ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53

Top posting users this week
ayyasamy ram
மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்! Poll_c10மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்! Poll_m10மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்!

5 posters

Go down

மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்! Empty மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்!

Post by சிவா Sun 26 Aug 2012 - 1:23

மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்! Sun11

நாய்களுக்கு மோப்ப சக்தி மிக அதிகம். அதனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க, நாய்களை காவல் துறையில் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பது பழைய விஷயம். புதிய விஷயம், நாய்களின் மோப்ப சக்தியை பயன்படுத்தி மூட்டை பூச்சிகள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார்கள்.

மூட்டை பூச்சிகளின் தொல்லை நம்நாட்டில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் இருக்கிறது. மிகச் சிறிதாக இருக்கும் இந்த பூச்சி மிகப் பெரிய தொல்லையை உலகம் முழுக்க உள்ள மக்களுக்கு தந்துகொண்டிருக்கிறது. இவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாக பரவும் திறன் கொண்டது. கண்ணுக்கு மறைவான இடத்தில் பல்லாயிரக்கணக்கான முட்டைகளை வைத்து குஞ்சு பொரித்து, குடும்பம் நடத்தி, மக்களை தூக்கமில்லாமல் துரத்தியடிக்கக் கூடியது, இந்த பூச்சிகள். அவை மறைந்திருக்கும் இடத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்பதால், எளிதாக அவைகளை அழிக்கமுடியாது.

மூட்டைபூச்சிகளின் தொல்லையை தாங்க முடியாமல் அவைகளை எதிர்த்து அமெரிக்காவில் ஒரு யுத்தமே நடந்துகொண்டிருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியில் வல்லமை பெற்ற நாடாக இருந்தாலும்கூட, இந்த மூட்டை பூச்சிகளிடம் கடிவாங்கிக்கொண்டு அமெரிக்கா முழிபிதுங்கி தவிக்கத்தான் செய்கிறது.

வாஷிங்டனில் "ஜெயின்ட் பெட்பக்'' என் பெயரில் அமைப்பு ஒன்று தொடங்கப் பட்டிருக்கிறது. இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மூட்டைபூச்சிகளை எப்படி எல்லாம் ஒழிக்கலாம் என்று ஆலோசனை சொல்கிறார்கள். மூட்டைபூச்சி ஒழிப்பு பற்றி விரிவான கருத்தரங்கமும் நடத்துகிறார்கள். தற்போது அமெரிக்காவில் மூட்டை பூச்சிகளை ஒழிப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அவைகள் புதிய யுத்திகளை கையாண்டு வீடுகள், அலுவலகம், ஓட்டல்களில் மூட்டைப்பூச்சி ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கிக்கொண்டிருக் கின்றன. ஆனாலும் அந்த தொல்லை முழுமையாக தீர்ந்தபாடில்லை. அதனால் `கிரீன் பெஸ்ட் மேனேஜ்மென்ட்' என்ற அமைப்பு இதற்காக நாய்களை பயன்படுத்த முன்வந்திருக்கிறது. நாய்களைக் கொண்டு மூட்டைபூச்சிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அழிக்கிறார்கள். நாய்களின் மோப்ப சக்தி இதற்கு பயன்படுகிறது. மூட்டை பூச்சியை மட்டுமல்ல, அதன் முட்டைகளை கண்டறியும் சக்தியும் நாய்களுக்கு இருக்கின்றன. ஆனால் இந்த நுட்பமான மோப்ப சக்தி குறிப்பிட்ட இன நாய்களிடம் மட்டுமே இருக்கிறது. அத்தகைய நாய்களை கண்டுபிடித்து அவைகளுக்கு பயிற்சியளித்து இந்தப் பணிக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாய்கள் வீட்டில் இருக்கும் கட்டில், நாற்காலி, கூடை போன்ற அனைத்தையும் நுகர்ந்து மூட்டை பூச்சியையும், அவைகளின் முட்டைகளையும் கண்டுபிடிக்கிறது. பின்பு அவை அழிக்கப்படுகின்றன. இதன் மூலம் வீட்டில் இருக்கும் மூட்டைபூச்சி இனத்தையே பூண்டோடு அழித்துவிடுகிறார்கள்.

கேன்டகி பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் ஆய்வு துறை, மூட்டைபூச்சிகள் பற்றிய ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அவர்களது ஆய்வும், நாய்களை பயன்படுத்துவது நல்ல தீர்வு என்றே சொல்கிறது. நாய்களை வைத்து மூட்டைபூச்சிகளை அழிக்கும் முறை மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்றும் அந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மூட்டை பூச்சிகளின் ஆதிக்கம் நியூயார்க்கில் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதன் தொல்லை 2006-ல் இருந்ததைவிட 2008-ல் இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டது. அங்குள்ளவர்கள் மூட்டை பூச்சிக்கு பயந்து அழகான அபார்ட்மென்டுகளைக் கூட தியாகம் செய்துவிட்டு, பாதுகாப்பான சிறிய இடங்களுக்கு குடிபோய்விட்டனர். புதிய இடத்திற்கு குடிபோகும் போது அங்கும் மூட்டை பூச்சி ஏதாவது இருக்கிறதா என்று நிபுணர்களை வைத்து ஆய்வு செய்த பிறகே குடியேறுகிறார்கள். மூட்டைபூச்சிகளின் தொல்லை அங்கே அதிகரித்துக்கொண்டே இருப்பதால், நியூயார்க் நகர மேயர் இதற்கென்று ஒரு ஆலோசனை குழுவையே உருவாக்கியிருக் கிறார்.

மூட்டைபூச்சிகளை வேட்டையாடும் நாய்கள், முறைப்படி பயிற்சியளித்து பயன்படுத்தப்படுகின்றன. பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை தனியார்களுக்கும் விற்கிறார்கள். இத்தகைய பயிற்சியை முதல் முதலில் அளித்தவர், வீஸ்டைன்.

அவர், "நான் பயிற்சி அளித்த நாய்களை நாடு முழுக்க விற்றிருக்கிறேன். சர்வதேச அளவிலும் நான் நாய்களை அனுப்புகிறேன்'' என்கிறார்.

அதிக அளவில் மூட்டைபூச்சிகளை கொன்று, தன் எஜமானர்களை நிம்மதியாக தூங்கவைக்கும் நாய்களுக்கு இப்போது அமெரிக்கர்கள் அதிக செல்லம் கொடுக்கிறார்கள்.

தினத்தந்தி


மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்! Empty Re: மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்!

Post by அசுரன் Sun 26 Aug 2012 - 1:29

புதுசால்ல இருக்கு...

நாய் மேல் இருக்குற உனியையும் நீங்க ஒரு வழியை கண்டுபிடிச்சா நல்லாயிருக்கும் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்! Empty Re: மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்!

Post by விநாயகாசெந்தில் Sun 26 Aug 2012 - 12:57

:idea: :idea: :idea:


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்! Empty Re: மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்!

Post by யினியவன் Sun 26 Aug 2012 - 13:10

பாவம் இந்த நாய் - நமக்காக என்னென்னல்லாம் செய்கிறது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்! Empty Re: மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்!

Post by அருண் Sun 26 Aug 2012 - 15:28

தினமும் மூட்டை பூசியுடன் இரவில் சண்டை போட்டு கொண்டு இருக்கிறேன்.! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
எப்படியோ இரவில் தூங்கினால் சரி! புன்னகை .
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்! Empty Re: மூட்டை பூச்சிகளைக் கொல்ல... வேட்டை நாய்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum