புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
15 Posts - 83%
Barushree
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
1 Post - 6%
kavithasankar
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
2 Posts - 2%
prajai
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
1 Post - 1%
Barushree
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சை குத்துதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 10, 2009 12:31 pm

கொங்கு நாட்டுப் பகுதியில் காணப்படும் கைவினைக் கலைகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்குவது "பச்சை குத்தும்'' கலையாகும். கலைத்தன்மையும், தொழில் தன்மையும் இணைந்த. கைவினைக் கலை' (Folk crafts) இது. இந்தப் பச்சை குத்தும் கலை தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் இன்றும் காணப்படுகின்றது. பழங்குடி மக்களிடம் மிகுதியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ரஷ்யா பாலினீசியா, நியூசிலாந்து முதலிய நாடுகளில் இவ்வழக்கமுள்ளது.

மஞ்சள் பொடியை அகத்திக் கீரையோடு அரைத்துத் துணியில் வைத்துத் திரியாக்கி எரித்த கரியினை நீர் அல்லது முலைப்பாலுடன் கலந்து மையாக்கி ஊசிகளைக் கொண்டு உடலில் பச்சை குத்துவர். கரும்பச்சை நிறத்துடன் இருக்குமாறு ஒரு வகைமையில் ஊசியைத் தொட்டு உடலில் குத்துதல் பச்சை குத்துதல் என்று விளக்கம் தருவர். (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, (பக்.656_657) பச்சை குத்துவதற்குப் பயன்படும் பொருள்கள் குறித்துப் பின்வருமாறு எடுத்துக் கூறுவர்.

"கரியாந் தழைச்சாறுடன் சிறுது மஞ்சள் பொடி கலந்து பசை போலாக்கி புதுமண் கலயத்தின் மீது பூசுவார்கள். பின் இந்தச் சாற்றையும் விளக்கெண்ணையையும் கலந்து அகல் விளக்கில் ஊற்றி திரியை எரிய விடுவார்கள். கலயத்தை விளக்கின் மீது பிடித்தால் அதன் மீது அடர்ந்த புகைபடியும். அதைச் சுரண்டி எடுத்து சேமிப்பார்கள். பச்சை குத்தும்போது அளவாக எடுத்து, தேங்காய் மூடி அல்லது சுரைக்காய் குடுவையில் பாலைத் தரவேண்டும். அவர்களால் முடியாத பட்சத்தில் இன்னொரு பெண்ணின் பாலைப் பயன்படுத்துவார்கள்.'' (தினகரன் நாளிதழ், வசந்தம் 1.10.2006. ப.3)

கொங்குநாட்டில் குறவர் இனப்பெண்கள் பச்சை குத்துவதைத் தொழிலாகச் செய்தனர். கைக்கோளர்களும் பச்சை குத்தும் தொழிலைச் செய்துள்ளனர். சமுதாய வரலாற்றைத் தொன்மைக் காலத்திலிருந்து கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால் பச்சை குத்தும் கலை வளர்ச்சியில்

1.பாலியல் நிலை,
2.சமயச்சடங்கு,
3.அழகியல் கூறு


என்னும் மூன்று விதமான சிந்தனைப் போக்கு இருப்பதைக் காணலாம். பச்சை குத்தும் கலையின் எச்சமாகத் தற்காலத்தில் மருதாணி இட்டுக் கொள்வதும், வண்ணங்களால் உடம்பில் ஒவியங்கள் தீட்டிக் கொள்வதும் காணப்படுகின்றன. கொங்கு நாட்டுப் புறமக்களிடம் தரவுகளைச் சேகரித்து அவைகளைத் தொகுத்தும், வகுத்தும் ஆராய்ந்து பார்த்ததில் மேற்கண்ட மூன்று நிலைகளிலும் பச்சை குத்தும் கலை உள்ளத்தை அறிய முடிகின்றது.

பெண்கள் பருவமடையும் போது பச்சை குத்தப்பட்டது. திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு பச்சை குத்தப்பட்டது. அது போன்று கர்ப்பணிப் பெண்களுக்கு பச்சை குத்தும் பழக்கமும் காணப்பட்டது. பச்சை குத்தும் பழக்கம் தமிழர் பண்பாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

தொன்மைச் சமுதாயத்தில் வாழ்ந்த மக்களிடம் பாலியல் இச்சையைத் தூண்டுவதற்கு பெண்களின் தொடைகள், வயிற்றுப் பகுதி, மார்பகங்கள், ஆகியவைகளில் பச்சை குத்தும் வழக்கம் இருந்திருக்கின்றன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த ஆதிமனிதர்கள் பெண்ணின் மார்பகத்திலும், பெண் உடம்பிலும் பசுமையான செடி, கொடி, இலை, மலர்களை, ஒவியமாக வரைந்து கொண்டால், செடியின் வித்து ஒன்று நூறாகப் பெருகி விளைவதைப் போலவே மனிட இனமும் ஒன்று நூறாகப் பெருகி வளரும் என்று நம்பினர்கள். இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக பாலியல் தொடர்பான ஓவியங்களை பெண்களின் மறைவிடங்களில் வரைந்து கொண்டனர்.

தற்காலத்தில் இவ்வகையான வழக்கம் இல்லையென்றாலும் பெண்கள் ஆண்களின் பெயர்களையும் ஆண்கள் பெண்களின் பெயர்களையும், மார்பில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கம் இருப்பதை கொங்கு நாட்டில் மேற்கொண்ட கள ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.

சமயச் சடங்கிற்காகப் பச்சை குத்தும் வழக்கம் கொங்குநாட்டில் காணப்படுகின்றது. பச்சை குத்தும் கலை சமயத்தோடு இணைக்கப் பட்டது மிகவும் பிற்காலத்திலேயாகும். தாங்கள் இன்ன சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதற்காக, சங்கு, சக்கரம், சூலம், வேல் போன்ற கடவுளர்களின் சின்னங்களைக் குத்திக் கொண்டனர். அஃதன்றியும், கடவுளர்களின் உருவங்களை உடம்பில் குத்திக் கொள்வதன் மூலம் அக்கடவுளர்களின் அருள் கிட்டுமென்று கருதி பச்சை குத்திக் கொண்டனர். இன்றைய இளம் தலைமுறையினர் வெறும் சடங்கிற்காக கையில் ஒரே ஒரு புள்ளியை மட்டும் பச்சை குத்திக் கொள்கின்றனர் (நேர்காணல், பொன்.மணிமேகலை, உடுமலை 5.12.2007).


பச்சைக் குத்திக் கொண்டால் பேய், பிசாசு போன்றவை தமக்குத் தீங்கு செய்யாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பச்சை குத்திக் கொள்வதை இன்றும் கொங்கு நாட்டுப்புறக் கிராமங்களில் காணமுடிகின்றது.

தற்காலத்தில் அழகிற்காக பச்சை குத்திக் கொள்ளும் போக்குக் காணப்படுகின்றது. இளம் பெண்கள் பச்சைக் குத்திக் கொள்வதற்கு மாற்றாக (alternative) அழகிய வண்ண வண்ண ஓவியங்களைத் தங்கள் உடல்மீது வரைந்து கொள்கின்றனர். வயதான கொங்கு நாட்டுப்புறப் பெண்கள் அழகிற்காக செடி, கொடி, மலர் போன்றவைகளைப் பச்சை குத்திக் கொண்டிருப்பதை இன்றும் காணமுடிகின்றது. சுருங்கக் கொண்ட அவர்களின் கை கால்களின் மீது இன்றும் அழியா ஓவியங்களாய் காணப்படுகின்றன. கொங்கு நாட்டுப் புறத்தில் தங்களை வீரர்கள் என்று பிறரிடம் காட்டிக் கொள்வதற்காக முரட்டுத்தனமும், போர்க்குணமும் கொண்ட மனிதர்கள் மார்பின் இடது புறத்தில் போர்க்காட்சிகளை ஓவியமாகப் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கம் இருந்ததென்று கூறுவர். (நேர்காணல், சூர்யகாந்தன், கோயம்புத்தூர், 10.1.2008) கொங்கு நாட்டுப்புறமக்களிடம் அழகிற்காகப் பச்சை குத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது.

உடலை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணமும், தாங்கள் இறந்தாலும் தங்கள் உடலிலுள்ள ஓவியங்கள் அழியாமலிருக்க வேண்டும் என்ற ஆசையும் மனிதர்களிடம் இருந்ததை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

கொங்கு நாட்டுப்புற மக்களிடம் பச்சை குத்தும் கலை, அழகுக்கலையாகப்' பரிணாமை வளர்ச்சி பெற்றிருப்பதைக் கள ஆய்வு மூலம் அறிய முடிகிறது. முந்தைய தலைமுறையினரிடம் அழகுக்காகப் பச்சை குத்தும் வழக்கம் உள்ளதெனினும் இளந் தலைமுறையினரிடம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. பெற்றோர்களின் வற்வுறுத்தலுக்காகவே இதை ஏற்றுக் கொள்கின்றனர். அதுவும் சமயத் தொடர்பான நம்பிக்கையாக அமைந்துள்ளது. பாலியல் தொடர்பாகப் பச்சை குத்தும் வழக்கமுள்ளதா? என்பதை அறிய முடியவில்லை. எனினும் பெண்கள் ஆண்களின் பெயர்களையும், ஆண்கள் பெண்களின் பெயர்களையும் பச்சை குத்தும் வழக்கம் இன்றும் கொங்கு நாட்டுப் புறத்திலுள்ளது. சமயத்தொடர்பான கடவுள் உருவங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட நடிகர்கள், நடிகைகள் ஆகியோரின் உருவங்களைப் பச்சை குத்திக் கொள்கின்றனர். தற்காலத்தில் அழகுணர்ச்சியை மேம்படுத்திக் கொள்வதற்காகப் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கம் இருந்து வருகின்றது. பச்சை குத்தும் கலையை மேலும் ஆழமாகத் தரவுகளைச் சேகரித்து பச்சை குத்தும் கலையை ஆராய்ந்தால் கொங்குநாட்டு மக்களின் சமூக, உளவியல், பண்பாட்டுக் கூறுகளை அறிந்து கொள்ளலாம்.

முனைவர் க.இந்திரசித்து



பச்சை குத்துதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Oct 10, 2009 12:39 pm

பச்சை குத்துதல் Icon_eek பச்சை குத்துதல் Icon_eek பச்சை குத்துதல் Icon_eek

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக