புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனித்துளி - சினிமா விமர்சனம் Poll_c10பனித்துளி - சினிமா விமர்சனம் Poll_m10பனித்துளி - சினிமா விமர்சனம் Poll_c10 
6 Posts - 60%
heezulia
பனித்துளி - சினிமா விமர்சனம் Poll_c10பனித்துளி - சினிமா விமர்சனம் Poll_m10பனித்துளி - சினிமா விமர்சனம் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பனித்துளி - சினிமா விமர்சனம் Poll_c10பனித்துளி - சினிமா விமர்சனம் Poll_m10பனித்துளி - சினிமா விமர்சனம் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பனித்துளி - சினிமா விமர்சனம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 10:59 am

முடிவே கட்டிவிட்டார்கள் போலிருக்கிறது..! பணம் இருந்தால் நாம நினைக்குறதையெல்லாம் படமாக்கி வெளியிட்டுவிடலாம். நம் படத்தை எதிர்பார்த்து சோறு, தண்ணியில்லாமல் பல பேர் தமிழ்நாட்டில் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பலருக்கும் நினைப்பு.. நட்டிகுமார், டாக்டர் ஜெய் என்ற இரட்டை இயக்குநர்கள் இப்படித்தான் யோசித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
பனித்துளி - சினிமா விமர்சனம் Panithuli-poster
ஷார்ட் மெமரி லாஸ் அல்லது செலக்டிவ் அம்னீஷியா என்று இரு டைப்புகளில் சொல்லிக் கொள்ளலாம்.. அந்த நோய் வந்து தனது காதலியை மறந்தவன் திரும்பவும் எப்படி தனது காதலியை அடைகிறான் என்பதைத்தான் நமக்கே ஷார்ட் மெமரி லாஸ் ஏற்படும் அளவுக்கு மூளையை கிறங்கடித்து சொல்லி முடித்திருக்கிறார்கள்..


ஹீரோ கணேஷ் வெங்கட்ராமன், டாக்டருக்கு படிக்கும் கல்பனா பண்டிட்டை காதலிக்கிறார். கல்பனாவின் படிப்பு முடிவதற்குள்ளாகவே கணேஷுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்க ஒரு வருஷம்தானே போயிட்டு வா.. அதுக்குள்ள நான் படிப்பை முடிச்சர்றேன் என்கிறாள் காதலி. காதலியின் தாதா அப்பாவோ தனது மகளை ஒரு வருடம் பார்க்காமல் இருக்க வேண்டும். அதன் பின்பும் இருவரும் காதலிப்பதாகச் சொன்னால் தான் திருமணம் செய்து வைப்பதாகச் சொல்கிறார். இதை நம்பி அமெரிக்கா செல்லும் ஹீரோவை அங்கேயே கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இதில் சிக்கி தலையில் அடிபட்டு கடைசி 4 வருட நினைவுகளை இழக்கிறார் ஹீரோ. ஹீரோயினையும் சேர்த்துதான்..!

இதன் பின்பு தனது அலுவலக கொலீக்குடன் தொடர்பு ஏற்பட்டு அந்த நட்பு படுக்கைவரையிலும் பாய்ந்தோடி சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மலையாள கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் வருவதைப் போல சான்பிரான்சிஸ்கோ காட்டுக்குள் ஒரு நாள் இவர்கள் தங்கியிருக்கும்போது அங்கேயிருந்த பழங்குடி மக்கள் கொடுத்த ஒரு பானத்தைக் குடித்துத் தொலைகிறார் ஹீரோ. உடனேயே பழைய கதையெல்லாம் ஞாபகத்துக்கு வந்து விடுகிறது.. ஆனாலும் ஒரு ஸ்டெடி மைண்டாய் இல்லை என்பதால் மீண்டும் ஹாஸ்பிட்டல், ட்ரீட்மெண்ட்..

இடையில் திடீரென்று தனது காதலியை அமெரிக்காவிலேயே மருத்துவராகப் பார்த்து விடுகிறார். அறுந்து போன காதல் நூலை காதலியிடம் நீட்டிக் கொண்டிருக்க. அவளோ அதைப் பற்றிக் கொள்ளாமல் இருக்கிறார். இப்போது ஹீரோ எப்படி அவளை கைப்பிடிக்கிறார் என்பதை தைரியம் இருந்தால் தியேட்டருக்கு போய் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்குங்க..!

கலகலப்பு, மிரட்டல் போன்ற படங்களில் லாஜிக் பார்க்க தேவையே இல்லை.. அது நகைச்சுவை.. ச்சும்மா டைம்பாஸ் என்று சொல்லித்தான் அழைக்கிறார்கள். ஆனால் இதில் அப்படியில்லையே..? முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ்வரையிலும் ஓட்டையான லாஜிக் திரைக்கதையை வைத்துக் கொண்டு முடிந்த அளவுக்கு எடுத்துத் தந்திருக்கிறார்கள் இயக்குநர்கள்..!

அமெரிக்காவில் இப்படி நட்ட நடு ரோட்டில் துப்பாக்கியுடன் எவனாவது ஓட முடியுமா..? ஓடியவன் அடுத்த நாள் வெளியில் இருக்க முடியுமா..? ம்ஹூம்.. சான்பிரான்சிஸ்கோவில் பழங்குடியினரின் கதை.. ஹீரோவை கொலை செய்ய நடக்கும் முயற்சிகள்.. மருத்துவர் அருணின் “தமிழா.. தமிழ் தெரியுமா..? தமிழ்ல பேசுறீங்க..” என்ற கேணத்தனமான கேள்வி..! ஹீரோ அமெரிக்கா வந்து 2 வருஷமாகியும் அவரோட வீட்டுக்காரங்க அவரைப் பத்தி கவலையே படலையா..? காதலியோட அப்பன் நம்ம ஊர்ல பட்டப் பகல்ல ஒருத்தனை பெட்ரோல் ஊத்திக் கொளுத்துறான்.. “அதை உன் பொண்ணுகிட்ட போட்டுக் கொடுத்திருவேன்.. நான் நடிக்கிறதை நீ கண்டுக்காத.. கல்யாணத்தை செஞ்சு வைன்னு..” கிளைமாக்ஸ்ல ஹீரோ உருகுறதுல சாமி சத்தியமா ஒரு பீலிங்ஸும் வரலை..! “எந்தக் காட்சி இப்போது நடப்பது.. எது முன்பு நடந்தது..? எது ரீலு.. எது அந்து போன ரீலு..?” என்று மாற்றி, மாற்றிக் காட்டியதில் சினிமா பார்ப்பதையே தொழிலாக வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கே கொஞ்சம் கஷ்டமாகியிருக்க.. கொட்டாம்பட்டியில் இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகன் என்ன ஆவானோ..? பாவம்.

கணேஷ் வெங்கட்ராமன் அர்னால்டு மாதிரி உடம்பை சிக்கென்று வைத்திருக்கிறார். அடிக்கடி சட்டையைக் கழட்டி தனது சிக்ஸ் பேக் உடம்பைக் காட்டி தனது ரசிகைகளை சந்தோஷப்படுத்தியிருக்கிறார். அவருக்கான காட்சிகளில் அழுத்தமோ, இம்ப்ரஸ்ஸிவ்வோ இல்லாததால் ஜஸ்ட் பாஸ் ஹீரோவாகி தப்பித்துச் செல்கிறார்.

2 ஹீரோயின்களில் கல்பனா பண்டிட்டின் பிலிமோகிராபி பல படங்களைக் காட்டுது.. அம்மணியும் நல்லாவே காட்டியிருக்கு. இன்னொரு புதுமுகம் ஷோபனா.. நேரில் பார்ப்பதைவிட ஸ்கிரீனில் அழகாகத் தெரிகிறார். ஆனாலும் பிரிண்ட்டின் நிறப்பிரிகையினால் அதுவும் தெளிவில்லாமல் இருக்கிறது..! காதல் காட்சிகளில் அழகாய் மிளிர்கிறார்.. பாடல் காட்சிகளில் ஜொலிக்கிறார்.. மற்றவைகளில் அதிகம் அவருக்கு வேலையில்லை என்பதால் கவனிப்பாரற்று கிடக்கிறது ஹீரோயின் போர்ஷன்..!

இதுவே இப்படியென்றால் இசை, பாடல்கள் பற்றியெல்லாம் நமக்கென்ன கவலை..? Agnel Roman & Faizan Hussain அப்படீன்னு ரெண்டு பேர் இசையமைப்பு செஞ்சிருக்காங்களாம்.. ஒளிப்பதிவை மட்டும் முடிந்த அளவுக்கு சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது..! அதற்கு மட்டும் எனது வாழ்த்துகள்..!

இந்த டிஜிட்டல் யுகம் வந்தாலும் வந்துச்சு.. ஆளாளுக்கு கேமிராவைத் தூக்கிட்டு நாங்களும் ரவுடிதான்னு கிளம்பிர்றாங்க.. அமெரிக்கா போயி இவ்வளவு நல்லா காசு செலவு பண்றவங்க கதை, திரைக்கதைக்கு கொஞ்சம் மெனக்கெட்டு மெரீனா பீச்லயாவது உக்காந்து பேசிட்டு கிளம்பினாத்தான் என்ன..? கணேஷ் வெங்கட்ராமனுக்கு இப்போ என்ன மார்க்கெட் இருக்கா..? அவரை ஹீரோவா போட்டா விநியோகஸ்தர்கள் வாங்குவாங்களா..? தியேட்டராவது வாடகைக்குக் கிடைக்குமா..? போஸ்டர் அடிக்கிற காசாவது திரும்ப வருமா..? இதையெல்லாம் யோசித்தார்களோ இல்லையோ.. படம் பார்க்குற நமக்கு பக், பக்குன்னு அடிச்சுக்குது.. தயாரிப்பாளர் பாவமாச்சேன்னு..! ஆனாலும் தயாரிப்பு பார்ட்டி பெரிய ஆளுகதான்.. இதுனால சேதாரத்தைப் பத்தி அவுங்க கவலைப்படப் போறதில்லை.. தமிழ், ஹிந்தில ஒரே நேரத்துல இதை எடுத்திருக்காங்கன்னா பார்த்துக்குங்களேன்..!

கணேஷின் நோய் தொடர்பான காட்சிக் குழப்பங்களை மட்டும் நேர்ப்படுத்தியிருந்தால், இடைவேளைக்கு முன்பிருந்தே படத்தை ரசித்திருக்க முடியும் என்று நினைக்கிறேன்.. இறுதிக் காட்சியில் இது அத்தனையும் டூப்பு என்று ஒரு வரி டயலாக்கில் சொல்லி கணேஷ் தப்பிக்கப் பார்ப்பதும், துப்பாக்கியோடு வந்த மாமனார் மனசிரங்கி மகளை தாரை வார்க்க சம்மதிப்பதும் அக்மார்க் பூவை காதில் சுற்றும் வேலை.. இதற்குள் மக்கள் போதுமடா சாமின்ற லெவலுக்கு போயிட்டாங்க..! கணேஷுக்கு இப்போது உடனடி தேவை.. நல்லதொரு கதை.. நல்லதொரு இயக்குநர்..!

ம்ஹூம்.. வேற ஒண்ணும் சொல்றதுக்கில்லை..!

--
உண்மை தமிழன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக