ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர் போலீஸ் படை

2 posters

Go down

மாணவர் போலீஸ் படை Empty மாணவர் போலீஸ் படை

Post by சிவா Wed Sep 19, 2012 1:35 pm

மாணவர் சமுதாயம் நினைத்தால் எதையும் நடத்திக்காட்ட முடியும் என்பதற்கு, சான்றுகள் பல தமிழ்நாட்டில் இருக்கின்றன. 1967-ம் ஆண்டு வரை ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சியை, தாங்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலமாக, சூறாவளியையே உருவாக்கி அகற்றி, அதன்பிறகு தி.மு.க., அ.தி.மு.க. என்று மாறி மாறி திராவிட கட்சிகளையே ஆட்சிக்கு வரவைத்தது மாணவர் சமுதாயம்தான். அறிஞர் அண்ணாவும் சரி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் சரி, மாணவர் சமுதாயத்தின் வலிமையை நன்கு உணர்ந்த காரணத்தால்தான், அவர்கள் கட்சிகளில் மாணவர் சமுதாயத்துக்கு இளைஞர் அணி என்ற பெயரில் உரிய முக்கியத்துவம் கொடுத்து, வில்லை நாணேற்றுவது போல, கட்சியை பலம் பொருந்தியதாக ஆக்கினார்கள். அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், அரசு ரீதியாகவும் மாணவர் சமுதாயத்தை நன்றாக பயன்படுத்தினால் நன்மைகள் பல தானாகவே விளையும். குறிப்பாக சமூக சேவைப்பணிகளில் மாணவர் சமுதாயத்தை அதிகம் ஈடுபடுத்துவதன் மூலம், அவர்கள் வாழ்வில் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக்கொடுக்க முடியும். சமுதாயமும் பலன் பெறும்.

இதற்கு எடுத்துக்காட்டாக, சில நாட்களுக்கு முன்பு, சென்னை கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்கள், குறிப்பாக, தேசிய மாணவர் படை மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செய்கிற காரியத்தை திருத்தமாக செய்யும் உணர்வு கொண்ட மாணவர்கள், ஒரு குப்பையும் இல்லாமல் சுத்தமான கடற்கரையாக ஆக்கிவிட்டார்கள். இதுபோன்ற அவர்கள் சேவையை, எல்லா செயல்களிலும் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு, கேரளாவில் நடைமுறைப்படுத்தப்படும் மாணவர் போலீஸ் படை திட்டமாகும். போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு, மோட்டார் வாகன சோதனைகள் நடத்தும் போக்குவரத்து துறையில் போதிய ஊழியர்கள் இல்லையே என்றும், வனச்செல்வங்களை கொள்ளையடித்துச் செல்லும் கும்பல் பற்றி துப்புக்கொடுப்பதற்கு சரியான ஆட்கள் இல்லை என்றும் குறை கூறப்படுகிறது. இப்படி பல துறைகளில் தங்களுக்கு துணையாக ஒரு படை இல்லையே என்ற குறையை நிவர்த்தி செய்வதுதான் கேரளாவில் செயல்படுத்தப்படும் மாணவர் போலீஸ் படை. 2 ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோட்டில் இந்த படையின் சிறந்த செயல்பாடு வெளி உலகத்துக்கு தெரியவந்தது. 8-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் இந்த படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 2 ஆண்டுகள் நல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது. வெறும் உடற்பயிற்சி மட்டுமல்லாமல், சட்டத்தை மதிப்பது எப்படி? சமுதாய தீமைகளை ஒழிப்பது எப்படி? நலிந்தோரோடு இணைந்து அவர்களுக்கு உதவுவது எப்படி? என்பது போன்ற பல சமுதாய கடமைகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் தங்கள் பணிகளை போலீசாருக்கு துணையாக மட்டுமல்லாமல், கல்வி, கலால், வனம், உள்ளாட்சி, போக்குவரத்து போன்ற பல துறைகளில் துணையாக இருக்கிறார்கள். பள்ளிக்கூட நேரம் போக மீதம் உள்ள நேரங்களில் மிடுக்காக காக்கிச்சீருடை அணிந்து, போக்குவரத்தை அவர்கள் சீர்செய்யும் லாவகத்தால் பல இடங்களில் நெரிசலை சமாளிக்க முடிகிறது என்கிறார்கள். 2011-ம் ஆண்டு டேராடூனில் நடந்த 41-வது அகில இந்திய போலீஸ் அறிவியல் காங்கிரஸ் என்ற மாநாட்டில், கேரளாவில் செயல்படுத்தப்படும் இந்த மாணவர் போலீஸ் படையை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது கேரளாவில் 254 பள்ளிக்கூடங்களில், 16 ஆயிரம் போலீஸ் மாணவர் படை மாணவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு காவல்துறையில் இருந்தும் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற 500 ஆசிரியர்களும் பயிற்சி அளிக்கிறார்கள். அந்த ஆசிரியர்களுக்கு கவுரவ சப்-இன்ஸ்பெக்டர்கள் என்ற அந்தஸ்தும் வழங்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கு சீருடை மற்றும் செலவுகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மானியத்தை அரசு வழங்குகிறது.

தமிழ்நாட்டிலும் இப்போதுள்ள போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இதுபோன்ற மாணவர் போலீஸ் படையை அமைத்து, அவர்களையும் ஈடுபடுத்திக்கொள்ளலாம். இந்த படையில் உள்ள மாணவர்களுக்கு காவல்துறை போன்ற சீருடை பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தாலே போதும். மாணவர்களும் ஆர்வத்துடன் சேர்வார்கள். எதிர்கால காவல்துறைக்கும் திறமைமிக்க காவலர்கள், அதிகாரிகள் கிடைப்பார்கள். சமுதாயத்துக்கும் நல்ல பலன் கிடைக்கும். இதை பள்ளிக்கூட கல்வித்துறையும், காவல்துறையும் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளும் பரிசீலிக்கவேண்டும்.

தினத்தந்தி


மாணவர் போலீஸ் படை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாணவர் போலீஸ் படை Empty Re: மாணவர் போலீஸ் படை

Post by அசுரன் Wed Sep 19, 2012 1:38 pm

இது இங்கும் இருக்கிறது சிவா! ரோட் சேப்டி பேட்ரோல் என்ற பெயரில். ஆனால் என்ன மாணவர்கள் இருந்தால் போலீசாரால் விதிமீறல்களுக்கு லஞ்சம் வாங்கும்போது கூச்சமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் போலும் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
» உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்!
» அட! ஐபோனை 68 ரூபாய்க்கு வாங்கிய மாணவர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum