ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவே தெய்வம் உலகிலே!

3 posters

Go down

அம்மாவே தெய்வம் உலகிலே! Empty அம்மாவே தெய்வம் உலகிலே!

Post by krishnaamma Tue Sep 18, 2012 7:42 pm

அம்மாவே தெய்வம் உலகிலே! E_1347602212

ஆவணி வளர்பிறை சதுர்த்தி திதியையே விநாயகர் சதுர்த்தி என்கிறோம். வியாசர் எழுதிய, 18 புராணங்களில் ஒன்று, பிரமாண்ட புராணம். இதில், லலிதோபாக்யானம் என்ற பகுதி இருக்கிறது. அதில், விநாயகரின் பிறப்பு பற்றி வித்தியாசமாகக் கூறப்பட்டுள்ளது. அன்னை பராசக்தி, லலிதாம்பிகை என்ற பெயரில், தேவர்களுக்கு உதவி செய்ய வந்தாள். பண்டாசுரன் என்பவன் தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டு மென, தேவர்கள் அம்பாளிடம் முறையிட்டனர்.
அம்பாளும், அவர்கள் மீது கருணை கூர்ந்து, பண்டாசுரனு டன் போர் தொடுக்க கிளம்பினாள். அவளுடன் தேவப்பெண்கள் மட்டுமே அடங்கிய படை ஒன்றும் கிளம்பியது. அவர்கள் அக்னி கோட்டை அமைத்து பாதுகாப் பாக தங்கியிருந்தனர். பண்டா சுரனுக்கு, விசுக்ரன் என்ற படைத்தளபதி இருந்தான். அவன் மந்திர தந்திரம் அறிந்தவன். அம்பாளின் படையை அடக்குவது எப்படி என்று யோசித்தான். பலத்தால், அவர்களை அடக்க முடியா தென்பதை அவன் அறிவான். எனவே, மந்திரத்தை பயன் படுத்தி, ஒரு யந்திரம் செய்தான். அதற்கு, "விக்ன யந்திரம்' என்று பெயர். விக்னம் என்றால் தடை.
அந்த யந்திரத்தின் தன்மை என்ன தெரியுமா?
யாருக்கு சாதகமாகப் போரிடு கிறார்களோ, அவர்களுக்கு எதி ராகவே மனநிலையை திருப்பி விட்டு விடும். அந்த யந்திரத்தை, அவன் அக்னி கோட்டைக்குள் வீசி விட்டான். அது உள்ளே வந்து விழுந்ததோ இல்லையோ, சக்தியின் படைகளின் மனமும் மாறிவிட்டது.
"இந்த அம்பாள் என்ன பெரிய ஆளா! இவள் சக்தி வாய்ந்தவளாக இருந்தால், சிவனுடைய மனைவி என்ற அந்தஸ்து பெற்றவளாக இருந்தால், தனியாக நின்றே பண்டாசுரனை ஜெயித்திருக்கலாமே! நம்மை இவள் அழைத்து வந்திருக்கிறாள் என்றால், அவளை விட, நம் வீரத்தை அதிகம் நம்புகிறாள் என்று தானே பொருள்! இப்படிப்பட்டவளுக்காக, நாம் ஏன் வீணாக அசுரர்களைப் பகைத்து உயிரிழக்க வேண்டும்! இந்தப் போரில் நாம் பங்கேற்கக்கூடாது...' என்று முடிவெடுத்தனர்.
ஆனால், இந்த லீலைகள் எல்லாவற்றையுமே அம்பாளே செய்கிறாள் என்பது படைகளுக்கு தெரியாது. இந்த விக்னத்தைக் களைய, சிவசக்தி அம்சத்துடன் ஒருவன் வந்தாக வேண்டும்! அவனை உலகமே முழுமுதற்கடவுளாக வணங்க வேண்டும் என்பதல்லவா அவளது நோக்கம்.
எனவே, அவள் அக்னி கோட்டைக்கு சிவனை வரவழைத் தாள். அவரை நோக்கி சிரித்தாள். அந்த சிரிப்பின் அழகில் சொக்கிப்போன சிவனும் சிரித்தார். அவர்களது சிரிப்பிலேயே அவதரித்தார் வெள்ளைக் கொம்பனான விநாயகப் பெருமான்.
தங்கள் அன்பு மகனை உச்சிமோந்த பெற்றோர், "விநாயகா... நீ அக்கினி கோட்டைக்குள் கிடக்கும் யந்திரத்தை கண்டுபிடித்து, அதை அழித்து விடு' என்றனர்.
விநாயகரும் அந்த யந்திரத்தை தன் தந்தத்தால் குத்தி சின்னா பின்னமாக்கினார். யந்திரம் அழிந்ததுமே, அம்பாளுடன் சென்றிருந்த படைகளின் மனம் மாறியது. "ஆகா... நமக்குள் ஏ@தா மாற்றம் ஏற்பட்டதே! அது எப்படி? அம்பாளுக்கு எதிராக நடந்து விட்டோமே...' என வருந்தினர். அம்பாளின் திருப் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.
அம்பாள் அவர்களைத் தேற்றி, "இது எல்லாமே என்னால் நடந்தது. நாம் செய்யப் போகும் இந்த தர்மயுத்தம் மட்டுமல்ல, இவ்வுலகில் எந்தச் செயலைத் துவங்கினா<லும் அது தடையின்றி வெற்றிகரமாக முடிய, என் மகன் விக்னேஸ் வரனை வணங்கிய பிறகே துவங்க வேண்டும் என்பதற்காகவே, இந்த நாடகத்தை நிகழ்த்தினேன்...' என்றாள். பின், படையினர் தீரமாகப் போரிட்டு, பண்டாசுரனை அழித்தனர்.
அம்மாவின் கட்டளையை நிறைவேற்ற பிறந்த பிள்ளை விக்னேஸ்வரர். விக்னம் என்றால் தடை. ஈஸ்வரர் என்றால் கடவுள். தடைகளை நீக்குபவர் என்பதால் விநாயகருக்கு, "விக்னேஸ்வரர்' என்ற பெயர் வந்தது. இளைஞர்களே... உங்கள் அன்னையை தெய்வமாக மதித்து, அவளது விருப்பத்தை நிறைவேற்றுங்கள். விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உறுதி எடுப்பீர்களா?

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மாவே தெய்வம் உலகிலே! Empty Re: அம்மாவே தெய்வம் உலகிலே!

Post by சிவா Tue Sep 18, 2012 8:19 pm

/// உங்கள் அன்னையை தெய்வமாக மதித்து, அவளது விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.///

சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி அக்கா!


அம்மாவே தெய்வம் உலகிலே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அம்மாவே தெய்வம் உலகிலே! Empty Re: அம்மாவே தெய்வம் உலகிலே!

Post by krishnaamma Tue Sep 18, 2012 8:22 pm

சிவா wrote:/// உங்கள் அன்னையை தெய்வமாக மதித்து, அவளது விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.///

சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி அக்கா!

ஆமாம் சிவா, கடவுள் எல்லோரிடமும் இருக்க முடியாது என்றுதான் தாயை அனுப்பி இருப்பதாக சொல்வார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மாவே தெய்வம் உலகிலே! Empty Re: அம்மாவே தெய்வம் உலகிலே!

Post by யினியவன் Tue Sep 18, 2012 8:25 pm

நல்ல பகிர்வும்மா.

அப்ப சனீஸ்வரன் தான் *** ய அனுப்பி இருப்பாரோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அம்மாவே தெய்வம் உலகிலே! Empty Re: அம்மாவே தெய்வம் உலகிலே!

Post by krishnaamma Tue Sep 18, 2012 8:40 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வும்மா.

அப்ப சனீஸ்வரன் தான் *** ய அனுப்பி இருப்பாரோ? புன்னகை

ஐயோ .............. அந்த நக்ஷத்திரம் யாரு பா ? எனக்கு புரியலையே? தனி மடலிலாவது சொல்லுங்கோ இனியவன் புன்னகை அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மாவே தெய்வம் உலகிலே! Empty Re: அம்மாவே தெய்வம் உலகிலே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum