ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்னூல் கூறும் நல்லாசிரியர்!

2 posters

Go down

நன்னூல் கூறும் நல்லாசிரியர்! Empty நன்னூல் கூறும் நல்லாசிரியர்!

Post by சாமி Mon Sep 03, 2012 1:42 pm

பவணந்தியார், நன்னூலில் (நூற்.26-30) நல்ல ஆசிரியரின் பண்புகள், மாண்புகள் முதலியவற்றை விரிவாகவும் நுட்பமாகவும் தொகுத்துக் கூறியுள்ளார். ஆசிரியர், நிலம், மலை, நிறைகோல் (தராசு), மலர் போன்ற மாண்புடையவர் என்கிறார்.

1. நிலத்தின் மாண்புகள்:
- நிலம் ஓரிடத்தில் நின்று அதை முழுவதும் பார்க்கவே முடியாதபடி பரப்பினால் பெருமையுடையது.
- எவ்வளவு பாரத்தையும் சுமக்கும் திடமுடையது.
- மனிதர்கள் அகழ்தல், பிளத்தல் முதலிய குற்றங்களைச் செய்தாலும், அவற்றைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையுடையது.
- தக்க பருவதிலே உழவர்கள் செய்கின்ற உழவுத்தொழில் முயற்சிகளுக்குத் தகுந்தபடி அவர்களுக்குப் போதிய பலன்களைத் தரவல்லது.

ஆசிரியரின் மாண்புகள்:
- தமது பரந்துபட்ட கல்வியறிவால் பெருமையுடையவர்.
- தம்மிடம் வாதமிடுபவரைத் தாங்கும் திண்மை உடையவர்.
- தம்மை இகழ்தல், எதிர்த்தல் போன்ற குற்றங்களையும் பொறுத்துக் கொள்பவர்.
- தமது மாணவர்களுக்குத் தக்க பருவத்தில், தக்க அளவு, தகுந்த பயன்களைத் தருபவர்.

2. மலையின் மாண்புகள்:
- உருவில் பெரியது. தன்னிடத்தில் பலவிதப் பொருள்களை உடையது.
- எந்த வகையான பேராற்றலாலும் கொஞ்சமும் அசைக்க முடியாத அழுத்தம் உடையது.
- தூரத்தில் இருப்பவரும், தன்னை எளிதில் காணக்கூடிய பெருமிதத் தோற்றமுடையது.
- மழை பொழியாமல் வறண்டு போனாலும், எல்லா உயிர்களுக்கும் தன்னிடமுள்ளதைத் தரவல்ல கொடைப்பண்பு உடையது.

ஆசிரியரின் மாண்புகள்:
- கல்வியறிவால் பெருமையுடையவர். புலமையுடைய எவராலும் தம்மை வாதத்தால் அசைக்க முடியாத அழுத்தமுடையவர்.
- எண்ணற்ற நூற்பொருள்களை உணர்ந்தவர்.
- அவரைக் காணாதவரும் (தூரத்தில் இருப்பவரும்) அவரது புகழைத் தெரிந்துகொள்ளக் கூடிய தன்மையுடையவர்.
- மாணவர் தரும் செல்வம் குறைவாகவே இருந்தாலும் தம்மிடமுள்ள குறையாத கல்விச் செல்வத்தை அவர்களுக்கு அள்ளித்தரும் கொடையாளி.

3. தராசின் மாண்புகள்:
- தராசு ஐயம் இல்லாதபடி, பொருளின் அளவை நடுநிலைமையுடன் நிறுத்துக் காட்டும்.

ஆசிரியரின் மாண்புகள்:
- மாணவர்களிடம் சற்றும் சந்தேகம் எழாதபடி பாடங்களைத் தெளிவாகக் கற்பிப்பவர். எல்லோரிடமும் நடுவுநிலைமையுடன் பழகுபவர்.

4. மலரின் மாண்புகள்:
- மங்கலமானது.
- எல்லாக் காரியங்களிலும் தேவையானது.
- எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஏற்பது.
- மென்மையானது.
- குறித்த பொழுதில் மலர்வது.

ஆசிரியர் மாண்புகள்:
- மங்கல காரியங்களில் பங்கேற்பவர்.
- எல்லாக் காரியங்களும் நிறைவேற முன்னிற்பவர்.
- எல்லோராலும் ஏற்கத்தக்கவர்.
- மென்மையான பண்புகளைக் கொண்டவர்.
- பாடங்களைக் கற்பிக்கும்போது மகிழ்ச்சியுடன் இருப்பவர்.

இவ்வாறு நிலம், மலை, தராசு, மலர் ஆகிய நான்கு உவமைகளின் வாயிலாக, நல்லாசிரியரின் நற்பண்புகளை எடுத்துக்கூறி, அவர்கள் நன் மாணாக்கர்களை உருவாக்க வழி வகுத்துள்ளார் பவணந்தியார்.
(நன்றி-தினமணி)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நன்னூல் கூறும் நல்லாசிரியர்! Empty Re: நன்னூல் கூறும் நல்லாசிரியர்!

Post by சதாசிவம் Mon Sep 17, 2012 2:52 pm

தினசரிகளில் வரும் சிறப்பு நடுபக்கக் கட்டுரைகளைப் பலரும் படிப்பதில்லை. படித்த ஒருசிலரும் பகிர்வதில்லை.

ஆசிரியரின் குணங்களை அருமையாக விளக்கும் இக்கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum