ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)

3 posters

Go down

கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)  Empty கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by அசுரன் Sun Sep 16, 2012 5:24 pm

அசுரன் wrote:போட்டி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி எங்கேனும் விதிமீறல் இருந்தால் கதை போட்டியிலிருந்து விலக்கப்படும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

நொடிமுள்


CaSO4 + Mg(OH)2 --> Ca(OH)2 + MgSO4
இதுபோல் என் மூளைக்குள் கல்லறையாய் எண்ணற்ற வேதியியல் சூத்திரங்கள்.
மென்பொருள் பணியில் சேர்ந்துப் பிறகு நான் ஆசையைப் படித்து சூத்திரங்கள் பயனற்றுப்போனது.
நான் பீ.எஸ்.சி வேதியல் படித்த மென்பொறியாளன்.என்னைப் போல் இயற்பியல், ,தமிழ்,வரலாறு,சிவில்,ஃபேஷன் டெக்னாலஜி, டுடோரியல் காலேஜ் படித்துவிட்டு மென்பொறியாளனாக உலாவரும் பலர் எங்கள் நிறுவனத்தில் உண்டு. எல்லா மென்பொருள் நிறுவனத்துக்கும் அவரவர்களின் துறை அறிவு முக்கியமல்ல. நுனிநாக்கில் ஆங்கிலமும், சுமாரான கணித அறிவும், இரவுபகலாக வேலை செய்யும் குணநலம் இருந்தால் போதும்.

குளிரூட்டப்பட்ட அறைகள்,பகலிரவு கால மாற்றத்தை உள் இருப்பவர்கள் அறியாத வண்ணம் சூழப்பட்டிருக்கும் கருப்பு கண்ணாடி கதவுகள், கழுத்தில் தாலி போல் எப்போதும் ஐ டி கார்டு அணிந்திருக்கும் மனிதர்கள், நான் வேலைச் செய்த பன்னாட்டு நிறுவனத்தின் தினசரிக் காட்சிகள். என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் “குட் மார்னிங்” சொல்வதோடு நிறுத்திக்கொள்வோம். அவர்கள் கடந்துசெல்லும் போது பெர்ஃபயூம் வாடை நாசியைத் துளைக்கும்... தொலைக்கும். அதிகம் பெர்ஃபயூம் பூசியவர்கள் குளிக்க தவறியவர்கள் என்பதை அறியலாம்.பொதுவாக எல்லா ஊழியர்களுக்கும் தொப்பையை காணலாம். தொப்பை சிறியதாக இருந்தால் “ட்ரைனி என்ஜினீயர்” பெரியதாக என்றால் “மேனேஜர்” என்று அளவிடலாம்.. மென்பொறியாளரின் தொப்பைக்கும் பணவீக்கதற்கும் நேரடித்தொடர்பு இருந்தன.

எங்கள் நிறுவனம் மூன்றாகப் பிரிக்கபட்டிருதன- டெவலப்மெண்ட்,டெஸ்டிங்க,சப்போர்ட்டு. டெவலப்மெண்ட் துறையில் உள்ளவர்கள் மாங்கு மாங்கு என்று வேலை செய்யக்கூடியவர்கள். நடுநிசியில் நீங்கள் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்றால் கூர்க்காக்வையும் டெவலப்ரையும் கண்டிப்பாக காணலாம். வீட்டை மறந்தவர்கள். ஆனால் சப்போர்ட்டில் இருப்பவர்கள் வீட்டிலேயே வேலை செய்யலாம். இணைதளத்துடன் கூடிய மடிக்கணினியும் தொலைப்பேசியும் இருந்தால் போதும். ஆனால் அதிலும் கல்யாணமானவர்களுக்கு சிக்கல்கள் இருந்தன. தினமும் இரவில் படுக்கையில் ஒருபக்கம் மனைவியும் மறுபக்கம் கணினி வழியாக வீடுபுகும் மேனேஜரையும் சமாளிப்பதில் பெரும் போராட்டமாகவே இருக்கும். டெஸ்டிங்க துறையில் குற்றம்குறை கண்டுபிடிக்கும் வேலை என்பதால் பெண்கள் அதிகமாகவே இருந்தார்கள்.

மென்பொருளில் வேலை செய்பவர்களின் கனவு “ஆன்சைட்”. “ஆன்சைட்” என்றால் வாடிக்கையாளர்கள் (கிளையன்ட்) இருக்கும் இடத்திலேயே வேலை செய்வது அல்லது வேலை செய்வது போல் நடிப்பது. ஐரோப்பிய,அமெரிக்கா நாடுகளுக்குச் சென்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதியவேண்டும் என்பது நெடுநாளைய கனவு. இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அதற்கு என் மேனேஜர் சின்ன கெடுபிடிகளை வைத்தார்.

என்னுடைய மேனேஜரை பார்பதற்க்கு “டிக் டிக் டிக் “ படவில்லன் போல் இருப்பார். முடிகளற்ற வறண்ட தலையும்,மூக்கின் நுனியில் தொங்கும் கண்ணாடியும் தனி அடையாளங்கள்.

“நம்ம கம்பனிக்கு சிந்திச்சு சிந்திச்சு முடியெல்லாம் கொட்டிப் போச்சு” என்று நாசூக்காக ஜெனரல் மேனேஜரிடம் தற்பெருமை பேசிக்கொள்வார்.

“அப்படி என்ன அப்துல்கலாம்,ஐன்ஸ்டீன் சிந்திக்காத விஷயத்தை நீங்க சிந்திச்சுட்டிங்க.அவங்களுக்கு எல்லாம் மூக்கு வரை முடி இல்லை!” என அடிமனதில் அலாரமிடும். சம்பள உயர்வு, ஆன்சைட் கருதி அலாரமை அணைத்துவிட்டேன்.
போனமாதம் அவர் அறைக்கு அழைத்தார்.

“வசந்த்,நாலு வருஷமா நீங்க நிறைய பேங்க் ப்ராஜெக்ட் பண்ணிருகிங்க. அதுனால உங்களுக்கு ஒரு வாய்ப்பு தாரேன்.யு.ஸ் ஆன்சைட் ப்ராஜெக்ட்டு தரேன்” என மேனேஜர் சொன்னதும் அடிவயிறு குளிர்ந்து. ராமேசுவரம் தவிர கடல்தாண்டி செல்லாது எனக்கு “யு.ஸ்” பிரமாண்டமாகத் தோன்றியது. மேனேஜர் தொடர்ந்தார்

“ஆனா,அதுக்குள்ளே கே.பி.டி பேங்க் ப்ரொஜெக்டை முடிக்கணும்”-சவரம் செய்த முகத்தில் ஆஃபடர் ஷேவ் லோஷன் தடவியது போலிருந்தது.சற்று குளுமையாகவும்,எரிச்சலாகவும்.

“சார்..அது எப்படி முடியும்..கஷ்டமான ப்ராஜெக்ட்டு ஆச்சே!!”

“காமான் வசந்த் உங்களால் முடியும்..எனக்கு நம்பிக்கை இருக்கு” கடா வெட்டுவதற்கு முன் மஞ்சள் தண்ணீர்த் தெளித்து ஆட்டை சம்மதிக்க வைக்கும் வித்தையில் என் மேனேஜர் கைதேர்ந்தவர்..

“ஓகே சார்”

“தட்ஸ் மை பாய்’ என தட்டிகொடுத்தார்

இன்றோடு தூக்கம்விற்ற 22 நாட்கள் முடிந்தது விட்டது.சிறிய ப்ராஜெக்ட் என்பதால் நான் மட்டும் தனியாக வேலைச் செய்ய வேண்டிருக்கிறது. மென்பொருள் பெயரளவுக்கு மென்மையில்லை. அதன் கடுமையை மென்பொறியாளர்கள் மட்டும் உணர்வார்கள். கே.பி.டி பேங்க் ப்ரொஜெக்டை எட்டு நாட்கள் முன்னதாகவே முடித்துவிட்டேன். டெஸ்டிங் டிபார்ட்மெண்ட் மென்பொருளை பரிசோதித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சரி என்றால் தான் ப்ராஜெக்ட் டெலிவரி ஆகும்..

இதற்கிடையே நிகோட்டின் புகையை நாடினேன். மென்பொறியாளர்கள் மனஅழுத்தம் அதிகம் பாதிக்கபட்டவர்கள் என்பதால், கம்பெனிக்கு அருகேயுள்ள பெட்டிகடையில் சிகரெட் விற்பனை அதிகமாகவே இருந்தது. மதிய உணவு இடைவெளிக்கு பிறகு பெரும்பாலான ஆண் ஊழியர்கள் மீது சிகெரெட் புகை கலந்த வெங்காயம் நாற்றமெடுக்கும். சில பெண் ஊழியர்கள் மீதும் இதே நாற்றமெடுக்கும்.

சுரேஷின் எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் என் மொபைல்போனில் வழிந்தோடியது. சுரேஷ்- பேஸ்ட்,ஷாம்பூ,படுக்கை,பைக் சிலசமயம் ஜட்டியும்,சாக்சும் பகிர்த்து கொள்ளும் அறை நண்பன்,கல்லூரி தோழன். திருச்சியில் கல்வி முடித்துவிட்டு சென்னையில் ஒன்றாகவே காலூன்றினோம். என்னுடைய ஒரே பொழுதுபோக்கு சுரேஷ். வாரக்கடைசியில் அவன் போதையில் உளறும் பொன்மொழிகள் சிறப்பாக இருக்கும்..

“மச்சி..பொண்ணுங்களுக்கு அழகான பசங்களை விட, அவங்களை “அழகு,அழகு” ன்னு சொல்லற பசங்களை தான் ரொம்ப பிடிக்குது”- சுரேஷின் சென்றவார உளறல்கள்..

ஏழுமாத கருவாக வெளியேறிய நாள்முதல் சுரேஷின் வாழ்க்கை வேகமானது. எங்கள் நட்பு வட்டத்தில் படிப்பதில்,பீடி பிடிப்பதில்,பீர் அடிப்பதில்,பெண்ணிடம் காதலை சொல்லி செருப்படி வாங்குவதில்,அனைத்திலும் முன்னோடியாக இருந்தான். சுரேஷ்க்கு இருசக்கரவாகனத்தில் வெகுதூரம் பயணம் செய்வது அலாதியான விஷயம்.அவனிடம் ராயல் என்பீல்ட் “லைட்னிங்-535CC”-1990 மாடல்-பெட்ரோல் வண்டி இருந்தது. இன்றுகூட ஒக்கேனக்கல் இருசக்கரவாகனத்தில் பயணிக்கிறான். ப்ராஜெக்ட்டுக்கு வேலையில் மூழ்கிப்போனதால் அவனுடன் ஒரு வாரமாகவே பேசவில்லை.

டெஸ்ட் என்ஜினீயர்-ரேணுகா டெஸ்ட் ரிப்போர்ட்டை கையில் திணித்தாள்.

“என்ன எல்லாம் ஓகே வா?”என பதற்றத்துடன் ரிபோர்ட்டை பிரித்தேன்.
“இல்லை, இருபது ஹை-லெவல் பக் (High level-Bug)” என்றாள் ரேணுகா

எனக்கு தூக்கிவாரிப் போட்டது.என்னுடைய இருபத்திரண்டு நாட்கள் உழைப்பு வீணாகிவிட்டன..
“என்னைக்கு டார்கெட்”-- ரேணுகா

“இன்னும் எட்டு நாள்க்குள்ள கஸ்டமர்க்கு டெலிவரி பண்ணனும் ” என்றேன்.

“ரொம்ப் கஷ்டம்..”-கீழ் உதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டே பெருமூச்சு விட்டாள். அவள் பற்களிடையே ஒளிந்திருந்த கொத்தமல்லித்தழை எரிச்சலூட்டியது...

மெல்ல ரிப்போர்ட்டை படிக்க தொடங்கினேன்...என் மென்பொருளில் இருக்கும் பிழைகளை திருத்துவதற்கு எட்டு நாள் பத்தாது...இனி கழிவறைக்கும், கணினியை தூக்கிக்கொண்டு அலையவேண்டும்.. பிழைகளை திருத்துவது என்பது,புதிதாக உருவாகுவதை விட கடினம். யு.ஸ் கனவு மூழ்கி கொண்டிருந்து.நான் அப்பாவிடம் வேறு சொல்லிவிட்டேன்.அவர் மனதுக்குள் பெரிய கனவு கோட்டையை கட்டி வைத்திருப்பார். .கணிணியை கருங்கல்லால் உடைக்க துடித்தேன்.. சூரிய வெளிச்சத்தை அறைக்குள் விடாத கறுப்புக் கண்ணாடியை உடைக்க துடித்தேன்..

இதனிடையே அலைபேசி அலறியது..புதிய எண்ணாக இருந்தது..

“ஹலோ” என்றேன்

“தம்பி..நாங்க பூந்தமல்லி போலீஸ் ஸ்டேஷன்லிருந்து பேசுறோம்..TDR 4957 வண்டி வச்சிருக்குற ஆளை தெரியுமா?”
“தெரியும் சார்..சுரேஷ்..என் ஃபிரேண்ட்..என்ன ஆச்சு??”

“அவருக்கு பூந்தமல்லி சிக்னல் கிட்ட ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு..ஸ்போட் அவுட்..அவர் மொபைல்ல உங்க நம்பரை லாஸ்ட் டயல் லிஸ்டில் பார்த்தோம... நீங்க ஜி.ஹச் கொஞ்சம் வரமுடியுமா”

“எ..எ..என்ன சார்..சொ..சொல்றிங்க” என்று கத்தினேன்..

“ஆமாம்பா..அந்த தம்பிக்கு சொந்தகாரங்க யாரும் இருக்காங்களா??”
“........................”
“தம்பி”
“........................”
“ஹலோ தம்பி”..என கத்தினார் போலீஸ்காரர்

“இருக்காங்க...சுரேஷ் அண்ணன்..மத்தவங்க எல்லாம் திருச்சியில இருகாங்க” மூச்சடைத்தது..

“அவர் நம்பரை சொல்ல முடியமா?”

எண்ணை பகிர்ந்துப் பிறகு இணைப்பை துண்டித்தேன்...கைகால் நடுங்கியது..உடலில் வியர்வை வழிந்தோடியது..அதில் குருதியின் மனம் வீசியது..இதயம் படபடத்தது..மூளையிடம் நரம்புகளை பிடுங்கித் தன் வசமாகியது இதயம்..கணிணியை “சட் டவுன்” செயாமல் அலுவலகத்திலிருந்து வெளியேறி ஆட்டோ பிடித்து ஜி.ஹச் சென்றேன்.அங்கு சுரேஷ் அண்ணனும் அவர் நண்பர்களும் குழுமியிருந்தனர். சுரேஷ் அளவுக்கு சுரேஷ் அண்ணன் பழக்கமில்லை..சேர்ந்து அழ தர்மசங்கடமாகவும் ஆறுதல் சொல்ல அனுபவமின்மையாலும் கூட்டத்திலிருந்து ஒதுங்கினேன். கண்ணீர்த்துளிகளை புவியீர்ப்பு விசை பூமி நோக்கி இழுத்துக் கொண்டிருந்தன..

“போஸ்ட் மார்டன் முடிச்சிருச்சு,பாடியை எடுத்துக்கோங்க” என போலீசார் சுரேஷ் அண்ணனிடம் சாணித்தாளில் ஆன கோப்புகளில் கையெழுத்து வாங்கிக்கொண்டார்..நேற்று சுரேஷ்..இன்று பாடி..மெல்ல நிதர்சன உலகுக்குத் திரும்பினேன்..சுரேஷின் மரணம் இதயத்தில் சீல் படிந்த காயங்கள்..சில காயங்கள் மருந்துப் போட்டால் ஆறிவிடும்.. சில காயங்கள் மறந்துபோனலும் ஆறாது..

மேனேஜர் தொலைப்பேசியில் அழைத்தார்..

“வசந்த், நீங்க கே.பி.டி பேங்க் ப்ராஜெக்ட்டு ரிப்போர்ட் பார்த்தீங்களா, இருபது ஹை-லெவல் பக்”- நான் “ஹலோ” சொல்வதற்க்கு முன் ஆரோசையில் கூவினார் மேனேஜர்..

“சார்..எமர்ஜென்சி.என் ஃபிரேண்ட் ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு..ஸ்போட் அவுட்”

“ஓ..சாரி” என உச்ச கொட்டினார்.அவருடைய ஆறுதல் எரிச்சலூட்டியது. “சார்..எனக்கு மூணு நாள் லீவ் வேணும்”

“..............”

“சார்” என்றேன்

“ஐயாம் திங்கிங்...இது கிரிடிகல் ப்ராஜெக்ட்.ஐயாம் ஹெல்ப்லெஸ்...சரி நீ நாளைக்கு மட்டும் லீவ் போட்டு திரும்பினு”

“சார் க்ளோஸ் ஃபிரேண்ட்..நான் திருச்சி வரைக்கும் போகணும்”

“என்னய்யா,லாஸ்ட் மினிட்ல சொதப்புற..எட்டு கோடி ப்ராஜெக்ட் யா அது வச்சு தான் என்னோட ப்ரோமோசன்...” அவர் குரல் மேலெழுந்தது..

“சார்..கண்டிப்பா மூணு நாள் லீவ் வேணும்.”நான் விடாப்பிடியாக இருந்தேன்.

“யோவ்..நீ மூணு நாள் லீவ் போட்டா மட்டும் உன் செத்துப் போன ஃபிரேண்ட் திரும்பி வந்திருவான..என்ன?”
நான் பதில் பேசாமல் இணைப்பை துண்டித்தேன்..இனி மேனேஜரிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.மேனேஜர்,சீனியர் மேனேஜர்,குரூப் ஹெட் என அவர் பதவிகள் மாறலாம்.ஆனால் ஒருநாள் அவர் “பாடி” ஆகிவிடுவார் என்பதை உணரவில்லை.
மருத்துவமனையில் ஒருபக்கம் பிணவறையும்,மறுபக்கம் பிரசவ வார்டும் இருந்தன.ஜனனத்தை உமிழ்ந்தும்,மரணத்தை விழுங்கியபடி இருந்தன மருத்துவமனை நுழைவாயில்..எப்போதும் டெட்டால் வாடையில் வாழும் மருத்துவர்களும்,செவிலியர்களும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள்..இவர்களுக்கு “ஆன்சைட்” கிடைக்குமா என்று குழம்பியது என் “சாப்ட்வேர் மூளை”..என் அலுவலகத்தில் என் மேனேஜர் தவிர வேறு எதுவும் அருவருப்பாக தோன்றியதில்லை..மென்பொருளை விட கடினமான வேலைகள் இந்த உலகில் இருக்கின்றன என உணர்தேன்..
நான்,சுரேஷின் அண்ணன்,குளிர்சாதனப் பெட்டியில் சுரேஷ் மூவரும் திருச்சி நோக்கிப் பயணித்தோம்..சுரேஷின் உடலை உற்றுப்பார்த்தேன்..எனக்கும்,அவனுக்கும் அரை அடி தூரம்..ஒரு எல்லையில் வாழ்வும் மறு எல்லையில் சாவுமிடையே அரை அடி தூர இடைவெளி.. கைக்கடிகார நொடிமுள் கரம்பிடித்து என் மறு எல்லைக்கு அழைத்துச் செல்வதுபோல் உணர்ந்தேன்..கொடுமையான பயணம் முடிவுற்றதுஅழுதுபுலம்ப ஊரே கூடியது...ஓரமாக ஒதுங்கி நின்றேன்.என்னருகில் சிரித்துக் குழந்தையிடம் மறு புன்னகையை மறுத்தேன்.

மரண சோகத்தை குழந்தையிடம் பகிர்ந்துவிட்ட குற்ற உணர்வின்றி இருந்தேன். மறுபக்கம் சங்கு ஊதுபவர்களும்,பாடைக்கட்டுபவர்களும் சூழ்ந்தக் கிடந்தார்கள்..சுரேஷின் மரணம் இவர்களின் இன்றைய உணவுக்கு வழிவகுத்தன என்பது ஒரே ஆறுதல்..ஒருவர் சாவில் மற்றவர் வாழ்வும் அடங்கிவிடுகிறது...
சிறுது நேரம் கழித்து சுரேஷின் இறுதி ஊர்வலம்..மனிதர்களின் வாழ்க்கை வேகமாக இருந்தாலும் காடு நோக்கிய பயணம் மெதுவாகத் தான் இருந்தன.. கைக்கடிகார நொடிமுள் இறப்புக்கு வருந்தாமல்,பிறப்புக்கு மகிழாமல் சலனமின்றி அதன் திசையில் சுற்றிக்கொண்டு இருப்பதை உணர்ந்தேன்.எனக்கான நேரம் ஓடிக்கொண்டிருந்தது.வேகமாக தேடிச்சென்று, சிரித்துக் குழந்தையிடம் முகம்பார்த்து புன்னகைத்தேன்...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)  Empty Re: கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by வின்சீலன் Mon Sep 17, 2012 12:18 pm

“ரொம்ப் கஷ்டம்..”-கீழ் உதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டே பெருமூச்சு விட்டாள். அவள் பற்களிடையே ஒளிந்திருந்த கொத்தமல்லித்தழை எரிச்சலூட்டியது...

இதுதான் எங்கள் வாழ்க்கை, அழுகை

[இங்கே விமர்சனங்கள் போடலாமா என்று தெரியவில்லை , போடக்குடாது என்றால் யாராவது என்னோட reply remove செய்துடுங்கள் ] மப்பு ஏறிப்போச்சு


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)  Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)  Empty Re: கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by அசுரன் Mon Sep 17, 2012 1:55 pm

தாராளமாக கதையை விமர்சிக்கலாம் நண்பரே!....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)  Empty Re: கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by ராம்ஜி Mon Sep 17, 2012 4:57 pm

கதை அருமை... என்னை போன்ற மென்பொருளாளர்களின் வாழ்கையை அப்படியே விவரித்துள்ளார் கதாசிரியர்.

கதை எண். 001 எங்கே?

அசுரன் அவர்களே மற்ற கதைகளின் சுட்டியையும் பின்னூட்டத்திலோ அல்லது கதைக்கு கீழேயோ இணைக்கலாமே.?


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)  Empty Re: கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by Guest Tue Oct 16, 2012 7:50 pm

மென் பொருள் பொறியாளர் வாழ்க்கையை அப்படியே கண் முன் காண்பித்து விட்டீர்கள் ..
கருமாரியே ஆனாலும் விடுமுறை தர மறுக்கும் அந்த பாஸ் அப்படியே உண்மையிலும் உண்மை.. என்ன வாழ்கை டா என வெறுக்கும் மனதை வார்த்தைகளால் சொன்னது அருமை ..

நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)  Empty Re: கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum