ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
தியாகி துக்காராம் ஓம்பளேயும்-துரோகி அஜ்மல் கசாப்பும் Poll_c10தியாகி துக்காராம் ஓம்பளேயும்-துரோகி அஜ்மல் கசாப்பும் Poll_m10தியாகி துக்காராம் ஓம்பளேயும்-துரோகி அஜ்மல் கசாப்பும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியாகி துக்காராம் ஓம்பளேயும்-துரோகி அஜ்மல் கசாப்பும்

2 posters

Go down

தியாகி துக்காராம் ஓம்பளேயும்-துரோகி அஜ்மல் கசாப்பும் Empty தியாகி துக்காராம் ஓம்பளேயும்-துரோகி அஜ்மல் கசாப்பும்

Post by GreatMortal Thu Aug 02, 2012 4:41 pm

அஜ்மல் அமீர் கசாப் மறுபடியும் செய்திகளில் வருகிறார். மும்பை போலீசார், கசாப்புக்கு சமைத்து போடுவதற்காக ஆறு சமையல் காரர்களை நியமித்துள்ளனர். அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக கசாப்புக்கு சமைத்துப் போட்டுக் கொண்டு வருகின்றனர். இதை பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. இவ்வாறு ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் குற்றவாளி கசாப்புக்கு வகை வகையான உணவு வேளாவேளைக்கு தவறாமல் கிடைத்து வருகிறது. மும்பையில் உள்ள போலீஸ், மருத்துவ மனையிலும் 24 மணி நேர கண்காணிப்பு, போலீஸ் அலுவலகத்திலும் சமைத்துப் போட சமையல் ஆட்கள் பற்றாக் குறை உள்ளது. ஆனால் கசாப்புக்கு மட்டும் இவ்வாறு ராஜ உபசாரம் நடக்கிறது. குறைவான ஞாபக சக்தி உள்ளவர்களுக்காக சில விஷயங்களை மறுபடியும் நினைவுறுத்த வேண்டி உள்ளது.

நவம்பர் 26, 2008 இல் மும்பை நகரில் அஜ்மல் கசாப்பும் இன்னும் இதர ஒன்பது பயங்கரவாதிகளும் 166 அப்பாவிகளை சுட்டுக் கொன்றனர். இந்த படுகொலைகள் வெளிப்படையாக நடந்தன. இந்த படுகொலைகள் நடத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பப்பட்டது. கசாப் பிறரைக் கொன்று குவித்துக் கொண்டு இருந்த போது கையும் களவுமாக பிடிபட்டான். இதுவும் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பானது. இதற்கு மேல் அவன் செய்த கொடூரமான படுகொலை களுக்கு வேறு சான்று எதுவுமே தேவையில்லை. 18 மாதங்கள் விசாரணைக்குப் பிறகு அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 2010இல் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. பெப்ரவரி 2011இல் மும்பை உயர்நீதி மன்றம் கசாப்புக்கு தூக்கு தண்டனை அளித்தது சரிதான் என்று தீர்ப்பளித்தது. இதை அடுத்து ஜூலை 2011இல் கசாப் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தான்.

உச்ச நீதி மன்றம் சட்டப்படி செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் தான் உருவாக்கியுள்ள சட்டங்களே உச்ச நீதி மன்றத்தைக் கட்டிப் போட்டுள்ளன. எனவே கசாப்பை தூக்கில் போட வேண்டும் என்னும் உத்தரவை உச்ச நீதி மன்றம் நிறுத்தி வைத்தது. சட்டம் முறைப்படி செயல் படுத்தப்பட வேண்டும் என்பதின் பொருள் என்ன? கசாப்பின் குற்றம் இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது. எனவே இன்றுள்ள ஒரே கேள்வி அவன் தூக்கில் இடப்பட வேண்டுமா என்பது மட்டும்தான்.

உச்ச நீதி மன்றம், 1983இல் ஒரு வழக்கில் “கொன்றவனின் உயிரை அவனால் கொல்லப்பட்டவர்களின் உயிரைக் காட்டிலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு அணுகியது. அந்த சமயத்தில் மிக மிக அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த தீர்ப்பின் காரணமாக மரண தண்டனை அளிக்கப்பட்டு இருந்த பல குற்றவாளிகள் சாகாமல் தப்பித்தனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. இந்த நிலை இந்தியாவை ஒரு “நாகரீகம் நிறைந்த நாடாக ஆக்கிவிட்டது” என்று மனித உரிமைவாதிகள் எக்காளமிட்டனர்.

ஒரு அறிக்கையின்படி 300 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இதில் ராஜீவ் காந்தியை கொன்றவர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் தூக்குக் கையிற்றை எதிர் பார்த்துக் கொண்டு உள்ளனர். ஆனால் மிக மிக அசாதாரணமான சந்தர்ப்பங்களில் மட்டுமே மரண தண்டனை வழங்கப் பட வேண்டும், நிறைவேற்றப்பட வேண்டும் என்னும் உச்ச நீதி மன்ற தீர்ப்பால் இந்த கொலைகாரர்கள் அனைவரும் சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையை கழித்து வருகின்றனர். கடந்த 17 வருடங்களில் தனஞ்சய் சட்டர்ஜி என்ற ஒரே ஒருவர் மட்டுமே தூக்கில் இடப்பட்டுள்ளான். ஒரு பள்ளி சிறுமியை கற்பழித்துக் கொன்ற குற்றம் காரணமாக அவன் தூக்கில் போடப்பட்டான். மரண தண்டனை கூடாது என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பு மிக மிக அசாதாரணமான சந்தர்ப்பங்களில் மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்னும் கருணை அடிப்படையில் அமைந்த உச்ச நீதி மன்ற தீர்ப்பு எப்படி அஜ்மல் கசாப் போன்ற கடைந்து எடுத்த கொலைகார பாவிகளுக்கும் உதவியாக உள்ளது என்பதைப் பாருங்கள்.

1983இல் தான் கொடுத்த தீர்ப்பில் உச்ச நீதி மன்றம் மரண தண்டனையை ரத்து செய்வதில் கொலைகாரனின் வயதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், அதே சமயத்தில் மரண தண்டனை கொடுக்காமல் இருக்க வயது ஒன்று மட்டுமே தீர்மானிக்கும் அம்சமாக இருக்க கூடாது என்று கூறியுள்ளது. கசாப் படு கொலைகளில் ஈடுபட்டபோது அவனுக்கு வெறும் 21 வயது மட்டும்தானே ஆகி இருந்தது? கசாப்புக்கு அதரவாக வாதட உச்ச நீதி மன்றம் ஒரு வழக்கறிஞரை நியமித்து இருந்தது. அவர் உச்ச நீதி மன்றம் கொடுத்த மேற்படி தீர்ப்பின்படி கசாப்புக்கு வயது மிகவும் குறைவாக இருப்பதால் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்துவிட வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தை மேற்க்கோள் காட்டியே வாதாடுகின்றார்.

அஜ்மல் கசாப் தானாக செயல்படவில்லை, திரிக்கப்பட்ட சமய நம்பிக்கை மற்றும் பொய்யான சித்தாந்தத்தின் தாக்கம் காரண மாகவே அவன் அவ்வாறு கொலை வெறியில் ஈடுபட்டுள்ளான் என்று அந்த வழக்கறிஞர் மேலும் வாதாடியுள்ளார். திரிக்கப்பட்ட சமய நம்பிக்கையே குற்றவாளி, கசாப் அல்ல என்பது அவரது வாதம். இந்த விஷயங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு கசாபை விடுவித்து விட இயலுமா என்பதுதான் நீதிமன்றத்தின் முன் உள்ள பிரச்சனை ஆகும். விளைவு என்ன தெரியுமா? நீதிமன்றம் ஏராளமான வழக்குகளை விசாரித்துக் கொண்டு இருக்கிறது. இதில் ஏற்ப்படும் தாமதம் கசாப்புக்கு சாதகமாக உள்ளது. அவன் தூக்கில் தொங்குவதற்கு பதிலாக அவன் வழக்கு ஊசலாடிக் கொண்டு உள்ளது. மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் அஜ்மல் கசாப் ஒரு அரசு விருந்தாளி போல் வாழ்ந்து வருகிறான். அவன் கூப்பிட்ட குரலுக்கு ஏன், அவன் மெய்க் காப்பாளன் கூப்பிட்ட குரலுக்கு கூட ஓடி வர ஆறு சமையல்காரர்கள் தயாராக காத்து நிற்கின்றனர். அஜ்மல் கசாப்பை சிறையில் பத்திரமாக பார்த்துக் கொள்ள இது வரை 26 கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. இப்போது மறுபக்கத்தை பாருங்கள்.

கசாபுடன் கூட பாகிஸ்தானில் இருந்து வந்த ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த பயங்கரவாதிகள் பல அப்பாவிகளை கொன்று குவித்தனர். பயங்கரவாதி கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். கசாபும் மற்ற பயங்கரவாதிகளைப் போல் கொல்லப்பட்டு இருந்தால் என்ன ஆகி இருக்கும்? பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் லஷ்கர் ஈ தொயிபா இவைகள்தான் நவம்பர் 26இல் மும்பையில் தாக்குதல் நடத்தியதற்கான ஒரே ஒரு சான்றும் நம் நாட்டுக்கு கிடைக்காமல் போய் இருக்கும். அந்த சான்று முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டு இருக்கும். துகாராம் ஓம்பளே என்னும் அஞ்சா நெஞ்சம் வாய்ந்த போலீஸ் அதிகாரிதான் கசாப் தன்னுடைய எ.கே.47 துப்பாக்கியில் இருந்து அவர் மீது குண்டு மாறி பொழிந்த போதும் அதைத் தாங்கிக் கொண்டு கசாபை உயிரோடு பிடிக்க உடன் வந்த போலீசாருக்கு உதவினார். ஆனால் துகாராம் ஓம்பளே அவர்களின் தியாகத்தை அக்டோபர் 6, 2010லேயே மறந்து விட்டார்கள். இது உள்துறை மந்திரி சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்ட கேள்வியில் இருந்து நன்கு புலனாகிறது.”

துகாராம் ஓம்பளே கசாபின் துப்பாக்கி முனையை பிடித்துக் கொண்டு அதில் இருந்த வந்த குண்டுகளை தனது மார்பில் தாங்கினார். அஜ்மல் அமீர் கசாபை தன்னுடன் வந்த போலீசார் உயிரோடு பிடிக்க வேண்டும் என்பதற் காகவே அவர் இவ்வாறு உயிர்த் தியாகம் செய்தார். அந்த துகாராம் ஓம்பளே உங்களில் எவ்வளவு பேர் இன்னும் நினைவில் வைத்து இருக்கிறீர்கள் என்று சிதம்பரம் கேட்டார். ஓம்பளேயை பற்றி நினைப்பவர்கள் எவரும் இல்லை என்பதற்கு, கசாபை தண்டிக்காமல் மன்னித்து விட்டுவிட வேண்டும் என்று கேட்கும் “இளகிய மனம் படைத்த” அறிவு ஜீவிகள் மற்றொரு சான்றாகத் திகழ்கின்றனர்.

இப்போது 26/11 நள்ளிரவுக்கு செல்வோம். கசாப் பல அப்பாவிகளை கொன்று குவித்த பிறகு இன்னொரு பயங்கரவாதியுடன் சேர்ந்து கொண்டு ஒரு ஸ்கோடா காரை கடத்தினான். அதை மும்பையின் மரின் டிரைவ் பகுதியில் அவன் ஒட்டி சென்றான். ஓம்பளே மரின்டிரைவ் பகுதியில் உஷாராக இருக்குமாறு பணிக்கப் பட்டார். ஸ்கோடா கார் கடத்திக் கொண்டு வரப்படுவது அவருக்கு இரவு 12-45 மணிக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு பிறகு ஒரு சில நிமிடங்களில் கடத்தப்பட்ட ஸ்கோடா கார் சீறிப் பாய்ந்து போவதை ஓம்பளே பார்த்தார். அவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஏறி அந்த ஸ்கோடா காரை துரத்தத் துவங்கினார். ஸ்கோடா காரில் இருந்த கசாபும் இன்னொரு பயங்கரவாதியும் சகட்டு மேனிக்கு நாலா பக்கமும் எல்லா திசைகளிலும் சரமாரியாக சுட்டுக் கொண்டே வந்தனர். அந்த ஸ்கோடா கார் சவுபாத்தி பகுதிக்கு வந்தவுடன் மெதுவாக செல்ல ஆரம்பித்தது. ஏன் என்றால் அங்கு “தடுப்புகள்” இருந்தன. ஓம்பளேவிடம் எந்த ஆயுதமும் இருக்கவில்லை. அவர் ஸ்கோடா காரை சுற்றி வளைத்தார். ஸ்கோடா கார் தடுப்பு சுவர் மீது மோதி சுற்றுமாறு அவரது செயல் செய்து விட்டது. ஓம்பளே கசாபின் மீது பாய்ந்தார். அவனுடைய ஏ.கே.47 துப்பாக்கியின் பேரலை தன்னுடைய இரு கைகளாலும் அவர் பிடித்துக் கொண்டார். பேரல் ஒம்ளேயைப் பார்த்து இருந்ததால் கசாப் அவர் மீது குண்டு மழை பொழிந்தான். ஆனால் ஓம்பளே தன்னுடைய இறுதி மூச்சுவரை கசாபை விடவில்லை. இதற்குள் அவருடன் வந்த மற்ற போலீசார் இன்னொரு பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர். அவர்கள் ஓம்பளேயின் பிடியில் இருந்த கசாபின் மீது பாய்ந்து அவனை உயிருடன் பிடித்து விட்டனர். ஓம்பளே பலிதானம் ஆகிவிட்டார். ஆனால் தன்னுடைய நாட்டுக்கு கசாப் என்னும் மிக முக்கிய மனித சாட்சியை அவர் உயிருடன் பிடித்துக் கொடுத்துவிட்டார். இதன் மூலம் இன்னும் எத்தனையோ பேரை கசாப் சுட முடியாமல் செய்து அவர்களை காப்பாற்றி உள்ளார்.

ஓம்பளே தன்னுடைய மனைவியையும் 4 மகள்களையும் விட்டுவிட்டு நாட்டுக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார். அந்த நால்வரில் இரண்டு மகள்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர்கள் ஓம்பளே உயிர் நீத்த போது கல்லூரிகளுக்கு சென்று கொண்டு இருந்தனர். ஓம்பளேவுக்கு அரசாங்கம் உடனே அசோக் சக்ரா விருது அளித்தது. ஆனால் அத்தோடு ஓம்பளேவையும் அவருடைய குடும்பத்தையும் மறந்து விட்டனர். இப்போது மனித உரிமைவாதிகள் கசாபுக்கு கருணை காட்ட வேண்டும் என்று கோரும் கால கட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் உறவுகளில் கசாப் ஒரு பிரச்சனையாக உருவாவதை கற்பனை செய்து பாருங்கள். ரைமாண்ட் டேவிஸ் என்னும் அமெரிக்க சி.ஐ.ஏ. உளவாளி அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகளில் இப்படித்தான் பிரச்சனையாக இருந்தான். அவன் பாகிஸ்தானிகளை கொன்ற குற்றத்திற்கு ஆளானவன். இது சென்ற வருடம் நடந்தது. இந்த அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகளில் பிரச்சனையாக உருவெடுத்த டேவிஸ் விஷயம் ஷரியா கொள்கைப்படி தீர்க்கப்பட்டது. “தியத்’ என்பது ஷரியாவின் கொள்கை. அதாவது கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். டேவிஸ் விடுதலை ஆவதற்காக 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்க கொடுத்தது. காந்தகார் என்னும் இடத்தில் அமெரிக்க துருப்புகள் சில ஆப்கானியர்களை கொன்றனர். இதற்கும் அமெரிக்கா பணம் கொடுத்து தன்னுடைய துருப்புகளுக்கு மன்னிப்பு வாங்கிக் கொடுத்தது. அமெரிக்க துருப்புகள் 17 ஆப்கானியர்களை கொன்று இருந்தனர். இந்த 17 குடும்பங்களுக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 46,000 அமெரிக்க டாலர்களை அமெரிக்கா கொடுத்தது. அமெரிக்கா துருப்புகளால் காயம் ஏற்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த தொகையில் கால் பங்கு கொடுக்கப் பட்டது.

சவூதி அராபியதான் இத்தகைய இஸ்லாமிய நீதியின் படி அமைந்த பிணயத் தொகையை உலக அளவில் தீர்மானிக்கிறது. இது வரை ஒரு இஸ்லாமியர் கொல்லப்பட்டால் அவரது குடும்பத்திற்கு 29, 330 அமெரிக்க டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று அந்த நாடு நிர்ணயம் செய்து இருந்தது. இப்போது 1,06,654 அமெரிக்க டாலர்கள் கொல்லப்பட்ட ஒரு முஸ்லீமின் குடும்பத் திற்கு கொடுக்கப்பட வேண்டும் என்று சவூதி அராபிய நிர்ணயம் செய்துள்ளது. செப்டம்பர் 2011 இல் இருந்து “இந்த விலை உயர்வு “அமலுக்கு வந்துள்ளது. ஒட்டகங்களின் விலை அதிகமாகி விட்டதால் இந்த விலை உயர்வாம். ஒட்டகங்களுக்கும் இந்த விலை உயர்வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?. “தியத்”பிணயத் தொகை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா? ஒரு இஸ்லாமியனின் உயிர் 100 ஒட்டகங்களின் விலைக்கு சமம். ஒரு இஸ்லாமியப் பெண்ணின் உயிர் இதில் பாதி விலைக்கு சமம் 26/11 மும்பை தாக்குதல்களில் படுகொலை செய்யப் பட்டவர்களுக்கு இந்த “விகிதத்தைப்”போட்டுப் பாருங்கள்.

மும்பை மீது பாகிஸ்தான் கட்டளைப்படி பாகிஸ்தான் பயங்கர வாதிகள் நடத்திய ஆக்ரமிப்புகளில் 166 மும்பைவாசிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதில்தான் ஒம்ப்லேயும் உள்ளார். இவர்கள் அனைவரும் 16,600 ஒட்டகங்களுக்கு சமம். சவூதி அராபிய நாட்டுக் கணக்கின்படி கொல்லப்பட்ட இவர்களின் குடும்பங்களுக்கு 18 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுக்க வேண்டும். அமெரிக்கா, பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் செய்தது போல் பாகிஸ்தானும் கசாபின் விடுதலைக்காக 18 மில்லியன் அமெரிக்கா டாலர்களை கொடுக்க முன் வந்தால், நம் நாட்டில் உள்ள மனித உரிமைவாதிகள் என்ன சொல்வார்கள்? கசாப்பால் கொல்லப்பட்ட ஒவ்வொரு மும்பைவாசியின் குடும்பத்துக்கும் 100 ஒட்டகங்களுக்கு சமமான பணம் கிடைக்கும். .ஆனால் இங்குள்ள மனித உரிமைவாதிகள் கசாபை எந்த தொகையும் வாங்கிக் கொள்ளாமலே, விடுதலை செய்து பாகிஸ்தானுக்கு பத்திரமாக திருப்பி அனுப்பிவிடுவார்கள். நம் நாட்டு மனித உரிமைவாதிகள் “தியத்” சட்டத்தை விட தாராள மனப்பான்மை கொண்டவர்கள் அல்லவா!
GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

Back to top Go down

தியாகி துக்காராம் ஓம்பளேயும்-துரோகி அஜ்மல் கசாப்பும் Empty Re: தியாகி துக்காராம் ஓம்பளேயும்-துரோகி அஜ்மல் கசாப்பும்

Post by கேசவன் Thu Aug 02, 2012 9:22 pm

இவனுக்கு மற்ற கைதிகளுக்கு அளிக்கும் உணவையே அளிக்காமல் ஏன் இப்படி ஆறு சமயல்காரர்களை வைத்துள்ளனர்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தியாகி துக்காராம் ஓம்பளேயும்-துரோகி அஜ்மல் கசாப்பும் 1357389தியாகி துக்காராம் ஓம்பளேயும்-துரோகி அஜ்மல் கசாப்பும் 59010615தியாகி துக்காராம் ஓம்பளேயும்-துரோகி அஜ்மல் கசாப்பும் Images3ijfதியாகி துக்காராம் ஓம்பளேயும்-துரோகி அஜ்மல் கசாப்பும் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum