ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

நிகழ்நிலை நிர்வாகிகள்

லைஃபை பாதிக்கும் வை-ஃபை....

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... - Page 2 Empty லைஃபை பாதிக்கும் வை-ஃபை....

Post by Aathira Thu 13 Sep 2012 - 1:16

First topic message reminder :

லைஃபை பாதிக்கும் வை-ஃபை....

லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... - Page 2 Wifi-hand_~k6662066
லேப்டாப் எனப்படும் மடிக்கணினிக்கு உள்ள மோகம் சொல்லி முடிவதில்லை. கங்காரு தன் குட்டியை வயிற்றில் கட்டிக்கொண்டு அலைவதைப் போல, குரங்கு தன் குட்டியை முதுகில் கட்டிக்கொண்டு அலைவதைப் போல இளைஞர்களும் எப்போதும் மடிக்கணினியைத் தம் தோளில் கட்டிக்கொண்டு அலைகின்றனர். என்ன சொல்ல. காரில், ஃபிளைட்டில், ரயிலில், பஸ்ஸில், பேருந்து நிலையத்தில் என்று உட்கார இடம் கிடைத்தால் போதும், எங்கு போனாலும் ஏறி ஐந்து நிமிடங்களில் திறந்து விடுகின்றனர் இந்த மடிக்கணினிப் பெட்டியை.

‘கன்னியவளை
என்மனதில் மட்டும்
வைத்து சுமக்கின்றேன்
மடிக்கணினியவளை
காதலியின் நினைவோடு
என் மடிமீதும்
சுமக்கிறேன்
எப்போதும்” (- தஞ்சை வாசன்)

என்று சொல்லி மடியில் சீராட்டிப் பாராட்டிச் சுமக்கும் அளவிற்குக் காதலி பெற்றிருந்த இடத்தைவிடவும் கணினி முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது இளைஞர்களிடம். இந்தக் கவிதையை எழுதியவரும் ஐ.டி. பிரிவில் பணிபுரியும் தஞ்சையைச் சேர்ந்த இளைஞரே.
மடிக்கணினி இல்லை.. இளைஞர்களுக்கு அது இடிக்கணினி.... மடிக்கணினி ஆண்களின் உடலில் விந்தணுக்களை மடிய வைக்கும் காலன் என்பதை இளைஞர்கள் அறிவதில்லை. அப்படி ஒரு வேகம் அதை பயன் படுத்துவதில். இவர்கள் என்னவோ மடிக்கணினியைக் குழந்தை போல பாவித்து மடியில் வைத்து சீராட்டுகின்றனர். அது இவர்கள் குழந்தையைச் சீராட்டும் வாய்ப்பை இழக்கச் செய்து விடுகிறது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது. எங்கும், எப்போதும் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்பதால் லேப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது

சாதராணமாகவே மடிக்கணினி பயன் படுத்துவோர்க்கு ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது என்று முன்னமே சொல்ல ஆரம்பித்து விட்டனர். இப்போது கேட்கவே வேண்டாம். வை ஃபை (Wi-Fi) வேறு வந்து விட்டது. இந்த வையர்லெஸ் வகையான Wi-Fi என்பது WLAN (wireless local area network) என்னும் சொல்லின் மாற்றுச் சொல். இந்த வயர்லெஸ் நெட்வொர்க் மின்காந்த அலைகள் மூலம் செயல்படுகிறது. இதன் மூலம் வலைத்தளங்களை விரைவாகப் பயன்படுத்த முடிகிறது. இதன் மூலம் வீட்டின் எங்கு வேண்டுமானாலும் இருந்து வலைத் தளங்களைப் பயன் படுத்த முடியும். அதாவது 20 மீட்டர்கள் அல்லது 65 அடிகள் வரை இதன் செயல்பாடு இருக்கும்.

லேப்டாப்களில் வை-ஃபை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முக்கியமாக லேப்டாப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்பட்டதும் கண்டறியப் பட்டுள்ளது..
மடிக்கணினி என்ற பெயருக்கு ஏற்ப இதனை ஏராளமானோர் மடியில் வைத்தே உபயோகிக்கின்றனர். இவ்வாறு மடிக்கணினியை மடியில் வைத்து உபயோகிப்பது ஆண்களுக்கு எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மடிக்கணினிகளை உபயோகிக்கும் போது வை-ஃபை இணைய தளத்தையும் வைத்து உபயோகிக்கின்றனர். இதனால் எழும் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படும் என்றும் தெரியவந்தது.
மின்காந்த கதிர்வீச்சு

இது குறித்து 29 ஆண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர். அப்போது வை-பை இல்லாமல் மடிக்கணினியை உபயோகித்த ஆண்களைப் பரிசோதனை செய்தபோது அவர்களின் விந்தணுக்களுக்குப் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்தது. அதேசமயம் லேப் டாப்பில் வை-ஃபையை இணைத்து உபயோகித்தவர்களின் விந்தணு பாதிப்பிற்குள்ளானது ஆய்வில் தெரியவந்தது.

இதற்குக் காரணம் வை-ஃபையில் இருந்து எழும் மின்காந்த கதிர்வீச்சுதான் என்று தெரியவந்தது. இந்த கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியம் குறைவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்

இந்த இலட்சணத்தில் . இப்போது மடிக்கணினியுடன் இணைக்கப்பட்ட புதிய தொழில் நுட்பத்தில் அமைந்த ஜீன்ஸை (Jeans) நெதர்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகப் படுத்தி உள்ளனர். இதுதான் மடிக்கணினி என்பதன் உண்மையான அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது என்று வாக்கு மூலம் வேறு கொடுத்துள்ளனர்.

லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... - Page 2 Article-2104468-11BB54C5000005DC-922_634x465

இதுதான் உண்மையாக எமனை மடியில் கட்டிக் கொண்டதற்குச் சரியான பொருள் கொடுக்கக் கூடியதாக உள்ளது என்று கூறாது விட்டுவிட்டனர். .

எரிக் டீ நிஜ்ஸ் மற்றும் டிம் ஸ்மித் ஆகியோரால் நடத்தப்படும் ஆடை வடிவமைப்பு நிறுவனமான நியூவே ஹெரன் என்ற நிறுவனம் இந்த மடிக்கணினி ஜீன்ஸை வடிவமைத்துள்ளது. கீ போர்ட், மௌஸ், ஸ்பீக்கர்கள் எல்லாம் எளிமையாகப் பயன்படுத்தும் நிலையில் ஜீன்ஸின் தொடைப் பகுதியில் இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளன

லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... - Page 2 Article-2104468-11BB5AA8000005DC-42_634x627

நெகிழ்வுத் தன்மையான கீபோர்ட் சிறிய ஒலிபெருக்கிகள், மற்றும் சிறிய மவுஸ் என்பனவற்றின் காரணமாக இந்த ஜீன்ஸ் வழக்கமான காற்சட்டைகளைவிட அதிக பாரமாக இருக்காது என்றும் டீ நிஜ்ஸ் தெரிவித்துள்ளார். நவீன வடிவத்தில் இந்த ஜீன்ஸ் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனது பின்புற பாக்கெட் மவுஸை மறைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மௌஸை ஆடையுடன் இணைப்பதற்காக எலாஸ்டிக் பொருத்தப் பட்டுள்ளது. அது வயர்லெஸ்ஸின் தொழில் நுட்பத்தில் மடிக்கணினியுடன் இணைக்கப் பட்டுள்ளது. முற்றிலும் மின் காந்த அலைகளால் இயங்கும் இது இது சந்தைக்கு வந்தால்……!!!! அப்பாடா……. நல்ல வேளையாக வரவில்லை. வந்தால் ரூ. 50,000 விலை ஆகுமாம். அதனைச் செய்வதற்கான பண வசதி அந்த நிறுவணத்திற்குத் தற்போது இல்லையாம். அது இல்லாமலே போகக் கடவது.

கேளுங்க..கேளுங்க இளைஞர்களே..... மடிக்கணினி என்ன மழலையா உங்கள் மடியில் வைத்துக் கொஞ்ச? நீங்கள் மழலையைக் கொஞ்சும் வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாகக் கெடுக்க வந்த மாயப் பிசாசு அது.

எல்லாவற்றையும் பெயருக்கு ஏற்றாற் போலவே பயன் படுத்த வேண்டும் என்னும் அவசியமில்லை. மடிக்கணினியை மடியில் வைத்துதான் பயன் படுத்த வேண்டும் என்று எந்த அரசும் சட்டமும் இயற்றவில்லை. மடிக்கணினியை டெஸ்கிலும் வைத்துப் பயன் படுத்தலாம். மடிக் கணினிக்காக உங்கள் மடியை இழக்காதீர்கள்.. மடிக் கணினியை மற்ற கணினியாகப் பயன் படுத்துங்கள்.. மேலும் வை-ஃபைப் பயன் படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. மீண்டும் மிண்டும் கூறுகிறேன்….. வை-ஃபை உங்கள் லைஃபைப் பாதிக்கும் மறந்து விடாதீர்கள் இளைஞர்களே.....


லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... - Page 2 Aலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... - Page 2 Aலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... - Page 2 Tலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... - Page 2 Hலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... - Page 2 Iலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... - Page 2 Rலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... - Page 2 Aலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... - Page 2 Empty Re: லைஃபை பாதிக்கும் வை-ஃபை....

Post by Guest Thu 13 Sep 2012 - 18:22

அதிர்ச்சி நன்றி அருமை இளந்தென்றல் அக்கா
avatar
Guest
Guest


Back to top Go down

லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... - Page 2 Empty Re: லைஃபை பாதிக்கும் வை-ஃபை....

Post by யினியவன் Thu 13 Sep 2012 - 18:32

சிவா wrote:உண்ண உணவு, சுவாசிக்கக் காற்று, அருந்த நீர் போன்றவை மனிதனுக்கு எவ்வளவு அவசியமோ, அதே போல் கணினியும் அதனைச் சார்ந்த இதுபோன்ற தொழில்நுட்பங்களும் மனிதனுக்கு அவசியத் தேவையாகிவிட்டது. அதன் பக்க விளைவுகளை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை!
பக்க விளைவால புள்ள பொறக்காதுன்னு சொல்றாகளே பாஸ் - அடுத்த சந்ததியே இருக்காதே தொழில் நுட்பத்தை யூஸ் பண்ண. என்ன பண்றது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... - Page 2 Empty Re: லைஃபை பாதிக்கும் வை-ஃபை....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum