ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிபதி விமலா தந்த நீதி

5 posters

Go down

நீதிபதி  விமலா தந்த நீதி  Empty நீதிபதி விமலா தந்த நீதி

Post by சிவா Tue Aug 07, 2012 8:53 am



தமிழ்நாடு, இந்தியாவுக்கு எத்தனையோ சிறப்புகளை, பெருமைகளைத் தந்துள்ளது. குறிப்பாக, மூடப்பழக்க வழக்க இருளில் சிக்கித் தவித்த சமுதாயத்துக்கு, பகுத்தறிவுக் கொள்கைகளை, கதிர்களாய் வீசிய பகலவன் தந்தை பெரியாரை, இந்தியாவுக்கு தந்தது தமிழ்நாடுதான். அன்று, அவர் மேற்கொண்ட போரின் வெற்றியால்தான், இன்று, பலர் தலை நிமிர்ந்து நிற்க முடிகிறது. ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக்கொண்டிருந்த பெண் இனம், இன்று, ஆண்களுக்கு நிகராக வாழ்கிறார்கள் என்றால் அந்த விதையை விதைத்தவர் தந்தை பெரியார்தான். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைத்ததற்கு காரணமான தந்தை பெரியாரை ஆண்கள் போற்றுகிறார்களோ இல்லையோ, பெண் இனம் மறக்கவே கூடாது. மறப்பதும் நியாயம் இல்லை. பெண் என்பவள், வீட்டில் சமையல் செய்வதில் இருந்து குடும்பத்தில் உள்ளவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான ஒரு இயந்திரமாக கருதப்பட்ட காலத்திலேயே பெண் அடிமை ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்தில், "பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற கேள்வியை பதித்தவர் தந்தை பெரியார்.

கணவன் இறக்க நேரிட்ட நிலையில், விதவைகள் மறுமணம் செய்வதை ஆதரித்து அவர் எழுதிய கட்டுரைகள் இப்போது இருளில் நடக்கும் சமுதாயத்துக்கு வெளிச்சத்தைக் காட்டுவதாகும். நாட்டில் ஆங்காங்கு `விதவா' விவாக சபைகள் நடத்தியும், பிரசங்கங்கள் செய்தும் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டும் விதவைத்தன்மையை ஒழிக்க சமுதாயம் முன்வரவேண்டும் என எழுதிய அவர், மறுமணம் தவறல்ல என்பது பற்றி குறிப்பிடும்போது, எல்லா மதங்களிலும் ஒன்றுக்கொன்று நிபந்தனைகளிலும் திட்டங்களிலும்தான் வித்தியாசமே தவிர, மற்றபடி மறுமண கொள்கையில், எந்த மதமும் ஆட்சேபித்து இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார். இத்தனை ஆண்டுகள் கழித்தும், பெரியார் கண்ட கனவு இன்னும் நிறைவேறவில்லை என்பதுதான் மனதுக்கு வேதனையாக இருக்கிறது. அன்று, பெரியார் செய்த அதே சமூக சீர்சிருத்த ஆயுதத்தை இன்று உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் கையில் எடுத்திருப்பதை பார்க்கும்போது, பெரியார் கண்ட கனவு நிறைவேற தாமதமானாலும், நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம், மதுராவில், விருந்தாவன் என்ற இடத்தில், வீடுகளில் கைவிடப்பட்ட, ஆதரவற்ற விதவைகளை அங்கே உள்ள புகலிடங்களில் விட்டுவிட்டு போய்விடுவார்கள். அங்கு, ஒரு விதவை இறந்தால், அவருக்கு இறுதி சடங்கு செய்வதற்கு பணம் இல்லாததால், அவள் உடலை துண்டு துண்டாக வெட்டி, சாக்கில் போட்டு தூர எறிந்து விடும் பழக்கம் நடைமுறையில் இருந்ததைப்பார்த்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி லோக்கூர் ஆகியோர், இனிமேலும் இதுபோல கொடுமைகள் நடக்கக்கூடாது. அவர்களின் இறுதி சடங்குகள் கவுரமாக நடத்தப்படவேண்டும் என்பது உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதே நாளில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.விமலா, மதுரை கிளையில், ஒரு சீர்திருத்த தீர்ப்பை வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நெல்போனா என்ற இளம்பெண், தன் கணவர் ஒரு விபத்தில் மரணம் அடைந்து, இழப்பீடு கேட்டு, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், "அவர், மறுமணம் செய்து விட்டார் ஆகவே இழப்பீட்டு தொகை பெறுவதற்கு அவருக்கு தகுதியில்லை'' என்று இன்சூரன்ஸ் கம்பெனி கூறிய நேரத்தில், நீதிபதி விமலா, "விதவைகள் மறுமணம் செய்வது தவறு இல்லை'' என்று ஆணித்தரமாக, ஆதாரங்களோடு கூறி உள்ளார். அவருடைய கணவர் உயிரோடு இருந்திருந்தால், மறுமணத்தைப்பற்றி அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். விவாகரத்து செய்த நிலையிலோ அல்லது இதுபோன்ற வேறுசில சூழ்நிலைகளிலோ அவர் மறுமணம் செய்யவில்லை. விதவைகள் மறுமணத்தை சமுதாயம் ஆதரிக்க வேண்டும்'' என்று, அடுக்கடுக்காக பல கருத்துக்களை விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவாக கூறி, மறுமணம் செய்ததால், அவர் இழப்பீட்டு தொகையை பெற தகுதியற்றவர் என்ற கருத்தை உதறித்தள்ளி, இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விதவைகளுக்கு ஒரு இழிவு அல்லது தாழ்வு அல்லது அவமானம் என்பது அவர்கள் உயிரோடு இருக்கும் நேரத்திலோ அல்லது மறைந்த பிறகோ ஏற்படக்கூடாது என்ற வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி விமலா தந்த நீதியும், விதவைகள் வாழ்வில் நிச்சயமாக ஒளியேற்றுகிறது.

தினத்தந்தி


நீதிபதி  விமலா தந்த நீதி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீதிபதி  விமலா தந்த நீதி  Empty Re: நீதிபதி விமலா தந்த நீதி

Post by அசுரன் Tue Aug 07, 2012 8:59 am

உண்மையில் இந்த தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.... சரியான சமூக நீதி சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நீதிபதி  விமலா தந்த நீதி  Empty Re: நீதிபதி விமலா தந்த நீதி

Post by யினியவன் Tue Aug 07, 2012 11:43 am

நல்ல தீர்ப்பு - நல்ல பகிர்வு.

இந்த இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு இதே வேலை தான் - எதையாவது சொல்லி நஷ்ட ஈடு தராம பண்றதே வேலை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீதிபதி  விமலா தந்த நீதி  Empty Re: நீதிபதி விமலா தந்த நீதி

Post by விநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 2:10 pm

மகிழ்ச்சி வரவேற்க படவேண்டிய தீர்ப்பு மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

நீதிபதி  விமலா தந்த நீதி  Empty Re: நீதிபதி விமலா தந்த நீதி

Post by முஹைதீன் Tue Aug 07, 2012 3:55 pm

நல்ல தீர்ப்பு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நீதிபதி  விமலா தந்த நீதி  Empty Re: நீதிபதி விமலா தந்த நீதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: நீதிபதி விமலா அதிரடி மாற்றம்
» சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா!
» சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை!
» விதுர நீதி / சாணக்ய நீதி/அர்த்த சாஸ்திரம் தமிழ் பதிப்பு thevai
» வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum