ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Today at 12:44 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:42 am

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:41 am

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:33 am

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 12:31 am

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 12:30 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 12:28 am

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 12:26 am

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 12:18 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:49 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 4:52 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 12:39 pm

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:15 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:09 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:07 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:06 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 12:24 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:21 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:48 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:47 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:44 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:42 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:41 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 11:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 11:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Jul 10, 2024 9:54 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:34 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:18 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Wed Jul 10, 2024 2:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்!

+7
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஹர்ஷித்
யினியவன்
விநாயகாசெந்தில்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! - Page 2 Empty பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்!

Post by விநாயகாசெந்தில் Wed Aug 22, 2012 1:01 pm

First topic message reminder :

பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! - Page 2 Image

தமிழர்கள் எங்கள் கூரிய வாட்கள்
துருப்பிடித்து தூங்கத்தொடங்கி
நாட்களாச்சு !

தமிழர்கள் எங்கள் வீரிய நாக்கள்
தடம் புரண்டு பேசப்பழகிய
வாழ்க்கையாச்சு !

தமிழ்த்தாய் வாழ்த்தை
மெல்லக்கொன்று
கொஞ்ச கொஞ்சமாய்
சமாதி கட்டினோம்;

சங்கே முழங்கை
சத்தியமாய் மறந்து
நாக்க மூக்கக்கு
நடனங்கள் ஆடினோம் !

கம்பு, கேழ்வரகு, கடலை உருண்டையோடு
உணவே மருந்தாய் உண்டதை மறந்து
பீஸா, பர்கர், பெப்சி, கோக்கென
வயிறு வளர்க்க பழகியாச்சு !

அம்மா என்றழைத்த அழகுத்தமிழும்
மம்மி என்றிங்கே மாறிப்போச்சு ;
அம்மியில் அரைத்த நாட்டுக்கோழி குழம்பும்
மேரி பிரௌன், கே.எப்.ஸியில் மறைஞ்சேப் போச்சு ;

வீட்டுக்கு வெளியில் திண்ணையும்
விருந்தாளிக்கு முதலில் தண்ணியுமான
தமிழர் பண்பாடுமிங்கே
காணாமப்போச்சு ;

காசு கொடுத்து வாங்கும்
மினரல் வாட்டர் கேனுக்குள்ள
தாகத்தோடு பண்பாடும்
மூழ்கித்தான் போச்சு ;

நெல்லினில் எழுதி
பழகிய காலத்தை
பழங்கதையென்று ஒதுக்கியாச்சு ;

தமிழ்ச்சொல்லினில்
பாடங்கள் பயில்வதுமிங்கே
அறிவிலித்தன்மையின்
அடையாளமாச்சு ;

சங்கம் வைத்து தமிழை வளர்த்த கதைகளெல்லாம்
வெறும் வரலாற்றில் மட்டும்தான் மீதமாச்சு ;
பாரதியும், பாரதிதாசனுமிங்கே
வெறும் ஃபேஷன் பேச்சாத்தான் மாறிப்போச்சு ;

மரபுக்கவிதை எல்லாமிங்கே
மாண்டுதானே போச்சுது ;
புதுக்கவிதை என்ற பெயரில்
தமிழுமிங்கே சாகுது ;

செம்மொழி அந்தஸ்து கிடைச்சும் கூட
வெறும் செல்லாக் காசாத்தான் கிடக்குது ;
உலகத்தமிழ் மாநாடுமிங்கே
ஒருத்தருக்காய்த்தான் நடந்தது ;

இனத்தின், மொழியின் பற்றுகூட
இங்கே வியாபாரமாத்தான் போச்சுது ;
புதுப்பட ரிலீசும், ஜ.பி.எல்லும்தான்
எங்கள் நேரத்தில் முக்கியமாச்சுது ;

வேட்டியும், பாவாடை தாவணியும்
வெளிநாட்டு உடையாத்தான் தெரிஞ்சுது ;
ஜீன்ஸ் பேண்ட்டும் லெக்கின்ஸ்ம்தான்
எங்க உடம்புக்கு ஏத்ததா புரிஞ்சது ;

தாலி கட்டுற கல்யாணமெல்லாம்
வேலியாத்தான் புளிச்சது ;
வேண்டியதப்போ பிரிஞ்சிக்கிற
சேர்ந்து வாழ்தல் இனிச்சது ;

யாழ், பறை, உருமிமேளம்
ஒன்னுமில்லாமப் போச்சுது ;
கீ போர்டு, கிட்டார், டிரம்ஸ்தான்
உடம்பு முழுக்க அதிருது ;

பக்கத்து வீட்டு மூஞ்சியெல்லாம்
அந்நியமாத் திரியுது ;
ஃபேஸ்புக்கு பிரெண்டுங்கதான்
ஆயிரத்த தாண்டுது ;

அரிசி குடுத்து கீரை வாங்கும்
பழக்கமெல்லாம் போச்சுது ;
அஞ்சு ரூவா கீரை வாங்க
காருமிங்கே போகுது ;

அரசாங்கக் கல்வி இங்கே
தனியார் மயமாச்சுது ;
தனியாரின் கள்ளுக்கடை
அரசே ஏத்து நடத்துது ;

அடுத்து என்ன இலவசமுன்னு
மனசு ஏங்கிக் கிடக்குது ;
இலவசங்கள் கிடைக்குமுன்னுதான்
ஆட்சி மாற்றமும் நடக்குது ;

லஞ்சம் கொடுக்க கூச்சமின்றி
வாழக்கூட பழகியாச்சு ;
சுயவொழுக்கம் என்பதெல்லாம்
காத்தோட போயி நாளாச்சு ;

பாரம்பரிய வரலாற்றை
பக்கம் பக்கமா எழுதலாம் ;
பாழாப்போன பழக்கத்தை
எத்தனை பக்கம் எழுதறது?...

பாழாய்ப்போகும் தமிழையும்
வீணாப்போகும் தமிழனையும்
காக்கப்போவது யாருங்கோ?...
தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கோ...!!!
நன்றி _ கதம்பமாலை


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down


பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! - Page 2 Empty Re: பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்!

Post by ராஜா Wed Sep 19, 2012 12:24 pm

lgp wrote:கர்நாடக நண்பர்களோ தண்ணீர் தர மறுக்கின்றார்கள். கேரளத்து நண்பர்களோ தண்ணீரை அனண கட்டித் தடுக்கின்றார்கள் மத்திய அரசோ பாராமுகமாக இருக்கின்றது. ஆனால் தமிழர்களுக்கோ ஒற்றுமையும் இல்லை. தமிழ் மீது பற்றும் இல்லை.
சரியாக சொன்னீர்கள் , நாம் தான் கூடன்குளத்திலேயே ஒருவருக்கொருவர் அடித்துகொண்டிருக்கிறோமே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! - Page 2 Empty Re: பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Sep 19, 2012 1:49 pm

தமிழ் தேவ மொழி !

அதை எவ்வளவுதான் கெடுத்தாலும் உலகை உய்விக்கும் ஆன்மீக பேரலை தமிழகத்திலிருந்து புறப்படுவது தேவ சித்தமாய் உள்ளது !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! - Page 2 Empty Re: பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்!

Post by அசுரன் Wed Sep 19, 2012 3:19 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:தமிழ் தேவ மொழி !

அதை எவ்வளவுதான் கெடுத்தாலும் உலகை உய்விக்கும் ஆன்மீக பேரலை தமிழகத்திலிருந்து புறப்படுவது தேவ சித்தமாய் உள்ளது !
அருமையாக சொன்னீர்கள் ஐயா! தமிழை யாராலும் அழித்துவிட முடியாது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! - Page 2 Empty Re: பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்!

Post by விஸ்வாஜீ Wed Sep 19, 2012 10:50 pm

[/quote]சரியாக சொன்னீர்கள் , நாம் தான் கூடன்குளத்திலேயே ஒருவருக்கொருவர் அடித்துகொண்டிருக்கிறோமே [/quote]

இன்றைய தமிழனின் நிலைக்கு எடுத்துக்காட்டுதான் கூடங்குளம் வன்முறை.
இந்த கவிதையை படிக்கும்போது மனது வேதனைப்படுகிறது.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! - Page 2 Empty Re: பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum