ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவி பாகவதக் கதைகள் - 2

Go down

தேவி பாகவதக் கதைகள் - 2 Empty தேவி பாகவதக் கதைகள் - 2

Post by சிவா Thu Oct 08, 2009 9:50 pm

தேவி பாகவதக் கதைகள் - 2 Imagestory.php?id=1222763515-0

பிரம்மாவின் வேண்டுகோளின் படி யோக நிதித்திரையிலிருந்து விஷ்ணு எழுந்தார் என்று சூதர் கூறவே, முனிவர்களும் "பிரம்மாவும், விஷ்ணு வும், சிவனும் முறையே ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற தொழில் களைச் செய்பவர்களாயிற்றே. விஷ்ணு யோகநித்திரையில் இருந்த போது அவரது சக்தி என்னவாயிற்று? அவரை விட ஆதிசக்திக்கு அதிக சக்தி எவ்வாறு கிடைத்தது? விஷ்ணு சர்வ சக்தி படைத்தவராயிற்றே. நீங்கள் ஆதிபரா சக்தி தான் எல்லா சக்திகளின் மூல காரணம் என்கி றீர்கள். உண்மை என்ன என்பதை விளக்குவீர்களா?" என்று கேட்டனர்.

சூதரும் இவ்வாறு கூறத் தொடங்கி னார் "முனிவர்களே! சொல்கிறேன் கவனமாகக் கேளுங்கள். நாரதர் முதலானோர் ஆதிபராசக்தியின் பெருமையைப் புரிந்து கொள்ளாமல் விஷ்ணுவே சர்வசக்திமான் என்று எண்ணினார்கள். சிலர் சிவனை பரம் பொருள் என்றும் வேறு சிலர் சூரியன், அக்கினி, சந்திரன் ஆகியோரை சக்தி படைத்தவர்களென்றும் எண்ணி விட் டார்கள். யார் என்ன தான் கூறினாலும் ஆதிபராசக்தி தான் சர்வ வல்லமை படைத்தவள். அவள் பிரம்மா, விஷ்ணு, சிவன், சூரியன், அக்கினி, வாயு, சந்திரன் என எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறாள்.

அந்த சக்தியால் விழிப்படைந்த விஷ்ணு பிரம்மாவிடம் "நீ இங்கு வந்த காரணம் என்னவோ?" என்று கேட்டார். பிரம்மாவும் "உங்கள் காது களிலிருந்து தோன்றிய இரு ராட்சஸர் கள் என்னைக் கொன்று விடுவதாகக் கூறிப் போருக்கு அழைக்கிறார்கள்" என்றார். "இதற்கா பயப்படுகிறாய்?

நான் எவ்வளவோ ராட்சஸர்களைக் கொன்றிருக்கிறேன்" என்று விஷ்ணு கூறிக் கொண்டிருக்கும் போதே மதுவும் கைடபனும் பிரம்மாவின் அருகே வந்து "ஓடி வந்து இங்கேயா ஒளிந்து கொண்டிருக்கிறாய்? உன்னை இந்த விஷ்ணுவா காப்பாற்றப் போகி றான்?" என்று கூறி ஏளனமாகச் சிரித்தார்கள்.

விஷ்ணு பிரம்மாவைத்தன் பின் னால் வந்து நிற்கும்படி சொல்லி ராட்சஸர்களைப் பார்த்து "அடே! கொழுப்பு அதிகரித்து விட்டதா? அதை நான் அடக்குகிறேன் பார்" என் றார். பராசக்தி இதை ஆகாயத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். விஷ்ணு மதுவுடன் சண்டை போட் டார். மது களைத்துப் போவதைக் கண்டு கைடபன் அவருடன் மற்போர் புரிய வந்தான். விஷ்ணுவுக்கு ஒரே சமயத்தில் இரண்டு ராட்சஸர்களுடன் போர் புரிய வேண்டியதாயிற்று.

விஷ்ணு களைப்படையத் தொடங்கினார். அந்த ராட்சஸர்களை எப்படி வெல்வது என்று யோசிக்கலானார். அதைக் கண்டு அவர்கள் "களைத்துப் போய் விட்டாய் உன்னால் போர் புரிய முடியவில்லை என்றால் எங்களிடம் சரணடைந்து விடு. அப்படிச் செய்ய மறுத்தால் உன்னையும் கொன்று பிரம் மாவையும் கொன்று விடுவோம்" என்று மிரட்டினார்கள்.

விஷ்ணுவும் கோபம் கொள்ளாமல் "களைத்துப்போனவருடனும், புற முதுகு காட்டி ஓடுபவருடனும், பயப் படுபவருடனும், போர் களத்தில் விழுந்து கிடப்பவருடனும், சண்டை போடுவது யுத்த தர்மமாகாது. மேலும் நீங்கள் இருவர் ஒருவனாகிய என்னு டன் சண்டையிடுவதும் போர் முறை களுக்குப் புறம்பானது. எனவே என்னைச் சற்று இளைப்பாற விடுங்கள். பிறகு நான் சண்டை போடுகிறேன். யுத்த தர்மப்படி தான் நாம் போரிட வேண்டும்" என்றார்.

அவர்களும் "சரி. நீ இளைப்பாறு நாங்களும் சற்று ஓய்வு எடுத்துக் கொள்கிறோம்" என்றார்கள். அப் போது விஷ்ணு தம் திவ்விய திருஷ்டி யால் அந்த ராட்சஸர்கள் வரம் பெற் றதை அறிந்து கொண்டு "அடடா! இது தெரியாமல் இவர்களோடு சண்டை போட்டுக் கொண்டு இருந்து விட் டேனே. இவர்கள் தமக்கு மர ணம் தம் விருப்பப்படி வர வேண்டுமென ஆதி பராசக்தியிடம் வரம் வாங்கி இருக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களை எப்படி ஒழிப்பது?" என்று யோசிக்கலானார்.


தேவி பாகவதக் கதைகள் - 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேவி பாகவதக் கதைகள் - 2 Empty Re: தேவி பாகவதக் கதைகள் - 2

Post by சிவா Thu Oct 08, 2009 10:11 pm

முடிவில் அவர் ஆதிபரா சக்தியை தியானம் செய்தார். "ஆதி பராசக்தி! உன் உதவி இல்லாமல் நான் இந்த ராட்சஸர்களை வெல்ல முடி யாது. ஏனெனில் நீ இவர்களுக்கு வரம் அளித்திருக்கி றாய். அதனால் இவர்கள் இறக்க நீயேதான் வழி சொல்ல வேண்டும்"

இவ்வாறு வேண்டிய விஷ்ணு வைப்பார்த்து ஆதிபராசக்தி புன்னகை புரிந்து "நான் ராட்சஸர்களை மாயை யில் ஆழ்த்தி விடுகிறேன். அப்போது அவர்களை வென்று விடலாம்." என்று கூறினாள். அப்போது ராட்சஸர் கள் விஷ்ணுவைப் பார்த்து "தோற்றுப் போகப்போவதற்காக பயப்படுகி றாயா? வீரர்களுக்கு வெற்றி தோல்வி என்பது சகஜம். நீ பல ராட் சஸர்களை வென்றிருக்கலாம். ஆனால் எப் போதுமே வெற்றி உன் பக்கம் இராது. சில சமயங்களில் தோற்கத்தான் வேண்டும்" என்றார்கள்.

இதே சமயம் தேவி பராசக்தி மன் மத பாணங்களை எய்வது போல அந்த ராட்சஸர்களைப் பார்த்தாள். அதனால் அவர்கள் தாம் புரிந்து வந்த போரை மறந்து மன்மத பாணத்தால் தாக்குண் டார்கள். அப்போது விஷ்ணு "நானும் எவ்வளவோ பேர்களுடன் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் உங் களைப் போல யாரையும் பார்த்த தில்லை. உங்களுக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேளுங்கள் கொடுக்கிறேன்" என்றார்.

அவர்களோ மாயையில் சிக்கிய தால் கர்வத்தோடு "நீயா எங்களுக்கு வரம் கொடுக்கப்போகிறாய்? வேண் டாம். நாங்களே நீ கேட்கும் வரத்தை அளிக்கிறோம். என்ன வேண்டுமோ கேள்" என்றார்கள்.

விஷ்ணுவும் "அப்படியா? ரொம்ப சந்தோஷம். என்னுடன் போர் புரிவதில் மகிழ்ச்சி என்றால் என் கையால் நீங்கள் மடிய வேண்டும். இது தான் நான் கேட்கும் வரம்" என்றார். இப்போது அவர்கள் சற்று யோசித்து "நீ கூட எங்களுக்கு வரம் கொடுப்பதாகக் கூறினாயே. நாங்கள் கேட்கிற வரத்தைக் கொடுத்தால் நீ கேட்ட வரத்தைக் கொடுக்கிறோம். எங்களை தண்ணீரே இல்லாத பரந்த பிரதேசத்தில் கொல். அப்போது உன் கையால் மடிகிறோம்" எனக் கூறி னார்கள். விஷ்ணுவும் "சரி. நீங்கள் கூறிய பகுதிக்குப் போகலாம்" என்றார்.


தேவி பாகவதக் கதைகள் - 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேவி பாகவதக் கதைகள் - 2 Empty Re: தேவி பாகவதக் கதைகள் - 2

Post by சிவா Thu Oct 08, 2009 10:18 pm

தேவி பாகவதக் கதைகள் - 2 Imagestory.php?id=1222764240-0

அவர்கள் மூவரும் ஓரிடத்திற்குச் சென்றனர். ராட்சஸர்கள் தம் உடல் களைப் பெரிதாக்கிக் கொண்டே போக விஷ்ணுவும் தம் உடலைப் பெரி தாக்கிக் கொண்டே போனார். அப்போது விஷ்ணுவுக்குத் தம் சக்கிரா யுதத்தைப் பற்றிய நினைவு வந்தது. அதை வரவழைத்து ராட்சஸர்களின் தலைகளை வெட்டித் தள்ளினார். அவர்களது தலைகள் ஒரு நீர் மடுவில் விழ அங்கு ஒரு பெரிய மேடு ஏற்பட்டது.

வியாசரின் தவம்

முனிவர்கள் சூதரிடம் "வியா சரைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்து பாதியில் நிறுத்தி விட்டீர்களே. மீதியைச் சொல்லுங்கள்" என்று கேட் கவே சூதரும் வியாசரின் தவம் பற்றி சொல்லலானார்.

நாரதர் கூறிய மந்திரத்தை வியாசர் சுவர்ணகிரியில் அமர்ந்து உச்சரித்தவாறே தவம் செய்யலானார். அவர் தேவி பராசக்தியை தியானம் செய்து தவம் செய்ததால் உலகமே நடுநடுங்கி யது. அந்தக் கடும் தவத்தைக் கண்டு பயந்த இந்திரன் சிவபெருமானைக் கண்டு "வியாசரின் கடும் தவத்தால் ஆபத்து வரும் போலிருக்கிறது. எங்களைக் காப்பாற்றுங்கள்" என்று வேண்டினான்.

சிவபெருமானும் "தவம் செய்பவர்களின் தவத்தைக்கலைக்கக் கூடாது. அவர்களும் யாருக்கும் கெடு தல் செய்ய மாட்டார்கள். வியாசர் தனக்குக் குழந்தை வேண்டும் என்று தான் சக்தியோடு கூடியுள்ள என்னைக் குறித்துத் தவம் செய்கிறார்." எனக் கூறி அவர் உடனே வியாசர் முன் தோன்றினார்.


தேவி பாகவதக் கதைகள் - 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேவி பாகவதக் கதைகள் - 2 Empty Re: தேவி பாகவதக் கதைகள் - 2

Post by சிவா Thu Oct 08, 2009 10:25 pm

அவருக்கு குழந்தை பிறக்கும் என வரம் கொடுக்கவே வியாசர் தம் ஆசிரமத்திற்கு வந்தார். வியாசர் அக்கினியை மூட்டி "எனக்கு இந்த அக்கினி போன்ற புதல் வன் பிறப்பானா? அப்படிப்பட்ட பெண் எனக்குக் கிடைப்பாளா?" என்று நினைத்தார். அப்போது ஆகாயத்தில் கிருதாட்சி தோன்றவே கூடவே மன்மதனும் வந்தான். வியா சர் மன்மத பாணத்தால் தாக்கப்பட்டாலும் அவர் தம் மனதில் "இவள் என்னை ஏமாற்ற வந்திருக்கிறாளா? அல்லது என்னோடு சேர்ந்து இருப்பாளா?" என்றெல்லாம் யோசிக்கலானார்.

கிருதாட்சியோ வியாசர் சபித்து விடுவாரோ எனப் பயந்து கிளியாக மாறிப் பறந்து போனாள். ஆனால் வியாசரின் ஹோம அக்கினியிலிருந்து சுகர் பிறந்தார். வியாசர் சுகரைப் பார்த்து "ஓ! இதென்ன அதிசயம்? இது சிவபிரா னின் அனுக்கிரகமோ" என்று எண்ணி னார். அவர் தன் மகனான சுகரை கங்கைக்குக் கொண்டு போய்க் குளிப் பாட்டினார். பிறகு ஜாதகர்மம் நடக்க தேவர்கள் பூமாரி பொழிந்தனர். நாரதர் இசை பாட, ரம்பை, ஊர்வசி போன் றோர் நடனம் ஆடினார்கள்.

கிளி ரூபமாக வந்த கிருதாட்சியி னால் அக்குழந்தை பிறந்ததால் வியா சர் அதற்கு சுகர் என்று பெயரிட்டார். சுகர் வளர்ந்து பெரியவராகவே அவருக்கு மான் தோல், கமண்டலம், கைத்தடி முதலியன ஆகாயத்தில் இருந்து கிடைத்தன. வியாசர் அவ ருக்கு உபநயனம் செய்து பிரம்மோ பதேசமும் செய்தார். தக்க குருவிடம் கல்வி பயில அவரை அனுப்பினார்.

படிப்பை முடித்துக் கொண்டு திரும்பி வந்த சுகருக்கு வியாசர் திரு மணம் செய்து வைக்க எண்ணினார். ஆனால் சுகர் அதற்கு இணங்காமல் தனக்கு உபதேசம் செய்யும்படி வேண் டினார். வியாசரும் பல அறிவுரை களைத் தம் மகனுக்குக் கூறினார்.

பிறகு அவர் "நீ பிரம்மசரியமே மேற் கொண்டிருக்க உறுதி பூண்டி ருக்கிறாய். நான் எழுதிய தேவி பாக வதத்தைப்படி. அப்போது உன் மனம் தெளிவு பெறும்" எனக் கூறி அது பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
தேவி பாகவதக் கதைகள் - 2 Imagestory.php?id=1222764399-0

அம்புலிமாமா


தேவி பாகவதக் கதைகள் - 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேவி பாகவதக் கதைகள் - 2 Empty Re: தேவி பாகவதக் கதைகள் - 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum