புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று மர்மங்கள்- நியாண்டர்தால் மனிதர்கள் நம் மூதாதையர்களா? Poll_c10வரலாற்று மர்மங்கள்- நியாண்டர்தால் மனிதர்கள் நம் மூதாதையர்களா? Poll_m10வரலாற்று மர்மங்கள்- நியாண்டர்தால் மனிதர்கள் நம் மூதாதையர்களா? Poll_c10 
89 Posts - 38%
heezulia

83 Posts - 36%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

prajai

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று மர்மங்கள்- நியாண்டர்தால் மனிதர்கள் நம் மூதாதையர்களா? Poll_c10வரலாற்று மர்மங்கள்- நியாண்டர்தால் மனிதர்கள் நம் மூதாதையர்களா? Poll_m10வரலாற்று மர்மங்கள்- நியாண்டர்தால் மனிதர்கள் நம் மூதாதையர்களா? Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%

6 Posts - 1%
Srinivasan23
வரலாற்று மர்மங்கள்- நியாண்டர்தால் மனிதர்கள் நம் மூதாதையர்களா? Poll_c10வரலாற்று மர்மங்கள்- நியாண்டர்தால் மனிதர்கள் நம் மூதாதையர்களா? Poll_m10வரலாற்று மர்மங்கள்- நியாண்டர்தால் மனிதர்கள் நம் மூதாதையர்களா? Poll_c10 
3 Posts - 0%

JGNANASEHAR

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று மர்மங்கள்- நியாண்டர்தால் மனிதர்கள் நம் மூதாதையர்களா?

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 12, 2012 11:56 am

(Paul D.Aron - Mysteries in History- மொழிபெயர்ப்பு)
1856ம் வருடத்தில், வடகிழக்கு ஜெர்மனியில் உள்ள நியாண்டர்தால் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சுண்ணாம்புக்கல் குவாரியின் தொழிலாளர் ஒருவர் ஒருசில எலும்புகளைக் கண்டெடுத்தார். அவற்றை அவர் குகைக்கரடியின் எலும்புகள் என்று கருதினார். அந்தப் பகுதியின் பள்ளியாசிரியரும், இயற்கை வரலாற்று ஆர்வலருமான ஜோஹன் ஃபுல்ராட்டுக்கு அந்த எலும்புகளைக் காண்பித்தார் அவர்.

அவற்றைக் கண்ட ஃபுல்ராட் அவை குகைக்கரடியின் எலும்புகளை விட முக்கியமானவை என்று உணர்ந்தார். அந்தத் தலை மனிதனின் தலையின் அளவு தான் இருந்தது. இருந்தாலும் அதன் வடிவமைப்பு வித்தியாசமாக இருந்தது. பெரிய மூக்கு, பெரிய முன்பற்கள், முதுகில் ஒரு பெரிய வீக்கம் போன்ற அமைப்பு, தாழ்ந்த நெற்றி, கண்ணுக்கு மேலே எலும்பு அமைப்புகள் என்று விசித்திரமாகக் காட்சியளித்தது. அந்த உடல் ஒரு சராசரி மனிதனுடையதைப் போல் இருந்தாலும், அவன் சராசரி மனிதனை விடக் குள்ளமானவனாகவும் பலசாலியாகவும் இருந்தான் என்று தோன்றியது. அந்த எலும்புகளின் பழமை அவற்றின் முக்கியத்துவத்தை இன்னும் அதிகரிப்பதாக ஃபுல்ராட் கருதினார்.

அந்தப் பள்ளியாசிரியர் அருகிலிருக்கும் போன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உடற்கூற்றுவியல் பேராசிரியரான் ஹெர்மான் ஷாஃப்ல்ஹாசனைத் தொடர்பு கொண்டார். அந்தப் பேராசிரியரும் அந்த எலும்புகள் தனித்தன்மை வாய்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார். அந்த எலும்புக்கூடுகள் மிகப் பழமையான மனித இனத்தைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார் ஷாஃப்ல்ஹாசன். அவ்வினமே இப்போது நியாண்டர்தால் இனம் என்று அழைக்கப்படுகிறது. நியாண்டர்தால் மனிதர்கள், இக்கால் மனிதனின் மூதாதையர்கள் என்றுகூட ஷாஃப்ல்ஹாசன் சந்தேகித்திருக்கலாம்.

அந்தப்பேராசிரியரும், பள்ளியாசிரியரும் தங்கள் கண்டுபிடிப்பை உலகம் வியந்து போற்றும் என்று எதிர்பார்த்திருந்தால் அவர்கள் ஏமாந்தே போனார்கள். சார்லஸ் டார்வின் எழுதிய உயிரினங்களின் தோற்றம் என்னும் நூல் வெளிவருவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருந்தன (1859). மனிதன் பிற உயிரினங்களிலிருந்து தோன்றினான் என்ற கருத்து அக்கால அறிவியலாளருக்கு அபத்தமாயத் தோன்றியது. அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த நோயியல் வல்லுநரான் ருடால்ஃப் விர்ச்சோவ் அந்த எலும்புக்கூடு விசித்திர நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாதாரண மனிதனுடையது என்று அறிவித்தார். பிற நிபுணர்களும் அம்முடிவையே பின்பற்றினர்.

ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் டார்வினின் கோட்பாட்டைப் பெரும்பாலான அறிவியலாளர்கள் ஏற்றுக் கொண்டனர். பிரான்சு நாட்டைச் சேர்ந்த அறிவியலாளரான காப்ரியல் டி மோர்டிலட் அந்த எலும்புகளைப் பார்வையிட்டு இக்கால மனிதர்கள் நியாண்டர்தால் மனிதர்களிடமிருந்து பரிணமித்தார்கள் என்ற கோட்பாட்டை முன் வைத்தார். பிரான்சு, பெல்ஜியம், ஜெர்மனி முதலிய நாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட நியாண்டர்தால் எச்சங்கள் இக்கோட்பாட்டுக்கு வலுச் சேர்த்தன. அந்த எச்சங்கள் 1,10,000 வருடங்களிலிருந்து 35,000 வருடங்கள் வரை பழமையானவை. எனவே அவற்றை இக்கால மனிதனின் எலும்புக்கூடு என்றோ, வியாதியடைந்த மனிதனின் எலும்புக்கூடு என்றோ ஒதுக்கித் தள்ள முடியவில்லை.

ஆனால் இன்னொரு பிரெஞ்சுக்காரரான மார்செலின் பூலேயால் வழி நின்று பெரும்பான்மையான விஞ்ஞானிகள் நியாண்டர்தால் மனிதர்கள், இக்கால மனிதர்களின் மூதாதையார்கள் இல்லை என்றனர். அந்த எலும்புக்கூடுகள் பழமையானவையாக இருக்கலாம். ஆனால் அவை தன்னுடைய மூதாதையர் அல்ல என்றார் பூலே. மூட்டு வளைந்து, முதுகெலும்பு நெளிந்து, கழுத்து குறுகியிருக்கும் நியாண்டர்தால்கள் மனிதனை விட குரங்கு போல் தான் காட்சியளிக்கின்றன என்றார். இக்கால மனிதர்களுக்கும் அவர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என்று கருதினால், இக்கால மனிதர்களின் உண்மையான மூதாதையர்கள் இந்த வெறுக்கத்தக்க இனத்தை அழித்த தொடர்பே அது என்றார்.

இருபதாம் நூற்றாண்டில் இந்த அறிவியல் பிளவு மேலும் பெரிதாகிக் கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் மோர்டிலட்டைப் பின்பற்றியவர்கள் நியாண்டர்தால்களை நம்முடைய நேரடியான மூதாதையர் என்றனர். இன்னொரு பக்கத்தில் பூலேயும் அவரைப் பின்பற்றுபவர்களும் நியாண்டர்தால்களை பரிணாம வளர்ச்சியில் செத்துப்போனவர்களாக, மனித மூதாதையர்களின் தூரத்துச் சொந்தமாகக் கருதினர். சில வருடங்களாகத் தான் அறிவியலாளர்கள் இந்த வேறுபாட்டைக் களைவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
******
பூலேயைப் பின்பற்றியவர்கள் நியாண்டர்தால்கள் மனிதனின் மூதாதையர்கள் அல்ல என்று மறுத்ததற்கு காரணம் இருந்தது. ஏனென்றால் 1913ம் வருடம் கண்டுபிடிக்கப்பட்ட பில்ட்டவுன் மனிதனை அவர்கள் மனிதனின் மூதாதை என்று கருதினார்கள். சார்லஸ் டாவ்சன் என்ற நபரால் இங்கிலாந்தின் சஸக்ஸ் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பில்ட்டவுன் மனிதனின் எலும்புக்கூடு உடனடியாகப் புகழ் பெற்றது. நியாண்டர்தாலைப் போல் அல்லாமல் பில்ட்டவுன் மனிதன் இக்கால மனிதனைப் போன்றே காட்சியளித்தான். குரங்கைப் போன்ற தாடை மட்டும் பழமையானதாகக் காட்சியளித்தது. நேரான பல்வரிசை மனிதனைப் போன்று காட்சியளிக்க உதவி செய்தது. பூலே இந்த எலும்புக்கூடைத் தனது மூதாதை என்று சொல்வதில் பெருமை கொள்வார்.

பிரச்சினை என்னவென்றால் பில்ட்டவுன் எலும்புக்கூடு போலியானது. யாரோ ஒருவர், அது டாவ்சனாகக் கூட இருக்கக் கூடும், இக்கால மனிதனின் மண்டையோட்டை எடுத்து அதனுடன் உராங்குட்டன் குரங்கின் தாடைப்பகுதியையும் சேர்த்து அவற்றை அழுக்காக்கி பழமையாகத் தோன்றச் செய்துள்ளனர். 1953ல் விஞ்ஞானிகள் நுண்ணோக்கியன் கீழ் வைத்து அந்தப் பல்லை ஆராயும் வரை இந்த உண்மை வெளிப்படவில்லை.

இப்போது பெரும்பான்மையான அறிவியலாளர்கள் "நியாண்டர்தால்கள் மனிதனின் மூதாதையர்கள்" என்ற கூற்றுக்கு ஆதரவாளர்களாக மாறினர். அவர்கள் நம்மிடமிருந்து எந்த அளவுக்கு வேறுபட்டவர்கள் என்று ஆராய்வதற்குப் பதிலாக, நியாண்டர்தால்களுக்கும் நமக்குமான ஒற்றுமையை ஆராயத் தொடங்கினார்கள். 1957ல் அமெரிக்க உடற்கூற்றுவியலாளர்களான வில்லியம் ஸ்டராசும், ஏ.ஜே. இ. கேவும் பூலேயால் காட்டுமிராண்டித்தனமான, மனிதத்தன்மையற்ற என்று வர்ணிக்கப்பட்ட நியாண்டர்தால் எலும்புக்கூட்டை ஆராய்ந்தார்கள். 1908ம் வருடத்தில் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப் பட்ட அய்-லா-சாப்பலின் தொல்லுயிரெச்சம் அது.

அய்-லா-சாப்பல் மனிதன் ஆர்த்தரைட்டிஸ் என்னும் மூட்டுவியாதியால் பாதிக்கப்பட்டிருந்தான் என்பதை அவர்கள் கண்டறிந்தார்கள். பூலேயும் இதை அறிந்திருந்தார்.ஆனாலும் அதை ஒதுக்கித் தள்ளி விட்டார். நியாண்டர்தால் மனிதனின் வளைந்த கோலத்தை ஆர்த்ரைட்டிஸ் விளக்கியது. அதன் பிறகு வேறெதுவும் அவனை இக்கால மனிதனிடமிருந்து வேறுபடுத்தவில்லை. அந்த நியாண்டர்தால் மனிதன் இன்று மீணடும் பிறந்து குளித்து, ஷவரம் செய்து, இக்கால உடைகளை அணிந்தால் அவனை நியூயார்க் நகர சாலைகளிலும் யாரும் வேறுபாடாகப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று அந்த இரு உடற்கூற்றுவியலாளர்களும் முடிவெடுத்தார்கள்.

பிலட்டவுன் மனிதனுக்குப் பிந்தைய காலத்தில் நியாண்டர்தால் மனிதனின் உடற்கூறு மட்டுமல்லாமல் நடத்தையும் மறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. 1960களில் அமெரிக்க மானுடவியலாளரான சி.லோரிங் பிரேசு நியாண்டர்தால் கருவிகள், தொழில்நுட்பங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்தார். அவர்கள் விட்டுச் சென்ற சாம்பல்களின் மூலம், தங்கள் உணவை ஆழமில்லாத குழிகள் தோண்டி சமைத்துக் கொண்டார்கள் என்பது வெளிப்பட்டது. இம்முறை பிற்கால மனிதர்களின் முறையிலிருந்து அதிகமாக மாறுபட்டது அல்ல. பெரும்பாலான நியாண்டர்தால்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தன என்பதையும் இவ்வாய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள். அம்முறை அவர்களது மனிதத்தன்மையை மேலும் வெளிப்படுத்தியது. ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மிருகங்களின் எலும்புகள் ஒருவிதமான பலிச்சடங்கை வெளிப்படுத்தின. யுகோஸ்லோவியாவின் கிரப்பினாவில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த உடைக்கப்பட்ட நியாண்டர்தால் எலும்புகள் நரமாமிசம் உண்ணும் வழக்கத்தை வெளிப்படுத்தின இத்தகைய சடங்குகள் எத்தனை கொடூரமானவையாக இருந்தாலும் மனிதத்தன்மையுடையவை என்பதை மறுக்க முடியாது.

1971ல் ரால்ப சோலக்கி ஷானிடர் என்னும் இராக்கியக் குகையைப் பற்றி எழுதியிருந்த ஆய்வுரை வெளியானவுடன் நியாண்டர்தால்களின் புகழ் இன்னும் அதிகமானது. நியாண்டர்தால்களின் கல்லறைகள் இருந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்ணில் காட்டுப்பூக்களின் மகரந்தம் சராசரி அளவை விட அதிகம் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஷானிடர் நியாண்டர்தால்கள் கல்லறையில் பூக்கள் வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் என்று கருதினார் சோலக்கி. அவரது முதல் பூ மக்கள் (First Flower people) என்ற நூலில் இதைப் பற்றிக் குறிப்பிட்டார். மட்டுமல்லாமல் அவ்விடத்தில் புதைந்திருந்த ஒரு வயதான நியாண்டர்தாலின் எலும்புக்கூடைக் கொண்டு அவனது ஒரு கண் குருடு என்பதையும், ஒரு கை பலமிழந்து மரத்துப் போனது என்பதையும் கண்டறிந்தார். அவனது குடும்பமோ, பழங்குடியோ அக்கறை எடுத்து அவனைக் கவனிக்காமல் இருந்திருந்தால் அவன் விரைவிலேயே செத்துப் போயிருப்பான்.

சோலக்கியின் நூல் வெளியானவுடன் நியாண்டர்தால்களின் மாற்றம் முற்றுப் பெற்றது. அவர்கள் பூலேயின் கற்பனையைப் போன்று காட்டுமிராண்டிகள் அல்ல. இக்கால மனிதர்களை விட மனிதத்தன்மை வாய்ந்தவர்கள் என்பது வெளிப்பட்டது. அவர்கள் ஒருவகையான பழம் ஹிப்பிகள் என்று தோன்றியது. "பிரதேசத் தொடர்ச்சிக் கோட்பாடு" ஒன்றும் இதன் விளைவாகத் தோன்றியது. இந்தக் கோட்பாட்டின்படி இக்கால மனிதர்கள் ஐரோப்பாவிலும், தென்மேற்கு ஆசியாவிலும் நியாண்டர்தாலில் இருந்த பரிணமித்தார்கள்; அதைப் போன்ற பழங்குடிகளில் இருந்து பிற பிரதேசங்களில் பரிணமித்தார்கள். ஆனால் நியாண்டர்தால் மூதாதையர்கள் கோட்பாடு ஒரு பலத்த அடியைச் சந்தித்தது. அது மானுடவியலாளர்களிடமிருந்தோ, தொல்பொருள் ஆய்வாளர்களிடமிருந்தோ அல்ல. உயிரியல் மூலக்கூறு விஞ்ஞானிகளிடமிருந்து...
******
உயிரியலாளர்களுக்கு மானுடவியலைப் பற்றியோ, தொல்பொருள் ஆராய்ச்சியைப் பற்றியோ அதிகமாகத் தெரியாது. ஆனால் அவர்களுக்கு மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ என்னும் மூலக்கூறைப் பற்றித் தெரியும். பெர்க்லியின் உயிரியலாளர்களான ரெபேக்கா கேன், மார்க் ஸ்டோன்கிங், ஆலன் வில்சன் முதலிய உயிரியலாளர்கள் இம்மூலக்கூறு மாற்றமடைந்த வேகத்தைக் கொண்டு தற்கால மனித இனம் பூமியில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என்று கணக்கிட்டார்கள்.

மனுக்குலத்தின் இந்த கற்பனையான தாய்க்கு ஏவாள் என்று பெயரிட்டார்கள்.

இந்த மனித மூதாதை பில்ட்டவுன் மனிதனைப் போன்று போலியானது அல்ல. உயிரியலாளர்கள் சொன்னது உண்மையாக இருக்குமேயானால் அக்கால விஞ்ஞானிகள் கருதியதை விட ஒரு லட்சம் ஆணடுகள் அதிகமான பழமையுடையவன் இக்கால மனிதன் என்பதும் உண்மை. நியாண்டர்தால்கள் மறைவதற்கு முன்பே ஆதிமனிதர்கள் தோன்றினார்கள் என்பதையும் கண்டறியலாம். நியாண்டர்தால்கள் கிட்டத்தட்ட 28,000 வருடங்களுக்கு முன்பு மறைந்து போனார்கள் என்பதை ஐபீரிய தீபகற்பத்தில் இருந்து கிடைத்த தொல்லுயிரெச்சங்கள் மூலம் அறியலாம். இதன் மூலம் நியாண்டர்தால்கள் மனிதனின் மூதாதையர்கள் என்ற கோட்பாடு உடைக்கப்பட்டது. நியாண்டர்தால்கள் ஆதிமனிதனை விடப் பிந்தியவர்களானால் அவர்கள் எப்படி இக்கால மனிதர்களாக பரிணமித்திருக்க முடியும்? பழமையைக் கண்டுபிடிப்பதற்காக உருவான முறைகள் ஆதிமனிதர்கள் நியாண்டர்தால்களை விடப் பழமையானவர்கள் என்று நிரூபித்தன. நியாண்டர்தால்கள் மத்தியகிழக்குப் பகுதியில் 40,000 வருடங்களுக்கு முன் வாழ்ந்திருந்தனர் என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். ஆனால் ஆதிமனிதர்கள் 90,000 வருடங்களுக்கு முன்பே அவ்விடத்தை ஆக்கிரமித்திருந்தனர்.

தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியில் கண்டுபிடித்த தொல்லுயிரெச்சங்களையும் மறு ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டிருந்தனர். அதன்மூலம் ஆப்பிரிக்காவில் கிடைத்த தொல்லுயிரெச்சங்கள் ஆதி மனிதன் தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என்று நிரூபித்தன. பெர்க்லி உயிரியலாளர்கள் ஆப்பிரிக்கர்களின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ பிற மனித இனங்களுடையதை விட வேறுபட்டிருந்தன என்பதை நிரூபித்தனர். அதன்மூலம் ஆப்பிரிக்கர்களுக்கு பரிணமிப்பதற்கு அதிக நேரம் இருந்தது என்பது வெளிப்பட்டது.

இதனால் "ஆப்பிரிக்காவுக்கு வெளியே" என்ற கோட்பாடு உருவானது. இதன்படி மனுக்குலம் முதலில் ஆப்பிரிக்காவில் உருவாகி, மத்தியகிழக்கிலும், ஐரோப்பாவிலும் பரவி நியாண்டர்தால்களைச் சந்தித்தது. மனிதர்களுடன் தொடர்பு கொண்ட பிற இனங்களைப் போல் நியாண்டர்தால் இனமும் அழிந்து போனது. 1990களின் தொடக்க காலத்தில் "ஆப்பிரிக்காவுக்கு வெளியே" என்ற கோட்பாடு "பிரதேசத் தொடர்ச்சி" கோட்பாட்டை ஓரங்கட்டியது.

1997ல் பிரதேசக் தொடர்ச்சிக் கோட்பாட்டின் மீது இறுதி அடி விழுந்தது. இம்முறையும் மூலக்கூறு உயிரியலாளர்களே இதன் காரணகர்த்தர்கள். மூனிக் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மத்தியாஸ் கிரிங்சும், அவரது சக பணியாளர்களும் ஃபுல்ராட்டின் நியாண்டர்தால் மனிதனிடமிருந்து மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏவைப் பிரித்தெடுத்து ஆய்வு மேற்கொண்டார்கள். அதனை இக்காலத்து மனிதர்களின் மூலக்கூறோடு ஒப்பட்டிப் பாாக்கையில் 379 இடங்களில் அவை 27 இடங்களில் வேறுபட்டிருப்பது தெரியவந்தது. (ஆனால் ஆப்பிரிக்கர்களின் மூலக்கூறும், அவர்களின் மூலக்கூறும் 8 இடங்களில் மட்டுமே வேறுபட்டிருந்தது). நியாண்டர்தால்களுக்கும், இக்கால மனிதர்களுக்குமான மரபியல் தூரம் அதிகம் என்றும், அதனால் நியாண்டர்தால்கள் மனிதனின் மூதாதையர்கள் அல்ல என்றும் கிரிங்ஸ் முடிவு செய்தார்.
******
"பிரதேசத் தொடர்ச்சி"க் கோட்பாட்டின் ஆதரவளர்கள் இதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் மரபியல், காலநிர்ணய ஆய்வுகளின் நம்பகத்தன்மையைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள். 1999ம் வருடத்தில் அவர்களுக்குச் சார்பான ஆதாரத்தைக் கொண்டு அவர்கள் திருப்பியடித்தார்கள். லிஸ்பன் நகருக்கு 90 மைல்கள் வடக்கில், போர்த்துக்கீசிய தொல்பொருள் ஆய்வாளர்கள் 24500 வருடங்கள் பழமையான ஒரு சிறுவனின் எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்தார்கள். அவனது முகம் உடற்கூற்றுவியலின்படி மனிதனைப் போன்று இருந்தது. ஆனால் உடலும், கால்களும் நியாண்டர்தால்களைப் போல் அமைந்திருந்தது. அவ்வுடலின் மீதான காலநிர்ணய ஆய்வு கலப்பற்ற நியாண்டர்தால்கள் அழிந்து போன காலகட்டத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் அவ்வுடலின் சொந்தக்காரனை நிறுத்தியது. இதன்மூலமாக மனித-நியாண்டர்தால் கலப்பு காரணமாக அச்சிறுவன் உருவானான் என்று கருதுவதற்கு இடம் ஏற்பட்டது.

நியாண்டர்தால்களுக்கும், மனிதனுக்கும் கலப்பு ஏற்பட்டிருக்கக் கூடுமானால் அவர்கள் மூலக்கூறு உயிரியலாளர்கள் கூறுவதைப் போல் அதிகமாக வேறுபட்டிருக்க முடியாது என்று பிரதேசத் தொடர்ச்சிக் கோட்பாட்டு ஆதரவாளர்கள் வாதிட்டனர்.

போர்த்துக்கீசியக் கண்டுபிடிப்பு இக்கருத்துப் போரை மேலும் தீவிரப்படுத்தியது. இக்கோட்பாட்டின் ஆதரவாளர்கள் புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்றார்கள்; மறுத்தார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல வேகம் குறைந்தது. நியாண்டர்தால்கள் மனிதனின் மூதாதைகளா இல்லையா என்பதைப் பற்றிய ஆராய்ச்சி, நியாண்டர்தால்களுக்கும் இக்கால மனிதர்களுக்கும் எத்தகைய சமூகத் தொடர்பு இருந்திருக்கும் என்று ஆராய்வதில் போய் முடிந்தது.

அவர்கள் போரிட்டுக் கொண்டார்களா? ஒருவரிடமிருந்தொருவர் கற்றுக் கொண்டார்களா? பேசினார்களா? பாலுறவு கொண்டார்களா? இல்லையேல் ஒருவரையொருவர் கண்டு கொள்ளாமல் விட்டார்களா? தொல்பொருள் ஆய்வாளர்களோ, நுண்ணுயிரி ஆய்வாளர்களோ, இல்லையேல் வேறு துறை நிபுணர்களோ இக்கேள்விக்கு என்றாவது ஒரு நாள் பதிலளிக்கக் கூடும். ஆனால் நம்மால் இப்போது பதிலை ஊகிக்க மட்டுமே முடியும்.

ஜெர்மன் மானுடவியலாளரான பிரவூர் "ஆப்பிரிக்காவுக்கு வெளியே" என்ற கோட்பாட்டை மேலும் செம்மைப்படுத்தினார். பிரவூரின் கோட்பாட்டின்படி இக்கால மனிதர்கள் ஆப்பிரிக்காவில் பரிணமித்தார்கள். அவர்கள் நியாண்டர்தால்களில் இருந்து வேறுபட்டிருந்தாலும் அவர்களோடு பாலுறவு கொள்ள முடியாத அளவுக்கு வேறுபட்டிருக்கவில்லை. எனவே இக்கால மனிதர்களுக்கு சில நியாண்டர்தால் மூதாதையர்களர் இருக்கலாம் என்றார் பிரவூர்.

இன்னொரு பக்கத்தில் பிரதேசக் கோட்பாட்டு ஆதரவாளர்களான டென்னசி மானுடவியலாளர் ஃபிரெட் ஸ்மித் போன்றோர், ஆப்பிரிக்காவில் முக்கியமான மரபியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் வாழ்ந்த நியாண்டர்தால்கள் புதிதாக வந்தவர்களால் அழிக்கப்படவில்லை. அவர்களது மரபியல் சாதகங்களை தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர் என்று ஸ்மித் வாதிட்டார். ஸ்மித்தின் சமரசமோ, பிரவூரின் சமரசமோ முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் நியாண்டர்தால்களும், இக்கால மனிதர்களும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஒரு புள்ளியில் சந்தித்துள்ளனர் என்பதை இக்கால அறிவியலாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். மத்திய கிழக்கு ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் வித்தியாசமான மனித இனங்கள் ஒன்றையொன்று சந்தித்தன.

அதன்பின் என்ன நடந்தது? யாருக்கும் உறுதியாகத் தெரியாது.

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 12, 2012 11:59 am

சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக