்று ராகவனின் முதலாம் கல்யாண நாள். அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு மனைவி ராதிகாவுடன் காலையில் கோவில் சென்றுவிட்டு, மாலையில் தன் மாமனார் வீட்டுக்கு செல்வதாக முடிவு செய்திருந்தான்.
மாமனார் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. ராதிகாவின் அப்பா, அம்மா, தம்பி, தங்கை என அனைவரும் மிக மகிழ்ச்சியோடு இவர்களின் வரவை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். மாலை சுமார் ஐந்து மணி அளவில் ராகவனும் ராதிகாவும் வந்து சேர்ந்தனர். அனைவரின் முகத்திலும் புன்னகை தவழ வரவேற்றனர்.

"வாங்க, வாங்க ஏன் இவ்வளவு தாமதம்?" என ராதிகாவின் அப்பா கேட்க,

"உங்க பொண்ணாலதான். சீக்கிரம் கிளம்பச் சொன்னால் கிளம்பினால்தானே" என்ற ராகவன் மெல்ல மனைவியை புன்முறுவலோடு பார்த்தான்.

"மாமா, நீங்கள் தான் அலங்காரம் செய்ய நேரம் செலவாகி இருக்கும். அக்கா ஒன்றும் தாமதமாக்கி இருக்க மாட்டாள்." என்றாள் ரமா கிண்டலாக.

"இருக்காது, அக்காவால்தான் தாமதமாகி இருக்கும். எனக்குத் தெரியாதா?" என மோகன் கூற அனைவரும் சிரித்தார்கள்.

அம்மா, என்ன சமையல்? என ராதிகா கேட்க, "சூடா போண்டா போட்டிருக்கிறேன். முதல்ல, மாப்பிள்ளைக்கு கொண்டுபோய் கொடு." என்ற அம்மா ஒரு தட்டில் ஆவி பறக்க நான்கு போண்டா வைத்தாள்.

"போண்டா சூப்பர்" என ரசித்து சுவைத்துக்கொண்டிருக்கும்போதே மற்றொரு தட்டில் பீட்ரூட் ஹல்வாவோடு ராதிகா வந்தாள். அனைவரும் கலகலப்பாக சாப்பிட்டு முடித்தனர். தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடரில் மாமியார் தன் மருமகளை பல வாரங்களாகத் திட்டிக்கொண்டிருந்தாள். ரமாவின் முதுகலை மற்றும் மோகனின் இளங்கலை படிப்பு பற்றி விசாரித்துவிட்டு மெல்ல ராகவன் ராதிகாவைப் பார்த்தான். ஏதோ சொல்ல வந்தவனை ராதிகா யாருக்கும் தெரியாமல் தடுக்க, ரமா மட்டும் இருவரையும் கவனித்துவிட்டாள். பிறகு, பேச்சு வேறு பக்கம் போய் கிரிக்கெட் உலகக்கோப்பை இந்தியா பெற்றது பற்றி பேசினார்கள்.

ஒரு எட்டு மணியளவில், அனைவரும் இரவு விருந்து முடிந்ததும் ராகவனும் ராதிகாவும் கிளம்பத் தயாரானார்கள். இருவரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகையில், ராதிகாவின் அப்பா "அடுத்த திருமண நாளில் மூவராக ஆசீர்வாதம் பெறவேண்டும்" என வாழ்த்தினார். அப்போது, ராகவன் மீண்டும் ராதிகாவை பார்க்க, ராதிகா கண்களால் மறுக்க, ரமா இம்முறையும் கவனித்துவிட்டாள். இருவரும் கிளம்பினர்.

சில வாரங்களுக்குப்பின்னர், ராகவனுக்கு ரமா அலுவலக நேரத்தில் போன் செய்து "மாமா, கொஞ்சம் பேசணும்" என்றாள். ராகவனும் "என்ன, விஷயம்?' எனக்கேட்க, அருகில் உள்ள உணவு விடுதிக்கு வருமாறு அழைத்தாள். இருவரும் சந்தித்து பேசினர். அப்போது, ரமா "மாமா, நான் அக்காவிடம் பலமுறை கேட்டும் என்னிடம் சொல்லவில்லை. நீங்கள் அன்று வந்தபோது ஏதோ அப்பாவிடம் சொல்ல வந்தீர்கள், ஆனால், அக்கா அதை சொல்ல விடாமல் தடுத்தாள். அது என்ன விஷயம்? சொல்லுங்க" என்றாள். ராகவனும் வேறு வழிஇல்லாமல் ராதிகாவுக்கு தொடர்ந்து வந்த ஜுரம் பற்றியும் அதை மருத்துவர் பரிசோதனை செய்தபோது எதிர்பாராத விதமாக ராதிகாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனக் கூறியதையும் விளக்கினான். சற்றே அதிர்ச்சியுடன் இருந்த ராமாவிடம் ராகவன் " தயவுசெய்து உன் அப்பா அம்மாவிடம் இந்த விஷயம் பற்றிக் கூறவேண்டாம். அவர்கள் தாங்க மாட்டார்கள்" என்று கேட்டுக்கொண்டான். ரமாவும் ஒப்புக்கொண்டாள். ரமா ஒரு முடிவுக்கு வந்தவளாக வீடு சென்றாள்.

காலம் கிடுகிடுவென ஓட, அடுத்த திருமண நாளும் வந்தது. ஆனால், பழைய உற்சாகம் யாரிடமும் இல்லை. கடைசியில், ராகவனும் ராதிகாவும் ஆசீர்வாதம் வாங்க காலில் விழும்போது ரமா கையில் ஒரு குழந்தையோடு வந்து, இருவரின் பக்கத்தில் குழந்தையையும் ஆசீர்வாதம் வாங்குவதற்கு விழ வைத்தாள். குழந்தையை கண்டதும் எல்லோரும் அதிர்ச்சியுற, மெதுவாக ரமா குழந்தை பற்றி விளக்கினாள்.

அதாவது, அக்காவிற்கு குழந்தைபாக்கியம் இல்லை என்பதையும், அதனால், பெற்றோரின் சம்மதமின்றி காதலித்து மணமுடித்த தன் தோழி விபத்தில் கணவரோடு அகால மரணமடைந்ததால், தோழியின் குழந்தை அனாதை ஆனதையும், பின்பு அக்குழந்தையை முறையாக தத்து எடுத்ததையும் கூறினாள். ராகவன் அவளை கண்ணீர் மல்க நன்றியோடு பாராட்டினான். மாமனார் ஆசீர்வாதம் பலித்தது.

கருத்து: பெரியவர்கள் ஆசீர்வாதமாக இருந்தாலும், சாபமாக இருந்தாலும் கட்டாயம் பலிக்கும். எனவே, பெரியோரை என்றும் மதிப்போம்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by யினியவன் Sat Sep 22, 2012 9:55 am

பாஸ் பூட்ட மறந்துட்டீங்களே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by ரா.ரா3275 Sun Sep 23, 2012 9:01 pm

நிறைய ராகவன்களும் ராதிகாக்களும் ரணத்துடன் இன்றும்...
ஆனால் அதேபோல ராமக்களும் சொற்ப அளவில்...
வாழ்த்துகள்...


கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) 224747944

கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Rகதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Aகதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Emptyகதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Rகதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by krishnaamma Mon Sep 24, 2012 8:07 pm

யினியவன் wrote:பாஸ் பூட்ட மறந்துட்டீங்களே?
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by krishnaamma Mon Sep 24, 2012 8:13 pm

//கருத்து: பெரியவர்கள் ஆசீர்வாதமாக இருந்தாலும், சாபமாக இருந்தாலும் கட்டாயம் பலிக்கும். எனவே, பெரியோரை என்றும் மதிப்போம்.//

ரொம்ப சரி ,அருமையான கதை புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum