புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10 
10 Posts - 56%
heezulia
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10 
10 Posts - 56%
heezulia
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 08, 2012 10:03 pm

உலக மொழிகளில் ‘தமிழ்’ பக்தியின் மொழி என்று சிறப்பிக்கப்படுகிறது. சைவ சமயத்தைச் சார்ந்த பெரியோர்களால் படைத்தளிக்கப் பெற்ற பக்தி இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகள் எனப்படுகின்றன.

முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர் திருஞானசம்பந்தர். நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளைப் பாடியவர் திருநாவுக்கரசர். ஏழாம் திருமுறையைப் பாடியவர் சுந்தரர். எட்டாம் திருமுறையைப் பாடியவர் மாணிக்கவாசகர். இதில் திருவாசகம், திருக்கோவையார் என்னும் இருநூல்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்பதாம் திருமுறை திருமாளிகைத்தேவர் முதலாக சேதிராயர் இறுதியாக ஒன்பதின்மரால் பாடப்பட்ட திருவிசைப்பா – திருப்பல்லாண்டு என்பதாகும். பத்தாம் திருமுறை திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம். பதினொராம் திருமுறை பன்னிருவரால் பாடப்பட்ட நாற்பது இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டது. பன்னிரெண்டாம் திருமுறை தெய்வச் சேக்கிழார் எழுதிய பெரியபுராணம்.

பன்னிரு திருமுறையுள் பதினொராம் திருமுறையுள் அமைந்திருக்கும் நூல் - பொன்வண்ணத்தந்தாதி என்பதாகும். இயற்றியவர் சேரமான் பெருமாள் நாயனார். இவருடைய இயற்பெயர் பெருமாக்கோதையார் என்பதாகும். பொன்வண்ணத்தந்தாதி சிவபெருமானின் அருளையும் அவனை வணங்கி அவனருள்பெறுவதைப் பற்றியும் விவரிக்கின்றது.

பாடல் எண் : 1
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே.


பொழிப்புரை :
தன்னைக் கண்ட எனது மேனியின் நிறம் அங்ஙனம் கண்டபின் எந்த நிறமாயிற்றோ அந்த நிறத்தையே தனது இயற்கை நிறமாக உடைய இறைவனுக்கு மேனி, எப்பொழுதும் பொன்னின் நிறம் என்ன நிறமோ அந்த நிறமே. தாழ்ந்து தொங்குகின்ற சடைகள், விட்டு விளங்குகின்ற மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே. பெரிய இடப ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறம் வடிவோ அந்த நிறம் வடிவுகளே.

(இச்செய்யுள் தில்லைக் கூத்தப் பெருமானைக் கண்டு அவர் மேல் காதல் கொண்டு ஆற்றாமை எய்தினாள் ஒருத்தி கூற்றாகச் செய்யப்பட்டது. காதலால் வருந்தும் தலைவியரது மேனி பொன்னிற மாகிய பசலையை அடையும். “தன்னைக் கண்ட என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசன்” என்பது இவ்வாறு வெளிப் பொருள் தருவதாயினும், `காணப்படாத இறைவனது இயல்பு காணப்படுகின்ற அவன் அடியவரிடத்து விளங்குதல் பற்றியே அறியப்படும்` என்பதே இதன் உட்பொருள்)
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 09, 2012 7:36 pm

பாடல் எண் : 2
ஈசனைக் காணப் பலிகொடு
செல்லஎற் றேஇவளோர்
பேயனைக் காமுறு பிச்சிகொ
லாமென்று பேதையர்முன்
தாயெனை ஈர்ப்பத் தமியேன்
தளர அத் தாழ்சடையோன்
வாவெனைப் புல்லவென்றான்இமை
விண்டன வாட்கண்களே.


பொழிப்புரை :
(``பிச்சை`` என்று கேட்டு வாயிலில் வந்தவன் சிவ பிரான் - என்று தெரிந்துயான்) `அவனைக் காண வேண்டும்` என்னும் ஆசையால் பிச்சையைப் பிறர் எடுத்துச் செல்வதற்கு முன் யானே விரைந்து எடுத்துச் செல்ல, என் தாய் (செவிலி) `பிறர் செல்லலாகாத இவள் மிக விரைந்து புறம் செல்கின்றாள் ஆதலின் பிச்சைக்கு வந்த இந்தப் பேய்க் கூட்டத்தான் மேல், பித்துப் பிடித்தவள் போல் இவள் காதல் கொண்டாள் போலும்` என்று அறிந்து, தோழியர் பலர்முன் தாய் என்னை, `ஏடி, உள்ளே வா` என்று பற்றி ஈர்க்க, எனக்கு உதவுவார் யாரும் இன்றி யான் சோர்தலைக் கண்டு, பிச்சைக்கு வந்த, நீண்ட சடையையுடைய அவன், `நீ என்னைக் காதலித்து விட்டபின் எவர் உன்னைத் தடுத்து என்ன பயன். (நீ என்னைக் காதலித்துவிட்ட பொழுதே நீ எனக்கு உரியவளாய் விட்டாய்; ஆகவே,) நீ யாவரும் அறியவே என்னைத் தழுவ வா` என்று அழைத்தான். அவனது பொருளை அறிய, என்னுடைய வாள் போன்ற கண்கள் பொழிந்த அன்பு நீரைத் தடுக்க மாட்டாமல் இமைகள் திறந்துவிட்டன.

(``கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய்``* என்று அருளிச் செய்தபடி, ``பக்குவான்மாக்கள் சிவனது வடிவைக் கண்டவுடனே அவன்மேற் கரையிறந்த காதல் உடையனவாம்`` என்பதையும், `அதுபொழுது அவ்வான்மாவை அபக்குவான்மாக்கள் ஏசியும், இகழ்ந்தும் தம் வயப்படுத்த முயலும்` என்பதையும், `எனினும் சிவன் தன்னைக் காதலித்த ஆன்மாவைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளுதலை ஒருவராலும் தடுக்க இயலாது` என்பதையும் இவ்வாறு அகப் பொருள்மேல் வைத்து அருளிச் செய்தவாறாக உணர்க.இதற்குக் கண்ணப்ப நாயனார் சிறந்த எடுத்துக்காட்டு.)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 09, 2012 8:46 pm

மிகவும் அருமை சாமி...நன்றி மகிழ்ச்சி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 10, 2012 9:32 pm

பாடல் எண் : 3
கண்களங் கஞ்செய்யக் கைவளை
சோரக் கலையுஞ்செல்ல
ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பவொண்
கொன்றையந் தார்உருவப்
பெண்களங் கம் இவள் பேதுறும்
என்பதோர் பேதைநெஞ்சம்
பண்களங் கம்இசை பாடநின்
றாடும் பரமனையே.


பொழிப்புரை :
இச்சிறுமியை, அழகிய கண்டத்தையுடைய சிவன் வெறுக்கவும் இவள் அவன்மேற் கொண்ட காதலால், கண்கள் நீர் பொழிய, கை வளைகள் கழல, துகில் நெகிழ, அவனது கொன்றை மாலை போலும் நிறத்தை எய்தியதுடன் அறியாமையுடைய மனம் பித்துக் கொண்டவளாயினாள். இஃது இவளது பெண்மைக்குக் குற்றமாம்.

(இது சிவபிரானைக் காதலித்த தலைவி தன் தாய் கூற்று.
வீழப் படுவார் கெழீஇயிலர், தாம்வீழ்வார்
வீழப் படாஅ ரெனின்
.

என்றபடி, தம்மால் காதலிக்கப்பட்ட தலைவரால் தாமும் காதலிக்கப் பட்ட மகளிரன்றோ பெருமையடைதற்கு உரியர்? இவள் அவ்வா றின்மையின் குற்றப்படுகின்றாள் - எனத் தாய் நொந்து கூறினாள் என்க. தீவிர பக்குவம் எய்தாத ஆன்மாவின் நிலைமையை இங்ஙனம் அகப்பொருள் முறையில் வைத்துக் கூறியதாக உணர்க.)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 11, 2012 9:57 pm

பாடல் எண் : 4
பரமனை யே பலி தேர்ந்துநஞ்
சுண்டது பன்மலர்சேர்
பிரமனை யே சிரங் கொண்டுங்
கொடுப்பது பேரருளாம்
சரமனை யேயுடம் பட்டும்
உடம்பொடு மாதிடமாம்
வரமனை யேகிளை யாகும்முக்
கண்ணுடை மாதவனே.


பொழிப்புரை :
மூன்று கண்களையுடைய, பெரியதவக் கோலத்த னாகிய சிவபிரான் அயலார் இல்லந் தோறும் சென்று இரந்த போதிலும் அவன் உண்டது நஞ்சமே.இதழ்களால் பன்மையைப் பெற்ற மலரின் கண் இருக்கும் பிரம தேவனைச் சிரம் கொய்ததும் அவனுக்கு வழங்கி யது பெரிய அருளே. (படைப்புத் தொழில் தொன்மையை அளித்தது) மலர்க் கணைகளையுடைய மன்மதனை அழித்தபோதிலும் உடம்பில் இடப்பாதியாகக் கொண்டது பெண்ணையே. இனி மேலாவன மனைவியாகிய அவளே அவனுக்குத் தாயும், மகளும் ஆகிய சுற்றம். (`இஃது அவன் இலக்கணம்` எனப் பழித்தல் குறிப் பெச்சம். இது பழித்ததுபோலப் புகழ்ந்தது.)




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Sep 12, 2012 6:35 am

பாடல் எண் : 5
தவனே உலகுக்குத் தானே
முதல் தான் படைத்தவெல்லாம்
சிவனே முழுதும்என் பார்சிவ
லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி
கடலிடை நஞ்சம்உண்ட
பவனே எனச்சொல்லு வாரும்
பெறுவரிப் பாரிடமே.


பொழிப்புரை :
`சிவபெருமானே எல்லோரிலும் மிக்கவன்; (எனவே, முதற்கடவுள் ) உலகிற்கு முதல்வனும் அவனே. எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும் அவன் படைத்தனவே. (உயிர்கள், பிறப்பெடுத்த உயிர்கள்). அவன் அனைத்துப் பொருள் களிலும் அவையேயாய் நிறைத்திருக்கின்றான்` என இவ்வாறு உணர்கின்றவர்கள் சிவலோக வாழ்க்கையைப் பெறுவர். `அவன் திருமாலை இடபமாகக் கொண்டு ஏறி நடாத்துபவன், பாற்கடலில் தோன்றிய நஞ்சினைத் தேவர் பொருட்டு உண்டவன், நினைப்பவர் நினைத்த இடத்தில் அவர் நினைத்த வடிவில் தோன்றுபவன்` என இவ்வாறு அவனைப் புகழ்பவரும் இவ்வுலக ஆட்சியைப் பெறுவர்.

பாடல் எண் : 6
இடம்மால் வலந்தான் இடப்பால்
துழாய்வலப் பாலொண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம்
ஆழி இடம்வலம்மான்
இடமால் கரிதால் வலஞ்சே
திவனுக் கெழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலங் கொக்கரை
யாம்எங்கள் கூத்தனுக்கே.


பொழிப்புரை :
சிவபெருமான் ஓரமையத்தில் இடப்பக்கம் திரு மாலும், வலப்பக்கம் தானுமான ஒரு வடிவத்துடன் நின்றான். (அது படைப்புக் காலம் என்க) அப்பொழுது இடப்பக்கம் துழாய் மாலை யும், வலப்பக்கம் கொன்றைப் பூ மாலையும் - இடப்பக்கம் பொன்னாடையும், வலப்பக்கம் தோல் ஆடையும், இடப்பக்கம் சக்கர மும், வலப்பக்கம் மானும், இப்பக்கம் கருநிறமும், வலப்பக்கம் செந் நிறமுமாய் இருந்தன.இனி இடப்பக்கம் குடக் கூத்தும், வலப்பக்கம் கொக்கரைக் கூத்தும் ஆடின.




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 18, 2012 11:19 am

பாடல் எண் : 7
கூத்துக் கொலாமிவர் ஆடித்
திரிவது கோல்வளைகள்
பாத்துக் கொலாம்பலி தேர்வது
மேனி பவளங்கொலாம்
ஏத்துக் கொலாமிவர் ஆதரிக்
கின்ற திமையவர்தம்
ஓத்துக் கொலாமிவர் கண்ட திண்
டைச்சடை உத்தமரே.


பொழிப்புரை :
`இண்டை` என்னும் வகை மாலையைச் சடையில் தரித்துள்ள மேலானவராகிய இவர், எங்கும் ஆடிச் செல்வது முறைப் படி அமைந்த நடனம். எங்கும் சென்று பிச்சை ஏற்பது தம் தேவியர் பகுத்து உண்டற்கு. இவர் மேனி பவளம்போல்வது, இவர் எவரிடமும் விரும்புவது தம்மைப் புகழ்தலை.இவர் நினைவு மாத்திரத்தாற் செய்தது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால் வேதம்.
(இஃது இறையது பொது வியல்பைக் கூறியது. ``கூத்து`` எனப் பொதுப்படக் கூறினாராயினும், ``ஆடித் திரிவது`` என எடுத் தோதினமையால், அது முறைப்படி - கூத்த நூல் முறைப்படி- அமைந்த கூத்தாயிற்று. சிவபெருமானுக்குத் தேவியர் `உமை, கங்கை` என இருவராதல் வெளிப்படை. எனவே, `அவர்களைக் காப்பாற்றுதற்கு வழியில்லா மையால் பிச்சை எடுக்கின்றான்` என்பது வெளிப்படைப் பொருளாய் இகழ்ச்சியைத் தோற்றுவித்தது. ஆயினும், `பிச்சையிட வரும் மகளிரது வளைகளைக் கவர்ந்துகொள்கின்றான்` என்பது உள்ளுறைப் பொரு ளாய்ப் புகழ்ச்சியைத் தோற்றுவித்தது. `பெத்தான்மாக்கள், முத்தான்மாக்கள் ஆகிய இருவகை ஆன்மாக்களுக்கும் ஏற்புடையவற்றைச் செய்து அவைகளை உய் வித்தலும், தன்னை உணராதவரையும் தக்க வழியால் உணர்வித்தலும், சிறிது உணர்ந்தாரையும் தம்மைப் புகழ்தல் வாயிலாக மிக உணர்ந்து அன்பு கூரச் செய்தலும், உயிர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நூல்கள் வாயிலாக நன் னெறியை உணர்த்துதலும் இறையது பொது வியல்புகள்`` என்பது கூறியவாறு.)
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 21, 2012 11:27 am

பாடல் எண் : 8
உத்தம ராயடி யாருல
காளத் தமக்குரிய
மத்தம் அராமதி மாடம்
பதிநலஞ் சீர்மைகுன்றா
எத்தம ராயும் பணிகொள
வல்ல இறைவர்வந்தென்
சித்தம ராயக லாதுடன்
ஆடித் திரிதவரே.


பொழிப்புரை :
தம் அடியார்கள் யாவரினும் மேலானவராய், மண்ணுலகு வானுலகுகளை ஆள, ஊமத்தை மலர், பாம்பு, திங்கள், அவற்றின் அருகே நீர் இவைகளே தமக்கு உரியவாய் மிக அழகும் புகழும் குறையாதனவாய் உள்ளன. எக்குலத்தவராயினும் தமக்கு அடியார்களாக ஆகும்படி செய்துகொள்ள வல்ல இறைவர் தமது மேல் நிலையினின்றும் இறங்கி வந்து என் உள்ளத்தில் பொருந்தி என்னோடு உடன் இயங்கியே திரியும் தன்மையுடையராகின்றனர்.

பாடல் எண் : 9
திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின்
உள்ளுந் திரிதரினும்
அரிதவர் தன்மை அறிவிப்ப
தாயினும் ஆழிநஞ்சேய்
கரிதவர் கண்டம் வெளிதவர்
சாந்தம்கண் மூன்றொடொன்றாம்
பரிதவர் தாமே அருள்செய்து
கொள்வர்தம் பல்பணியே.


பொழிப்புரை :
இறைவர் மேற்கூறியவாறு என் கண்ணினுள்ளும், கருத்தினுள்ளும் என்னோடு அகலாது நின்று உடனே திரிபவராயினும், `அவரது தன்மை இதுதான்` என்று என்னால் வரையறுத்துச் சொல்லுதல் இயலாது. ஆயினும் கடல் நஞ்சம் பொருந்திய அவரது மிடறு கறுத்தது; அவர் பூசிய சந்தனம் வெளுத்தது; (திருவெண்ணீறு) கண்களோ மூன்று, ஏந்திய வில் பிறரால் ஏந்துதற்கு அரிய ஒன்று (அஃதாவது மலை) தமக்குத் தாமே பல பணிகளைப் பணித்துக் கொள்வார். (பிறரால் யாதும் பணிக்கப்படுவாரல்லர்). என இங்ஙன் ஒருவாறு அவரைப் பற்றிக் கூறலாம்.




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 21, 2012 3:32 pm

பகிர்வுக்கு நன்றி சாமி மகிழ்ச்சி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 22, 2012 11:46 am

பாடல் எண் : 10
பணிபதம் பாடிசை ஆடிசை
யாகப் பனிமலரால்
அணிபதங் கன்பற் கொள்அப்பனை
அத்தவற் கேயடிமை
துணிபதங் காமுறு தோலொடு
நீறுடல் தூர்த்துநல்ல
தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம்
நீயென் தனிநெஞ்சமே.


பொழிப்புரை :
எனது ஒப்பற்ற மனமே, சூரியனது பல்லை உகுத்த, யாவர்க்கும் தந்தையாகிய சிவனை அடி பணி; கூத்தாடு; பொருந்தும் வகையால் பல இசைகளைப் பாடு; குளிர்ந்த மலர்களால் அலங்கரி; `அப்பெருமானுக்கேயான் அடிமை` என்னும் நிலைமையை நிச்சயமாக உணர்வதையே விரும்பு. இச்செயல்களில் உனக்கு அவனைப் போலவே உடம்பில் தோலை உடுத்தலோடு, நீற்றை நிறையப் பூசி அமைதியுற்றிருத்தலாகிய நல்ல பதவியைக் கொடுக்கும்.
இனி உனது கவலையை விடு.

பாடல் எண் : 11
நெஞ்சந் தளிர்விடக் கண்ணீர்
அரும்ப முகம்மலர
அஞ்செங் கரதலங் கூம்பஅட்
டாங்கம் அடிபணிந்து
தஞ்சொல் மலரால் அணியவல்
லோர்கட்குத் தாழ்சடையான்
வஞ்சங் கடிந்து திருத்திவைத்
தான்பெரு வானகமே.


பொழிப்புரை :
மனம், வறட்சியால் வாடிய செடியாகாது, அன்பென்னும் நீரால் குளிர்ந்த செடியாகித் தளிர்க்க, அதினின்றும் தோன்றுகின்ற குருத்து அரும்புவதன் அறிகுறியாக அழகிய, சிவந்த கைகள் குவிந்து தோன்ற அக்கருத்தில் அன்பாகிய தேன் ததும்புவ தாகக் கண்களில் நீர் ததும்ப, அரும்பிய கருத்து மலர்வதாக முகம் மலர, மலர்ந்த கருத்துக்களை வெளிப்படத் தெரிவிக்கின்ற, தமது சொற்க ளாகிய மலர்களைத் தொடுத்த பாக்களாகிய மாலைகளை அணிவித்து, எட்டுறுப்புக்களாலும் அடிபணிய வல்லவர்க்கு என்றே நீண்ட சடையையுடையவனாகிய சிவபெருமான் சிறிதும் கர வில்லாமல் தனது பெரிய சிவலோகத்தை நன்றாகப் படைத்து வைத்தான்.

(எட்டுறுப் பாவன; முழங்கால் இரண்டு, மார்பு ஒன்று, தோள் இரண்டு, செவி இரண்டு, முகம் ஒன்று.இவ் எட்டுறுப்பும் நிலத்தில் தோயப் பணிதல் எட்டுறுப்பு வணக்கம்` எனப்படும். மார்பும், தோள்களும் ஒழிந்த ஐந்துறுப்புக்கள் நிலத்தில் தோயப் பணிதல் ஐந்துறுப்பு வணக்கமாகும்.`மகளிர் எட்டுறுப்பு வணக்கம்’ செய்தல் கூடாது` என விலக்கியுள்ளது)


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக