புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
5 Posts - 3%
prajai
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
2 Posts - 1%
சிவா
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
435 Posts - 47%
heezulia
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
30 Posts - 3%
prajai
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஆவணி ராசிபலன்  Poll_c10ஆவணி ராசிபலன்  Poll_m10ஆவணி ராசிபலன்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவணி ராசிபலன்


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 13, 2012 9:15 pm

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) - இலக்கை எட்டலாம்!

ஆவணி ராசிபலன்  TN_120813134216000000

மனசாட்சியை மதித்துநடக்கும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு ஏழாம் வீட்டில் அனுகூலக் குறைவாக உள்ளார். குரு, சுக்கிரன், சனியின் அமர்வு நற்பலன் தரும் வகையில் உள்ளது. செவ்வாயின் சப்தம பார்வை ராசியில் பதிவதால் உங்களின் செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்தபின் புதிய முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம். புத்திரர்கள் தயக்கத்துடன் செயல்பட்டு அமைதியை இழப்பர். உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. எதிரிகளின் ஏளனப் பேச்சைக் கருத்தில் கொள்ள வேண்டாம். தம்பதியர் கருத்து வேறுபாடுகளால் வாக்குவாதத்தில் ஈடுபடுவர். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். தொழிலதிபர்கள் இடையூறுகளை சரிசெய்து உற்பத்தி, தரத்தினை உயர்த்துவர். புதிய ஒப்பந்தம் மூலம் தாராள லாபம் கிடைக்கும். வியாபாரிகள் சந்தைப்போட்டியை சமாளிக்கும் புதிய உத்திகளை பின்பற்றுவர். விற்பனை சீராகி எதிர்பார்த்த இலக்கை அடைவர். பணியாளர்கள் உடல்நலத்தை சரிவர பேணுவது நல்லது. எதிர் பார்த்த சலுகைப்பயன்கள் கிடைக்கப் பெறுவர். குடும்ப பெண்கள் கணவருடன் சிறு விஷயத்திற்காகவும் சச்சரவில் ஈடுபடுவர். பணிபுரியும் பெண்கள் உயரதிகாரிகளின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவது நன்மை தரும். சுயதொழில் புரியும் பெண்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி விற்பனையை மேம்படுத்துவர். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களிடம் செல்வாக்கும், எதிரியால் சிரமத்தையும் அடைவர். விவசாயிகள் தாராள மகசூல் கிடைக்கப் பெறுவர்.மாணவர்கள் கடின முயற்சியால் திட்டமிட்ட தேர்ச்சி இலக்கை அடைவர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் வாழ்வில் சகல வளமும் கிடைக்கும்.
உஷார் நாள்: 24.8.12 காலை 8.10 - 26.8.12 காலை 10.34
வெற்றிநாள்: செப்டம்பர் 9, 10, 11
நிறம்: ரோஸ், வெள்ளை எண்: 1, 6



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 13, 2012 9:17 pm

திட்டமிட்டு செயல்பட்டு வளர்ச்சி காணும் ரிஷபராசி அன்பர்களே!

ஆவணி ராசிபலன்  TN_120813134405000000

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுதும் ராசிக்கு அனுகூலமாக இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் சஞ்சரிக்கிறார். புதன்,செவ்வாயின் அமர்வு வாழ்வு சிறக்க அளப்பரிய நற்பலன் வழங்கும் வகையில் உள்ளது. உங்கள் சிந்தனையில் தெளிவு உண்டாகும். உல்லாசமாகவும், உற்சாகமாகவும் பணியில் ஈடுபடுவீர்கள். வீடு, வாகனத்தில் திட்டமிட்ட வளர்ச்சிப்பணிகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். புத்திரர் ஒழுக்கத்துடன் நடப்பதோடு கல்வியிலும் முன்னேறுவர். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். தம்பதியர் மனதில் நிலவி வந்த கருத்து வேற்றுமை விலகி, ஒருவருக்கொருவர் பாசத்துடன் செயல்படுவர். குடும்ப தேவைக்கான வருமானம் சீராக கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனையைப் பின்பற்றி வளர்ச்சி காண்பீர்கள். தொழிலதிபர்கள் அக்கறையுடன் செயல்பட்டு நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வர். புதிய ஒப்பந்தம் மூலம் லாபம் கூடும். வியாபாரிகள் புதிய சந்தை வாய்ப்பு கிடைப்பதன் மூலம் விற்பனை இலக்கை எட்டிப்பிடிப்பர். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரிடம் நற்பெயர் பெறுவர். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி நடந்தேறும். குடும்ப பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடப்பர். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணிகளை நிறைவேற்றுவர். சுயதொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்த நிதியுதவி கிடைத்து வளர்ச்சிப்பணி புரிவர். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்கும்.. விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர். மாணவர்கள் படிப்பில் கவனம் கொள்வது நல்லது.

பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் திட்டமிட்டபடி குடும்பத்தில்சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
உஷார் நாள்: 26.8.12 காலை 10.34 - 28.8.12 பிற்பகல் 1.43
வெற்றி நாள்: ஆகஸ்ட் 17, செப்டம்பர் 21
நிறம்: நீலம், மஞ்சள் எண்: 3, 4



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 13, 2012 9:20 pm

ஆவணி ராசிபலன்  TN_120813134516000000

எந்த செயலிலும் தனி முத்திரை பதிக்கும் மிதுன ராசிஅன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் மாறுபட்ட சூழ்நிலையில் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ளார். இருப்பினும் சுக்கிரன், சூரியன், ராகு அளப்பரிய நற்பலன்களைத் தரும் விதத்தில் செயல்படுகின்றனர். அடுத்தவரின் ஆடம்பர செயலைக் கண்டு நீங்களும் பின்பற்றி சிலரது கேலிப்பேச்சுக்கு உள்ளாகும் கிரகநிலை உள்ளது. புத்திரர் உடல்நலக்குறைவை அடைவர். தகுந்த மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. சொத்தின் பேரில் கடன் வாங்குபவர்கள் நம்பகமானவர்களிடம மட்டும் பெறுவது பாதுகாப்பானதாகும். ஆறாமிடத்தில் உச்சம் பெற்ற ராகு பணியில் சுறுசுறுப்பையும், தாராள வெற்றியையும் வழங்குவார். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டு.தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். தொழிலதிபர்கள் சாதுர்யமாகச் செயல்பட்டு புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர். வியாபாரிகள் வாடிக்கையாளர் சேவையில் அக்கறை கொள்வர். கவர்ச்சிகரமாக முயற்சிகளில் ஈடுபட்டு லாபம் காண்பர். பணியாளர்கள் சகபணியாளர்களின் மத்தியில் செல்வாக்கு பெறுவர். சலுகைப்பயன் ஒரளவு கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் நல்ல குணங்களை மனதார பாராட்டுவர். ஒற்றுமை சிறந்து வீட்டில் மகிழ்ச்சி கூடும். குடும்பச் செலவுக்கான பணவசதி சீராக கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்பட்டு பணி இலக்கைப் பூர்த்தி செய்வர். நற்பெயரும் சலுகைப்பயனும் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை சீராக்குவர். லாபவிகிதம் கூடும். எதிர்கால நலன் கருதி சேமிக்கவும் செய்வர். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். ஆதரவாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவர். விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவதோடு, கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் காண்பர். மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மட்டுமே எதிர்பார்த்த தரதேர்ச்சி கிடைக்கப் பெறுவர்.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் வாழ்வில் சிரமம் குறைந்து நன்மை அதிகரிக்கும்.
உஷார் நாள்: 28.8.12 பிற்பகல் 1.43 - 30.8.12 இரவு 6.29
வெற்றிநாள்: ஆகஸ்ட் 19, செப்., 14, 15
நிறம்: பச்சை, வெள்ளை எண்: 2, 5



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 13, 2012 9:21 pm

ஆவணி ராசிபலன்  TN_120813134708000000

பிறருக்கு இரக்க மனதுடன் உதவும் கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன் மாத துவக்கத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் அமாவாசை நாளில் தனது பயணத்தை துவக்குகிறார். இதனால் உங்களின் செயல் புகழ்பெறும் நோக்கிலும் தாராள பணவரவை தரும் வகையில் இருக்கும். நவக்கிரகங்களில் சுக்கிரன், சனி, குரு, கேது உங்கள் வாழ்வுநலம் சிறக்க மிகுந்த உதவிகரமாக செயல்படுவர். உங்களை அவமானப்படுத்த நினைப்பவர் ஏமாந்து போவர். உடல்நலத்தை சீராக வைத்திருப்பதில் அக்கறை காட்டுவது நல்லது. புத்திரர் நடத்தை குறைவானவர்களுடன் நட்பு பாராட்டுவதால் சிரமம் அடைவர். ஆரோக்கியம் பலம்பெறும். தம்பதியர் குடும்ப பெருமையை காக்கும் விதத்தில் ஒற்றுமையுடன் நடப்பர். வீட்டில் சுபநிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்தேறும். உறவினர் வருகை மனதைச் சந்தோஷப்படுத்தும். தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறையில் சீர்திருத்தம் செய்து உற்பத்தி தரத்தை மேம்படுத்துவர். புதிய ஒப்பந்தம் மூலம் லாபம் கூடும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் ஆதாயத்தை உயர்த்துவர். விரிவாக்க முயற்சியிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவர். பணியாளர்கள் குறித்தநேரத்தில் இலக்கை நிறைவேற்றுவர். புதிய சலுகைப்பயன் கிடைக்கப் பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி மகிழ்வர். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். பணிபுரியும் பெண்கள் உற்சாகமாக செயல்பட்டு பணியில் திறமையை வெளிப்படுத்துவர். பதவி உயர்வு, சலுகை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர்,தோழியின் உதவியால் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். லாபம் கூடும்.அரசியல்வாதிகள் தகுதிக்கு மீறிய புதிய பதவி, பொறுப்பு கிடைக்கப் பெறுவர். விவசாயிகளுக்கு அமோக விளைச்சல், கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் தரத்தேர்ச்சி பெறுவதுடன், பெற்றோரின் அரவணைப்பைப் பெற்று மகிழ்வர்.

பரிகாரம்: முருகனைவழிபடுவதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
உஷார் நாள்: 30.8.12 இரவு 6.29 - 2.9.12 அதிகாலை 1.30.
வெற்றி நாள்: ஆகஸ்ட் 20, 21, செப்., 16
நிறம்: மஞ்சள், ஆரஞ்ச் எண்: 3, 7



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 13, 2012 9:22 pm

ஆவணி ராசிபலன்  TN_120813134836000000

சாதனை புரிவதில் ஆர்வம் மிக்க சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் சிம்மத்தில் ஆட்சி பலத்துடன் சிரமமான பலன்களைத் தரும் வகையில் உள்ளார். சுக்கிரன், செவ்வாய் நல்ல பலன்களை வழங்குவர். நன்றாகப் பழகியவர்கள் கூட ஏளனமாக பார்ப்பதால் மனதில் தைரியக்குறைவு ஏற்படலாம், கவனம். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றியைத் தக்க வைக்க முடியும். செயலுக்கு அதிக முக்கியத்துவம் தருவது அவசியம். குடும்பத் தேவைக்கான வருமானம் புதிய இனங்களில் கிடைக்கும். புத்திரர் பிடிவாத குணத்தை மாற்றிக் கொண்டு உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர். அவர்களின் தேவைகளைஇயன்ற அளவில் பூர்த்தி செய்வீர்கள். பூர்வசொத்தில் நம்பகமானவர்களைக் குடியமர்த்துவது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை. தம்பதியர் குடும்பநலனைக் கருத்தில் கொண்டு ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். நண்பரிடம் கொடுத்த பணம் சரியான சமயத்தில் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் நடைமுறைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வர். உற்பத்தியை மேம்படுத்தி வளர்ச்சிக்கு வழிவகுப்பர். வியாபாரிகள் புதிய முயற்சியால் கூடுதல் வாடிக்கையாளரைப் பெறுவதோடு, ஆதாயத்தையும் உயர்த்துவர். பணியாளர்கள் சக பணியாளர்களின் ஆதரவுடன் தமக்குரிய பணியை சிறப்புற நிறைவேற்றுவர். குடும்பப் பெண்களுக்கு செலவுக்கான பணம் சீராக கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் சுதந்திரமாகச் செயல்படுவர். சகபணியாளர் மத்தியில் செல்வாக்கு காண்பர். சுயதொழில் புரியும் பெண்கள் சராசரி உற்பத்தி, விற்பனை, பணவரவு காண்பர். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் பலத்தால் நம்பிக்கையுடன் செயல்படுவர். விவசாயிகளுக்கு திருப்திகரமான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் உண்டு. மாணவர்கள் திட்டமிட்ட தேர்ச்சி இலக்கை அடைவர்.

பரிகாரம்: துர்க்கையைவழிபடுவதால் ஆரோக்கியம் மேம்படும்.
உஷார் நாள்: 2.9.12 அதிகாலை 1.30 - 4.9.12 காலை 10.57
வெற்றி நாள்: ஆகஸ்ட் 20, 21, செப்., 16
நிறம்: சந்தனம், நீலம் எண்: 2, 7



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 13, 2012 9:24 pm

ஆவணி ராசிபலன்  TN_120813134949000000

தாங்கள் செய்யும் நற்செயல்களுக்கு பாராட்டை எதிர்பார்க்கும் கன்னிராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் பன்னிரெண்டாம் இடமான விரய ஸ்தானத்தில் ஆட்சிபெற்ற சூரியனுடன் உள்ளார். இந்த கிரகநிலை தவிர்க்க இயலாத ஆடம்பரச்செலவை உருவாக்கும். கவனம். குரு, ராகு உங்கள் வாழ்வு சிறக்க நல்ல பலன் வழங்குவர். தைரிய சிந்தனைகளை உரிய வகையில் செயல்படுத்துவதால் வெற்றியும் புகழும் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உள்ள ஒருவரின் தொடர்பு கிடைக்கும். பசு, பால் பாக்ய யோகம் உண்டு. வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு செய்வதால் திருட்டு பயமின்றி வாழலாம். உடல்நலத்தை சரிசெய்ய சிகிச்சையும் கட்டுப்பாடான உணவுப்பழக்கமும் பின்பற்ற வேண்டும். தம்பதியர் ஆன்மிக எண்ணங்களை பின்பற்றி குடும்பத்தின் அன்றாட பணிகளை மேற்கொள்வர். குடும்பத்தில் மங்கலமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உங்களின் திறமை பிரகாசிக்க நண்பரால் உதவி உண்டு. தொழிலதிபர்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் கண்காணிப்பும் செலுத்தி உற்பத்தி, தரத்தை சீர்செய்வர். லாபம் ஓரளவுக்கு இருக்கும். வியாபாரிகள் போட்டியைச் சரிசெய்ய லாபம் குறைத்து விற்பனை செய்ய வேண்டியிருக்கும். சுமாரான லாபம் உண்டு. பணியாளர்களுக்கு பணியில் மந்தநிலை இருந்தாலும், குடும்பநிலை கருதி உற்சாகத்துடன் செய்வது போல் காட்ட வேண்டியிருக்கும். சலுகைகள் வழக்கம்போல் கிடைக்கும். குடும்பப் பெண்கள் உறவுப்பெண்களிடம் கணவரின் சம்மதம் இன்றி பணப்பரிவர்த்தனை செய்யக்கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் உற்பத்தி, தரம் சிறந்து விற்பனை உயரும். அரசியல்வாதிகள் அதிகார தோரணையில் எவரையும் உதாசீனம் செய்யக்கூடாது. இதனால் நற்பெயர் கெட்டுவிட வாய்ப்புள்ளது. கவனம். விவசாயிகளுக்கு அபரிமிதமான மகசூல், உபரி வருமானம் உண்டு. மாணவர்கள் சிறப்பாகப் படித்து படிப்பில் தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் தொழிலில் தாராள பணவரவு கிடைக்கும்.
உஷார் நாள்: 4.9.12 காலை 10.57- 6.9.12 இரவு 10.15.
வெற்றி நாள்: ஆகஸ்ட் 24, செப்டம்பர் 1
நிறம்: சிவப்பு, வெள்ளை எண்: 6, 9



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 13, 2012 9:24 pm

ஆவணி ராசிபலன்  TN_120813135107000000

சிரமமான பணியையும் எளிதாக்கும் நுணுக்கம் அறிந்த துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பகுதியில் மிகுந்த அனுகூலத்துடன் உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சூரியன், புதன் செயல்படுகின்றனர். ராசியில் இருக்கும் செவ்வாய், மனதில் மங்கல எண்ணங்களை உருவாக்குவார். ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்யும் செயல்களால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தில் உச்சம்பெற்ற ராகுவை விரயச்சனி பார்க்கிறார். இதனால் எவருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதி தரக்கூடாது.புத்திரர்கள் ஞானமும் நற்கல்வியும் பெறுவர். பூர்வசொத்தில் ஓரளவு பணவரவு கிடைக்கும். உடல்நலம் ஒத்துழைப்பு தராது. தியானம் செய்வது நல்லது. தம்பதியர் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளை நிறைவேற்றும் பொருட்டு தியாக மனப்பாங்குடன் நடந்துகொள்வர். பாதுகாப்பு குறைவான இடங்களில் பிரவேசிக்கக்கூடாது. வாகனம் இயக்குவதிலும் நிதானம் வேண்டும். அரசிடம் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். எதிர்பாராத விதமாக சொத்து வந்து சேரும். தொழிலதிபர்கள் அதிக மூலதனத்தில் புதிய தொழிற்கருவி வாங்குவர். உற்பத்தி சிறந்து லாபவிகிதம் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய சந்தை வாய்ப்பு கிடைத்து விற்பனையில் சாதனை இலக்கை அடைவர். பணியாளர்கள் குடும்பத்தேவையை நிறைவேற்றும் பொருட்டு கூடுதல் அக்கறையுடன் பணிபுரிவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பப் பெண்களுக்கு செலவுக்கான பணம் கிடைப்பதில் பிரச்னை இருக்காது. பணிபுரியும் பெண்கள் சலுகைகள், பதவி உயர்வு பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து உபரி வருமானம் பெறுவர். அரசியல்வாதிகள் ஆன்மிக வழிபாடு நடத்து வதன் மூலம் இழந்த பதவியை பெறலாம். விவசாயிகளுக்கு கடனுதவி கிடைக்கும். மாணவர்கள் கவனமாகப் படிப்பதால் மட்டுமேதரதேர்ச்சிகிடைக்கும்.

பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும்.
உஷார் நாள்: 6.9.12 இரவு 10.15 -9.9.12 காலை 9.52.
வெற்றி நாள்: ஆகஸ்ட் 26, 27
நிறம்: நீலம், ரோஸ் எண்: 1, 8



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 13, 2012 9:26 pm

ஆவணி ராசிபலன்  TN_120813135226000000

உழைப்பு என்ற சொல்லைத் தாரக மந்திரமாகக் கொண்ட விருச்சிகராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12ம் இடமான விரய ஸ்தானத்தில் உள்ளார். இருப்பினும் பலமுள்ள கிரகங்களான குரு, சனி, சுக்கிரன், சூரியன் மற்றும் புதன் அளப்பரிய நற்பலன் வழங்குகிற இடங்களில் உள்ளனர். பிறர் பார்வையில் தெரிகிற வகையில் அதிக பணச்செலவு செய்ய வேண்டாம். துவங்குகிற முயற்சி அத்தனையும் முழுமையான வெற்றியைத் தரும். நல்லவர்களின் உதவி மனதிற்கு நம்பிக்கை தரும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற யோகம் உண்டு. தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். புத்திரர்கள் படிப்பு, வேலைவாய்ப்பில் உயர்ந்த நிலை அடைவர். உடல்நலக்குறைவு வரலாம். சீரான ஓய்வு, நேரத்துக்கு உணவு நன்மை தரும். கணவன்,மனைவி பாசத்துடன் நடந்து மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு காண்பர். தொழிலதிபர்கள் அதிக ஒப்பந்தம் கிடைத்து உற்பத்தியை உயர்த்துவர். ஆதாய பணவரவு உண்டு. வியாபாரிகள் அதிக சரக்கு கொள்முதல் செய்கிற வகையில் விற்பனை சிறப்பாக இருக்கும். பாக்கிப்பணமும் வசூலாகும். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்புரிந்து குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். அதிகாரிகளிடம் நற்பெயரும் சலுகையும் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவர் வழி உறவினர்களின் நன்மதிப்பை பெறுவர். சேமிப்புப் பணத்தை குடும்பத்தேவைக்கு பயன்படுத்துவர். பணிபுரியும் பெண்கள் சக பணியாளர்களின் உதவியால் பணியை இலகுவாக நிறைவேற்றுவர். பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவர். விற்பனை சிறந்து லாபம் கூடும். அரசியல்வாதிகள் ஏழ்மையானவர்களுக்கு உதவி செய்து புண்ணியம் தேடிக்கொள்வதால் எதிர்கால வாக்கு வங்கி சிறக்கும். விவசாயிகள் தேவையான கடனை எளிதாகப் பெறுவர். மாணவர்கள் ஆசிரியர் பாராட்டும் வகையில் தரத்தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: அம்பாளை வழிபடுவதால் மனதில் அமைதிநிறைந்திடும்.
உஷார் நாள்: 9.9.12 காலை 9.52 -11.9.12 இரவு 8.14.
வெற்றி நாள்: ஆகஸ்ட் 28, 29, 30
நிறம்: மஞ்சள், பச்சை எண்: 1, 3



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 13, 2012 9:27 pm

ஆவணி ராசிபலன்  TN_120813135404000000

நல்ல சிந்தனைகளை வளர்த்திடும் தனுசுராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு ஆறாம் இடத்தில் யோகமற்ற குணத்துடன் உள்ளார். ஆனால், செவ்வாய், கேது நல்ல பலன் தருவர். சுக்கிரனும் தன் பங்கிற்கு மாத பிற்பகுதியில் உதவிகரமாக செயல்படுவார். காரியத்துடன் தான் யாருடனும் பேசுவீர்கள். இளைய சகோதரரின் யோசனையால் தொழிலில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். வாகனப் பயணத்தில் கண்டிப்பாக மிதவேகம் பின்பற்ற வேண்டும். புத்திரர்கள் உங்கள் எண்ணங்களை உணர்ந்து செயல்படுவர். படிப்பில் திறமை வளரும். பூர்வசொத்தில் எதிர்பாராத அளவில் வருமானம் உண்டு. அந்தப் பணத்தை நகை, மனை வகைகளில் மூலதனம் செய்வீர்கள். ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 10 வரை தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் அவரவர் ஜாதக புண்ணியத்திற்கு ஏற்ப கிடைக்கும். எதிரிகள் பலமிழந்துபோவர். இதனால் உங்களின் புதிய முயற்சி வெற்றிபெறும். உடல்நலம் பலம் பெறும். தம்பதியர் சிறு அளவில் கருத்து வேறுபாடு கொண்டாலும் குடும்பநலன் கருதி நல்வாழ்வு நடத்துவர். தொழிலதிபர்கள் தொழிலாளர்களால் ஏற்படும் இடையூறுகளை சரிசெய்வதால் நிர்வாக நடைமுறை சிறந்து உற்பத்தி அளவு உயரும். வியாபாரிகள் விற்பனை சரிவால் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்ய வேண்டி வரும். லாபம் ஓரளவுக்கு உண்டு. பணியாளர்கள் குழப்பமான எண்ணங்களை சரிசெய்வதால் பணி சீராக நிறைவேறும். வழக்கமான சலுகைகள் உண்டு. குடும்பப் பெண்கள் பணத்தட்டுப்பாட்டால் சிக்கனமாக குடும்பத்தை நடத்த வேண்டியிருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்குவர். உற்பத்தி நடைமுறை எளிதாகும். பணவரவு உயரும். அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டகரமான வகையில் பதவிப்பொறுப்பு கிடைக்கும். விவசாயிகள் சராசரி மகசூல் பெறுவர். புதிய நிலம் வாங்க யோகமுண்டு. மாணவர்கள் கூடுதல் நேரம் படித்து தரத்தேர்ச்சியை சீராக்குவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் பயணத்தில் பாதுகாப்பு கிடைக்கும்.
உஷார் நாள்: 17.8.12 காலை 6- இரவு 8.40 மற்றும் 11.9.12 இரவு 8.14- 14.9.12 அதிகாலை 4.21.
வெற்றிநாள்: ஆகஸ்ட் 30, 31
நிறம்: மஞ்சள், சிமென்ட் எண்: 3, 4



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 13, 2012 9:28 pm

ஆவணி ராசிபலன்  TN_120813135534000000

நண்பர், உறவினரை நல்லமுறையில் உபசரிக்கும் மகரராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சனி ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் குருவின் ஐந்தாம் பார்வை பெற்றுள்ளார். பொதுவாக ஒன்பதாம் இடத்து சனி அலைச்சல் பயணங்களை உருவாக்கும். இருப்பினும் குரு, புதன், ராகுவின் அமர்வு நல்ல பலன்தரும் இடங்களில் உள்ளது. இதுவரை தாமதமான பணிகளை ராகுவின் அருட்பார்வையால் புதிய முயற்சிசெய்து நிறைவேற்றுவீர்கள். பேச்சில் தகுந்த கவனம் இருக்கும். சமூகப்பணியில் ஆர்வம் இருந்தாலும் சொந்தப்பணி அதிக அளவில் குறுக்கிடுவதால், அதிக கவனம் செலுத்த இயலாது. வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். நெருப்பு, கூர்மையான பொருட்களை கவனமுடன் பயன்படுத்த வேண்டும். புத்திரர்கள் ஆடம்பர பொருட்களை வாங்கித்தரக் கேட்டு பிடிவாதம் செய்வர். பூர்வசொத்தில் அளவான வருமானம் உண்டு. எதிரிகள் உங்கள் பக்கம் வரத் தயங்குவர். உடல்நலம் நல்லவிதமாக இருக்கும். தம்பதியர் சுயகவுரவ பேச்சால் கருத்து வேறுபாடு கொள்வர். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை இந்த மாதம் ஒத்திவைப்பது நல்லது. லாபம் ஓரளவுக்கு இருக்கும். வியாபாரிகள் சுமாரான விற்பனை, மிதமான பணவரவு காண்பர். பணியாளர்கள் பணி இலக்கை நிறைவேற்ற தாமதமாகும். குடும்பப் பெண்களுக்கு வீட்டுச் செலவு மிக அதிகமாகும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணிகளை நிறைவேற்றி நிம்மதி அடைவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்த முக்கிய கவனம் கொள்வர்.அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கு இடுபொருள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கால்நடை வாங்குவதை ஒத்தி வைக்கவும். மாணவர்கள் படிப்பில் கவனமும், விளையாட்டுப் பயிற்சியில் தகுந்த பாதுகாப்பும் பின்பற்ற வேண்டும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.
உஷார் நாள்: 17.8.12 இரவு 8.40- 20.8.12 அதிகாலை 2.03 மற்றும் 14.9.12 காலை 4.21 -16.9.12 காலை 9.57.
வெற்றி நாள்: செப்டம்பர் 2, 3
நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 3, 6



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக