புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_lcapசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_voting_barசிவலிங்கம் பற்றிய தகவல்கள்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவலிங்கம் பற்றிய தகவல்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 28, 2012 7:03 am

லிங்கம் என்ற சொல் வடமொழி என்பர் சிலர். அவ்வாறு கூறி, லிம் – ஒடுக்கம், கம்-தோற்றம் என்று பொருள் விரிப்பர்.இது பிற்காலத்தில் வடமொழியாளர் கூறிய விளக்கம்.

லிங்கம் என்பதற்கு வடமொழியில் குறி என்பதுதான் உண்மைப் பொருள். வடவேதங்களில் (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்) லிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சிவலிங்கத்தை “சிசின தேவன்” என்று மிக இழிவாக வட மொழியான ரிக் வேதம் கூறுகிறது.

உண்மையில் சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டது.
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் பூண்டார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”

என்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சிவலிங்கத்திற்கு கொடுக்கும் விளக்கம்.

இங்கேயும் குறி என்றே கூறப்படுகிறது. ஆனால் இங்கே குறி என்பது அடையாளம் என்ற சொல்லில் வருவதே தவிர வடவேதம் கூறுவது போல் அது ஆண்குறியைக் குறிப்பதல்ல. அதனால்தான் சேக்கிழார் அதனை வடமொழிப்பொருளிலிருந்து வேறுபடுத்திக்காட்ட ‘நிகழ்குறி’ என்று கூறினார்.

இவ்வாறு குறி என்ற சொல்லைக் கொண்டு இழிவுப்பொருளில் வடமொழியாளர் கூறுவதை அப்பர் இவ்வாறு கண்டிக்கிறார்.
“குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியிலீர் மனம் எங்கொல் புகாததே”


தமிழ் ஆர்வலர்கள் சிலர் இலிங்கம் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுகின்றனர். இலங்கியது இலிங்கம் என்பது அவர்கள் தரும் விளக்கம்.. அந்த அடையாளத்தில் இறைவன் இலங்கி இருப்பதால் அது இலிங்கம் எனப்பட்டது.என்பது அதன் உள்ளுறை.
தெய்வப் படிமத்தை பதிட்டை செய்யும்போது மந்திரத்தால் இறைவனது விளக்கத்தை ஏற்படுத்தி அதில் இலங்கச் செய்வதால் அதற்கு இலிங்கம் எனப்பெயர் வந்தது என்பர். சிவஞானசித்தியாரில் “மந்திரத்தால் உருக்கோலி” என்று வருவது இதற்குத் துணை நிற்கிறது.

இதுகாறும் கூறியவற்றால் லிங்கம் என்பது வடமொழிச் சொல். இலிங்கம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதை அறியலாம்.

சிவலிங்கத்தின் உள்ளுறை:
சிவலிங்கத்தின் ஆவுடையார் அருள் வட்டத்தைக் குறித்தது. அந்த அருளால் ஆன அண்ட வடிவங்களைக் குறித்தது. அதன்மேல் எழும் இலிங்கம் அருள் அண்டத்தின் மேல் ஊடுருவி எழுகின்ற பெருஞ்சோதியைக் குறித்தது. இதைத்தான் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி” என்று பாடினார் மணிவாசகர்.

இந்த அண்டங்கள் எல்லாம் சக்தியின் வடிவாதலால் அதனை (UNIVERSE IS IN THE FORM OF ENERGY) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள். சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால் ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள். மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள்.

(சிவனியமும் சால்பியமும் புத்தகத்தில் இருந்து எடுத்தது)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 7:11 am

மிக அழகிய விளக்கம் சாமி. சிவனும் பார்வதியும் (ஆணும் பெண்ணும் ) இணைந்த நிலையில் இருப்பதுவே சிவலிங்கம் என்று படித்தது ஞாபகம். புன்னகை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 28, 2012 8:06 am

நல்ல விளக்கம். . சிவலிங்கம் அர்த்தநாரீஸ்வரரின் வடிவம். அதாவது ஆண்தன்மையும், பெண்தண்மையும் இணைந்தவடிவம். ஆண்தன்மையும் பெண்தண்மையும் இணைந்தால்தான் ஒரு முழுமை உண்டாகிறது. எனவேதான் ஆணாக தனித்துப்பிறந்த ஒரு ஆத்மாவையும், பெண்ணாக தனித்துப்பிறந்தா ஓரு ஆத்மாவையும் முழுமைப்படுத்துவதற்காக திருமணம் என்ற ஒரு முறையை சான்றோர்கள் உருவாக்கினார்கள். இரண்டு ஆத்மாக்கள் முழுமை பெறுகிறது. சாந்தி பெறுகிறது.. எனவேதான் திருமணத்திற்கு சாந்தி என்ற பெயரும் உண்டு.

திருவிளையாடல் வசனம்:
சக்தி இல்லையேல் சிவம் இல்லை; சிவம் இல்லையேல் சக்தி இல்லை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 28, 2012 12:42 pm

பொய்யி பொய்யி, எல்லாம் பொந்யி, யாரோ கத கட்டி விட்டிருக்காங்க. நம்பாதீங்க

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 28, 2012 12:52 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



செந்தில்குமார்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Aug 28, 2012 1:06 pm

அம்மை அப்பனின் வடிவம் இலிங்கம் அதுவே முத்திக்கு வழிவகுக்கும் வழிபாடு

அம்மைக்கு ஒன்பது இராத்திரி அப்பனுக்கு ஒரு இராத்திரி அதிலே பிரதானமானது இலிங்கோற்பவம். அருவமான இறைவன் உருவம் பெற முன் அருஉருவம் பெறுகின்றான். அதுவே இலிங்கமாகிய சதாசிவமுர்த்தி.
‘கற்பனைக் கடந்த சோதி கருணையே உருவமாகி அற்புத கோலம் நீடி” அருவமான இறைவன் அருவுருவமாகி உருவம் பெறுகின்றார். பார்வெளியில் பரந்து பிரபஞ்வமாகி நின்ற இறைவன் மானிடர் மீது காதல் கொண்டு உருவம் பெறுகின்றான். பிறப்பின் நோக்கம் அறியா மனிதரை தடுத்தாட்கொள்ள உருவம் பெறுகின்றார். இங்கு சிவஞான சக்தியும் கிரியாசக்தியும் பொருந்தி நிற்கும் நிலை. சிவலிங்கம் என்பதின் கருத்தை நோக்கும் போது “சி” என்பது நாதவடிவான சிவன். இது இலிங்கத்தின் மேல் பகுதி. “வ”என்பது விந்து வடிவான சக்தி. லிங்கத்தின் கீழ் உள்ள ஆவுடை. ”லி” என்பது லயத்தை ஒடுக்குவதை குறிக்கும். இது ஆவுடையின் மேல்பாகத்தில் உள்ள கோமுகையைக் குறிக்கும். “கம்” என்பது போதல் தோன்றுதல் என்பதைக் குறிக்கும்.
எனவே இலிங்கம் என்பது சகல அண்டசராசரங்களும் தோற்றம் பெற்று நின்று ஒடுக்க நிலைக்களமாக அமைவது. பிரபஞ்சத்தின் சகலத்திலும் சிவசக்தி இரண்டறக் கலந்திருப்பதையே குறிக்கின்றது. இதையே விஞ்ஞானம் உலகில் உள்ள எல்லாம் அணுவாலானவை அவை நியுத்திரன் புரோத்திரன் ஆகிய அணுக்களின் சேற்கை அவற்றை ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது அப்படி பிரித்தாலும் அதிலும் நியுத்திரனும்இ புரோத்திரனும் இருக்கும். அவை இரண்டு சேர்ந்து இயங்கும் போது இலத்திரன் தோன்றும். இலத்திரனே சக்தியாக மாறி செயல் படுகின்றது. அதுவே சோமஸ்கந்த முகூர்த்தம் குறிக்கின்றது. சோமஸ்கந்தம் என்பது சிவசக்திகளுக்கிடையில் ஸ்கந்தப் பெருமான் வீற்றிருக்கும் முகூர்த்தம் ஆகும்.
இலிங்க வழிபாட்டின் தோற்றம் பற்றி பல்வேறு கதைகள் காணப்படுகின்றன. புராணங்களில் பலகதைகள் கூறப்படுகின்றது. ஆய்வுகளும் பலவாறு கூறுகின்றது. மேலை நாட்டார் இதை ஆண் உறுப்பு வழிபாடு என்றும் ஆதிவாசி வழிபாடு என்றும் கூறிப்பிடுகின்றனர். இன்னும் சிலர் இதனை யூபஸ்தம்ப வழிபாடு தோற்றுவித்தது என்பர். இலிங்க புராணம் வாயு புராணம் கூர்ம புராணம் என்பன குறியீட்டுக் கொள்கையை எற்றுக் கொள்கின்றது.
கந்தழி வழிபாட்டையே பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்கின்றனர். ஆதிமனிதன் மரத்தை வழிபட்டு வருகையில் காலம் செல்ல செல்ல மரத்தின் கிளைகள் அழிந்து கொண்டு வருகையில் இறுதியில் மரத்தின் அடிப்பாம் மிஞ்சுகையிலும் அதை வழிபட்டனர். பின்னர் அதுவும் அழிந்து போக மர அடியிலிருந்த குழியில் கற்தூணை வைத்து வழிபட்டனர். அதுவே இலிங்க வழிபாட்டுக்கு வித்திட்டது.
இலிங்கம் பண்டைக்காலத்திலே காணப்பட்டதற்கு ஹரப்பா மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட அறுநூற்றுக்கு மேற்படட் இலிங்கங்கள் சான்றுபகிர்கின்றன. அங்கு வாழ்ந்தவர்கள் தாயத்தாக பயன்படுத்தியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சிவலிங்கங்கள் மூன்று வகைப்படும். அவையாவன வியக்தாவியக்த லிங்கம், அவ்வியக்த லிங்கம்,வியக்த லிங்கம் எனப்படும். இதில் வியக்தாவியக்த லிங்கம் என்பது முகம் தோள் நேத்திரங்களுடன் காணப்படும் இலிங்கம். அவ்வியக்த லிங்கம் என்பது இலிங்கமும் ஆவுடையும் காணப்படும் இலிங்கம். வியக்த லிங்கம் என்பது எல்லா அங்கமும் வெளிப்பட தோன்றும் திருவுரு ஆகும்.
திருமூலர் திருமந்திரத்தில் இலிங்கம் தொடர்பாக குறிப்பிடுகையில்.

“இலிங்கம தாவ தியாரும் அறியார்
இலிங்கம தாவ தெண்டிசை யெல்லாம்
இலிங்கம தாவ தெண்ணெண் கலையும்
இலிங்கம தாவ எடுத்த துலகே”

என்றார். அம்மையப்பனின் அடையாளம் சிவலிங்கம். அதை நுண்ணுணர்வினர் மட்டுமே அறிய முடியும். ஏனையவர் அறியார். அம்மை ஆற்றலாகவும் அப்பன் பொருளாகவும் திகழ்வார். இதனை சூரியனும் கதிரும்,பழமும் சுவையும், நெருப்பும் சூடூம், போன்ற நிலையாகும். எங்கும் நிறைந்து நீக்கமற நிறைந்திருக்கின்ற சிவனும் சக்தியும் எல்லாப் பொருட்களையும் இயந்தியக்கின்றமையினால் சிவனெனப்பட்டு சக்தி சத்தன் என்பதை ஆற்றல் ஆற்றலி என கூறி உலகை அண்டலிங்கம் உலகசிவம் என கூறுகின்றனர். சித்தர்களுக்கு பிரபஞ்சமே இலிங்கம் தான்.
“தூய விமானமுந் தூலம தாகுமாம்
ஆய சதாசிவ மாகுநற் சூக்குமம்
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே”

கருவறையின் மேல்புறம் பருமையும் தூய்மையும் வாய்ந்த சிவலிங்கம். அகத்திலுள்ள கருவறையில் உள்ளது அருளோன்னான சதாசிவ நூண்ணிய சிவலிங்கம். பலிபீடம் ஆனேறு இவையும் சிவலிங்கம் அதாவது கோபுரம் தூலலிங்கம் கருவறை சூட்சும லிங்கம் எனவும் குறிப்பிட்டு. இலிங்கம் அமைக்கும் துணைக்கருவிகளை குறிப்பிடுகையில்

“முத்துடன் மாணிக்கம் மொய்த பவளமும்ங்
கோத்துமக் கொம்பு சலைநீறு கோமளம்
ஆத்தன்றன் னாகம மன்ன மரிசியாம்
ஊய்த்ததின் சாதம் பூ மண லிங்கமே”

என முத்துஇ மாணிக்கம்இ பவழம்இ செதுக்கிய மரக்கொம்புஇ பளிங்குஇ வெண்கற்கள்இ திருவெண்ணீறுஇ மரகதம்இ திருமந்திரம் போன்ற ஆகம அருள் நூல்கள்இ திருவமுது அமுது முதலிய அரிசிஇ இவை பத்தும் சிவலிங்கம் செய்து வழிபட உகந்தவை.

“துன்றுந் தயிர்நெய்பால் துய்ய மெழுகுடன்
குன்றிய செம்பு கனலிர தஞ்சலம்
வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம்பொன்
தென்றியங் கொன்றை தெளிசிவ லிங்கமே”

இறுகிய தயிர்இ தூய நெய்இ பால்இ சாணம் அல்லது தேன்மெழுகுஇ தாமிரம்இ அக்கினிஇ பாதரசம்இ சங்குஇ சுடப்பட்ட செங்கல்இ வில்வம்இ பொன்இ போன்ற பதினொன்றும் வழிபாட்டுக்குரியதாம் எனக்கூறுகின்றார். பிரபஞ்சமே சிவனாக வழிபடுபவர்கள் மகரிசிகள் சித்தர்கள் திருமூலர்

“போது புனைகழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும்
ஆதி யுறநின்ற தப்பரி சாமே”

மெய் அடியார்கள் அவன் புகழை பாடி துதிப்போருக்கு அப்பனின் திருவடி பூமியாகும். திருமுடி வானமாகும். திருமேனி விசம்பாகதிகளும். என்றும்

“ தரையுற்ற சக்தி தனிலிங்கம் விண்ணாந்
திரைபொரு நீரது மஞ்சன சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
கரையற்ற நந்தி கலையுந் தக்காமே”

பூமி ஆவுடையார். விண் சிவலிங்கம். குடல் சிவன் நீராடும் தடாகம். மேகங்கள் சிவனின் தலையில் உள்ள கங்கை. வான் அணியும் மாலைகள். விண்மீன்கள் அவரின் உடுக்கை. ஏட்டுத்திசைகளும் சிவனுடைய ஆடைகள். கரை நந்தி இவ்வாறு அண்ட இலிங்கம் பற்றி குறிப்பிடுகின்றார் திருமூலர். இவ்வாறு இயற்கையை அனுசரித்தே சித்தர்கள் வழிபாடு அமைந்திருந்தது. அருனகிரி நாதர் திருப்புகளில் “நாத விந்துகள் ஆதி நமோ நம
வேத மந்திர சோரூபா நமோ நம …..”நாதம் விந்து இவை இரண்டும் உருவாக்கப்பட்டவை அல்ல அவை ஆதியில் இருந்தவை அதுபோல வேத மந்திங்களும் இருந்தவை தான் அருவமான இறைவன் முதலில் ஒளியாக வெளிப்பட்டான் பின் அருஉருவாகி பக்தனை இரச்சிக்க உருவமானான். அவன் ஒலி வடிவில் வேதமந்திரமாக இருந்தான். வேத மந்திரங்கள் மகரிசிகள் சித்தர்களின் ஞானத்துக்கே புலப்பட்டு உலகுக்கு மனிட விடுதலைக்கு உபதேசிக்கப்பட்டது. காயத்திரி மந்திரம் விசுவாமித்திர மகரிஷிசி மூலமே உலகுக்கு கொடுக்கப்பட்டது. “மந்திரங்களில் நான் காயத்திரி” என கீதையில் கண்ணன் கூறுகின்றார். காயத்தை திரியாக்கி உலகுக்கு ஒளிபரப்பும் மந்திரம் அது. ஆக இருளை போக்கி அக ஒளியை ஒளிரச் செய்யும். அகஒளி பெற்றாலே அக இருள் நீங்கும்.
மானிடருடைய உடலை பிண்டலிங்கம் லிங்கமாக குறிப்பிடுகின்றார் திருமூலர்
.

“மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே.”

சிவபெருமான் மக்கள் வடிவினன். இருதய தானத்தில் சிற் அம்பலத்தில் திரு நடமாடுகின்றான். ஆக்ஞ்யில் சதாசிவனாக வீற்றிருந்து செயல்படுகின்றான். மூலாதாரத்தில் பிரணவமாகவும் சுவஸ்ஷிட்டானத்தில் படைபுக்குரிய பிரம்மாவாகவும் மணிப்பூரகத்தில் காத்தலுக்கான விஸ்ணுவும். அனாகதத்தில் அழித்தலுக்கான உருத்திரனும் விசுத்தியில் மறைத்தலுக்கான பரமேஸ்வரனும் ஆக்ஞ்ஞாவில் அருளளுக்கான சதாசிவனும் இருந்தருளுகின்றனர். உடல் என்னும் வாகனத்தில் அவர் உலாவருகின்றார். உடல் திரிபுரங்களை எரிக இறைவன் வந்த தேர். நம் முள் இருந்தே வினைப் பயனை அனுபவிக்க வைத்து அதன் விழைவை உணரவைத்து அதற்கான காரணத்தை அறியவைத்து அதிலிருந்து விடுதலை அளிக்கின்றான். அதை மானிடன் உணரவில்லை.

சதாசிவ லிங்கம் பற்றி திருமூலர் குறிப்பிடுகையில்

“கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழுந்
தேடு முகம்ஐந்து செங்கணின் மூவைந்து
நாடுமஞ் சதாசிவ நல்லொளி முத்தே”

ஆரூயிர்கள் அன்பினால் கூடி இன்புறும் பொருட்டு அமைந்தது. இரு திருவடி புகழ்ந்து கூறப்பட்ட திருவடி பத்து. விரிந்தெழுந்து நாடும் திருமுகங்கள் ஐந்து. ஒளி தரும் கண்கள் பதினைந்து. இவை அனைத்தையும் கொண்டு விளங்கும் சதாசிவ கடவுள் நல்ல திருவருள் ஒளியாகிய முத்தாகும். என்று சதாசிவலிங்கம் பற்றி கூறுகின்றார். இதுவே உலக முதற் சிவம் என்று குறிப்பிடுகின்றார். மானிடனின் தேவை அறிந்தே அருவமானவன் அருவுருப் பெற்று உரு பெறுகின்றான். அதை அனுபவித்து இன்பம் பெறவே அதை மானிடர் அறிந்து அன்பால் அன்பு கொண்டு “காதலாகி கசிந்து கண்ணீர் மல்க” வேண்டுமென்றும் “அத்தன் ஆனந்தன் அமுதனென்றுறள்ளுறி” இதனை மாணிக்கவாசகப் பெருமான் மிக அழகாக திருவாககத்தில் பாடியுள்ளார். கண்ணப்ப நாயனார் சரித்திரத்திலும் இறைவன் பால் அவர் கொண்ட அன்பு புலப்படுத்தப்படுகின்றது. இதங்கு அறுபத்தி நான்கு நாயன்மார்களும் விதிவிலக்கல்ல.

“தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானுஞ் சதாசிவ மாய்நிற்குந்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாந்
தன்மேனி தானாகுந் தற்பரந் தானே”

ஆருயிர்களின் உடம்புகள் சிவலிங்கம் என்றும் அச்சிவலிங்கத்தின் உள்ளும் புறமும் நிறைந்திருப்பது சதாசிவமாகும். உடம்பே தனி முதல் சிவன். உடம்பே சிவன் பேரின்பம். உடம்பே சிவ மெய்ப் பொருளாகும். உடம்பே ஒப்பில் முழுமுதல். இத் திருமந்திரம் ஆருயிரின் இடையறாச் சிவனைப்பால் அவ்வுடம்புஇ உள்ளம்இ உணர்வுஇ உணர்விலுளதாம் இன்பம் எல்லாம் சிவனேயாகும். அகலிங்கம் பற்றி இங்கு குறிப்பிடப்படுகின்றது. எமது உடல் சிவலிங்கம். உள்ளுற இருப்பது பரம்பொருள் ஆகும். மகரிஷிகளுக்கும் சித்தர்களுக்கும் உடல் ஆலயம் உயிர் பரம்பொருள் செபம் தியானம் உள்ளுறையும் இறைவனுக்கான பூசை வழிபாடாகும். அவர்கள் நடமாடும் ஆலயங்கள். அவர்கள் வழியில் சென்று நாமும் ஆலயமாகுவோம்.

“இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரமும்
இலிங்கநற் கண்ட நிறையு மகாரம்
இலிங்கத்துள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்க மகார நிறைவிந்து நாதமே”

சிவலிங்கத்தின் அடிப்பகுதியாகிய பீடம் ஓங்கார வடிவமாகும். அப் பீடத்தினுள் மறைந்திருக்கும் லிங்கத்தின் நடுப் பகுதி கண்டம் மாகும். அது மகாரமாகும் சிவலிங்கத்துடன் பொருந்தியிருக்கும் வட்டப் பகுதி உகாரம் மாகும். சிவலிங்கத்தின் மேல் பகுதி மூன்று வகைப்படும். அவை கீழிருந்து மேல் நோக்கி அகாரம், விந்து, நாதம் மாகும். இலிங்கத்தின் அடிப்பாகம் பிரணவம். கண்டம் அதோமுகம் என்று கூறிப்பிடுகின்றார். எனவே லிங்கத்தில் நாதம் ,விந்து, அகாரம், உகாரம், மகாரம் இவை ஐந்தும் பொருந்தி ஐந்தொழிலுக்கு காரணமாகின்றது.


ஆத்துமலிங்கம் பற்றி திருமூலர் குறிப்பிடுகையில் அதாவது உயிர்ச்சிவம் எனகுறிப்பிடுகின்றார்.

“அகார முதலா யனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்
அகார வுகாரம் இரண்டு மறியில்
அகார வுகாரம் இலிங்கம் தாமே”

உலகு உடல் உயிர் என்பவற்றுக்கு தாங்கும் நிலைக்களமாக அமைபவன் சிவன். அதனால் அகாரத்தால் குறிக்கப் பெறும். அகாரமுதலாய் அனைத்துமாய் நிற்கும். அவை இயங்குமாறு இயைந்திருக்கும் திருவருள் ஆற்றல் சிவை அவ்வியக்கம் உயிற்பு இவ்வடையாளம் உகாரம், அகார ,உகாரம் இரண்டும் இவ் உலகான சக்தியும் சிவனுமாகும். இதையுணர்தால் அகார உகாரம் சிவலிங்கம். அகார உகார சேர்கையே உலக பொருட்கள் எல்லாம் உயிர் பெறு கின்றன. பிரபஞ்ச உற்பத்திக்கு கரணகாரியம் அவன்தான்.

“சக்தி சிவமாம் இலிங்கமே தாபரஞ்
சக்தி சிவமாம் இலிங்கமே சங்கமஞ்
சக்தி சிவமாம் இலிங்கஞ் சதாசிவஞ்
சக்தி சிவமாகும் தாபரந் தானே”

திருக் கோவிலில் இருப்பது தாபரலிங்கம். மெய் அடியாராகிய திருக்கோலங்களும் சக்தி சிவயாகும் போது சங்மலிங்கம். சக்தி சிவம் இரண்டும் இணைத்து ஓதும் போது சதாசிவம் மாகும் போது சதாசிவலிங்கமாகும். தானே தனி முழு முதல் சக்தி சிவம் இரண்டும் இணைந்து உலமே சக்திசிவ உருவங்களாம்.

“விந்துவும் நாதமும் மேவு மிலிங்கமாம்
விந்துவ தேபீட நாத மிலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்த கருவைந்துமஞ் செய்யும் மவையைந்தே”

ஒளியும் ஒலியுமான விந்தும் நாதமும் சிவலிங்கம். விந்து பீடம் நாதம் இலிங்கம் இவை இரண்டையும் சார்புக் கடவுளாககக் கொண்டு அருலோன், ஆண்டான், அரன்,அரி,அயன். ஆகிய பஞ்ச கிருத்திய கடவுள்கள் தோன்றினர். அவர்கள் அருளால், மறைத்தல், துடைத்தல், காத்தல், படைத்தல். போன்ற ஐந்தொழில்களை நிகழ்தினர்.

“சத்திநற் பீடந் தகுநல்ல ஆன்மா
சத்திநற் கண்டந் தகுவித்தை தானாகுமஞ்
சத்திநல் லிங்கந் தகுஞ்சிவ தத்துவஞ்
சத்திநல் லான்மாச் சதாசிவந் தானே”

சத்தி வடிவாகவுள்ள சிவலிங்க பீடம் ஆவிநிலையாகும். களுத்தினை ஒத்த பீடத்தின் குழி திருவடி உணர்வான சிவஞானமாகும். மேலுள்ள லிங்கம் சிவமெய்ப் பொருளாகும். ஏவற்றுக்கும் உயிருக்குயிராம் பேராவி (பரமான்மா) சதாசிவமாகும். இங்கு சீவான்மாவுக்கும் பரமான்மாவுக்கும இடையிலான தொடர்பு எடுத்துக்காட்டப்படுகின்றது.
ஞான லிங்கம் என்னும் உணர்வுச் சிவம் பற்றிக் குறிப்பிடுகையில்

“நாலான கீழ துரவ நடுநிற்க
மேலான நான்கு மருவு மிகநாப்பண்
நாலான ஒன்று மருவுரு நண்ணலாற்
பாலா மிவையாம் பரமசிவன் தானே”

இங்கு மேலான நான்கும் அருவம் அவை ஒளி, ஒலி(ஓசை) அன்னை, அத்தன் ( விந்து ,நாதம், சத்தி, சிவம்) கீழான நான்கும் உருவம் அவை அயன் ,அரி, அரன், ஈசன் இவை இரண்டுக்கும் நடுவில் அருவுருவான சதாசிவன் அதுவே இலிங்க வடிவம். இவ் ஒன்பது வடிவமும் பரசிவம்.
சதாசிவ கடவுளை திருமூலர் குறிப்பிடுகையில்

“வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்டகை யானொடுங் கன்னி யுணரினும்
மூண்டகை மாறினும் ஒன்றது வாமே”

என்றார். இதிலிருந்து இருவினை நீங்கியற சதாசிவக் கடவுளை திங்களாகிய சந்திரனும் ஞாயிறு ஆன சூரியனும் அவருடைய திருக் கண்கள் இதனால் அவர் உலகை அளக்கின்றார். அவரின் பிரிவின்றி நிற்கும் திவருள் ஆற்றல் மனோன்மன் சத்தி யாகும். இவ்வன்னையும் அத்தனும் எத்திருவுருவை வழிட்டாலும் வேறுருவில் ஓர்ருடம்பாய் திகழ்வர். இதனால் எல்லாமே சதாசிவ வழிபாடாகும்.
ஞானலிங்கம் பற்றி திருமூலர் குறிப்பிடுகையில்

“கொழுந்தினைக் காணிற் குவலயந் தோன்றும்
எழுந்திடுங் காணில் இருக்கலு மாகும்
பரந்திடங் காணிற் பார்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தையுள் ளானே”

முற்றறிவுப் பெருங்குறி சிவக்கொழுந்து. அது அருளால் காணும் தன்மை. இது ஞானலிங்கம். இதை பெற்றவனுக்கு உலகவுண்மை தெற்றென விளங்கும். இவனிடம் சிவபரம் பொருள் அறிவாற்றலாகிய திருவருளாய் விற்றிருப்பான்.

“சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவமுமாஞ் சிவன்சத் தியுமாகுஞ்
சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை
சத்திதான் என்றுஞ் சமைந்துரு வாகும்”

உலகுடல்களாகிய மாயாகாரியப் பொருட்கள் சிவன் சத்தியுடன் பொருந்தி எளிதாகக் காரியப்படுத்தப்படுகின்றன. ஆவ்வருட் செயல் அருட்செயல். ஓன்று விட்டு ஒன்று இல்லை. ஆனால் எல்லாப் பொருட்களையும் தங்கும் நிலைக்களம் சத்தியே. தூரணி அண்டங்கள் எல்லாமும் அவைகளில் உள்ள இயங்கியற் பொருட்கள் எல்லாமும் தாபரலிங்கம் என்ற ஞானலிங்கம் இதுவே உருவ உலகம் மாகும்.
சிவலிங்கம் மான சிவகுரு பற்றி திருமூலர் குறிப்பிடுகையில்

“ மலர்ந்த வலன்மால் உருத்திரன் மகேசன்
பலந்தரு ஐம்முகன் பரவிந்து நாதம்
நலம்தருஞ் சத்தி சிவன்வடி வகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே”

திருமாலின் உந்தியில் உதித்த பிம்மா, திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் ஆகிய ஐவரும் அதற்கு மேலான விந்து, நாதம், சத்தி, சிவம் ஆகிய வடிவங்களும் அவ்அப் பயனை அளிக்கும் சிவலிங்கமே என்று குறிப்பிடுகின்றார்.
இலிங்க வழிபாடின் பலன்பற்றி குறிப்பிடுகையில்

“இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியது போக்கி
திருந்திய காமன் செயலழிந்து அங்கண்
அருதவ யோகங் கொறுக்கை அமர்ததே”

மனத்தை ஒரு நிலைப்படுத்தி இலிங்க வழிபாட்டில் இருத்திய மனத்தை தடுக்கமுனைந்த காமனை செயல்லிளக்கச் செய்ததுடன் உருவவையும் இழக்கச் செய்தவர் சிவபெருமான். காமனை வென்றவர்கள் சிவயோகிகள். அவர்கள் சிவ ஞானத்தை அடைந்து சிவனானார்கள். அதனால் அவர்கள் சித்தன் ஆனார்கள். சித்தம் தெளிந்ததால் அத்தனானார்கள். இதனால் புத்தி சிற்றின்பம் சித்தம் பேரின்பம் எனக் குறிப்பிடப்படுகின்றது. புத்தி விளிப்படைவதனாலேயே பேரின்பத்துக்கு செல்ல முடியும். அதுவே சித்தத் தெளிவு. சிற்றின்பத்துக்கு காரணம் காமன். அவன் அழிய பிராத்தம் வேண்டும். இத் திரு விளையாடலை இறைவன் நடாத்திய தலம் திருக்கொறுக்கைத் திருத்தலம்.

இலிங்கம் தொடர்பாக அபிதானசிந்தாமணி கூறிப்பிடுகையில். ஒலி முதலிய பலன்களுக்கும் மனம் வாக்குகளுக்கு மெட்டாத அளவில்லாத பேரொளியாய் தமக்கு மேல நாயகமில்லாதாய் அருவமாய் குணரகிதமாய் அநந்தகுணமணியாய் வண்ணமற்றதாய் நாசரகிதமாய்சசர்வசகத்தும் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் எதுவாய் அவ்வியக்தமெனப் பழமறை பகர்வதாகி ஆன்மாக்களின் தியானபாவனா நிமித்தம் நிட்களசகளத்திருவுருக் கொண்ட நிலையாம். அலிங்கத்தின் பிண்டிரகயே சக்தியுரு இலிங்கம் சிவவுரு ஆகவே இலிங்கம் ஞானசக்தியுரு. பீடம் கிரியா சக்தி வடிவம். ஆதலினால் இவ்விரண்டும் சிவன சிருஷ்டிக்குந் தேகம். இது திரிமூர்த்தி சுவரூபமும் ஆம். சிவலிங்கத்தின் விருத்தமே ருத்திரபாகமாம். பீடத்தின் அதோபாத்தின் அடிநான்கு மூலை பிரம பாகம் நடுவின் எட்டு மூலை விஷ்ணு பாகம் இது பிரணவசுரூபம். இலிங்கம் என்பது இலிங்+கம் என பிரிக்கப்பட்டு “இலிங்” என்பது லயம் எனறும் “கம்” என்பது தோற்றம் எனவும் இலிங்கம் என்பது சிருட்டியாதி பஞ்சகிர்த்தியத்தைச் செய்யுமீசுரப்பிரபாவம். இலிங்கம்.


இவ் இலிங்கம் ,ஆட்யம், அநாட்யம், இசுரேட்யம், இஸர்லசமம் என நான்கு விதம். இது சலம், அசலம் என இருவிதமாம் பின் அவை வியத்தம், வ்யத்தாவியக்தம், அவ்யக்தம் என மூன்று வகைப்படும். அவற்றுள் சகளமான பிரதிமாவுரு வியத்தம் சகளநிஷ்களம் வ்யத்தாவியத்தம் நிஷ்களம் அவ்யக்தம் கிருகங்களில் பூசிப்பது சலம் எனவும். ஆலயங்களில் ஸ்தாபிக்கப்பட்டது அசலம் எனவும் கூறப்படும். அசலம் ஸ்திரலிங்கம் சுயம்புலிங்கம் தைவிகம் தேவர்களாற் பூசிக்கப்பட்டது. காணபம் கணேசரால் பூசிக்கப்பட்டது. ஆரிஷம் ருஷிகளால் ஸ்தாபிக்கப்பட்டது. மனுஷயம் மனுஷ்ரால் ஸ்தாபிக்கப்பட்டது. என ஐவகைப்படும். பின்னும் ஸ்படிகலிங்கம் இரத்னாதிலிங்கங்களும் உண்டு. பிரம்பாகம் நபும்ஸம் எனவும். விஷ்ணுபாகம் ஸ்திரிலிங்க மெனவும். ருத்திரபாகம் பும்லிங்க மெனவும். கூறும். ஆட்யலிங்கத்தின் சிரம் அர்த்த சந்திர வடிவமாகவும். அநாட்யலிங்கத்தின் சிரம் வெள்ளரிப்பழ வடிலமாகவும் சுரேட்யலிங்கத்தின் சிரம் கோழியின் முட்டை போலவும் சர்வசமலிங்கத்தின் சிரம் குடைவடிவமாகவும் கூறப்படுகின்றது.


அர்த்தசந்திராதி நால்வகை வடிவும் தனித்தனி நன்னான்கு விதமதகப் பேதப்படும். ஆட்யலிங்கத்தில்1001 இலிங்கஞ் செய்ய வேண்டும். சுரேட்யலிங்கத்தில் 108 இலிங்கஞ் செய்ய வேண்டும். சர்வசமலிங்கத்தில் 5,6 முதலிய முகங்களுள்ள இலிங்கங்கம் செய்ய வேண்டும். ஆட்யாநாட்ய சுரேட்ய லிங்கங்களில் முகலிங்கமஞ்செயக்கூடாது. முகலிங்கத்தில் ஈசானாதியைந்து முகங்களும்மாகும். இலிங்கத்தின் மத்தியில் ஈசானம் கிழக்கே தற்புருடம் தெற்கே அகோரம் வடக்கே வாமதேவம் மேற்கே சத்யோசாதமும் இருக்வேண்டும். நான்குமுக இலிங்மாயின் ஈசானதவிரச் செய்யவேண்டும். இரு முகலிங்கத்தில் தற்புருடமும் சத்யோசாதமும் செய்யவேண்டும். ஒரு முகலிங்கத்தில் தற்புருடம் மாத்திரம் செய்யவேண்டும்.
இலிங்களில் ஒருவகை பாணலிங்கமாகும். இது எப்போதும் ஈஸ்வர திட்டமாயிருக்கும். இவ் லிங்கம்கள் அரைக்கால் அங்குலம் முதல் ஒரு கஸ்தப்பிரமாண முள்ளதாகவும். பக்குவமான நாவல் பழத்தின் நிறம் போலவும்,தேனின் நிறம் போலவும், வண்டின் நிறமாகவும், காசுக்கல் நிறமாகவும், நீல வர்ணமாகவும், தன்னிறமான பீடங்கள் உள்ளதாகவும்,கொவ்வைக் கணிநிறமாகவும், பச்சைநிறமாகவும், திக்குப்பாலகர்கணிநிறமாகவும், பசுவின் முலை போலவும், கோழியின் முட்டை போலவும், கண்ணாடி போல பழபழப் புள்ளதாகவும் இருக்கும். இந்த லிங்கத்தின் வரலாறை நோக்குகின்றபோது பாணனென்னும் அசுரன் சிவனை நோக்கி கடும் தவம் செய்ய அதை ஏற்று கொண்டு இறைவன் மகிழ்சியால் பூரிப்படைந்து பல வகைப்பட்ட பதினான்குகோடி இலிங்கம்கள் கொடுத்தார். அவற்றை பூசித்து முடிவில் லிங்காசலத்திலும் காளிகாகர்த்தத்திலும் ஸ்ரீநாகத்திலும் கன்னிகாச்ரமத்திலும் நேர்பாளத்திலும் மகேந்திரத்திலும் அமரேச்வரத்திலும் மற்றும் நதிமத்தியிலும் பர்வதமத்திலும் எழுந்தருளச் செய்தான். அவை சுயம்பு லிங்கமென காமிகாதி ஆகமங்களில் கூறப்படும். அதற்கு பீடம் மிருத்து லோஹம் நல்விருசம் இரத்னம் என்பவற்றால் செய்யப்பட வேண்டும். பீட நிறம் லிங்கத்தையொத்ததாக அமைய வேண்டும்.
அட்டதிக்குப் பாலகர்களால் பூசிக்கப்பட்ட லிங்கங்களும் உண்டு. இந்திரனால் பூசிக்கப்பட்ட லிங்கங்கம் இந்திர லிங்கங்கம் எனப்படும். இது பசும் பொன்னிறமாகவும் அறுகோணமாயும் வச்சாரங்கிதமாயும் இருக்கும். இதை
வழிபட்டால் ராஐயசம்பத்தைத் தரும். ஆக்னேயலிங்கம் இது அகநியால் பூசிக்கப்பட்டது. இது தாம்பிரவர்ணமாய்ச் சத்தியங்கிதமாய் உஷ்ணபர்சமுள்ளதாக இருக்கும். இதை வழிபட்டால் தேஜொவிருத்தியைக் கொடுக்கும் . யாம்யலிங்கம் இது யமதர்மராஐவால் பூசிக்கப்பட்டது. தண்டாகாரமாய் அல்லது தண்டாங்கிதமாய் அவ்யக்தமாய் முகுத்த நேரத்தில் தாபிக்கப்படும். இவ்லிங்கம் கருமை நிறமாக இருக்கும். இவ்லிங்கத்தை வழிபட்டால் சத்துருநாசம் ஏற்படும். நைருதலிங்கம் இவ்லிங்கம் நிருதியாற் பூசிக்கப்பட்டது. இது கட்கநிறமதய்க் கட்காங்கிதமாய் புகைவருணமாகவிருக்கும். இவ்லிங்கத்தை வழிபட்டால் சத்துருஜெயம் கிடைக்கும். வருணலிங்கம் இவ்லிங்கம் வருணனால் வழிபடப்பட்டது. வட்டமாய் பாசாங்கிதமாய்ச் சுக்கிலவர்ணமகயிருக்கும். அதை சலத்தில் விட்டால் அது இனிமையாக நிர்மலமாகவிருக்கும். வாயவ்யலிங்கம் தூமவருணமாய் வஜாங்கிதமாயிருக்கும். அதன் சிரசில் பஞ்சை வைத்தால் காற்றிலாது அசையும். அது உச்சாடன முதலிய கர்மவிஷய பூசைக்கு உகந்ததாம். கௌபேரலிங்கம் கதாகாரமல்லாது கதாங்கிதமாகவிருக்கும். நடுவில் பொன்னிறமாகவிருக்கும் அதை இரவில் பயிர் நடுவில் வைத்தால் பயிர் விருத்தியாகும். ஈசானலிங்கம் சூலநிறம் அல்லது சூலாங்கிதமாய்ப் பனி முல்லை சந்திரனை ஒத்த நிறங்களாயிருக்கும். அது சகல சித்திகளையும் தரும்.
வைணவலிங்கமானது சங்கு சக்கரம் கதை தாமரை ஸ்ரீவத்ஸ சின்னங்களும் மச்ச கூர்ம வராக சின்னங்கள் உள்ளதாக இருக்கும். இது சர்வாபிஷ்டங்களையும் கொடுக்கும். பிரம்மலிங்கம் பத்மாங்கிதமாய் பத்மவருணமாய் அசஷ்மாலை கமண்டலம் இவற்றால் அலங்கரிக்கப்பட்டதாக மாலை தண்டம் அவற்றின் குறியுள்ளதாயிருக்கும். இவ்லிங்கத்தை வழிபட்டால் புத்ராதிவிருத்தியைக் கொடுக்கும். இவ் இலிங்கங்கள் பொருட்களுடன் இருக்கில் கனமாகவும் வெள்ளத்தில் விடின் மறுபடியும் கிடைக்கக்கூடியதாகவிருக்கும். இவையே பூசிக்கத்தகுந்தவை. இந்த கோடி பாணலிங்கங்கள் அமரேச்வரம், மகேந்திரபர்வதம், நேபாளபர்வதம், கன்யாதீர்த்தம், அதையடுத்து ஆச்சிரமம் இவைகளில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கோடியும் ஸ்ரீசைலம்இ,லிங்கசைலம், காளிகாபர்த்தம்,முதலிய மூன்று தலங்களிலும் மும்மூன்று கோடியாக ஒன்பது கோடிஆக பதினான்கு கோடியாகும்.
பஞ்ச பூதலிங்கங்களாக காஞ்சியில் பிரதிவி லிங்கமும், திருவானைக்காவில் அப்பு லிங்கமும், திருவண்ணாமலையில் தேயுலிங்கம், சீகாளத்தியில் வாயுலிங்கம்,சிதம்பரத்தில் ஆகாசலிங்கமும் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. பாதரசத்தால் சிவலிங்கம் செய்து பூசித்தால் பஞ்சமகாபவங்களை போக்க முடியும்.
சுயம்புலிங்கங்கள் அனந்தருடைய சிகரம் எனவும் அதை அசைத்ததால் காலாக்கினிருத்திரருடைய கோபத்துக்காளாகி தீப்பொறி தோன்றின. அவை மூன்றாகி ஜலத்தில் நீர்மூலலிங்கமாகவும்,பூமியில் சமூலலிங்கமாக மலைகளாகவும், பிருதிவிலிங்கமாக மண்னிலும் தோன்றிதாகவும் கூறப்படுகின்றனர்.

இலிங்கத்தைவழிபடுவதனால் உண்டாகும் பலன் தொடர்பாக ஸ்ரீ ஆதிசங்கர பகவத்தாள் லிங்காஸ்டகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

நான்முகன், திருமால் பூஜை செய்த லிங்கம்.

தூய சொல் புகழ் பெறும் பேரெழில் லிங்கம்.

பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்.

வழி வழியாக முனிவர்கள் வழிபடும் லிங்கம்.

காமனை எரித்த கருணாகர லிங்கம்.

இராவனன் கருவம்மடக்கிய லிங்கம்.

திவ்விய மணம் பல கமழ்கின்ற லிங்கம்.

சித்தம் தெளிவிற்கும் சித்தர்கள் லிங்கம்.

தேவர்களும் அரசர்களும் வணங்கும் லிங்கம்.

கணகமும் மகாமணி பூஷித லிங்கம்.

படம் எடுத்தாடும் பாம்பணை லிங்கம்.

தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்.



குங்குமம் சந்தனம் பொழிந்திடும் லிங்கம்.

பங்கைய மலர்களைச் சூடிடும் லிங்கம்.

வந்ததொரு பாவத்தைப் போக்கிடும் லிங்கம்.

தேவர்கள் கணங்கள் போற்றிடும் லிங்கம்.

கதிரவன் கோடி சுடர் மிகு லிங்கம்.

எட்டிதழ் மலர்களும் சுற்றிடும் லிங்கம்.

எல்லாப் பிறவிக்கும் காரண லிங்கம்.

அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்.

வியாழனும் தேவரும் போற்றிடும் லிங்கம்.

வில்வமதை மலர் எனக் கொள்ளும் லிங்கம்.

தன்னோடு பிறரையும் காத்திடும் லிங்கம்.

வணங்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்.

என இலிங்கத்தின் பெருமையையும் வழிபடுவதினால் ஏற்படும் பலனையும் குறித்துரைத்துள்ளார்.
எனவே இலிங்கம் தொடர்பாக திருமந்திரம், “அபிதானசிந்தாமணி, இந்து கலைக்களஞ்சியம் “அபிதானகோசம்”போன்ற நூல்களை ஆராய்ந்து உயித்தறியும் போதும் எமது ஆன்மீக அனுபவத்திலும் அவனின்றி அணுவும் அசையாது அவனே முதல் காரணம். அவன் மானிடப்பிறவிகளைய எடுத்த வடிவம் இலிங்கமே என்பது தெளிவு.



avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Tue Aug 28, 2012 7:39 pm

பாவம். ரெம்ப மெனக்கெட்டு லிங்கம் என்பதை ஆண்குறியும் பெண்குறியும் இணைந்த ஒரு இயக்கத்தைக் குறிக்கிறது என்ற உண்மையைத் திரித்து எங்கெங்கோ ஆதாரங்கள் தேடி தொகுத்திருக்கிறார் சாமி. அதற்கு இன்னும் மெனக்கெட்டு ஒத்துழைத்திருக்கிறார் பூவன்.

என்றாலும் உண்மையை முழுவதுமாக மறைத்துவிடமுடியாது என்பதே சத்தியம்.

சைவ சமயத்தினர் ஆண்பெண் அர்த்த நாரி என்று கதைவிடப்போக வைஷ்ணவர்கள் சளைத்தவர்களா..? விஷ்ணுவை பெண்வடிவில் மோகினி என்று கூறி ஒரு படி மேலே போய் குழந்தையும் உருவாக்கினார்கள். அய்யப்பன் என்று பெயரும் வைத்தார்கள்.

நிஜங்களை அப்படியே இருக்கவிடுங்கள் என்று கதறத்தான் தோன்றுகிறது.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 29, 2012 9:52 am

கபாலி wrote:பாவம். ரெம்ப மெனக்கெட்டு லிங்கம் என்பதை ஆண்குறியும் பெண்குறியும் இணைந்த ஒரு இயக்கத்தைக் குறிக்கிறது என்ற உண்மையைத் திரித்து எங்கெங்கோ ஆதாரங்கள் தேடி தொகுத்திருக்கிறார் சாமி.
நிஜங்களை அப்படியே இருக்கவிடுங்கள் என்று கதறத்தான் தோன்றுகிறது.

தங்களின் பதிலுக்கு நன்றி நண்பரே !
"லிங்கம் என்பதை ஆண்குறியும் பெண்குறியும் இணைந்த ஒரு இயக்கத்தைக் குறிக்கிறது என்ற தங்களின் உண்மை"க்கு சான்றுகள் ஏதாவது தர முடியுமா?
நன்றி!



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 10:53 am

மதங்கள் பற்றிய திரிகளில் எந்த வாத விவாதமும் வேன்டாம் நண்பர்களே!


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 29, 2012 11:11 am

அசுரன் அண்ணே இப்படி போடுங்கண்ணே. புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக