புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Poll_c10நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Poll_m10நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Poll_c10நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Poll_m10நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Poll_c10 
3 Posts - 7%
heezulia
நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Poll_c10நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Poll_m10நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Poll_c10நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Poll_m10நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Poll_c10நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Poll_m10நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 13 Aug 2012 - 10:15

மாமியார் வீட்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு மருமகளின் கனவு, தான் மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பது தான். ஒவ்வொரு மாமியாரின் கனவும் தான் மருமகளை மகள் போல பாவிக்க வேண்டும் என்பது தான். ஆனால் நடப்பதோ வேறு!

மாமியார் மருமகள் என்ற வார்த்தைக்கு எலியும், பூனையும் என்பது தான் பொருளா...? `நான் எவ்வளவு பிரியமாக இருந்தாலும் மருமகள் என்னை மதிப்பதில்லை' என்று மாமியாரும்- `நான் எவ்வளவு தான் விட்டுக் கொடுத்து தாழ்ந்து போனாலும் என்னை எப்போதும் குறைசொல்வதே இவர்களுக்கு வேலை' என்று மருமகளும் புலம்புவதை கேட்க முடிகிறது. எவ்வளவு பெரிய குடும்பமானாலும் மாமியாரும், மருமகளும் ஒற்றுமையாக இருப்பதென்பது நடக்காத காரியமாக உள்ளது.

ஏன் இந்த இரண்டு பெண்களுக்கும் இடையே எப்போதும் மோதல் நடந்துகொண்டே இருக்கிறது?

படித்துவிட்டு பல்வேறு துறைகளில் செயலாற்றி பல இக்கட்டான பிரச்சினைகளை தனியாக நின்று சமாளிக்கும் பெண்கள் கூட இன்று மாமியார் மருமகள் பிரச்சினைக்கு தப்புவதில்லை. மனோரீதியாக இதற்கொரு தீர்வு காண முற்பட்டு பல்வேறு ஆய்வுகளை நடத்தி மாமியார் மருமகள் பிரச்சினைக்கு பல காரணங்களை கண்டு பிடித்து அதனை தவிர்க்கும் வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார்கள். இது சம்பந்தமாக பிரபல பெண்மணிகளை சந்தித்து அவர்களுடைய குடும்பவாழ்க்கை, மாமியார் மருமகள் உறவு பற்றி அலசி ஆராய்ந்து குறை நிறைகளை சொல்லியிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இது பல குடும்பங்களுக்குப் பொருந்தும் வகையில் உள்ளது.

டெலிவிஷன் தொடர்களில் மாமியார் வேடங்களில் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கும் ஹேமா கிங், இது பற்றி சில விஷயங்களை கூறுகிறார்.

"இப்பொழுதெல்லாம் டி.வி. சீரியல்களில் மாமியார் மருமகள் சண்டைகளை மையப்படுத்தியே காண்பிக்கிறார்கள். மாமியார் மருமகளை அதிகாரம் செய்வதும், கொடுமைப்படுத்துவதும், வீட்டை விட்டு துரத்துவதுமாக காட்சிகள் எல்லை மீறி போகின்றன. இப்படிப்பட்ட சீரியல்கள் மக்கள் மத்தியில் வெற்றியடைவது அவர்களின் தவறான ரசனையைத்தான் காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரை இதுவும் ஒரு வன்முறை காட்சிதான். இப்படிப்பட்ட வன்முறைகளை சின்னத்திரை தவிர்க்க வேண்டும். மக்கள் மனதில் ஆழமாக பதியும் விதத்தில் குடும்பச் சண்டைகளை விரிவுப்படுத்தி காண்பிக்ககூடாது.

நிஜ மாமியாருக்கும் சீரியல் மாமியாருக்கும் என்ன வேறுபாடு? நிஜமாமியாரை அக்கம்பக்கத்தில் சுற்றியிருப்பவர்கள் இயக்குவார்கள். சீரியல் மாமியாரை இயக்குநர் இயக்குவார். சுய அறிவோடு இயங்கும் மாமியார்கள் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும். நல்ல மாமியாரால் சீரியலில் வெற்றிபெற முடியாது.

மாமியார் மருமகள் இருவரையும் சமாளிப்பது வீட்டில் உள்ள ஆண்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. இருவரும் முக்கியமானவர்கள். யாரையும் வெறுக்க முடியாது. பெரும்பாலான குடும்பங்களில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே தான் பிரச்சினைகள் ஏற்படுகிறது. மருமகளுக்கும் மாமனாருக்கும் ஏற்படுவதில்லையே ஏன்?'' என்று கேட்டு, இதற்கும் ஹேமா பதில் சொல்கிறார்.

"மாமனார் அதிக நேரம் வீட்டில் இருப்பதில்லை. மேலும் அவர் தனக்கு போட்டியாக மருமகளை நினைப்பதில்லை. மருமகளின் பெரும்பாலான தவறுகளை மாமனார் பெரிதுபடுத்துவதில்லை. அதிக நேரம் மருமகளுடன் நெருங்கி பழகும் மாமியாரின் கண்ணுக்கு தான் குறை-நிறைகள் தென்படுகிறது. மேலும் தனக்குப் பிறகு இந்த குடும்பத்தை ஏற்று பொறுப்பாக கவனித்துக் கொள்ளும் தகுதி மருமகளுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, புதிய பெண்ணை ஒரு தகுதியுடைய குடும்பத் தலைவியாக்க வேண்டுமே என்ற துடிப்பு அவர்களை ஆட்கொள்ளும் போது அது அதிகாரமாக மாறிவிடுகிறது. இதை மருமகள் புரிந்துகொண்டால், மாமியார் மேல் உள்ள வெறுப்பு நீங்கி மாமியார் மெச்சும் மருமகளாகலாம்.

மருமகளை மகளாக மாமியார் பாவிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெண்களுக்கும் இருக்கலாம். ஆனால் மாமியாரை தாயாக பாவிக்கும் மருமகள்கள் எத்தனை பேர்?

ஒரு தாய், தனது மகளிடம் எப்போதும் அன்பு காட்டிக் கொண்டே இருப்பதில்லையே. தவறு செய்யும் போது கண்டிக்கவும் செய்கிறாள். அதற்காக ஒரு பெண் தாயை வெறுப்பதில்லை. ஆனால் இதே கண்டிப்பு மாமியாரிடமிருந்து வந்தால் அது மாமியாரை வெறுக்கும் அளவுக்கு போய்விடுகிறது.

நல்ல மாமியார் எப்படி இருக்க வேண்டும்? பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும். மருமகள், மருமகன் இரண்டு பேருக்கும் ஒரே மாமியார் தான். ஆனால் மருமகனிடம் நடந்துகொள்ளும் விதம் வேறு, மருமகளிடம் நடந்துகொள்ளும் விதம் வேறாக அல்லவா இருக்கிறது. ஒரு மருமகனிடம் தவறுகளை சுட்டிக் காட்டும்போது மிகவும் பக்குவமாக நடந்துகொள்கிறார், மாமியார். காரணம் மகளின் வாழ்க்கை பாதித்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை. அதைப் போன்ற பக்குவம் மருமகளிடம் ஏன் வருவதில்லை. மகனுடைய வாழ்வை பற்றிய அக்கறையில்லையா? இந்த இடத்தில் மாமியார்கள் சமநிலைப் பட வேண்டும். அப்போதுதான் நல்ல மாமியாராக முடியும்.

மகள், மருமகள் இருவர் மீதும் ஒரு பெண் அன்பு காட்டினாலும் தவறுகள் ஏற்படும் போது மகளிடம் நடந்து கொள்ளும் விதத்திலும் மருமகளிடம் நடந்து கொள்ளும் விதத்திலும் நிச்சயம் வேறுபாடு இருக்கிறது. மகளை மன்னிக்கும் மனம் மருமகளை மன்னிக்காது.

மகளின் குறைகளை மறைத்து, நிறைகளை பார்க்கும் பெண், மருமகளின் விஷயத்தில் நிறைகளை மறைத்து குறைகளை பெரிதுபடுத்தும் விதமாக நடந்துகொள்கிறார். மேலும் இந்திய பெண்களுக்கு மாமியார்-மருமகள் சண்டையை பார்ப்பது போன்றதொரு சுவாரஸ்யம் வேறு எதிலும் இருப்பதில்லை. இந்த மனப்போக்கு தான் இத்தகைய சீரியல்களின் வெற்றிக்கு காரணம். இந்த மனப் போக்கை மாற்ற வேண்டும். அவரவர் வீட்டில் மகிழ்ச்சி ஏற்பட மாமியார் மருமகள் ஒற்றுமைக்கான வழி முறைகளை தேட வேண்டும். அதுவே நல்ல சமுதாய மலர்ச்சிக்கு காரணமாக இருக்கும். ஒரு பெண் தாயிடம் இருப்பதைவிட மாமியாரிடம் இருக்கும் காலமே அதிகம். அன்பு காட்டும் நேரத்தை விட ஒரு பெண் தவறு செய்யும் போது அதை மென்மையாக கையாளும் பக்குவத்தில்தான் மாமியார்களின் உயர்ந்த உள்ளம் வெளிப்படும். மகனின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தான் மருமகளிடம் நடந்து கொள்ளும் முறையும் ஒரு காரணம் என்பதை மனதில் கொண்டு பொறுப்போடு பெண்கள் நடந்துகொள்ள வேண்டும்.

எந்த இக்கட்டான நேரத்திலும் தன் சுயபுத்தியோடு செயல்பட வேண்டுமே தவிர பிறர் சொல்லை கேட்டு தவறாக தடம் மாறக் கூடாது. இது நம் குடும்பம். போர்க்களமல்ல. இதில் யாருக்கு வெற்றி என்பது நம் இலக்கல்ல. மற்றவர்களின் மனநிம்மதியே நம் வெற்றி என்பதை மனதில் கொண்டு இருவரும் செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கை என்பது மாமியார்-மருமகள் இருவருக்கும் ஒரு திருப்புமுனை. அதற்கு தக்கபடி இருவருமே மாறவேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை மாமியார் மெச்சும் மருமகளாக இருப்பது தான் ஒரு பெண்ணின் பெரிய சாதனை.

தினத்தந்தி



நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon 13 Aug 2012 - 14:34

சிவா wrote:மாமியார் மருமகள் இருவரையும் சமாளிப்பது வீட்டில் உள்ள ஆண்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. இருவரும் முக்கியமானவர்கள். யாரையும் வெறுக்க முடியாது. தினத்தந்தி

அனுபவம் போல தெரிகிறது?



நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? Signaturexn
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 13 Aug 2012 - 14:43

சிவா - வீட்ல அனைவரும் நலம் தானே - நலம் என்றே நம்புகிறேன்.




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 13 Aug 2012 - 14:49

உண்மைதான் இன்று பெரும்பாலும் வீடுகளில் பிரச்சினை உள்ளது.!

தகவலுக்கு நன்றி அண்ணா!


azhagan77
azhagan77
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Postazhagan77 Mon 13 Aug 2012 - 17:32

எல்லா வீடுகளிலும் இந்த பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது.



நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்? 39958052
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon 13 Aug 2012 - 22:49

சிரி சிரி சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 13 Aug 2012 - 23:09

பாலா சார் கிருஷ்ணாம்மா இந்தப் பக்கம் வர மாட்டாங்கன்னு நினைக்கிறேன் - நீங்க என்ன சொல்றீங்க? புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 13 Aug 2012 - 23:26

//அன்பு காட்டும் நேரத்தை விட ஒரு பெண் தவறு செய்யும் போது அதை மென்மையாக கையாளும் பக்குவத்தில்தான் மாமியார்களின் உயர்ந்த உள்ளம் வெளிப்படும். மகனின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தான் மருமகளிடம் நடந்து கொள்ளும் முறையும் ஒரு காரணம் என்பதை மனதில் கொண்டு பொறுப்போடு பெண்கள் நடந்துகொள்ள வேண்டும்//

ரொம்ப சரி புன்னகை மருமகனுக்கு ஆசை ஆசையாய் சமைத்துப்போடும் மாமியார்கள் மாட்டுப்பெண்ணுக்கு ஏன் செய்யமாட்டார்கள் என்று எனக்கு புரிவதில்லை அநியாயம்


அவள் (மாட்டுப்பெண்) நமக்கு வாரிசை பெற்றுத்தரப்போகிறவள் என்பதை மறக்கக்கூடாது கூடாது கூடாது கூடாது




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 13 Aug 2012 - 23:27

யினியவன் wrote:பாலா சார் கிருஷ்ணாம்மா இந்தப் பக்கம் வர மாட்டாங்கன்னு நினைக்கிறேன் - நீங்க என்ன சொல்றீங்க? புன்னகை

மண்டையில் அடி என்னை எதுக்கு வன்புக்கு இழுக்கிறிங்க இனியவன்? நான் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் புன்னகை எப்போதும் நியாயமாக த்தான் நடப்பேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 13 Aug 2012 - 23:37

இல்லம்மா நீங்க தான் டோன்ட் வொர்க் ஹார்ட் - வொர்க் ஸ்மார்ட் ன்னு சொல்றீங்களே... அதான் சொன்னேன். புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக