ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும் ..

2 posters

Go down

அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும் .. Empty அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும் ..

Post by மீனு Sat Oct 10, 2009 5:31 pm

அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும் .. Hiding-face+a நீங்கள் ஒரு உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் நேர்கிறது என வைத்துக் கொள்வோம். அதனை எதிரிலிருப்பவர் சந்தேகப்படாதவாறு உங்களால் சொல்ல முடியுமா?

முடியும் என்று எண்ணுகிறோம். நாம் பொய் சொல்லும்போது அதனைக் கேட்பவர் உணரமாட்டார் என்று எண்ணியே சொல்கிறோம்.

ஆனால் எமது உள்ளுணர்வுகளை முகத்திரை போட்டு முழுமையாக மறைப்பது சாத்தியம்தானா?

அல்லது உங்கள் உடல் தனது மொழிகளால் நீங்கள் எதனையோ மறைப்பதை மற்றவர்களுக்குப் புட்டுக் காட்டிவிடுமா?

மறைக்க விரும்பும் உண்மையானது, முகம் முழுவதும் அப்பிக் கிடப்பதை எவராலும் மறைக்க முடியாது என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

உண்மை பொய் மாத்திரமல்ல, நீங்கள் மற்றவர்களிடமிருந்து மறைக்க முயல்கிற எல்லா உணர்வுகளையும் உங்கள் விருப்பத்தை மீறி முகம் வெளிப்படுத்திவிடும். சந்தோசம், துக்கம், ஏக்கம், ஏளனம், பொறாமை போன்ற எந்த உணர்வும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

ஒருவனது உணர்வுகளை அவனது உடல் எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை ஆய்வறிஞர்கள் பல வழிகளில் ஆய்வு செய்கின்றனர். நாளாந்த வாழ்க்கை நிகழ்வுகள் முதல் நாடகத் தன்மை வாய்ந்த ரி வீ நேரடி ஒலிபரப்புகள், மேடை நிகழ்ச்சிகள் போன்ற பலவும் அவர்களது ஆய்விற்கு உள்ளாகின்றன.

வார்த்தைகளுக்கு அப்பாலான உடலின் ஒவ்வொரு மொழியையும் அவர்கள் ஆய்வு செய்கிறார்கள். நீங்கள் உரையாடும் போது மட்டுமல்ல எதுவும் பேசாதிருக்கும் போது கூட உங்கள் உடல் பேசும் மொழிகள் கவனத்தில் எடுக்கப்பட்டன.

ஒருவர் ஒரு முக்கிய பொய்யைச் சொல்லும்போது அதுவும் மற்றவர்களுக்கு தான் சொல்லும் பொய் பிடிபடாமலிருக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருக்கும்போது அவரது வாய் மொழிக்கும், உடல்மொழிக்கும் இடையே பாரிய இடைவெளி; இருப்பதை அவதானிக்க முடியும் என்கிறார்கள்.

கலிபோனியா சான் பிரன்சிக்கோ அரச பல்கலைக்கழக உளவியலாளரான டேவிட் மட்சுமொடா





(David Matsumoto) மற்ற எல்லா அங்கங்களையும் விட அதிகமான செய்திகளை முகம்தான் வெளிப்படுத்துகிறது என்கிறார்.

உதாரணத்திற்கு அவர் பிரபல விளையாட்டு வீரர்





Alex Rodriguez வின் தொலைக்காட்சி நேர்முகத்தை எடுத்துக் காட்டுகிறார்.

'நீங்கள் எப்பொழுதாவது ஆற்றலை ஊக்கப்படுத்தும் பொருட்களை உபயோகித்திருக்கிறீர்களா' என்று கேட்டபோது 'இல்லை' என அவரது வாயிலிருந்து விடை உறுதியாக வந்தது.

ஆனால் அவ்வாறு கூறும்போது அவரது வாய் ஒருபுறம் கோணியதை அவதானிக்க முடிந்ததாம்.

சில மாதங்களின் பின் தான் ஸ்டிரொயிட் மருந்துகளை உட்கொண்டதை அவர் ஒத்துக்கொள்ள நேர்ந்தது.

ஒருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எததகைய சமூகப் பின்னணியைச் சார்ந்தவராயினும் ஆணாயினும் பெண்ணாயினும் அடிப்படை உணர்வுகளை ஒரே மாதிரித்தான் முகத்தால் வெளிப்படுத்துகிறார்களாம்.
அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும் .. Basic+emotions+1
ஏனெனில் அடிப்படை உணர்வுகள் நாம் கற்றுக் கொண்டவையல்ல, அனுபவத்தால் பெற்றும் கொண்டவையும் அல்ல.

அவை எம்மோடு கூடப் பிறந்தவை.

அடிப்படை உணர்வுகள் ஏழு என்கிறார்கள்.

மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம், ஏக்கம், சஞ்சலம், பதற்றம் ஆகியனவே அவை.

உதாரணத்திற்கு மிக சந்தோசமான செய்தியைக் கேட்டவுடன் எமது முகம் விரிந்து மகிழ்ச்சியில் பூரிக்கிறதே. அது தன்னிச்சையாக எமது ஆழ்மனத்திலிருந்து உடனடியாக எழும் உணர்வின் பிரதிபலிப்பாகும் என்கிறார்.

அகத்தின் அழகை முகம் காட்டுவதில் பிரச்சனை ஏதும் இல்லை. ஏனெனில் நீங்கள் ஊடாடுபவரிடம் உங்களைப் பற்றிய நல்லெண்ண விதைகளை அது ஊன்றிவிடும்.
அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும் .. Basic+emotions
மாறாக அகத்தின் அழுக்கை அதுவும் மற்றவரிடம் இருந்து மறைக்க விரும்பும் அழுக்கை உங்கள் முகம் வெளிப்படுத்துவதானது திருடிய பொருளுடன் அகப்படுவது போலானது.

இதனைத் தடுக்க வழி ஏதும் உள்ளதா?

அகத்தை அழுக்கின்றி புனிதமாக வைத்திருப்பதுதான் ஒரே வழி என்று தோன்றுகிறது.

முடியுமா உங்களால்?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
நன்றி
ஹாய் நலமா?
தினக்குரல் 28.07.2009


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும் .. Empty Re: அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும் ..

Post by ரூபன் Sat Oct 10, 2009 5:33 pm

நான் இன்று நினைத்த பழமொழி இது மேறோவில் வரும் பொழுது ஒரு அழகான சாந்தமான் பிரெஞ்சு பொண்ணைபார்த்தேன் அப்பொழுது தான் நினைத்தேன் இந்தப்பலமொளியை அப்படியான நல்ல முகங்களை காண்பது அரிது அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும் .. 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum