புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவல் நிலையத்தின் கதை! I_vote_lcapகாவல் நிலையத்தின் கதை! I_voting_barகாவல் நிலையத்தின் கதை! I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
காவல் நிலையத்தின் கதை! I_vote_lcapகாவல் நிலையத்தின் கதை! I_voting_barகாவல் நிலையத்தின் கதை! I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவல் நிலையத்தின் கதை! I_vote_lcapகாவல் நிலையத்தின் கதை! I_voting_barகாவல் நிலையத்தின் கதை! I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
காவல் நிலையத்தின் கதை! I_vote_lcapகாவல் நிலையத்தின் கதை! I_voting_barகாவல் நிலையத்தின் கதை! I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
காவல் நிலையத்தின் கதை! I_vote_lcapகாவல் நிலையத்தின் கதை! I_voting_barகாவல் நிலையத்தின் கதை! I_vote_rcap 
10 Posts - 4%
prajai
காவல் நிலையத்தின் கதை! I_vote_lcapகாவல் நிலையத்தின் கதை! I_voting_barகாவல் நிலையத்தின் கதை! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காவல் நிலையத்தின் கதை! I_vote_lcapகாவல் நிலையத்தின் கதை! I_voting_barகாவல் நிலையத்தின் கதை! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
காவல் நிலையத்தின் கதை! I_vote_lcapகாவல் நிலையத்தின் கதை! I_voting_barகாவல் நிலையத்தின் கதை! I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
காவல் நிலையத்தின் கதை! I_vote_lcapகாவல் நிலையத்தின் கதை! I_voting_barகாவல் நிலையத்தின் கதை! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
காவல் நிலையத்தின் கதை! I_vote_lcapகாவல் நிலையத்தின் கதை! I_voting_barகாவல் நிலையத்தின் கதை! I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காவல் நிலையத்தின் கதை! I_vote_lcapகாவல் நிலையத்தின் கதை! I_voting_barகாவல் நிலையத்தின் கதை! I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
காவல் நிலையத்தின் கதை! I_vote_lcapகாவல் நிலையத்தின் கதை! I_voting_barகாவல் நிலையத்தின் கதை! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவல் நிலையத்தின் கதை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 9:28 pm

எந்தவொரு பிராந்தியத்திலும் அதை நிர்வகிப்பதற்கான அதிகபட்ச அதிகாரம் குவிந்திருக்கும் இடம்... அங்குள்ள காவல் நிலையம். தமிழகத்தில் அரசுக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் துறை டாஸ்மாக் என்றால், அரசின் பணியாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் துறைகளில் முதலிடம் பிடிப்பது தமிழகக் காவல் துறை. ஆம்... நம்புங்கள்... பத்திரப் பதிவுத் துறை, விற்பனை வரித் துறைகளைவிட காவல் துறையில் 'மேல்’ வருமானம் அதிகம். தமிழகத்தில் ஒரு காவல் நிலையத்தின் பணிகள் என்ன, அதன் அதிகார எல்லை என்ன, வரம்பு மீறும் எல்லைகள் எவை... வாருங்கள் காவல் நிலையத்துக்கு ஒரு விசிட் அடிப்போம்.

தமிழகத்தில் மொத்தம் 1,296 காவல் நிலையங்கள், 196 மகளிர் காவல் நிலையங்கள், சுமார் 250 ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஒரு லட்சம் காவலர்கள்... பிரமாண்ட ஆலமரமாகக் கிளை பரப்பி இருக்கும் காவல் துறையில் கட்டப் பஞ்சாயத்தும் லஞ்சமும்கூடப் பிரமாண்டம்தான். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எப்படி எல்லாம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள்?

ஃபர்ஸ்ட் இன்கம் ரிப்போர்ட்!

முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆர்... போலீஸாரைப் பொறுத்தவரை பொன் முட்டையிடும் வாத்து. காவல் நிலைய நடைமுறைகளில் முதல் நடைமுறையே எஃப்.ஐ.ஆர். பதிவுதான். அதில் இருந்தே தொடங்குகிறது வசூல் வேட்டை. காவல் நிலையத்தில் ஒருவர் அளிக்கும் புகாரைப் பெற்றுக்கொண்டு ஆய்வாளர் அல்லது நிலைய எழுத்தர் உடனடியாக ரசீது (சி.எஸ்.ஆர்.) கொடுக்க வேண்டும். புகாரின் தன்மையைப் பொறுத்து அன்றைய தினமே எஃப்.ஐ.ஆர். பதியப்பட வேண்டும்.

ஆனால், உண்மையில் நடப்பது என்ன? புகாரைப் பெற்றுக்கொண்டு உடனே புகாரில் சம்பந்தப்பட்ட எதிர்த் தரப்பை அழைக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். புகார்தாரர், எதிர்த் தரப்பு... இவர்களில் யாரிடம் அதிக பேரம் நடக்கிறதோ, அவர் களுக்குச் சாதகமான வகையில் புகார் பதிவு செய்யப்படும் அல்லது பதிவுசெய்யப்படா மலேயே போகும். ஒருவேளை போலீஸ் வற்புறுத்தியும் புகார்தாரர் புகாரை வாபஸ் வாங்க மறுத்தால், அதற்கெல்லாம் அசரவே மாட்டார்கள். எதிர்த் தரப்பிடம் ஒரு புகாரை வாங்கி, ஒரிஜினல் புகார் கொடுத்தவர் மீதே வழக்குப் பாய்ச்சி அதிரவைப்பார்கள். 'ஏன்தான் காவல் நிலையத்துக்குச் சென்றோமோ’ என்று விரக்தியில் நொந்தேபோவார் புகார்தாரர். இந்த எஃப்.ஐ.ஆரை எப்படியும் வளைக்கலாம். அது நிலையத் தின் அனுபவசாலிக்குக் கைவந்த கலை. உதாரணமாக, ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் வழக்குக்கு செக்ஷன் 506 (2) என்று பதிவுசெய்தால் ஜாமீன் கிடைக்காது. அதையே வெறும் மிரட்டல் என்று செக்ஷன் 506 (1)ல் பதிவுசெய்தால் ஸ்டேஷனில் இருந்து கையை வீசிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடலாம். இப்படி ஒரு எண்ணை மாற்றி எழுதினாலே, வழக்கின் மொத்த ஜாதகத்தையே மாற்றிவிடலாம்.

கைதுக்கும் காசு!

பதிந்த எஃப்.ஐ.ஆர். மீது குற்றம்சாட்டப் பட்டவரைக் கைதுசெய்யவும் கைது செய்யாமல் இருக்கவும் பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்க வேண்டும். புகார்தாரர், குற்றம்சாட்டப்பட்டவர் இருதரப் பில் யாரிடம் அதிக பேரம் படிகிறதோ, அவருக்குச் சாதகமாக நடவடிக்கை பாயும். குற்றம்சாட்டப்பட்ட நபர் முன் ஜாமீனுக்கு விண்ணப்பித்தால், அதை ஆட்சேபிக்காமல் இருக்கவும் பணம் வேண்டும்.

ரெக்கவரி ரீல்!

மேற்கண்ட வகை வருமானம் எல்லாம் சட்டம் - ஒழுங்கு போலீஸாருக்கு மட்டும்தான். இவர்களுக்கு அன்றாட வருமானம் என்றால், குற்றப் பிரிவு போலீஸாருக்கு இரண்டொரு மாதங்களுக்கு ஒருமுறைதான் வருமானம். ஆனால், செம லம்ப் வருமானம். திருடு போன சொத்துகளை மோப்பம் பிடித்து, துப்புத் துலக்கி மீட்கும் கடமைஆற்றும் போலீஸாருக்கு ஒவ்வொரு வழக்கும் புதையல் வேட்டைதான். 100 பவுன் திருடு போய்விட்டதாகப் புகார் அளித்தால், உடனே எஃப்.ஐ.ஆர். போட மாட்டார்கள். ஆனால், உடனடியாக வியர்க்க விறுவிறுக்க தேடுதல் வேட்டை நடத்துவார்கள். எந்தத் திருடன், எந்த ஏரியாவில், எந்த ஸ்டைலில் தேட்டை போடுவான் என்பதெல்லாம் ஸ்டேஷன் காவலர்களுக்கு அத்துப்படி. திருடனை அமுக்கிப் பிடித்து, 'சிறப்பு விசாரணை’ மூலம் நகையை எங்கே பணமாக்கினான் என்று ஆதியோடு அந்தமாக உண்மையைக் கறந்துவிடுவார்கள். அண்ணா நகர், அமைந்தகரை தொடங்கி ஆம்பூர் வரை தான் கைவரிசை காட்டிய இடங்களை அவன் பட்டியல் இடுவான். அப்போது போலீஸ் உண்மையில் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஏரியா காவல் நிலையத்திலும் அவன் மீது தனித்தனி எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்து, ஒவ்வொரு எஃப்.ஐ.ஆருக்கும் இறுதி அறிக்கை தயார் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும். அந்தந்த நிலைய விசாரணை அதிகாரி, அவரது எல்லையில் திருடுபோன சொத்துகளை மீட்டு, நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும்.

ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது? திருடன் நகையை விற்ற நபர்களிடம் அதட்டி மிரட்டி தங்கத்தை மீட்பார்கள். இப்படி 10 வழக்குகளுக்கான மொத்த திருட்டுச் சொத்தையும் ஒன்றுதிரட்டினால், 200 பவுனுக்குக் குறையாமல் கிடைக்கும். பிறகு, புகார்தாரரைக் கூப்பிட்டு பஞ்சாயத்து பேசுவார்கள்.

''அந்தப் பய எல்லாத்தையும் வித்து சாப்புட்டுட்டான். உங்களப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு. அதுவும் அடுத்த மாசம் பொண்ணுக்குக் கல்யாணம்கிறீங்க... நாங்க வேணா ஒண்ணு செய்யறோம். வேற கேஸ்ல கொஞ்சம் நகை சிக்கி இருக்கு. அது முப்பது பவுன் தேறும். நீங்க ஒரு அமவுன்ட் கொடுத்தா, அதை எடுத்து உங்களுக்குச் சரிக்கட்டிடலாம்'' என்பார்கள். ஆட்களின் வசதியைப் பொறுத்து, லட்சங்களையோ ஆயிரங்களையோ பெற்றுக் கொண்டு... கட்டக் கடைசியாகத்தான் எஃப்.ஐ.ஆர். பதிவார்கள். 100 பவுனுக்கு 30 பவுன் திருடுபோனதாகப் பதிவுசெய்து... அதையும் வெற்றிகரமாக மீட்டுக் கொடுத்ததாக பத்திரிகையாளர்களை அழைத்துப் பேட்டி கொடுப்பார்கள். லாபம், 170 பவுன் ப்ளஸ் சில லட்சங்கள்! நாம் இதை நம்ப முடியாமல் பழுத்த அனுபவம் உள்ள சில கிரிமினல் லாயர்களிடம் விசா ரித்தபோது, 'இது அனைத்தும் 100 சதவிகிதம் உண்மைதான்!’ என்றுஆமோதித்தார்கள். அட... ஆண்டவா!



காவல் நிலையத்தின் கதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 9:28 pm

ஏன் இந்தக் கொள்ளை?

காவல் நிலையங்களில் ஏன் இந்த அடாவடி வசூல்? இதில் ஒரு சின்ன உண்மை என்ன வென்றால், தங்கள் சுயலாபத் துக்கு மட்டுமே காவலர்கள் இப்படி வசூல் வேட்டை நடத்துவது இல்லை. காவல் நிலையத்தின் நிர்வாகச் செலவினங்களைச் சமாளிக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்று நேர்மையாகச் செயல்படும் பல காவலர்களே சொல்கிறார்கள்.

விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஒரு நபர், ஸ்டேஷனில் இருக்கும்வரை அவருக்கு உணவு, காபி, டீ முதலிய அத்தனையும் அந்தந்த காவல் நிலையத்தின் பொறுப்புதான். இப்படி விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஒரு நபரின் மூன்று வேளை உணவுச் செலவுக்கென அரசு வழங்கும் தொகை 10 ரூபாய் மட்டுமே.

குற்றவாளியை விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லுதல், சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற போக்குவரத்துச் செலவுக்கு அரசு பஸ் கட்டணம் மட்டுமே அரசின் அளவுகோல்.

விழிபிதுங்கும் கூட்ட நெரிசலில் நகரப் பேருந்துகளில் அக்யூஸ்டை அழைத்துச் செல்ல முடியுமா? ஆட்டோ தான் ஒரே வழி. கடைநிலைக் காவலர்கள் தங்கள் கைக்காசு மூலம்தான் அதைச் சமாளிக்க வேண்டும்.

இதைக்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், உயர் அதிகாரிகள் இழுத்துவிடும் செலவுதான் பலரை மூச்சு முட்ட வைக்கும். உயர் அதிகாரி துப்பு துலக்கவோ... மோப்பம் பிடிக்கவோ ஏரியாவுக்கு வந்தால், அந்த ஊரின் நட்சத்திர ஹோட்டல் அறை, அவரது போக்குவரத்துக்கு ஏ.சி. கார், சாப்பாடு, சரக்கு முதல் 'மேற்படி’ச் செலவு வரை அனைத்துமே அந்தப் பகுதியின் காவல் நிலையப் பொறுப்புதான்.

காவல் நிலைய ஜீப்புக்கு அரசு மாதம் ஒன்றுக்கு 160 லிட்டர் டீசல் ஒதுக்கீடு செய்கிறது. இதை அந்தந் தப் பகுதியில் இருக்கும் அரசு பெட்ரோல் பங்க்குகளில் நிரப்பிக்கொள்ள வேண்டும். ஆனால், அந்த நிலையத் தின் உயர் அதிகாரிகள் தனது சொந்த வாகனத்துக்கு ஸ்டேஷன் ஜீப்பின் பதிவு எண்ணைக் கொடுத்து எரிபொருள் நிரப்பிக்கொள்வார். அப்படியெனில் ஸ்டேஷன் ஜீப்புக்கு? ஏரியா பெட்ரோல் பங்க்கில் மாமூலுக்குப் பதில் டீசல். இதுவும் இன்ன பிறவுமாக அனுதினமும் குவியும் செலவுகளைச் சமாளிக்கவே காவலர் கள் இப்படி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் வசூல் மேளா நடத்துவதாக நியாயம் கற்பிக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் சொல்லும் கணக்குகளை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் அந்தச் செலவுகளெல்லாம் போலீஸார் அடிக்கும் கொள்ளையில் ஒரு சதவிகிதம்கூட இல்லை.



காவல் நிலையத்தின் கதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 9:29 pm

பட்டையைக் கிளப்பும் வசூல் பேட்டை.

சென்னையின் பரபரப்பான இடத்தில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தின் நாள் ஒன்றின் 'மேல்’ வருமானமே இரண்டு, மூன்று லட்சங்களைத் தொடும். மற்ற நகரங்களில் சராசரியாக நாளன்றுக்கு லட்சத்துக்குக் குறையாது. தமிழகம் முழுக்க அப்படி வசூலில் பட்டை கிளப்பும் சில பேட்டைகள் இங்கே...

வணிக நிறுவனங்கள் மற்றும் 'அண்டர்கிரவுண்ட் பஜார்’கள் காரணமாக சென்னையில் பூ மணக்கும் ஸ்டேஷனும் யானையே கவிழ்ந்த ஸ்டேஷனும் வருமானத்தில் நம்பர் ஒன்.

காஞ்சிபுரத்தில் 'கூடு வா’ என்று அழைக்கும் நிலையத்தின் கட்டுப்பாட்டில் வெளிநாட்டு கார் நிறுவனங்களும் ரியல் எஸ்டேட் தொழிலும் களைகட்டுவதால், அடிபிடி வருமானம். மதுரை யில் 'இந்த’க் காவல் நிலையத்துக்கு மட்டும் 'திடீர் திடீர்’ என யோகம் அடிக்கும். ஸ்டார் ஹோட்டல்கள், மது பார்கள், பேருந்து நிலையம் ஆகியவையே காரணம். நெல்லையில் காற்றாலை தொழில் கொடிக் கட்டிப் பறக்கும் 'மான்’ காவல் நிலையத்தில் கொட்டுது பணம். சேலத்தில் 'பள்ளத்து’ ஸ்டேஷன், பெரிய மாரியம்மன் லிமிட்டில் இருக்கும் இன்னொரு ஸ்டேஷனுக்கு வசூலில் செம டஃப் கொடுக் கிறது. கோவையில் ரெண்டு எழுத்து மேட்டில் உள்ள ஸ்டேஷன் காவலர்களின் பாக்கெட்டில் ஐந்நூறுக்குக் குறைந்து கரன்ஸியைப் பார்க்க முடியாது. திருப்பூரில் வடக்கு பார்த்த திசைக்குத்தான் மவுசு அதிகம்.

காவல் நிலையங்களைப் பொறுத்தவரை யார், எவராக இருந்தாலும் காசேதான் கடவுளடா!

காக்கியும் சில கையூட்டு உண்மைகளும்!


தமிழக அரசியல் களத்தையே மிகச் சமீபத்தில் உலுக்கிய கொலை வழக்கு அது. இப்போது வழக்கு விசாரணை இன்னொரு பிரிவு போலீஸாரிடம் சென்றுவிட்டது. ஒருவேளை சி.பி.ஐ-க்கு வழக்கு செல்வதாக இருந்தால், தடயம், துப்பு, சாட்சி என எதையும் விட்டுவைக்கக் கூடாது என்று மேலிடத்தில் இருந்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறதாம்.

தென் மாவட்டத்தின் அதிமுக்கிய கனிம நிறுவன உரிமையாளரின் மகன் மீது மூன்று கிடுக்கிப்பிடி வழக்குகளைப் பாய்ச்சத் தயாரானது போலீஸ். நேர்மையான அதிகாரி ஒருவர் அந்தப் பணிகளை முன்னெடுத்துச் செய்த போதுதான் தடாலடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் ஊரை விட்டுக் கிளம்பிய மறுநாளே, அந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிட்டார்கள். இதற்குக் கனிம அதிபர் செலவு செய்தது ஒன்றேகால் கோடி!

தமிழக முதல்வரே கடுமையாக அர்ச்சித்த அந்தத் தென் மாவட்டப் புள்ளி, தற்போது மதுரை டு தொண்டி வரையிலான 80 கோடி மதிப்பு சாலை ஒப்பந்தப் பணிகளைக் கைப்பற்றியுள்ளார். இதற்காக போலீஸ் மற்றும் ஆளும் கட்சியினருக்கு மட்டும் அவர் வாரி இறைத்தது திட்ட மதிப்புத் தொகையில் 10 சதவிகிதமாம்.

இன்றைய தேதியில் அந்தச் சாமியார் தமிழக போலீஸாருக்குப் பணம் காய்க்கும் மரம். கடந்த மாதம் சாமியாரின் தென் மாவட்ட ஆசிரமம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சாமியாரின் சிஷ்யர்கள் வீசிய செருப்பு பெண் போலீஸார் மீது விழுந்தது. அதற்காக சாமியார் மீது வழக்கு போடாமல் இருக்க கைமாற்றப்பட்ட தொகை 17 லட்சமாம். அதற்கு முன் மிக நெருக்கடியான நேரத்தில் சாமியார் வெளிமாநிலத்தில் இருந்து தென் மாவட்டம் வந்தார். அப்போது அவரது லைனுக்கு வந்த தென் மாவட்ட போலீஸார், 'வெளிமாநில போலீஸார் உங்களைக் கைதுசெய்ய அனுமதி கேட்டு காத்திருக்கிறார்கள். அவர்களைத் திசை திருப்பி அனுப்பலாமா அல்லதுஉங்களை பேக் செய்து அவர்களிடம் அனுப்பலமா?’ என்று கேட்டு இருக்கிறார்கள். வெலவெலத்துப் போன சாமி, உடனடியாக தனது காரில் இருந்த பெட்டியில் இருந்து 10 லட்சத்தை 'ஹாட் கேஷாக’க் கொடுத்து அனுப்பினாராம். பிறகு, தலைமறைவாகப் பயணித்துத் தன் இருப்பிடம் சேர்ந் ததும்தான் அவருக்குத் தெரிந்ததாம், வெளி மாநில போலீஸ் யாரும் தன்னைக் கைது செய்ய வரவில்லை என்று. உலகத்துக்கே உட்டாலக்கடி வித்தை காட்டியவருக்கே டேக்கா கொடுத்தது அந்த 'ரணகள பூமி’யைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும்.

விலையும் மிக அதிகமே!

காவலர்கள் அனைவருமே ஊழல் புரிவது இல்லை. ஆனால், காவல் பணியை தங்கள் உயிர் மூச்சாக நினைத்துச் செயல்படுபவர்கள் சுமார் 30 சதவிகிதத்தினர் மட்டுமே. அதுவும் இன்றைய சூழலில் நேர்மை என்பது உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே, அதுவும் ஓரளவுதான் சாத்தியம். ஒரு ஆய்வாளர் தன் அளவில் மட்டுமே நேர்மையாக இருக்க முடியும். மற்றபடி தனது காவல் நிலைய எல்லைக்குள் போலீஸார் மாமூல் வசூலிப்பதைத் தடுக்க முடியாது. ஏனெனில், அந்தப் பணம்தான் ஒரு காவல் நிலையத்தை நிர்வகிக்கும் என்கிற யதார்த்த உண்மை அவருக்குப் புரிந்திருக்கும்.

போலீஸாருக்கு டூட்டி நேரம் எல்லாம் எதுவும் கிடையாது. 24 மணி நேரமும் வேலை நேரம்தான். காவல் நிலைய ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவர்களுக்குள் வேலை நேரத்தைப் பிரித்துக்கொண்டு தூக்கம், சாப்பாடு மற்றும் குடும்பத்துக்கு மிகச் சொற்ப நேரத்தை ஒதுக்கிக்கொள்வார் கள். காக்கிச் சட்டையின் கம்பீரத்துக்கும் அங்கீகாரத்துக்கும்... அதற்கு மேல் கிடைக்கும் வருமானத்துக்கும் இவர்கள் கொடுக்கும் விலையும் மிக அதிகமே.

டி.எல்.சஞ்சீவிகுமார்



காவல் நிலையத்தின் கதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக