ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் அசத்திய ககன் நரங், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்

2 posters

Go down

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் அசத்திய ககன் நரங், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார் Empty லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் அசத்திய ககன் நரங், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்

Post by GreatMortal Wed Aug 01, 2012 3:02 pm

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் அசத்திய ககன் நரங், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்.

லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவுக்கான போட்டி நடந்தது. இதில் இந்தியா சார்பில் ககன் நரங் பங்கேற்றார். முதலில் நடந்த தகுதிச் சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ககன் நரங், 600க்கு 598 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார்.

பைனலில் அசத்திய ககன் நரங் 103.1 புள்ளி பெற்றார். மொத்தம் 701.1 (598 + 103.1) புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். தங்கப் பதக்கத்தை ருமேனியாவின் ஆலின் ஜார்ஜ் மோல்டோவியானு (599 + 103.1 = 702.1 புள்ளி) வென்றார். <<வெள்ளிப் பதக்கத்தை உலகின் "நம்பர்-1' வீரரான இத்தாலியின் நிக்கோலோ கேம்ப்ரியானி (599 + 102.5 = 701.5 புள்ளி) தட்டிச் சென்றார்.

மூன்றாவது பதக்கம்:ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் கிடைத்தது. முன்னதாக 2004ல் நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் "டபுள் டிராப்' பிரிவில் இந்தியாவின் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக் 10 மீ., "ஏர் ரைபிள்' இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார்.
* இது, ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த 21வது பதக்கம்.* தவிர இது, தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 8வது பதக்கம். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 1900ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பிரிட்டன் வம்சாவளியை சேர்ந்த நார்மன் பிரிட்சர்ட் பங்கேற்றார். இவர் 200 மீ., ஓட்டம் மற்றும் 200 மீ., தடை ஓட்டத்தில் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு மொத்தம் 10 பதக்கம் கிடைத்துள்ளது.

மீண்டும் எதிர்பார்ப்பு:லண்டன் ஒலிம்பிக் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் வெண்கலம் வென்ற ககன் நரங், இன்னும் இரண்டு பிரிவு போட்டிகளில் விளையாட உள்ளார். இவர், 50 மீ., "ரைபிள் புரோன்' (ஆக., 3) மற்றும் 50 மீ., "ரைபிள்-3' (ஆக., 6) பிரிவு போட்டிகளில் பங்கேற்கிறார். இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஒரு கோடி பரிசு:ககன் நரங்கிற்கு, அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ரூ. 1 கோடி பரிசு அறிவித்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில்,"" லண்டன் ஒலிம்பிக்கில் இவர் பெற்ற முதல் பதக்கத்தால் இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்கின்றனர்'' என்றார்.

ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து:ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ககன் நரங்கிற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மேகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில்"" ககன் நரங்கிற்கு விளையாட்டுத்துறை ஆணையத்தில் "குரூப்-ஏ' கிரேடில் பணி வழங்கப்படும். இது ஐ.ஏ.எஸ்., பதவிக்கு சமமானது,'' என்றார்.

சச்சின் பாராட்டு: இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் "டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ""ககன் நரங் பதக்கம் வென்று, பெருமை சேர்த்திருக்கிறார். ஒலிம்பிக்கில் இன்னும் பல சாதனைகள் தொடரும் என நம்பலாம்,''என, குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வாழ்த்து:துப்பாக்கி சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் ககன் நரங்கிற்கு, புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.

மூன்றாவது ஒலிம்பிக்கில்...:துப்பாக்கி சுடுதலில் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவு வீரர் ககன் நரங், 29. லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர். கடந்த 2004, ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் முதன் முறையாக பங்கேற்ற இவர், 12வது இடம் பெற்றார். 2008, பீஜிங் ஒலிம்பிக்கில் 9வது இடம் கிடைத்தது. பின், 2010 <உலக சாம்பியன்ஷிப் தொடரில் 3வது இடம் பெற்ற ககன் நரங், டில்லி காமன்வெல்த் போட்டியில் நான்கு தங்கம் வென்று அசத்தினார். தற்போது மூன்றாவது ஒலிம்பிக்கில் பங்கேற்க லண்டன் சென்ற இவர் மீது, பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கேற்ப, அசத்திய இவர், முதல் ஒலிம்பிக் பதக்கத்தை (வெண்கலம்) கைப்பற்றினார்.

மெரினாவில் ஆரம்பம்: சென்னையில் 1983, மே மாதம் பிறந்தார் ககன் நரங். தனது ஆறு வயதில் மெரினா பீச்சில், பலூன்களை சுட்டுத்தான் துப்பாக்கி சுட பழகினாராம். இதுகுறித்து இவர் கூறுகையில்,"" பொதுவாக சிறுவயது குழந்தைகள் பொம்மை கார்களை வாங்குவர். ஆனால், நான் பொம்மை துப்பாக்கிகளை வாங்கி சுட்டு பழகினேன்,'' என்றார்.
தங்கம் எதிர்பார்த்தோம் பதக்கம் வென்றது குறித்து ககன் நரங் தந்தை பி.எஸ்.நரங் கூறுகையில்,"" தங்கம் வெல்வார் என எதிர்பார்த்தோம். ஆனால், வெண்கலம் தான் கிடைத்தது. இருப்பினும், மகிழ்ச்சி தான். இது வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட ஊக்கம் தரும். ககன் நரங் இதில் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.

"சோலா-பூரி' தயார்:ககன் நரங் தாயார் கூறுகையில்,"" லண்டன் கிளம்பும் போது, முடிந்த வரை சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தி அனுப்பினோம். வீட்டிற்கு வரும் போது, ககனுக்கு பிடித்த "சோலா-பூரி' தயாராக வைத்திருப்பேன்,'' என்றார்.
GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் அசத்திய ககன் நரங், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார் Empty Re: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் அசத்திய ககன் நரங், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்

Post by சிவா Wed Aug 01, 2012 3:03 pm

பதக்கம் வாங்கி பல நாள் ஆச்சே! சோகம்


லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் அசத்திய ககன் நரங், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது
» உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4–வது பதக்கம் 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் ஜிதுராய் வெண்கலம் வென்றார்
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
» மாற்று திறனாளிகளுக்கான உலக துப்பாக்கி சுடுதல் - இந்தியன் வங்கி வீராங்கனைக்கு 2 வெள்ளி பதக்கம்
» கீதைப் போட்டியில் வென்று அசத்திய இஸ்லாமிய மாணவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum