ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்!

4 posters

Go down

சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! Empty சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்!

Post by சிவா Thu Aug 09, 2012 11:44 am

சட்ட விரோதமான மத்திய அரசு என்று பாராளுமன்றத்தில் அத்வானி கூறியதற்கு, சோனியாகாந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து வருத்தம் தெரிவித்த அத்வானி, தனது கருத்தை வாபஸ் பெற்றார்.


பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, மக்களவையில் அசாம் கலவரம் தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பா.ஜனதா தலைவர் அத்வானி, விவாதத்தை தொடங்கிவைத்து பேசினார்.

சோனியா ஆவேசம்

அத்வானி பேசும்போது, "காங்கிரஸ் தலைமையிலான தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்ட விரோதமான அரசு. இந்திய வரலாற்றில் இதுபோல் எப்போதும் நடந்தது இல்லை... ஓட்டுகள் வாங்குவதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒருபோதும் செலவு செய்யப்பட்டது இல்லை'' என்று குறிப்பிட்டார்.

அத்வானியின் இந்த விமர்சனத்தால், ஆவேசம் அடைந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோபத்துடன் அத்வானிக்கு பதிலடி கொடுத்தார். சோனியாவின் இந்த ஆவேசம், அவை முன்னவர் சுஷில்குமார் ஷிண்டே, பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன்குமார் பன்சால் ஆகியோரை மட்டுமின்றி, கூட்டணி கட்சி தலைவர்களையும் அத்வானியின் கருத்துக்கு எதிராக கொந்தளித்து எழச்செய்தது.

வாபஸ் பெற வற்புறுத்தல்

தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, "மூத்த தலைவர் அத்வானியை நாங்கள் அனைவரும் மதிக்கிறோம். ஆனால், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை ஒட்டு மொத்தமாக சட்ட விரோதமானது என்று அவர் குறிப்பிடுவது, அனைவருக்கும் அவமானமாகும். அத்வானி அவருடைய கருத்தை வாபஸ் பெற வேண்டும்'' என்றார்.

கடும் அமளி


அவரைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கூட்டணி கட்சி எம்.பி.க்களும் அத்வானியின் விமர்சனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜனதா கட்சி உறுப்பினர்களும் எதிர்குரல் கொடுத்ததால், சபையில் கடும் அமளி ஏற்பட்டது. ஆனால், தனது நிலையில் உறுதியாக இருந்த சோனியா, "வாபஸ் பெறுங்கள், அந்த ஒரு வார்த்தையை வாபஸ் பெறுங்கள்'' என்று மீண்டும் அழுத்தமாக வற்புறுத்தினார்.

அதைத் தொடர்ந்து அத்வானி கூறிய வார்த்தைகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார். ஆனால், அதை ஏற்க மறுத்த ஆளும் கட்சி தரப்பினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

தவறை ஒப்புக்கொண்ட அத்வானி


பின்னர் சபாநாயகர் மீராகுமார் அத்வானியை பார்த்து, "நீங்கள் பயன்படுத்திய ஒரு வார்த்தை அனைவருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதாக உள்ளது. நீங்கள் விரும்பினால் அந்த வார்த்தையை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்'' என்று கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பேசிய அத்வானி தனது தவறை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்ததுடன், தான் கூறிய கருத்தை வாபஸ் பெற்றார்.

"தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்று தவறுதலாக கூறி விட்டேன். கடந்த 2008-ம் ஆண்டு (முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்) நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் பற்றித்தான் நான் குறிப்பிட விரும்பினேன். 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைப்பற்றி அல்ல'' என்று, அவர் விளக்கம் அளித்தார்.

மன்னிப்பு கேட்கும்படி கோஷம்

அத்வானி தனது கருத்தை வாபஸ் பெற்ற பின்னரும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சமாதானம் அடையவில்லை. அதே நேரத்தில் சோனியா காந்தியும் ஆவேசமாக கைகளை உயர்த்தியபடி ஏதோ கூறினார். அவருடைய சமிக்ஞையை புரிந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த பிரச்சினையில் அத்வானி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.

பவன்குமார் பன்சால் உள்ளிட்ட மத்திய மந்திரிகளும் அத்வானியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பாராளுமன்ற நடைமுறை, நாட்டு மக்கள் மற்றும் ஜனநாயகத்தை அத்வானி இழிவுபடுத்திவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், சமூக-பொருளாதார துறையில் அரசின் தோல்வியைத்தான் அத்வானி சுட்டிக்காட்டினார் என்று கூறிய விளக்கத்தையும் அவர்கள் ஏற்கவில்லை.

காங்கிரசார் கோஷம்

சபாநாயகரின் வேண்டுகோளை ஏற்க மறுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால், சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் சோனியாவின் கோபம் குறைந்ததாக தெரியவில்லை.

தங்கள் நிலையை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும் என்று, கட்சி எம்.பி.க்களிடமும், மந்திரிகளிடமும் அவர் தொடர்ந்து விவாதித்துக் கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது.

பா.ஜனதாவிலும் கொந்தளிப்பு

மூத்த தலைவர் அத்வானி தனது கருத்தை வாபஸ் பெற்ற பிறகும் பிரச்சினையை காங்கிரஸ் பெரிதுபடுத்துவதாக கூறி, பா.ஜனதா உறுப்பினர்களும் கொந்தளிப்பான நிலையில் காணப்பட்டனர்.

காங்கிரசாரின் இந்த நிலை தொடர்ந்தால் சபையை நடத்த விட மாட்டோம் என்றும் சில பா.ஜனதா உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

8 ஆண்டுகளில் இல்லாத ஆவேசம்

சோனியா காந்தி, கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக இருந்து வருகிறார். வழக்கமாக சபையில் அமைதியாக காணப்படும் அவர், கடந்த 8 ஆண்டுகளில் முதன் முறையாக நேற்றுதான், அத்வானியின் கருத்தால் ஆவேசம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக காலையில் சபை தொடங்கியதும் ஆந்திராவில் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் தனி தெலுங்கானா கோரிக்கை அட்டைகளை கைகளில் வைத்திருந்தனர். சபை தள்ளிவைக்கப்பட்டதும், அந்த எம்.பி.க்களிடம் இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மத்திய அரசுக்கு தோல்வி


அசாம் கலவரம் தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது பேசிய அத்வானி, வங்காள தேசத்தில் இருந்து ஊடுருவலை தடுக்க முடியாதது மத்திய அரசின் மிகப்பெரிய தோல்வி என்றும், இந்த பிரச்சினை தேசிய பாதுகாப்பு அம்சம் தொடர்பானது என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:-

"அசாம் கலவரத்தை வகுப்புவாத மோதலாக பார்க்கக்கூடாது. இந்து-முஸ்லிம் விவகாரமாகவோ, பழங்குடியினர்-பழங்குடியினர் அல்லாத பிரச்சினையாகவோ இதை பார்க்கக்கூடாது. இந்தியர்களுக்கும் எல்லை தாண்டி ஊடுருவி வருபவர்களுக்கான பிரச்சினை இது. 3 கோடி மக்கள்தொகை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 அல்லது 4 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிப்பது, இதுவரை இல்லாத ஒரு நிலைமையாகும்.

எரிமலை மீது...

அசாம் மாநிலம் எரிமலை மீது இருப்பதாக, முதல்-மந்திரி தருண் கோகாய் கூறி இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், இது போன்ற நிலைமை மீண்டும் உருவாகலாம். ஊடுருவலை தடுப்பதற்கு மாநில அரசால் மட்டும் முடியாது. இது தேசிய பாதுகாப்பு தொடர்புடையதாகும். வங்காள தேசத்தில் இருந்து ஊடுருவலை தடுப்பதற்காக கடந்த 2006-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாது ஏன்? இந்த பிரச்சினையில் மத்திய அரசின் நிலை என்ன?

15 லட்சம் வங்காள தேசத்தினர் ஊடுருவி இருப்பதாக, பாராளுமன்றத்தில் முன்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த புள்ளி விவரம் தவறு என்று கூறப்பட்டது. இவ்வளவு அதிக அளவிலான ஊடுருவலை எந்த ஒரு நாடும் சகித்துக்கொள்ளாது.''

இவ்வாறு அத்வானி கூறினார். காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தின் மீது பேசினார்கள்.

ஒத்திவைப்பு

முன்னதாக காலை 10 மணிக்கு சபை கூடியதும், கேள்வி நேரத்தை ரத்து செய்து ஒத்திவைப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும்படி உறுப்பினர்கள் வற்புறுத்தினார்கள்.

அமெரிக்காவில் உள்ள சீக்கிய குருத்வாராவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு பற்றி விவாதிக்க வேண்டும் என்று, சிரோன்மணி அகாலிதளம் உறுப்பினர்களும், புனே குண்டு வெடிப்பு பற்றி விவாதிக்கும்படி சிவசேனா உறுப்பினர்களும் வற்புறுத்தினார்கள். இதனால் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டதால், பகல் 12 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

தினத்தந்தி


சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! Empty Re: சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்!

Post by பிளேடு பக்கிரி Thu Aug 09, 2012 11:57 am

உண்மைய சொன்னதும் இத்தாலி ஆன்டிக்கு கோவம் வந்துடுச்சு சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! 745155



சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! Empty Re: சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்!

Post by ராஜா Thu Aug 09, 2012 11:58 am

பிளேடு பக்கிரி wrote:உண்மைய சொன்னதும் இத்தாலி ஆன்டிக்கு கோவம் வந்துடுச்சு சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! 745155
சூப்பருங்க , இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கபோகுதோ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! Empty Re: சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்!

Post by சிவா Thu Aug 09, 2012 11:58 am

உண்மையைக் கூறியிருந்தால் ஏன் அந்தக் கருத்தை திரும்பப் (வாபஸ்) பெற வேண்டும்!


சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! Empty Re: சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்!

Post by சிவா Thu Aug 09, 2012 12:34 pm

சட்டவிரோத மத்திய அரசு: அத்வானி விமர்சனம் பற்றி கருத்து தெரிவிக்க ராகுல் காந்தி மறுப்பு


பாராளுமன்ற மக்களவையில், அசாம் கலவரம் குறித்து நேற்று கொண்டு வரப்பட்ட ஒத்தி வைப்பு தீர்மானத்தின் மீது பேசிய பா.ஜனதா தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சட்ட விரோத அரசு என்று வர்ணித்தார். அத்வானியின் இந்த விமர்சனத்தால், பாராளுமன்றத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், அத்வானியின் இந்த கருத்து பற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல், "அத்வானி மிக மூத்த தலைவர். அவர் என்ன சொல்கிறார் என்பதை அவர் அறிவார். அது குறித்து நான் கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை'' என்று குறிப்பிட்டார்.


சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! Empty Re: சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்!

Post by சிவா Thu Aug 09, 2012 12:35 pm


அத்வானியின் விமர்சனம் துரதிர்ஷ்டவசமானது: மன்மோகன்சிங் கருத்து


பாராளுமன்ற மக்களவையில் நேற்று பேசிய பா.ஜனதா தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சட்ட விரோத அரசு என்று விமர்சித்தார். அத்வானியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.

இதற்கிடையில், அத்வானியின் விமர்சனம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த மன்மோகன்சிங், "அத்வானியின் இந்த விமர்சனம் அவமானகரமானது, துரதிர்ஷ்டவசமானது'' என்று குறிப்பிட்டார்.


சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! Empty Re: சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்!

Post by azhagan77 Thu Aug 09, 2012 1:18 pm

உண்மையைக் கூறியிருந்தால் ஏன் அந்தக் கருத்தை திரும்பப் (வாபஸ்) பெற வேண்டும்!

சியர்ஸ்


சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! 39958052
azhagan77
azhagan77
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்! Empty Re: சட்ட விரோதமான அரசு - அத்வானி, சோனியா ஆவேசம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum