ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி Empty பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 10:15 am

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!

இந்த பகுதியில் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள சொற்களுக்கு அர்த்தம் அறிந்து கொள்ள ஒரு தெளிவுரை எழுதலாமென நினைத்தேன். இதன் மூலம் பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும் ஒவ்வொருவரும் அதின் அர்த்தத்தை நன்கு அறிந்து விளங்கிக் கொள்ள உதவும் என கருதுகிறேன்.

இந்த நல்ல வாய்ப்பை கர்த்தருடைய பிள்ளைகள் தங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். அனுதினமும் வேதத்தை வாசியுங்கள். அதிகாலையில் ஜெபியுங்கள். ஞாயிறுதோறும் தவறாமல் ஆலய ஆராதனைக்கு குடும்பமாய் சென்று கர்த்தரை ஆராதியுங்கள். சத்தியத்தை அறிந்து கொள்ள கற்றுக் கொள்ள வாஞ்சியுங்கள். கற்றுக் கொண்டதை பிறருக்கு எடுத்து சொல்லுங்கள். சபையில் நடக்கும் ஊழியங்களில் பங்கு பெறுங்கள். கர்த்தருக்காய் சாட்சி பகருங்கள். சபைக்கு தூணாகவும், ஊழியத்திற்கு உதவியாகவும், பக்திக்குரியவர்களாகவும், ஆவியிலே அனலுள்ளவர்களாயும் இக்கடைசி காலங்களில் காணப்பட அர்ப்பணியுங்கள்.

இந்த பகுதியானது உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவும் பகுதியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து வாசியுங்கள். ஆதரவு கொடுங்கள். உங்கள் கருத்துக்களை தவறாமல் பக்திவிருத்திக்கேதுவாக பகிர்ந்து கொள்ளுங்கள். வாசிக்கிற அனைவருக்கும் விளங்கிட, சத்தியத்தை அறிந்திட, மீட்பைப் பெற, ஆசீர்வதிக்கப்பட ஜெபித்துக் கொள்ளுங்கள். நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Last edited by சார்லஸ் mc on Wed Aug 01, 2012 7:29 pm; edited 1 time in total

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி Empty Re: பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 10:27 am

கிருபை:

கிருபை - என்பது தேவன் மனிதனிடம் காட்டும் அன்பு மற்றும் இரக்கம் ஆகும்.

தேவன் மனிதர்களுக்கு இலவசமாகக் கிருபையை வழங்குகின்றார். மனிதர்கள் தேவனுடைய அன்பையும் இரக்கத்தையும் பெறச் சற்றும் தகுதியற்றவர்கள். காரணம், அவர்கள் பாவமுள்ளவர்கள். ஆனால், மனிதன் தேவனுடைய அன்புக்கு பாத்திரவானாய் இல்லாவிடினும், தேவன் இன்னும் மனிதனை நேசிக்கின்றார். நாம் பாவிகளாக, தேவனுக்குச் சத்துருக்களாக இருந்த போதே, நம்மை மீட்பதற்காக அவர் தமது சொந்த குமாரனாகிய இயேசுவை அனுப்பினார். (ரோமர்: 5:8).

தேவனுடைய கிருபையினாலே நாம் இரட்சிப்பை அடைகிறோம். (எபேசியர்: 2:8; தீத்து: 2:11). தேவனுடைய கிருபையினாலே நாம் கிறிஸ்தவ ஜீவியம் செய்கிறோம். மனிதன் பெற்றுக் கொண்ட எந்த ஆசீர்வாதமும், அது உலகப் பிரகாரமானதோ, ஆவிக்குரியதோ எதுவாயினும் தேவனுடைய கிருபையினாலே கிடைத்ததுவே. தமது கிருபையினாலே தேவன் நம்மை இரட்சிக்கும்படி தமது குமாரன் இயேசுவை அனுப்பினார். தமது கிருபையினாலே தேவன் நம்மைப் பரிசுத்தமாக்கத் தமது பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார். கிருபையினாலே, கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளானவர்கள் தேவனோடு என்றென்றுமாய் வாழ்வார்கள்.

தொடரும்...

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி Empty Re: பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 10:59 am

உடன்படிக்கை: (Covenant):

ஒரு உடன்படிக்கை என்பது - இரு தனி நபர்களுக்கோ அல்லது இரு சாராருக்கோ இடையிலான ஓர் ஒப்பந்தம் ஆகும்.

பழைய ஏற்பாட்டிலே தேவன் யூதர்களுடன் ஓர் உடன்படிக்கை செய்தார். அவர்களை ஆசீர்வதிப்பதாக வாக்களித்தார். (ஆதியாகமம்: 15:18; யாத்திராகமம்: 19:5,6; 2சாமுவேல்: 23:5).

ஆனால், யூதர்கள் தங்கள் பங்குக்கு, தேவனுடைய நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்படிந்தாக வேண்டும். பழைய ஏற்பாட்டில், யூதர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கு முழுமையாக கீழ்ப்படியவில்லை. அவர்கள் உடன்படிக்கையில் தங்கள் பாகத்தை நிறைவேற்றத் தவறினர்.

ஆகவே, தேவன் அவர்களுக்கு கொடுத்த வாக்கை நிறுத்தி வைத்தார். மனிதர்களோடு புதிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தினார். தமது குமாரனாகிய இயேசுவில் விசுவாசம் வைக்கும் எவரக்கும் இரட்சிப்பைத் தருவதாக வாக்குப் பண்ணினார். இந்தப் புதிய உடன்படிக்கை எரேமியா: 31:31 - 34 மற்றும் எபிரேயர்: 8:6-13 - ல் விவரிக்கப்படுகின்றது.

பழைய ஏற்பாட்டில், உடன்படிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இரத்தம் சிந்தப்பட்டது. ஒரு மிருகம் பலி செலுத்தப்படும். உடன்படிக்கை செய்து கொள்ளும் இரு சாராரும் அந்த மிருகத்தின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களினூடே நடந்து செல்வார்கள்.

அதன் அர்த்தம்:

"இந்த உடன்படிக்கையை மீறுபவனுக்கு, இந்த மிருகத்துக்கு நேரிட்ட இதே கதி நேரிடட்டும்" - என்று சொல்வதாகும். (ஆதியாகமம்: 15:17-18; எரேமியா: 34:18-20). மிருகத்தின் சிந்தப்பட்ட இரத்தம் "உடன்படிக்கையின் இரத்தம்" என்றும் அழைக்கப்பட்டது. (யாத்திராகமம்: 24:5-8).

அதைப் போலவே, இயேசு சிந்திய இரத்தம் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான புது உடன்படிக்கையின் இரத்தமாயிற்று. (மாற்கு: 14:24; 1கொரிந்தியர்: 11:25)

நமது பாவங்களுக்கான தண்டனையைத் தமது குமாரனாகிய இயேசுவின் மேல் சுமத்த தேவன் ஒப்புக் கொண்டார். தமது குமாரனைத் தியாகபலியாக ஒப்புக் கொடுப்பதே உடன்படிக்கையில் தேவனின் பங்கு.

நமது பங்கு - இயேசுவில் விசுவாசம் வைத்து அவருக்கு கீழ்படிவது. நமக்கும் தேவனுக்கும் இடையிலான இந்த உடன்படிக்கை இயேசுவின் இரத்தத்தால் உறுதி பண்ணப்படுகிறது.

தொடரும்...

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி Empty Re: பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி

Post by சார்லஸ் mc Tue Jul 31, 2012 6:03 am

புத்திர சுவிகாரம்: (Adoption)

கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாக நாம் தேவனுடைய தத்துப்பிள்ளை ஆகின்றோம். இது கிறிஸ்துவில் இரட்சிப்பின் ஒரு அம்சம்.

முதலில் நாம் எல்லோருமே பாவத்துக்கும் சாத்தானுக்கும் அடிமைகளாய் இருந்தோம். நாம் தேவனுடைய குடும்பத்தினராய் இருக்கவில்லை. சகல மனிதர்களையும் படைத்தவர் தேவனே. ஆனால், சகல மனிதர்களுக்கும் தகப்பன் தேவன் அல்லர். கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்போருக்கு மட்டுமே அவர் தகப்பன். நாம் விசுவாசத்தினாலே கிறிஸ்துவின் நீதியை ஏற்றுக் கொள்ளும்போது, மாத்திரமே, தேவன் நம்மைத் தமது குடும்பத்தில் சேர்த்துக் கொள்கிறார்.

எந்தத் தத்துப் பிள்ளையும், தன்னைத் தத்தெடுத்துக் கொண்டவருடைய சகல சொத்து சுகங்களுக்கும் வாரிசுரிமைப் பெறுவான். அவன் ஒருவேளை மாம்சத்தின்படி, இயற்கையாக அவருக்குப் பிறந்த மகனாயிரா விட்டாலும், சட்டப்படி அவன் மகனாகவே கருதப்படுவான். ஒரு மகனுக்குரிய அனைத்து சிலாக்கியங்களையும் உரிமைகளையும் அடைவான்.

அது போலவே, ஒரு காலத்தில் சுபாவத்தின்படி பாவிகளாய் இருந்த நாம் இப்பொழுது கிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு மெய்யான ஆவிக்குரிய குமாரரும் குமாரத்திகளும் ஆகிறோம். பரலோகத்திலே நமக்குரிய வாரிசுரிமையைப் பூரணமாய் பெற்று அனுபவிப்போம். (ரோமர்: 8:15-17; கலாத்தியர்: 4:3-7; எபேசியர்: 1:4,5).

தேவனுடைய தத்துப்பிள்ளையாவது, நமது இரட்சிப்பின் அரும்பெரும் பாக்கியங்களில் ஒன்று. இதன் பொருள் தேவனுடைய சுபாவம் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்குள்ளே வருகிறது என்பதாகும். அதாவது, ஒரு பிள்ளை தனது பூலோகத் தகப்பனுடன் இருக்கும் அளவிற்கு நாம் தேவனுடன் அந்நியோன்யமாக இருக்கிறோம்.

அதோடு, நாம் தேவனுடைய பிள்ளைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுமாகும். தேவனுடைய பிள்ளையாய் இருப்பது என்பது மகத்தான சிலாக்கியமும் இன்பமும் ஆகும். அது ஒரு மாபெரும் பொறுப்பும் கூட.

தொடரும்...

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி Empty Re: பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி

Post by சார்லஸ் mc Tue Jul 31, 2012 8:31 pm

பாவ நிவர்த்தி: (Atonement)

'பாவ நிவர்த்தி' என்பது பாவத்துக்கு எதிரான தேவ கோபாக்கினைக்குத் தப்பிக் கொள்வதற்காகவோ அல்லது பாவத்திற்கான தண்டனையைத் தவிர்ப்பதற்காகவோ செய்யப்படும் ஒரு சிறப்பான செயலாகும். வேதத்தில் பொதுவாக இது 'பாவ நிவாரண பலி" என்று அழைக்கப்படும் ஏதாவது ஒரு இரத்தபலி செலுத்துவதாய் அமையும்.

எல்லா மனிதரும் பாவம் செய்தவர்கள். தேவனுடைய நியாயத் தீர்ப்புக்கும் தண்டனைக்கும் தகுதியானவர்கள். (எண்ணாகமம்: 14:18; சங்கீதம்: 7:11; ரோமர்: 1:18; 3:10). ஆனால், தேவன் தம் இரக்கத்திலே மனிதர்கள் அந்தத் தண்டனைக்குத் தப்பும்படியான வழிவகையையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.

பழைய ஏற்பாட்டில், தேவ கோபாக்கினைக்குத் தப்பிப் பிழைக்கும்படியாக யூதர்கள் மிருகங்களைப் பலியிட்டனர். மனிதனுக்குப் பதிலாக அந்த மிருகம் தேவ கோபத்துக்குப் பலியானது. (லேவியராகமம்: 4:27-31; 16:20,22). இந்த விதமான பலிகளோடு கூட, தேவன் ஒவ்வோராண்டும் ஒரு நாளைக் குறித்து, அதை "பாவ நிவர்த்தி நாளாக" ஏற்படுத்தி வைத்தார். அன்றைய தினத்தில் யூத பிரதான ஆசாரியன் மக்கள் எல்லாருடைய பாவங்களுக்காகவும் பாவ நிவாரணம் செய்ய ஒரு விசேஷித்த பலியைச் செலுத்துவான். (லேவியராகமம்: 16:1-34).

ஆனால், இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்குள் வந்த பிறகு, பாவத்துக்காகச் செலுத்தப்பட்ட இந்த பழைய ஏற்பாட்டுப் பலிகள் எல்லாம் அவசியமற்றவையாகி விட்டன. ஏனெனில், தேவனுடைய சொந்தக் குமாரனாகிய இயேசு தாமே, நமது பாவங்களுக்காக பலியிடப்பட்டு விட்டார். அவரே நமது கிருபாதார பலி. அதாவது, "பாவ நிவாரண பலி" ஆவார். (ரோமர்: 3:23-25; 1யோவான்: 2:2; 4:10).

அவரது பலி ஒரேயொரு தரம், என்றென்றைக்குமாகச் செலுத்தப்பட்டது. நாம் இயேசுவிலும் அவரது பலியிலும் (அவரது சிலுவை மரணம்) , நமது விசுவாசத்தை வைக்கும் பொழுது பாவத்தக்காக வேறெந்த பலியும் செலுத்த அவசியமில்லை. (எபிரேயர்: 9:26, 28; 10:10,14).

கிறிஸ்து நமது தண்டனையை ஏற்றுக் கொண்டதால், நமது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டாயிற்று. நமக்கு எதிரான தேவ கோபாக்கினையை நீக்கிப் போடும் நமது பாவ நிவாரண பலி அவரே.

தேவ கோபாக்கினையை நீக்கவும், பாவ மன்னிப்பை அடையவும் ஒரு ஜீவனுள்ள பலி அவசியம். இரத்தம் சிந்தப்பட வேண்டும்... "இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது" (எபிரேயர்: 9:22). அந்த ஜீவ பலி கிறிஸ்துவே. அவர் சிலுவையின் மீது தம் இரத்தத்தைச் சிந்தினார். அவரது கைகளிலும், கால்களிலும் ஆணிகள் கடாவப்பட்டன. அவரது விலாவில் ஈட்டியால் குத்தப்பட்டது. அதிலிருந்து குருதி புரண்டோடிற்று. (யோவான்: 19:34; 20:24-27).

"நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்" என்று பவுல் எழுதுகிறார். (ரோமர்: 5:9). அதாவது நாம் இயேசுவின் மரணத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டுள்ளோம். (ரோமர்: 5:10). நம்மை இரட்சிப்பது இயேசுவின் இரத்தம் மட்டுமல்ல, அவரின் மரணமும்தான். பாவத்தின் தண்டனை மரணம் (ரோமர்: 6:23).

நாம் பிழைப்பதற்காக இயேசு மரிக்க வேண்டியதாயிற்று.

தொடரும்...

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி Empty Re: பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி

Post by சார்லஸ் mc Wed Aug 01, 2012 9:39 am

சிலுவை: (Cross )

புதிய ஏற்பாட்டில் 'சிலுவை' என்பது ஒரு உயரமான மரக்கட்டையும், அதன் குறுக்கே ஒரு குறுக்குக் கட்டையும் உள்ள ஓர் அமைப்பைக் குறிக்கிறது.

ரோமப் பேரரசின் காலத்தில் ரோமர்கள் குற்றவாளிகளைக் கொல்வதற்கு சிலுவையை பயன்படுத்தினர். குற்றவாளி கயிறுகளினால் கட்டப்பட்டோ அல்லது கை கால்களில் ஆணிகளால் கடாவப்பட்டோ சிலுவையில் தொங்க விடப்படுவான். பொதுவாக ஒரு குற்றவாளி இம்முறையில் சாவதற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகும். அவனை விரைவாகச் சாகடிப்பதற்காக அவனது கால் எழும்புகள் முறிக்கப்படுவது வழக்கம்.

இயேசுவுக்கு ரோமர்கள் மரண தண்டனை வழங்கினர். அவரைச் சிலுவையில் அறைந்து தொங்க விட்டனர். எனவே, சிலுவை என்பது எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் இயேசுவின் மரணத்தையும், மனிதனின் பாவத்துக்காகச் செலுத்தப்பட்ட தியாக பலியையும் காட்டும் அடையாளமானது.

சிலுவை மீது மரித்ததினாலே, கிறிஸ்து நமது இடத்திலே நமக்குப் பதிலாக நமது பாவத்திற்கான தண்டனையைச் சுமந்தார். (மாற்கு: 10:45).

சிலுவையானது கிறிஸ்துவின் நிமித்தமாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் சகிப்பதற்கு ஆயத்தமாய் இருக்க வேண்டிய பாடுகளுக்கும் அடையாளமாகும். (மாற்கு: 8:34).

அது நமது பழைய சுபாவம் மரித்து விட்டதற்கும் ஓர் அடையாளம். (ரோமர்:6:6; கலாத்தியர்: 2:20; 5:24; 6:14).

சிலுவை கிறிஸ்தவனின் மகிமைக்கும் அடையாளம். ஏனெனில் நாம் கிறிஸ்துவோடே கூடப் பாடுபடுவோமானால் அவரோடே கூட மகிமையும் அடைவோம். (ரோமர்: 8:17).

தொடரும்...

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி Empty Re: பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி

Post by சார்லஸ் mc Wed Aug 01, 2012 9:59 am

நித்திய ஜீவன்: (Eternal Life)

"நித்திய ஜீவன்" என்பது முடிவே இல்லாத ஆவிக்குரிய வாழ்வு.

ஒருவன் இயேசுவில் விசுவாசம் வைத்து மறுபடியும் பிறக்கின்ற அந்த நொடியில் தானே நித்திய ஜீவன் ஆரம்பிக்கின்றது. (யோவான்: 3:3-5).

நித்திய வாழ்வு (ஜீவன்) என்பது தேவனோடு நித்தியமாய்க் கொள்ளும் ஐக்கியமாகும். இந்த ஐக்கியம் நாம் இங்கே பூமியில், விசுவாசத்தை கிறிஸ்துவில் வைக்கையில் ஆரம்பித்து, நமது சரீரங்கள் மரித்த பின்னரும் பரலோகில் தொடருகின்றது.

ஆகவே, இயேசுவில் விசுவாசம் வைத்தோர் மரண பயம் கொள்ள அவசியமில்லை. ஏனெனில், அவர்கள் உண்மையில் மரிப்பதில்லை. அவர்களது ஆவிகள் என்றென்றுமாய் வாழும். (யோவான்: 11:25,26).

அதுமட்டுமல்ல, விசுவாசிகள் பரலோகத்தில் ஒரு புது சரீரத்தையும் பெறுவார்கள்.

நமது இரட்சிப்பின் முக்கிய பாகம் இந்த நித்திய ஜீவனே. இரட்சிப்பின் எல்லாக் கட்டங்களும் - பாவ மன்னிப்பு, நீதிமானாக்கப்படுதல், புத்திர சுவிகாரம் ஆகிய அனைத்துமே - கிறிஸ்துவில் ஒவ்வொரு உண்மையான விசுவாசிக்கும் ஆனந்தமான, மாட்சிமையான நித்திய வாழ்விலேயே நிறைவுறும்.

நித்திய ஜீவன் என்பது முடிவின்றி வாழ்வது மட்டுமல்ல. அது மன மகிழ்வுடன் தேவ சமுகத்தில் என்றென்றுமாய் வாழ்வதும் கூட. இப்பூவுலக வாழ்வு பரலோகின் நித்திய வாழ்வுடன் ஒப்பிடத்தக்கதே அல்ல. (ரோமர்: 8:18; 2கொரிந்தியர்: 4:17).

தொடரும்...

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி Empty Re: பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி

Post by சார்லஸ் mc Wed Aug 01, 2012 2:43 pm

கிறிஸ்துவுக்குள்: (in christ )

"கிறிஸ்துவுக்குள்" இருப்பது என்ற தொடரை அப்போஸ்தலனாகிய பவுல் அடிக்கடி பயன்படுத்துகின்றார்.

"கிறிஸ்துவுக்குள்" இருப்பது என்றால் முதலாவது நாம் அவரில் விசுவாசமாய் இருப்பதாகும்.

பிறகு கிறிஸ்துவில் மெய்யான விசுவாசம் கொண்டிருப்பதால் நாம் அவரோடு ஒன்றாகிறோம். அதாவது, நாம் அவருடன் ஐக்கியம் கொள்கிறோம், அவரை அறிகிறோம், அவருக்குக் கீழ்படிகிறோம், அவரால் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.

நமது ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் அனைத்தும் கிறிஸ்துவுக்குள் இருக்கின்றன. "நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்." (எபேசியர்: 1:3).

நாம் "கிறிஸ்துவுக்குள்" இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறோம்; புது ஜீவன் பெறுகிறோம். (2கொரிந்தியர்: 5:17).

தொடரும்...

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி Empty Re: பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி

Post by சார்லஸ் mc Wed Aug 01, 2012 3:01 pm

மீட்பு: (Redemption)

'மீட்பு' என்றால் - ஒரு விலை கொடுத்து ஒன்றை மீண்டும் சொந்தமாக்கிக் கொள்வதாகும்.

அது விற்றுப் போட்ட ஏதோ ஒன்றை மீண்டும் விலை கொடுத்து வாங்குவதாகலாம். அல்லது அடிமை ஒருவனை விலை கொடுத்து வாங்கி, அவன் இழந்து போன சுதந்திரத்தை மீட்டுக் கொடுப்பதாகவும் இருக்கலாம்.

ஆனால், புதிய ஏற்பாட்டில் 'மீட்பு' என்பது ஒரு விலைக் கிரையம் செலுத்தியோ அல்லது ஒரு பலி செலுத்தியோ பாவத்தின் தண்டனையிலிருந்து நமது விடுதலையை "வாங்குவது" என்று பொருள்படும்.

கிறிஸ்து தம்மைத்தாமே நம்மை மீட்பதற்கான பணயத் தொகையாக, பலியாக ஒப்புக் கொடுத்தார். (மாற்கு: 10:45). நமது விடுதலைக்காக கிறிஸ்து செலுத்திய விலைக் கிரயம் தமது சொந்த இரத்தமே.

பவுல் எழுதுகிறார்: "இவருடைய (இயேசு கிறிஸ்துவின்) இரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது." (எபேசியர்: 1:7).

'மீட்பு' என்பது நமது இரட்சிப்பின் அம்சங்களுள் ஒன்று. சில புதிய ஏற்பாட்டு வசனங்களில் "மீட்பு" என்ற சொல்லும் "இரட்சிப்பு" என்ற சொல்லும் இடம் மாற்றிப் பயன்படுத்தப்படக் கூடும்.

தொடரும்...

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி Empty Re: பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி

Post by சார்லஸ் mc Wed Aug 01, 2012 3:25 pm

இரட்சிப்பு: (salvation)

புதிய ஏற்பாட்டிலே 'இரட்சிப்பு' என்பதற்குப் பரந்த அர்த்தம் உண்டு. சுருங்கச் சொன்னால், அது தேவனுடைய நியாயத் தீர்ப்புக்குத் தப்புவிக்கப்படுவதும் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வதுமாகும்.

'இரட்சிப்பு' என்ற வார்த்தையில் சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் அடங்கியுள்ளன. முதலாவது, இரட்சிப்பு என்றால் பாவத்திலிருந்து, அதாவது பாவத்தின் வல்லமை மற்றும் நித்திய மரணம் என்ற பாவத்தின் தண்டனை ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலையாவது (ரோமர்: 6:23).

ஒருவன் இரட்சிக்கபடும்போது பாவ மன்னிப்பை அடைந்து, தன் பாவங்களிலிருந்து சுத்திகரிக்கவும் படுகிறான். இப்படியாக அவன் தேவனுடைய பார்வையில் நீதிமானாக்கப்படுகிறான். தேவனுடைய குடும்பத்தில் ஒரு அங்கமாகிறான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு மகிழ்ச்சியும் அடைகிறான். (ரோமர்: 8:30).

ஆனால், இரட்சிப்பின் ஆசீர்வாதங்களில் எல்லாம் மகா மேன்மையானது மோட்சத்தில் தேவனோடும் கிறிஸ்துவோடும் வாழும் நித்திய வாழ்க்கையே. நாம் இரட்சிக்கப்படும்பொழுது கிறிஸ்துவுக்குள் இந்த ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்கிறோம். (எபேசியர்: 1:3).

இரட்சிப்பை அடைய ஒரேயொரு வழிதான் உண்டு. அது இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதே. இதைத் தவிர வேறெந்த வழியும் கிடையாது.

தொடரும்...

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி Empty Re: பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum