புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரிய மாயை...! Poll_c10ஆரிய மாயை...! Poll_m10ஆரிய மாயை...! Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஆரிய மாயை...! Poll_c10ஆரிய மாயை...! Poll_m10ஆரிய மாயை...! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஆரிய மாயை...! Poll_c10ஆரிய மாயை...! Poll_m10ஆரிய மாயை...! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஆரிய மாயை...! Poll_c10ஆரிய மாயை...! Poll_m10ஆரிய மாயை...! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரிய மாயை...! Poll_c10ஆரிய மாயை...! Poll_m10ஆரிய மாயை...! Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஆரிய மாயை...! Poll_c10ஆரிய மாயை...! Poll_m10ஆரிய மாயை...! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஆரிய மாயை...! Poll_c10ஆரிய மாயை...! Poll_m10ஆரிய மாயை...! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆரிய மாயை...! Poll_c10ஆரிய மாயை...! Poll_m10ஆரிய மாயை...! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆரிய மாயை...! Poll_c10ஆரிய மாயை...! Poll_m10ஆரிய மாயை...! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆரிய மாயை...! Poll_c10ஆரிய மாயை...! Poll_m10ஆரிய மாயை...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆரிய மாயை...! Poll_c10ஆரிய மாயை...! Poll_m10ஆரிய மாயை...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆரிய மாயை...! Poll_c10ஆரிய மாயை...! Poll_m10ஆரிய மாயை...! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆரிய மாயை...! Poll_c10ஆரிய மாயை...! Poll_m10ஆரிய மாயை...! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆரிய மாயை...! Poll_c10ஆரிய மாயை...! Poll_m10ஆரிய மாயை...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரிய மாயை...!


   
   

Page 1 of 2 1, 2  Next

திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Thu Mar 29, 2012 7:56 pm

பேராசிரியர் கே.ஏ.மணிக்குமார் அவர்கள் வடித்த "கங்கை சமவெளி ஆரியர் சமுதாயம்" ஆய்வுக் கட்டுரையில் சில தவறுகள் இருக்கலாம், ஆரிய-திராவிட எதிர்ப்பு முறையில் எழதப்பட்டிருக்கலாம், ஆனால் உண்மையில் ஆரியர்கள் அன்னியர்கள் என்பதனை மறுக்க முடியாது. தமிழர் பண்பாடு ஆரியர் வருகைக்கு முன்பே தனித்துவத்துடன் விளங்கியது, பிற்பாடு வந்த ஆரிய அன்னிய படையெடுப்புகளால் தமிழ்மொழியும், தமிழர் பண்பாடும் பாதிப்புக்குள்ளாகி திரிபடைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு என்பதாக சிதைந்தது இன்றும் தமிழர் பண்டிகைகளின் சிறப்புகள் குறுகி வட இந்திய கலாசாரங்கள் தமிழ் மக்களிடையே பரவி வருவதை கண்கூடாக காண முடிகிறது. எனினும் தமிழ்மொழி தன் தனித்தன்மையினால் இன்றும் சிறப்புற்று விளங்குகிறது.

ஆரிய மாயையில் சிக்குன்றவர்கள் ஆரிய சாத்திர சம்பிரதாயங்களையும், புரான-இதிகாசங்களையும், வர்ணாசிரம முறைகளையும் நேசிப்பவராயின் தமிழர்கள் சூத்திரர்கள்-நாலாந்தர குடிமக்கள், நான்வருண சாதியிலும் வராத தாழ்த்தப்பட்டவர்கள் கீழ்மக்கள் என்ற ஆரிய-பார்ப்பனர்களின் நியதியை ஒப்புக்கொண்டவராவர். பண்டைய தமிழர்களின் பண்பாடும் தமிழ் அரசர்களின் ஆட்சியும் சிறப்புற்று விளங்கியது என்றும், பண்டைய தமிழர்கள் இரண்டு பெரும் பிரிவாக (ஒன்று ஆட்சி புரியும் அரச குலத்தவர்கள் மற்றையவர் குடிமக்கள்-குடிபடைகள்) மட்டுமே இருந்தார்கள் என்பதனை பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிவித்துள்ளனர். பிற்பாடு வந்த ஆரிய படையெடுப்புகளினால் தந்திரத்தாலும், மூடபழக்கவழக்கங்களை திணித்தும், தமிழ் அரசர்களையும் - தமிழ் மக்களையும் ஆட்சி கொள்ள வெள்ளையனின் பிரித்தாலும் கொள்கையை அன்றைக்கே புராணங்கள், இதிகாசங்கள், வருணாசிரம முறைகள் என்றவாறு புகுத்தி வெற்றியும் கண்டுவிட்டனர்.

தென்பகுதி மீதான வட இந்திய படையெடுப்புகளினால் தமிழ்மொழியும், தமிழர் பண்பாடும் பாதிப்புக்குள்ளாகி திரிபடைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு என்பதாக சிதைந்தது, பிற்பாடு வந்த முகலாயர் படையெடுப்புகளினால் தென்பகுதி நோக்கி அதிக அளவில் பரவிய ஆரிய-பார்ப்பனர்கள் அக்பரின் ஆட்சிக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் முகலாய ஆட்சிகளிலும் பின்பு வந்த வெள்ளையர்களின் ஆட்சிகளின் போதும் தங்கள் மதிப்பு குறைந்து விடாது ஆட்சியாளர்களுக்கு ஆமாம் போட்டும் தங்களின் தந்திரங்களாலும் அவர்களை நிலைநிறுத்திக்கொண்டனர்.

பிற்பாடு வந்த உலக அனுபவங்களாலும், மேலை நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சிகளினாலும் ஆரிய-பார்ப்பனர்கள் தங்கள் நிலையை தக்கவைத்துக்கொள்ள விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டதோடு மட்டும்மல்லாமல் போராட்டங்களில் தலைமையேற்கவும் தொடங்கினர். இதனால் உண்மையான பூர்வகுடி விடுதலைப் போராட்ட வீரர்கள் கண்னுக்கு தெரியாமல் போய்விட்டனர். இந்திய விடுதலைக்கு முன்பான போராட்டங்களில் ஆரிய-பார்ப்பனர்களின் நிலையே ஓங்கீயிருந்தது என்பதும் காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்த சுபாசும் அவர்களின் வர்கக உணர்வுகளுக்கு பலியானவர் என்பதும் கண்கூடு. இந்திய துணைகண்டம் முழுக்க பல்வேறு மொழியினை பண்பாட்டினை உடையதாயினும் அனைத்து இடங்களின் ஆட்சி பீடங்களிலும் ஆரிய-பார்ப்பனர்களின் நிலையே ஓங்கி உள்ளமையே இதனை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டும்.

இன்றும் இந்திய அறிவியலாளர்களில் ஆரிய-பார்ப்பனர்களின் ஆதிக்கமே அதிகம் என்பதனையும் 3 விழுக்காடு மட்டுமே உள்ள ஆரிய-பார்ப்பனர்கள் மீதம் 97 விழுக்காடு மக்களை முழுங்கி ஏப்பம் விட்டதையும், புதிய பல இந்திய கண்டுபிடிப்புகளுக்கு சமற்கிருததிலேயே பெயரிடுவதும் ஒரு புதிய பரிணாம வரலாற்று ஆதிக்கமே என்பதனையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆரிய-பார்ப்பன இதிகாசங்கள் என்ற இராமாயணமும், மகாபாரதமும் அன்றைய தென்இந்திய-வடஇந்தியர்களுக்கிடையேயான போரினை மையமாக வைத்து எழுதப்பட்ட கற்பனை கதைதான் என்பதனையும் தமிழர்கள் உணரவேண்டும். இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத்கீதை மகாபாரதத்தில் வரும் ஒரு பகுதிதான் என்பதனையும் அதில் வருணாசிரமங்கள் பற்றியும் அரசு, ஆட்சி, மன்னர், மக்கள் பற்றியும் கிருட்டினன் போதிப்பது போல அவர்களின் நிலைகளை உயர்த்தி கோலோச்சவே எழுதப்பட்டது என்பதனையும் கடவுள், பூசை, யாகங்கள் என்று மக்களை ஏமாற்றி வெற்றி கொண்டனர் என்பதனையும் நினைவில் கொள்ளவேண்டும். இக்காலத்தில் எழுதப்படுகிற கற்பனை கதைகள், நாவல்கள் கூட பிற்காலத்தில் வரலாற்று படிமனையாக வாய்ப்புள்ளது, 23ம் புலிகேசி படத்தில் வரும் "வரலாறு முக்கியம் அமைச்சரே" என்ற வசனம் இங்கு நினைவு கொள்வது பொறுத்தமுடையதாகும்.

எங்கு ஆட்சி நடந்தாலும் அங்கு இவர்கள் தங்கள் மஞ்சள் பையை தூக்கிக்கொண்டு மந்திர-தந்திரங்கள் என்று ஏமாற்றி ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தங்களின் காரியங்களை சாதித்து கொள்கின்றனர். ஆரிய-பார்ப்பனர்களை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுபவர்கள் ஆரிய-பார்ப்பனர்கள் மற்றையவரைவிட புத்திசாலிகள், அறிவு ஜீவிகள் என்று தம்பட்டம் அடிக்கின்றனர். எது வித வேலையும் செய்யாமல் உடல் நோகாது உண்டு கொழுத்தவர்களுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும் மற்றையவரை ஏமாற்ற சிந்திப்பதை விடுத்து. அதுவே அவர்களை புத்திசாலிகள் ஆக்கியது என்றால் உழைப்பாலும் உயர்ந்த அறிவாலும் இன்று உலகமே வியந்து பார்க்கும் தமிழர்கள் தம்மை உணர்ந்தால் வல்லமை பெற்ற ஒரு சிறந்த சமூகமாக உருவாகுவார்கள்.

ஆரிய-பார்ப்பனர்களினால் சமூதாயத்தில் ஏற்பட்ட சமூக ஏற்ற தாழ்வுகளை கண்கூடாக கண்டுணர்ந்த தந்தை பெரியார் அவர்கள் உழைக்கும் மக்களை சுரண்டி கொழுக்கும் ஆரிய-பார்ப்பனர் எதிர்ப்பு, ஆரிய மாயை, கடவுள் எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு என பல பரிணாமங்களில் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் என்பதனை கடந்த கால வரலாறு தெளிவாக காட்டும். தந்தை பெரியார் அவர்களின் ஆரிய-பார்ப்பனர் எதிர்ப்பு என்பதற்கு பிற்பாடு தான் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு பார்ப்பனரல்லாதவர்களும் அரசியல் தலைமை ஏற்று முதலமைச்சர்களாக வர வழி சமைத்ததோடல்லாமல் வட இந்திய அரசியலிலும் பல மாற்றங்கள் ஏற்பட வைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை ஆரிய-பார்ப்பனர் எதிர்ப்புக்கு அப்பால் பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் நமது பண்பாடு கலாச்சாரத்தை பேணி காக்க வேண்டும். இட்லர் ஆரியர் என்று ஆராய்ந்து கண்டு கொண்ட ஆரிய-பார்ப்பனர்கள் இரண்டாவது உலகப்போரில் இட்லர் வெற்றிபெறவேண்டும் என்றும் உருசிய கம்யூனிசம் தோல்வி பெறவேண்டும் என்றும் பத்திரிக்கைகளில் அறிக்கை விட்டதையும் சிலர் வேள்வி கூட நடத்தியதையும் மறந்து விட வேண்டாம். எங்கு அவர்கள் இருப்பினும் தமது ஆரிய-பார்ப்பன உணர்வை காட்டாமல் இருப்பதில்லை. பின்பு நாம் மட்டும் எந்த வகையில் இளைத்தவர்கள்.

ஆரிய-பார்ப்பன மாயையில் இருந்து தமிழர்களை - விடுவிப்போம்...!

தூயதமிழ் தேசியத்தை - வென்றெடுப்போம்...!

தமிழ் பண்பாட்டு கலாச்சாரத்தை - மீட்டெடுப்போம்...!

நன்றி அருண்மொழி .



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Thu Mar 29, 2012 7:57 pm

விபூதி,குங்குமம் வரவைப்பது,வாயிலிறிந்து சிவலிங்கம் எடுப்பது போன்ற கண்கட்டு வித்தைகள் செய்யும் போலி சாமியார்கள் நிறைய பேர் இருக்காங்க. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இவர்களால் வரவைக்க முடியுமா என்று பக்தகோடிகள் கேட்டு பார்க்கலாம்..



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
thenuganan
thenuganan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012

Postthenuganan Thu Mar 29, 2012 9:12 pm

என்ன செய்வது, அறிஞர் அண்ணா,பெரியார் சொல்லியும் கேட்காத தமிழர்
இதை கேட்பார்களா? சியர்ஸ்



வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect: போட்டிக்கு ரெடி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 29, 2012 11:27 pm

'.....' பார்த்து திருந்தாவிட்டால் '.....' ஒழிக்க முடியாது...



ஆரிய மாயை...! 224747944

ஆரிய மாயை...! Rஆரிய மாயை...! Aஆரிய மாயை...! Emptyஆரிய மாயை...! Rஆரிய மாயை...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 11:37 pm

எனக்கென்னவோ அதுமாதிரி அடக்கு முறைகளும், அடிமைப் படுத்தும் எண்ணங்களும் கொண்ட சமூகத்தை தாண்டி நாம் வந்து விட்டோம் என்றே நினைக்கிறேன். அதற்காக முற்றிலும் ஜாதி, சமயம், இன வேறுபாடுகள் முழுவதும் அழிந்து விட்டதாக சொல்லவில்லை.


ரிஷி மூலம் நதி மூலம் பாராது அன்பு நட்பு பாராட்டி அனைவரும் ஒற்றுமையாக இருப்பதுவே இன்றைய தேவை. இது என் கருத்து மட்டுமே. நான் ஆரியனும் இல்லை சூரியனும் இல்லை உங்களில் ஒருவனே -தமிழனே, இந்தியனே என்பதில் பெருமை கொள்கிறேன்.




sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Fri Mar 30, 2012 1:26 am

பிரிவினைகளில் கவனம் செலுத்தாது அனைவரும் மனிதர் என்ற போர்வையில் ஒற்றுமைப் படுவதே சிறப்பானது என்று நான் கருதுகிறேன்.

குண்டலகேசி
குண்டலகேசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2012

Postகுண்டலகேசி Fri Mar 30, 2012 11:44 am

அடங்கொக்கா மக்கா அந்த ஆங்கிலேயர் வந்தான் அவன் விட்டுட்டு போன கலாச்சாரத்தை இந்த ஆப்பிசருங்க கொண்டாடுவாங்க ஆனா எத்தனையோ நூறு வருஷத்துக்கு முன்னாடி வந்தாநான்னே தெரியல இன்னும் ஆவண விதமா அரசியல் பண்ட்ரீங்க

திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Tue Sep 11, 2012 6:03 pm

ராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.


அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன்.

இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

***********
வேதத்தில் யாகங்கள் முக்கியமானவை.


இந்த யாகங்களை பிராமணர்கள் பண்ணி வைக்கவேண்டும். பிராமணர்கள் Manthra labours. அதாவது மந்திரத் தொழிலாளர்கள்.

வேதத்தில் 6 அங்கங்கள் இருக்கின்றன.

வேத சொற்களின் உச்சரிப்பைப்பற்றி சொல்லும் சிக்ஷா என்பது முதல் அங்கம். மொழியியலைப் பற்றி சொல்வது வ்யாகரண அங்கம்.

யாப்பு இலக்கணம்பற்றி கூறுகிறது சந்தஸு அங்கம். சொற்பிறப்பு பற்றி சொல்வது நிருப்தம். ஜோதிஷம் பற்றி சொல்லாது ஜோதிஷ அங்கம்.

வேதத்தில் கூறப்பட்ட யாகங்களை எப்படி எப்படி செய்யவேண்டும் என்று சொல்வது கல்பம் என்னும் அங்கம்.

இப்படியாக யாகங்களை அனல் முன் நின்று மந்த்ரங்களை ஓதி சும்மாவா சொல்லிக் கொடுப்பார்கள்.

அதற்கு Charge வேண்டாமா? Fees வேண்டாமா?
சம்பளம் கொடுக்கவேண்டும் அல்லவா?

இதற்குப் பெயர்தான் தட்சணை. அதாவது யாகங்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளம்தான் தட்சணை!

அசுவமேத யாகம் பற்றி இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதியில் நான் சொல்லியிருந்தேன்.

அதில் மன்னர்களுக்காக அஸ்வமேத யாகம் நடத்திவிட்டு...
அதன் பின்னர் மன்னர் வீட்டுப் பெண்களான ராணிகளையும், ராஜகுமாரிகளையும் தங்களோடு அழைத்துச் சென்று விடுவார்கள்.
ராஜ பெண்களோடு ராஜ சுகம் அனுபவித்து விட்டு திரும்ப
அரண்மனைக்கு அனுப்புவார்கள் யாகம் நடத்துபவர்கள்.

SOURCE: பிராமணர்கள் அனுபவித்த‌ ராஜபெண்கள். யாகங்கள் ஏன்? கூலி எவ்வளவு?
***********

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.
Kausalya with three strokes slew that horse experiencing great glee.
Kausalya with an undisturbed heart passed one night with that horse.
The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

இதன் பொருள் வருமாறு:
தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள்
கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் (தசரதனின் மனைவிகளை) புணர்ந்தார்கள்.

இதன் காரணமாக
தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள்
என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

ஆனால்
வால்மீகி இராமாயணத்தைத்
தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்?

யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை? - - பா.வே. மாணிக்கவேலர் .
SOURCE: விடுதலை



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 11, 2012 6:07 pm

குண்டலகேசி wrote:அடங்கொக்கா மக்கா அந்த ஆங்கிலேயர் வந்தான் அவன் விட்டுட்டு போன கலாச்சாரத்தை இந்த ஆப்பிசருங்க கொண்டாடுவாங்க ஆனா எத்தனையோ நூறு வருஷத்துக்கு முன்னாடி வந்தாநான்னே தெரியல இன்னும் ஆவண விதமா அரசியல் பண்ட்ரீங்க

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆரிய மாயை...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Tue Sep 11, 2012 6:10 pm

கடவுள் சாகுமா?

மாசாணியம்மன் மறுபடி பிறக்கிறதாம்! நள்ளிரவில் வாயில் மனித எலும்பைக் கடித்துக் கொண்டு கூத்தாடிய பக்தர்களை ஆனை மலைப் பகுதியில் காண முடிந்தது.

நள்ளிரவில் வாயில் மனித எலும்பைக் கடித்துக் கொண்டு கூத்தாடிய பக்தர்களை ஆனை மலைப் பகுதியில் காண முடிந்தது.

செத்துப்போன பெண் சாமியை உயிருடன் கொண்டுவரும் முயற்சியாம். அதற்கான விழாவாம்.

கடவுள் சாகுமா?
அம்மன் சாமி மரத்தில் இருந்த மாங்காயைப் பறித்துத் தின்று விட்டதாம். அரசுப் பொருளைத் திருடித் தின்ற குற்றத்திற்காக மாசாணியம்மனைக் கொலைத் தண்டனை அளித்துக் கொன்று விட்டானாம் நன்னன் எனும் மன்னன்.

மாசாணியம்மன் மறு பிறவி எடுத்து உயிருடன் வருமாம். அதற்காகச் சுடுகாட்டருகில் விழாவாம். எட்டு அடி நீளமும் நான்கு அடி அகலமும் கொண்ட மண் உருவம் மாசா ணியம்மனுக்குச் செய்து, பட்டுப் புடவையைப் போர்த்தி மேளம் அடித்துக் கூத்தடிக்கிறார்கள்.

வாயில் மனித எலும்பைக் கவ்விப் பிடித்தபடி, மண் மாசாணியம்மனின் உடலில் மாங்காய் மறைந்திருக்கும் இடத்தைப் பூசாரி தேடுகிறதும், கூடியிருக்கும் பக்தமாக்கள் ஆடிக் கொண்டே அவர்களும் தேடுவதும் விடிய விடிய நடந்துள்ளது.

பெண் பிணம் ஒன்றின் தொடை எலும்பைத் தேடிப் பிடித்துக் கடிக்கிறார்கள். 15 நாள்கள் நடக்கும் விழாவின் முடிவில் மாசாணி மறுபடியும் பிறப்பதாகப் பக்தர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் - ஏன் மறு ஆண்டும் இந்தக் கூத்தை நடத்துகிறார்கள்? மாசாணி மறுபடியும் மரித்து விட்டதா? மாங்காய் திருடியதா? மன்னன் தண்டனை தந்தானா?

மாசாணியம்மன் மறுபடியும் பிறந்துவிட்டது எனக் கூறி 15ஆம் நாள் மண் பதுமையைச் சிதைத்து விடுகிறார்கள். மறு ஆண்டு மீண்டும் ஆக்ஷன் ரிபீட்!

மக்களை மடமையில் ஆழ்த்திக் கொண்டே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்விழா. மதுரை, சேலம், ஈரோடு, தேனி, திண்டுக் கல், தருமபுரி, கோவை மாவட்ட மக்களில் சிலரிடம் தான் இந்த மூட நம்பிக்கை!
தந்தை பெரியார் சொன்னதுபோல், "இவர்கள் காட்டு மிராண்டிகள்" தானே!
SOURCE: viduthalai/20090210/news11



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக