ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பின் நாட்கள் ! நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Go down

நட்பின் நாட்கள் !  நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty நட்பின் நாட்கள் ! நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed 1 Aug 2012 - 10:33

நட்பின் நாட்கள் !

நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

குமரன் பதிப்பகம்
19.கண்ணதாசன் சாலை ,தி .நகர் ,சென்னை .17
விலை ரூபாய் 60

நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்கள் “ஒவ்வொரு பூக்களுமே ” பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் .திரைப்படப் பாடல் ஆசிரியர் என்பதையும் தாண்டி, சிறந்த படைப்பாளி அவரது பல்வேறு படைப்புகளை படித்து இருக்கிறேன் .அதில் என்னை மிகவும் கவர்ந்த இந்த நூலான நட்பின் நாட்கள் ! நட்பின் மேன்மையை பறை சாற்றுகின்றது.. நூலின் அட்டைப்படம் மிக நன்று. கவிதைகளுக்கான நண்பர்கள் புகைப்படம் ,அச்சு, வடிவமைப்பு மிக நேர்த்தியாக உள்ளது குமரன் பதிப்பகத்தாருக்கு பாராட்டுக்கள்.காதல் கவிதைகளுக்கு தபூ சங்கர் என்றால் நட்பு கவிதைகளுக்கு பா .விஜய் என்று சொல்லலாம் .

நூலில் அணிந்துரை ,ஆசிரியர் என்னுரை என்று வழக்கமான மரபுகள் இன்றி நேரடியாக கவிதையுடன் தொடங்குகின்றது .நூலில் சிறு கவிதைகளாக 62 கவிதைகள் உள்ளது .நூலில் தேவையற்ற சொற்கள் எதுவுமின்றி மிக நேர்த்தியாக உள்ளது .
நூலில் முதல் கவிதையே முத்தாப்பாக உள்ளது .உங்கள் பார்வைக்கு இதோ கவிதை !

நண்பன் ஒரு கண்ணாடி
நாம் முகம் பார்க்க ..
நாம் கோபப்பட்டால் உடைக்க ..!
நண்பன் ஒரு போதிமரம்
நாம் ஊஞ்சல் ஆட
நாம் கிடந்து தூங்க !
நண்பன் ஒரு புத்தகம்
நாம் படிக்க ..
நாம் கிழிக்க ..!

இனிய நண்பர் பா .விஜய் அவர்கள் எழுதிய கவிதைகள் முழுவதையும் முக்கியமான கவிதைகள் என்று அனைத்து பக்ககங்களையும் மடித்து வைத்து விட்டேன் .நூல் விமர்சனத்தில் எல்லா கவிதையையும் மேற்கோள் காட்டக் கூடாது என்பதால் மிக, மிக முக்கியமான கவிதைகளை மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன் .நட்பை விரும்பாதவர்கள் யாரும் இல்லை .நட்பை விரும்பும் அனைவரும் இந்த நூலையும் விரும்புவார்கள் எனபது உறுதி .நண்பர்களுக்கு பரிசாகத் தர சிறந்த நூல் இது .இந்த நூலை எனக்கு பரிசாகத் தந்தது இனிய நண்பர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின் அவர்கள் .

பள்ளியில் மாணவர்கள் மதிய உணவை பகிர்ந்து உண்ணும் காட்சியை நம் மனக் கண் முன் கொண்டு வந்து, நாம் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட ,மலரும் நினைவுகளை தோற்றுவிக்கும் கவிதை இதோ !

மதியவேளை
வீட்டிலிருந்து
கொண்டுவந்த உணவை
கொண்டு வந்தவனே
உண்ட வரலாறு
ஈராயிரம் ஆண்டு
இரைப்பைகளிலும்
இல்லை ..!

இளம் ஆண் நண்பர்கள் குழுமினால் பெண் பற்றிய பேச்சு இல்லாமல் இருக்காது .அந்த இயல்பான உணர்வை நன்கு பதிவு செய்துள்ளார்..

அகில உலகமெங்கும்
நண்பர்கள் சபையில்தான்
முதன் முதலில் துவங்குகிறது
ஆய்வரங்கம் !
தலைப்பு – பெண் .

இந்தக் கவிதையைப் படிக்கும் எல்லா ஆண்களுக்கும் அவர்களது பழைய தோழியை நினைவூட்டும் விதமாக நாம் கேட்க விருபும் கேள்வி போல ஒரு கவிதை .

சொல்லியிருக்கிறாயா …?
உன் கணவனிடம்
என்னைப் பற்றி !
எப்படி முடியும் ?
ஒரு உறவு
வளையமே இருக்குமே
உன்னைச் சுற்றி ..!

உன் படுக்கையறையின்
ஏதாவதொரு கண
உறக்கப் பிசிறுகளில் ..
உனக்கும் நினைவில்
வருமா ?
நாம் முதல்நாள் சிரித்ததும்
கடைசிநாள் அழுததும் …!

இதில் பல கவிதைகள் நமது பள்ளி,மற்றும் கல்லூரிப் பருவத்து பெண் தோழிகளை நினைவூட்டும் விதமாக உள்ளது . சில கவிதைகள் நண்பர்களை நினைவூட்டும் விதமாக உள்ளது .

கபடியில் விழுந்த
காயத்திற்கு மருந்து
உற்ற நண்பன் தூவும்
ஒருபிடி மண் !

அகோரப் பசிக்கு
அதிருசி விருந்து
உயிர்த் தோழி வீட்டு
அகத்திக்கீரை சாதம் !

நண்பர்கள் சிரித்துப் பேசுவது ஒரு சுகம்தான் .அம்மா ,அப்பா ஏன் மனைவியிடம் சொல்ல முடியாததைக் கூட நண்பனிடம் சொல்லி ஆலோசனை கேட்பதுண்டு .நட்புக்கு உயர்ந்த இடம் என்றும் உண்டு .

பள்ளிக்கூடங்களில்
பெல் சத்தங்களைப் போலவே
எத்தனை இனிமையானது
நண்பர்களின் கூட்டுச் சிரிப்பு !

நண்பனுக்கு ஒரு ஆபத்து என்றால் துடித்து விடுவோம் .நமக்கு ஒரு ஆபத்து என்றால் நண்பன் துடிப்பான். தன்னால் முடிந்த உதவிகளை நாம் செய்வோம் .அவனால் முடிந்த உதவிகளை நண்பான் செய்வான் .நட்பு என்பது மிகவும் உயவ்ர்வானது .உன்னதமானது .

ஒரு புள்ளியாய்தான்
உருவானது நட்பு ..
வானமாய் அது
வியாபிக்கிறது …!
காலத்தின் சக்கரத்தில்
நட்பொரு
ஞாபக அச்சு ..!

நட்பில் நம்பிக்கை மிக முக்கியம் .நண்பனை சந்தேகிப்பது தவறு .என்பதை உணர்த்தும் வைர வரிகள் இதோ !

நட்பில் பொய்யில்லை
நண்பனிடம்
பொய்கூற தேவையில்லை ..!
ஏனெனில்
நட்பில்
அவநம்பிக்கை இல்லை .

நமது பள்ளி நண்பனை எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் முகம் மறக்காது .கல்வெட்டாக முகம் பதிந்து இருக்கும் .ஆசிரியர்கள் முகமும் மறப்பதே இல்லை .

உருவம் திரிந்து
உறவுகள் பிரிந்த
எண்பது வயசின்
சுருக்கத்திலும்
மறப்பதே இல்லை .
நண்பனின் முகங்கள் ..!
தோழிகளின் முகவரிகள் ..!

நூல் முழுவதும் பிடித்த கவிதைகள் .எதை எழுதுவது ? எதை விடுவது ? குழப்பத்தில் ஆழ்ந்தேன் .நூலை படித்து முடித்ததும் ,கவிஞர் பா .விஜய் உள்பட என்னுடைய அனைத்து நண்பர்களின் நட்பு பற்றி அசை போட்டு மகிழ்ந்தேன் .இனிய நண்பர் ,நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய்அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.com
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

நட்பின் நாட்கள் !  நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: நட்பின் நாட்கள் ! நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Guest Wed 1 Aug 2012 - 11:34

மிக மிக அருமையாக இருக்கிறது ... வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது ,,, மிக்க நன்றி ரவி அண்ணே நன்றி

அட்டை படம் போட்டால் அடையாளம் கண்டு விரைவாக வாங்கலாம் ... நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

நட்பின் நாட்கள் !  நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: நட்பின் நாட்கள் ! நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed 1 Aug 2012 - 19:55


அட்டை படம் காண்க
http://www.eraeravi.blogspot.in/2012/07/blog-post_31.html

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

நட்பின் நாட்கள் !  நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: நட்பின் நாட்கள் ! நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நம்பிக்கையுடன் ..பா .விஜய் . நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வித்தகக் கவிஞர் பா. விஜய்
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வித்தகக் கவிஞர் பா. விஜய்
» நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum