புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி Poll_c10 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி Poll_m10 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி Poll_c10 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி Poll_m10 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2012 11:49 am

 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி First11

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். கல்வீச்சில் போலீசார் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அணுஉலையில் எரிபொருள் நிரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் போராட்டத்தை தீவிரப்படுத்த போராட்ட குழு முடிவு செய்தது.

போராட்டத்தில் மோதல்

இதன்படி கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை நிறுத்த கோரி முற்றுகை போராட்டம் நடத்த முடிவானது. போராட்டத்துக்கு தடை விதித்த மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து கூடங்குளத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய முற்றுகை போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு நேற்று காலை போலீசார் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இந்த மோதலில் 10 போலீசார் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.

பஞ்சாயத்துக்கு தீவைப்பு

போலீசாரின் தடியடியைத் தொடர்ந்து கலைந்து சென்ற கிராம மக்கள் இடிந்தகரை கிராமம் வரை விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த நிலையில் கூடங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அங்கிருந்த டாஸ்மாக் கடையும் அடித்து நொறுக்கப்பட்டது.

 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி CNI110902

இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் மீண்டும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. தொடர்ந்து கூடங்குளம் பகுதியில் பதற்றம் நிலவியது.

பக்கத்து மாவட்டத்துக்கும் பரவிய போராட்டம்

போராட்டக்காரர்களை போலீசார் தாக்கியதை கண்டித்து நெல்லை மாவட்டம் மட்டுமின்றி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களின் மீனவ கிராமங்களில் போராட்டம் பரவியது. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா மணப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 2 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

சோதனை சாவடிக்கு தீவைப்பு

இந்த நிலையில் கூடங்குளம் கடற்கரையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை அறிந்து, மணப்பாடு மீனவர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஆவேசத்துடன் அவர்கள் திரண்டு மெயின்ரோடு பகுதிக்கு வந்தனர். சாலைகளில் மரக்கட்டைகள், பெரிய கற்களை போட்டு அடைத்தனர்.

குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையம் சார்பில் அந்த பகுதியில் ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த சோதனை சாவடிக்கு திடீர் என்று தீ வைக்கப்பட்டது. எனவே போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால், அவர்கள் கலைந்து போக மறுத்து போலீசார் மீதும் கல்வீசினர்.

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மீனவர் ஒருவர் காயம் அடைந்தார். மற்றவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். காயம் அடைந்தவர் உடனடியாக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி CNI110901

இறந்தவர் பெயர் அந்தோணி ஜான் (வயது 47). ஞானபிரகாசம் என்பவருடைய மகன் ஆவார். இவர் மணப்பாடு கிராமத்தில் ராஜா தெருவைச் சேர்ந்த மீனவர் ஆவார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது.

போலீஸ் துப்பாக்கி சூடு காரணமாக மணப்பாடு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

தினத்தந்தி

 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 11, 2012 11:51 am

சூப்பருங்க அனைவரும் இணைந்து போராடுங்க மக்களே , இதிலாவது தமிழன் ஒற்றுமையா இருக்கானே சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 11, 2012 11:51 am

புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம்  கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2012 11:53 am

அணு உலை எதிர்ப்பாளர்களின் மாய வலையில் விழ வேண்டாம்: மீனவர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி CNI110903
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதால், அணு உலை எதிர்ப்பு என்ற பொதுவான கொள்கையுடைய எதிர்ப்பாளர்களின் மாய வலையில் விழ வேண்டாம் என்று மீனவர்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டு கொண்டுள்ளார்.

தூத்துக்குடி அருகே நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.

அணுஉலை எதிர்ப்பாளர்கள் போராட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அணு உலை எதிர்ப்பாளர்கள் நேற்று அந்தப்பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். போராட்டக்காரர்களை அணுமின் நிலையம் நோக்கி முன்னேறவிடாமல் போலீசார் தடுத்தனர். ஆனால், அணு மின்நிலையத்தை நோக்கி அவர்கள் தொடர்ந்து முன்னேறினார்கள். அங்கு நிலைமை மோசமானதால் வேறு வழியின்றி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இதை கண்டித்து அந்த பகுதியில் வேறு சில இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

ஜெயலலிதா அவசர ஆலோசனை

இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் சென்னை கோட்டையில் நேற்று அவசர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை முதன்மைச்செயலாளர் ராஜகோபால், போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், கூடங்குளம் பகுதி நிலவரம் குறித்தும், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமருக்கு கடிதம்

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின்திறன் கொண்ட இரு அணுமின் அலகுகள் அமைப்பதற்கான பெரும்பாலான பணிகள் முடிவுற்றிருந்த சூழ்நிலையில், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்கள் எழுப்பிய சில ஐயப்பாடுகளையடுத்து, அப்பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை தொடர வேண்டாம் என்றும், இதுதொடர்பான கோரிக்கை மனுவினை நேரில் அளிக்க நேரம் ஒதுக்கீடு செய்து தருமாறும் 19.9.2011 அன்று பிரதமரை கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டேன்.

சட்டசபையில் தீர்மானம்

இதனைத்தொடர்ந்து, அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்திருந்தவர்கள் 21.9.2011 அன்று என்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்து, கூடங்குளம் மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலைய பணிகள் மேற்கொண்டு தொடரப்படக்கூடாது என்னும் தீர்மானத்தை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்தனர். இவர்களின் வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டு, 22.9.2011 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

இதனையடுத்து, தமிழக நிதி அமைச்சர் தலைமையிலான குழு 7.10.2011 அன்று பிரதமரை நேரில் சந்தித்து, உள்ளூர் நிலவரங்களை எடுத்துரைக்கும் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தது. இந்த மனுவினை பெற்றுக்கொண்ட பிரதமர், மத்திய அரசின் பிரதிநிதிகள், மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழு உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். இதன்படி, மத்திய அரசால் 15 பேர் கொண்ட ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக்குழு அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் சார்பாக நியமிக்கப்பட்ட மூன்று பேருடனும், மாநில அரசுப் பிரதிநிதிகளுடனும் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து, 31.1.2012 அன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அணு மின்நிலையம் பாதுகாப்பானதுதான்...

இந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவின் சார்பில் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினரால் எழுப்பப்பட்ட பல்வேறு வினாக்களுக்கு பதில் அளித்ததோடு மட்டுமல்லாமல், அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான் என்றும், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்து இரு அறிக்கைகளை மத்திய அரசின் வல்லுநர் குழு அளித்தது.

வளர்ச்சிப்பணிக்கு ரூ.500 கோடி

இதனைத்தொடர்ந்து, அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி மக்களிடையே நிலவும் அச்ச உணர்வுகள் குறித்தும் மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் வண்ணம், மாநில அரசு சார்பில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும், அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான் என்று தனது அறிக்கையில் தெளிவுபட கூறியுள்ளதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் சமூக பொருளாதார திட்டங்களை இப்பகுதியில் செயல்படுத்திடலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இதன் அடிப்படையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் வகையிலும், 19.3.2012 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அணுமின் நிலைய பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.

தடுப்பது பொருத்தமானதில்லை

இதன்பின்னர், அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அணுமின் நிலைய பணிகளை தொடர அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினையடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இயக்கத்தை தடுத்து நிறுத்த முற்படுவது பொருத்தமானதாக அமையாது.

முற்றுகைப் போராட்டம்

இந்த சூழ்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கப்பட உள்ளதை கருத்தில் கொண்டு, இடிந்தகரை பகுதியை சேர்ந்தவர்கள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர்.

இதனையறிந்த காவல் துறை, அணுமின் நிலையத்திற்கு செல்லும் வழிகளான தாமஸ் மண்டபம் மற்றும் வைராவிக்கிணறு ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஆனால், போராட்டக்காரர்கள் இந்த இரு வழிகளையும் தவிர்த்து கடற்கரை வழியாக, அணுமின் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் முற்றுகை போராட்டத்தில் நேற்று முன்தினம் அன்று ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை அணுமின் நிலையம் நோக்கி முன்னேற விடாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

போலீசார் மீது தாக்குதல்

இதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதும், மீண்டும் கூடுவதுமாக இருந்தனர். இந்த நிலை நேற்று இரவு முழுவதும் தொடர்ந்தது. இன்று காலை இன்னும் அதிக எண்ணிக்கையில் போராட்டக்காரர்கள் கூடினர்.

அவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி மேலும் முன்னேற முயற்சித்ததோடு, இன்று காலை 11.30 மணியளவில் காவல் துறையினரை கட்டைகளை கொண்டு தாக்க தொடங்கினர். இந்த தாக்குதலில் சில காவல் துறையினர் காயமடைந்தனர். எனவே, தங்களை காக்கும் பொருட்டும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை பாதுகாக்கும் நோக்குடனும், அணுமின் நிலையத்தை போராட்டக்காரர்கள் தாக்கினால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தினை கருத்தில் கொண்டும், வேறு வழியின்றி காவல் துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் இல்லை

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதால், அணு உலை எதிர்ப்பு என்ற பொதுவான கொள்கையுடைய எதிர்ப்பாளர்களின் மாய வலையில் விழ வேண்டாம் என்று அப்பகுதி மீனவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அணு உலைக்கு எதிர்ப்பு என்ற பொதுவான கொள்கையுடைய அணு உலை எதிர்ப்பாளர்கள், மிகவும் பாதுகாப்புடன் விளங்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், அணுமின் நிலையம் விரைவில் இயங்க தேவையான ஒத்துழைப்பினை நல்க அவர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

இந்த பிரச்சினை தொடர்பாக இன்று தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு தற்காலிக சோதனைச்சாவடிக்கு ஒரு கும்பல் தீவைத்து அங்கு வந்த காவலர்களை தாக்கியது. இதில் தற்காப்புக்காக காவலர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தப் பிரச்சனை தொடர்பாக, யாரும் எவ்வித வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 11, 2012 11:57 am

இந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவின் சார்பில் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினரால் எழுப்பப்பட்ட பல்வேறு வினாக்களுக்கு பதில் அளித்ததோடு மட்டுமல்லாமல், அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான் என்றும், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்து இரு அறிக்கைகளை மத்திய அரசின் வல்லுநர் குழு அளித்தது.

சூப்பர் சூப்பர் , ஒரே ஒரு ஆளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துருக்கிங்க , அவர் என்ன மாதிரியான கேள்வி மத்திய அரசின் நிபுணர் குழுவிடம் கேட்டிருப்பார்னு நீங்க சொல்லாமலே எங்களுக்கு புரியுது நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2012 11:57 am

அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயற்சி போராட்டக்காரர்கள் - போலீஸ் கடும் மோதல்: கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகை வீச்சு

கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி, கண்ணீர் புகை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

அணுமின் நிலையம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில், ரஷிய நாட்டு ஒத்துழைப்புடன் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த அணுமின் நிலையத்துக்கு எதிராக கூடங்குளம் அருகே உள்ள கடற்கரை கிராம மக்கள் ஒரு ஆண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

2-வது நாளாக முற்றுகை

அணுமின் நிலையத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. அணு உலைகளில் யுரேனியம் எரிபொருள் நிரப்பவும் அனுமதி வழங்கியது. இதனால் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்தது. நேற்று முன்தினம் இடிந்தகரை கடற்கரை வழியாக மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திரண்டுச் சென்று, அணுமின் நிலையத்தை நெருங்கி முற்றுகையிட்டனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த போராட்டம் விடிய, விடிய நடைபெற்றது. இரவு நேரத்தில் கடற்கரையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். நேற்று காலையில் 2-வது நாளாக இந்த முற்றுகை தொடர்ந்தது.

பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பைகள், துணிமணிகள், தண்ணீர் கேன்களுடன் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு முற்றுகை போராட்டத்துக்கு வந்த வண்ணமாக இருந்தனர்.

கடற்கரைக்கு பாதை

கடற்கரையில் போராட்டம் நடந்த பகுதிக்கு போலீசார் எளிதாக வந்து சேரும் அளவுக்கு பாதை வசதி இல்லை. இதனால் நேற்று காலையில் அந்த கடற்கரை பகுதிக்கு விரைவாக சென்றடையும் வகையில், தற்காலிக பாதை அமைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் உதவியுடன் தற்காலிக பாதை சற்று நேரத்தில் அமைக்கப்பட்டது. அதன் வழியாக காலை 10 மணி அளவில் வாகனங்களில் போலீஸ் படையினர் வந்தனர்.

சுமார் 2 ஆயிரம் போலீசார் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அந்த நேரத்தில் கடற்கரையில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை திரண்டு முற்றுகை செய்தனர். நேற்று முன்தினம் அணுமின் நிலைய காம்பவுண்டு சுவற்றில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் அமர்ந்து இருந்து போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். நேற்று இன்னும் சுமார் 100 மீட்டர் தூரம் முன்னேறி வந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.

மக்கள் மேலும் முன்னேறி வந்து விட வேண்டாம் என்றும், அந்த இடத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தும்படியும் போலீசார் எச்சரித்தனர். இதனால் தங்கள் பாதுகாப்புக்காக மீன் வலைகளை தடுப்புச் சுவர் போன்று அமைத்து, போராட்டக்காரர்கள் அதன் நடுவே அமர்ந்தனர்.

பதற்றம்-பரபரப்பு

பகல் 10.45 மணி அளவில் திடீர் என்று இடிந்தகரையைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அணுமின் நிலைய காம்பவுண்டு சுவரை நோக்கி ஓடினர். போலீசார் அவர்களை தடுத்து, திரும்பி செல்லும்படி எச்சரித்தனர். ஆனால், அவர்கள் போக மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். லேசான தடியடி நடத்தியதால், அதன் பின்னர் அந்த இளைஞர்கள் திரும்பி வந்து மக்களுடன் இணைந்துவிட்டனர்.

சற்று நேரத்தில் இடிந்தகரையைச் சேர்ந்த டென்னிசன் என்பவர் உள்பட 2 பேர் ஒரு படகில் கடல் மார்க்கமாக அணுமின் நிலைய எல்லைக்குள் செல்ல முற்பட்டனர். அவர்கள் கரைக்கு திரும்பிய போது, போலீசார் அவர்களை மடக்கி பிடித்து, தனி இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 2 பேரை போலீசார் பிடித்துச் சென்றதை அறிந்து போராட்டம் நடத்திய மக்கள் ஆத்திரம் அடைந்து கோஷமிட்டனர். இதனால் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.

கலெக்டர் வருகை

பகல் 11 மணி அளவில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், டி.ஐ.ஜி. வரதராஜு ஆகியோர் தலைமையில் மத்திய அதிரடிப்படையினர், தமிழக சிறப்பு போலீஸ் படையினர், கவசம் மற்றும் இரும்பு தொப்பிகள் அணிந்த போலீசார் என மேலும் 2 ஆயிரம் போலீசார் வந்தனர். சற்று நேரத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் இரா.செல்வராஜ், சேரன்மாதேவி சப்-கலெக்டர் ரோகினி ராம்தாஸ் மற்றும் அதிகாரிகளும் அங்கு வந்தனர்.

கலெக்டர் இரா.செல்வராஜ் மைக் மூலம் போராட்டக்காரர்களிடம் பேசினார். அவர் பேசும்போது, "144 தடை உத்தரவு அமலில் உள்ள பகுதிக்குள் கூடி போராட்டம் நடத்துவது தவறு. எனவே இங்கிருந்து அனைவரும் அமைதியாக திரும்பிச் செல்லுங்கள்'' என்றார்.

10 நிமிடம் கெடு

இதைக் கேட்டதும் போராட்டக்காரர்கள் ஆவேசம் அடைந்து, கலெக்டருடன் வாக்குவாதம் செய்தனர். `யாரும் ஆவேசப்பட வேண்டாம்' என்று மக்களை கலெக்டர் சமாதானப்படுத்தினார். அதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இறுதியாக அவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார். "10 நிமிடங்கள் கால அவகாசம் தருகிறோம். அதற்குள் கடற்கரையில் இருந்து அனைவரும் கலைந்து உங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்று விடுங்கள்'' என்றார்.

அதன் பின்னரும் யாரும் அங்கிருந்து கலைந்து போகவில்லை. பரபரப்பாக அந்த 10 நிமிடங்கள் நகர்ந்தன. அடுத்து என்ன நடக்கப்போகிறதோ? என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் பரவியது.

யாரும் எழுந்து செல்லாததால் கலெக்டரும், போலீஸ் ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகளும் அங்கிருந்து வேறு இடத்துக்கு சென்று விட்டனர்.

போலீசார் மீது தாக்குதல்

இந்த நிலையில் கும்பலாக உருட்டுக் கட்டைகளுடன் சுமார் 100 பேர் ஓடி வந்தனர். அவர்கள் போலீசாரை சரமாரியாக தாக்கினர். அந்த இளைஞர்களை அமைதியாக இருக்கும்படி போராட்டக்குழு நிர்வாகிகள் எச்சரித்தனர். போலீஸ் உயர் அதிகாரிகளும் அந்த வாலிபர்களை அமைதியாக இருக்க கேட்டுக்கொண்டனர். இதை கேட்காமல் அவர்கள் மத்திய அதிரடிப்படை போலீசாரை சுற்றி வளைத்து தாக்கினர்.

இதை தடுக்க முற்பட்ட போலீஸ் ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜு ஆகியோரும் தாக்கப்பட்டனர். அவர்களின் பாதுகாப்புக்காக ஓடி வந்த சப்-இன்ஸபெக்டர் ஆறுமுகம், போலீஸ்காரர் கதிரவன் ஆகியோருக்கு தலையில் பலமாக அடி விழுந்தது. இதில் கதிரவனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. எனவே கூட்டத்தை கலைக்க போலீசாருக்கு ஐ.ஜி. ராஜேஸ் தாஸ் உத்தரவிட்டார்.

தடியடி-கண்ணீர் புகை வீச்சு

உடனே போலீசார் வானத்தை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை சுட்டனர். தடியடி பிரயோகம் நடத்தினர். பதிலுக்கு கற்கள், செருப்பு, கட்டைகள் ஆகியவற்றை போலீசார் மீது வீசியும், கடல் மணலை தூற்றியும் போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

கடற்கரையில் நாலாபுறமும் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தப்பி ஓடியதுடன், கடலுக்குள் பாய்ந்தனர். அவர்கள் கரைக்கு வராமல் கடலில் நீந்தியபடி போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர்.

`முடிந்தால் கடலுக்குள் வந்து எங்களை பிடித்துப் பாருங்கள்' என்று சவால் விட்டனர். சற்று நேரத்தில் கடற்கரையில் இருந்து படகுகள் புறப்பட்டன. கடலுக்குள் நீந்திக்கொண்டிருந்தவர்கள் அந்த படகுகளில் ஏறி எங்கோ தப்பிச் சென்றனர். இதற்கிடையே கடலுக்குள் பாய்ந்தவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்த வேண்டாம் என்று போலீசாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

20 பேர் காயம்

கரையில் நின்றவர்கள் இடிந்தகரை ஊர் வரை விரட்டப்பட்டனர். போலீசார் தடியடி நடத்திய போது போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், மைபா ஜேசுராஜ் ஆகியோர் கூட்டத்தோடு, கூட்டமாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சுமார் அரை மணி நேரம் இடிந்தகரை கடற்கரை போர்க்களமாவே காணப்பட்டது. போலீசாரும், போராட்டக்காரர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் கலவர பூமியாக மாறியது.

இந்த மோதலில் போலீஸ் தரப்பில் 5 பேரும், பொதுமக்கள் தரப்பில் 15 பேரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மற்றும் இடிந்தகரை ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர்.

வாகனங்கள் நொறுக்கப்பட்டன

போராட்டத்துக்காக கடற்கரையில் அமைக்கப்பட்ட பந்தலை போலீசார் பிரித்து வீசினர். கடற்கரை முழுவதும் செருப்புகள், பைகள், துணிகள், தண்ணீர் பாட்டில்கள், பாத்திரங்கள், கற்கள் ஆகியவை சிதறிக்கிடந்தன. கடற்கரையில் நின்ற போலீஸ் வாகனங்கள் மீது சிலர் கல் வீசினர். கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்த சுமார் 15 மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களை சேதப்படுத்தியவர்கள் யார்? என்பது தெரியவில்லை.

போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் நடந்த முற்றுகை போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

போலீசார் விரட்டியதால் போராட்டக்காரர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர். போராட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் இடிந்தகரை தேவாலயத்தில் கூடி அங்கு மீண்டும் போராட்டத்தை தொடங்கப்போவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

தேடுதல் வேட்டை

உடனே நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி தலைமையில் போலீஸ் படையினர் இடிந்தகரைக்குள் நுழைந்தனர். அந்த கிராமத்தை சுற்றி வளைத்து வீடு, வீடாக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இடிந்தகரை ஆலய வளாகத்திலும், அருகே உள்ள போராட்ட பந்தலிலும் தேடிப்பார்த்தனர். அங்கு ஆட்கள் யாரும் இல்லை.

போலீசார் அங்கேயே முகாமிட்டு மக்கள் அதிக அளவில் ஆலய வளாகத்தில் கூடாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இடிந்தகரை கிராமம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதனால் நிலைமை சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தது. உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்காரர்களை தேடும் பணி மறுபுறம் நடந்து கொண்டிருந்தது.

இடிந்தகரை கடற்கரையில் போலீசார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களின் மீனவ கிராமங்களில் ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. சாலை மறியலும் நடந்தது. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன.

பஞ்சாயத்து அலுவலகம் தீவைப்பு

இதற்கிடையே போராட்டக்காரர்கள் கூடங்குளத்தில் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு தீ வைத்தனர். அங்குள்ள டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது. கூடங்குளம் பைபாஸ் சாலையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதை அறிந்ததும் ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், டி.ஐ.ஜி. வரதராஜு மற்றும் அதிகாரிகளும், ஏராளமான போலீசாரும் இடிந்தகரையில் இருந்து அங்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை.

ஊருக்குள் செல்லும் சாலைகள், பைபாஸ் சாலைகளில் பெரிய பெரிய பாராங்கற்களை கொண்டு வந்து போட்டு சாலைகளை அடைத்தனர். வாகனங்களின் டயர்களை கொளுத்தி நடுரோட்டில் வீசி, போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். போலீசார் மீது சோடா பாட்டில்கள் வீசப்பட்டன. கற்களும் வீசினர்.

கூடங்குளத்திலும் தடியடி

மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க கூடங்குளத்திலும் போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. போலீசார் மீது பதிலுக்கு அவர்களும் தாக்கினர்.

வீடுகள், கட்டிடங்களில் ஏறி நின்றும், தெருக்களில் ஒழிந்து நின்றும் போலீசார் மீது தாக்கினர். எனவே போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் தெருக்கள் வழியாகவும் விரட்டிச் சென்றனர். இதனால் கூடங்குளம் சாலைகள் போர்க்களமாக மாறின.

30 பேர் காயம்

இடிந்தகரை, கூடங்குளத்தில் ஏற்பட்ட மோதல்களில் போலீசார் 10 பேரும், போராட்டக்காரர்கள் 20 பேரும் காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வன்முறை சம்பவங்கள் காரணமாக கூடங்குளம், இடிந்தகரை கிராமங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2012 11:58 am

 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி CNI110910

 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2012 11:58 am

 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி CNI110916

 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2012 11:58 am

 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி CNI110914

 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2012 11:59 am

 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி CNI110915

 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக