ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

+16
Manik
manimac
அருண்
ராஜா
அசுரன்
பாலாஜி
பிரசன்னா
பிளேடு பக்கிரி
தர்மா
யினியவன்
மகா பிரபு
விநாயகாசெந்தில்
முஹைதீன்
பிஜிராமன்
சிவா
ரா.ரமேஷ்குமார்
20 posters

Page 2 of 21 Previous  1, 2, 3 ... 11 ... 21  Next

Go down

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Empty லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jul 28, 2012 7:55 am

First topic message reminder :

லண்டன், ஜூலை.28-


உலகின் மிகப்பெரிய
விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு
வருகிறது. இதன்படி 30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில்
நேற்று தொடங்கியது.

தொடக்க விழா ஒலிம்பிக்
பார்க்கில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில், 80 ஆயிரம் பார்வையாளர்களுக்கு
மத்தியில் நேற்றிரவு மிக பிரமாண்டமாக அரங்கேறியது. ஆஸ்கார் விருது பெற்ற
ஹாலிவுட் இயக்குனரான டேனியல் பாய்லெ தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
செய்திருந்தார்.
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 13da3867-65e8-49f2-ae62-ff1b9ce03a11_S_secvpf


உளளூர் நேரப்படி இரவு 9.00 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கினாலும்
மாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். ஒலிம்பிக்கை
மகிழ்ச்சியுடன் கொண்டாடி அனுபவியுங்கள் என்பதை குறிக்கும் வகையில் காலையில்
லண்டன் மாநகரம் முழுவதும் மணி அடிக்கப்பட்டன.

இதே
போல் ஒலிம்பிக் தொடக்கத்தின் அடையாளமாக இங்கிலாந்தில் புகழ்பெற்ற
பாராளுமன்றத்தின் 'பிக்பென்' என்று அழைக்கப்படும் ராட்சத மணிகூண்டில்
இருந்து 3 நிமிடத்தில் 40 முறை மணி ஓசை எழுப்பப்பட்டது.

லேசர்
ஒளி, வண்ணவிளக்குகளால் ஒலிம்பிக் தொடக்க விழா மைதானம் தகதகவென ஜொலித்தது.
சுமார் 10 ஆயிரம் கலைஞர்கள் மைதானத்தில் விதவிதமான நடனமாடியும்,
இங்கிலாந்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
காட்டியும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். புதுமையான இசை நிகழ்ச்சிகளும்
விருந்து படைத்தன.

இங்கிலாந்தின் ரம்மியமான கிராம
சூழலை சித்தரிக்கும் வகையில் செயற்கை கிராமத்தை உருவாக்கி அதில் உண்மையான
ஆடு, மாடு, கோழிகள் வசிப்பது போன்று தத்துருபமான காட்சிகள் மனதை பரவசத்தில்
ஆழ்த்தின.

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 204
நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்
மைதானத்தில் அணிவகுத்து சென்றது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

ஒலிம்பிக்
தோன்றிய இடமான கிரீஸ், முதல் அணியாக தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் வலம்
வந்தது. அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி மற்ற நாடுகள் அணிவகுத்தன. 81
பேர் கொண்ட இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில்குமார் தலைமை தாங்கி தேசிய
கொடி ஏந்தி சென்றார்.

இந்திய வீரர்கள் காவி நிற
டர்பன், பேண்ட் மற்றும் நீல நிற கோர்ட்டும், பெண்கள் இந்திய பாரம்பரிய
உடையான சேலையும் அணிந்து மிடுக்காக நடந்து வந்தனர்.

கடைசி
நாடாக போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி சென்றது. ஒவ்வொரு அணிகளும்
அணிவகுத்து செல்லும் போது, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த அந்த நாட்டின்
பிரதிநிதிகள் மற்றும் ரசிகர்கள் கையசைத்தும், கைதட்டியும்
உற்சாகப்படுத்தினார்கள்.

அமெரிக்காவின் முதல்பெண்மணி
மிச்செல் ஒபாமா தொடக்க விழாவில் கலந்து கொண்டு தங்கள் அணியை
குதூகலப்படுத்தினார். வீரர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
ஒலிம்பிக் தொடக்க விழாவின் இறுதியில் ராட்சத கொப்பரையில் ஒலிம்பிக் தீபம்
ஏற்றப்படுவது வழக்கம்.

இந்த போட்டிக்கான தீபம் 8
ஆயிரம் மைல்களை கடந்து நேற்று காலை தேம்ஸ் நதியை பயணித்து தொடக்க விழா
நடக்கும் ஸ்டேடியத்திற்குள் தொடர் ஓட்டமாக எடுத்து வரப்பட்டது. பின்னர்
அதன் மூலம் கொப்பரையில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

ஒலிம்பிக்
தீபம், நிறைவு விழா வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். போட்டியை
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 3
மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கலைநிகழ்ச்சியின் உச்சகட்டமாக இறுதியில்
வாணவேடிக்கையால் லண்டன் நகரம் சில நிமிடங்கள் வண்ணஜாலத்தால்
ஒளிர்ந்தது.அதனை லண்டன் வாசிகள் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

போட்டியையொட்டி,
இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. வான்வெளி தாக்குதலை முறியடிக்க ஏவுகணைகளும்
நிறுத்தப்பட்டிருந்தன.

தொடக்க விழாவை டி.வி,
இணையதளங்கள் மூலமாக உலகம் முழுவதும் சுமார் 400 கோடி பேர் கண்டுகளித்தனர்.
அடுத்த மாதம் 12-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய அணி சாதனைகள் படைத்திட பிரதமர்
மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-மாலை மலர் லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 678642


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down


லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Empty Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Sat Jul 28, 2012 6:16 pm


இந்தியாவிற்கு முதல் வெற்றி


லண்டன் ஒலி்ம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவிற்கு முதல் வெற்றி பேட்மிடனில் கிடைத்துள்ளது. ஆண்கள் ஒற்றையர் பேட்மிடன் தொடரில் பெல்ஜியம் வீரர் யுஹான் டேனை எதிர்கொண்ட இந்திய வீரர் பருப்பள்ளி காஷ்யப், 21-14, 21-12 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம், இந்தியாவிற்கு இந்த ஒலிம்பிக்கில் முதல் வெற்றி கிடைத்துள்ளது. பெண்கள் இரட்டையர் பேட்மிடன் தொ‌டரின் துவக்க போட்டியில் ஜூவாலா ஜோடி, ஜப்பான் ஜோடியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Empty Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Sat Jul 28, 2012 6:17 pm


ஒலிம்பிக் பேட்மின்டன் : இந்தியா தோல்வி

லண்டன் ஒலிம்பிக் தொடரின், பேட்மின்டன் குரூப் சி பிரிவின் கலப்பு இரட்டையர் துவக்க ஆட்டத்தில் ஜூவாலா கட்டா ஜோடி தோல்வியடைந்தது. ஜூவாலா கட்டா - டிஜூ ஜோடி, டென்மார்க்கின் கமீலா ஜூஹில் - தாமஸ் லேபார்ன் ஜோடியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், இந்திய ஜோடி தோல்வியடைந்தது. ஜூவாலா ஜோடிக்கு, கலப்பு இரட்டையர் பிரிவில் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.


லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Empty Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Sat Jul 28, 2012 6:17 pm


ஒலிம்பிக் : இந்திய ஆண்கள் வில்வித்தை அணி வெளியேற்றம்

லண்டன் : லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் வில்வித்தை பிரிவில் இருந்து இந்திய ஆண்கள் அணி வெளியேறியுள்ளது. லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில், இந்திய ஆண்கள் வில்வித்தை அணி, ஜப்பான் அணியை எதிர்கொண்டது. இதில், இந்திய அணி தோல்வியடைந்தது. இதன்மூலம், ஒலிம்பிக்கிலிருந்து இந்திய ஆண்கள் வில்வித்தை அணி வெளியேறியது.


லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Empty Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Sat Jul 28, 2012 6:19 pm


வில்வித்தையில் உலக சாதனை: தென் கொரியா அபாரம்

லண்டன் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இரண்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. தனிநபர் பிரிவில் தென் கொரியாவைச் சேர்ந்த பார்வை குறைபாடுள்ள இம் டாங்-ஹியுன் புதிய உலக சாதனை படைத்தார். இதேபோல அணிகள் பிரிவில் தென் கொரிய அணி புதிய வரலாறு படைத்தது.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஒலிம்பிக் வில்வித்தை போட்டிக்கான "ரேங்கிங் ரவுண்டு' சுற்று நேற்று நடந்தது. இதில் ஆண்களுக்கான தனிநபர் போட்டியில் இந்தியாவின் தருண்தீப் ராய், ராகுல் பானர்ஜி, ஜெயந்தா தலுக்தார் உள்ளிட்ட 64 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரரும் தலா 72 முறை அம்புகளை பயன்படுத்த வேண்டும். பின் மொத்த புள்ளிகள் அடிப்படையில் "ரேங்கிங்' வழங்கப்படும். இதில் அபாரமாக ஆடிய தென் கொரியாவின் இம் டாங்-ஹியுன், மொத்தம் 699 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

உலக சாதனை: இதன்மூலம் தனது சொந்த சாதனையை முறியடித்த இம் டாங்-ஹியுன் புதிய உலக சாதனை படைத்தார். இவர், கடந்த மே மாதம் துருக்கியில் நடந்த போட்டியில் 72 அம்புகளை பயன்படுத்தி 696 புள்ளிகள் பெற்றார். ஏற்கனவே 2004ல் ஏதென்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் இவர், 687 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தார். தவிர இவர், 2004 மற்றும் 2008ல் நடந்த ஒலிம்பிக்கில் அணிகள் பிரிவில் தங்கம் வென்றார்.

பார்வை இல்லை: அடுத்தடுத்து உலக சாதனை படைத்துவரும் 26 வயதான இம் டாங்-ஹியுனுக்கு பார்வை இல்லை என்பது ஆச்சர்யமான விஷயம். இவரது இடது கண்ணில் 10 சதவீதமும், வலது கண்ணில் 20 சதவீதமும் மட்டுமே பார்வை உள்ளது. அதாவது மருத்தவ விதிப்படி பார்வை இழந்தவர் என்றுதான் அர்த்தம். போட்டியின் போது மூக்கு கண்ணாடி கூட அணியாத இவர், பளிச்சென்ற நிறங்களை இலக்காக வைத்து அம்புகளை குறிபார்த்து அடிக்கிறார்.

மீண்டும் சாதனை: மொத்தம் 2087 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த தென் கொரிய அணி, புதிய உலக சாதனை படைத்தது. தென் கொரிய அணியில் இம் டாங்-ஹியுன் (699 புள்ளி), கிம் பப்மின் (698 புள்ளி), ஓஹ் ஜின் ஹ்யெக் (690) ஆகியோர் உள்ளனர். முன்னதாக இவர்கள் 2069 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தனர். இதன்மூலம் தென் கொரியா (2087 புள்ளி), பிரான்ஸ் (2021), சீனா (2019) மற்றும் அமெரிக்கா (2019) அணிகள் காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றன.


லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Empty Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Sat Jul 28, 2012 6:39 pm

ஒலிம்பிக்கில் இன்று துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பளுதூக்குதலில் களம் இறங்குகிறது இந்தியா

லண்டன் ஒலிம்பிக்கில் 81 பேர் கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டியின் 2-வது நாளான இன்று இந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகளும், அப்போட்டி தொடங்கும் இந்திய நேரம் பற்றிய விவரமும் வருமாறு:-

துப்பாக்கி சுடுதல்: துப்பாக்கி சுடுதலில் 4 வீராங்கனைகள் உள்பட 11 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பெரிய அணி இது தான். கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா மற்றும் ககன் நரங், ரஞ்சன் சோதி உள்ளிட்டோர் மீது பதக்க எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

துப்பாக்கி சுடுதலில் இன்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகிய போட்டிகள் நடக்கின்றன. பெண்கள் துப்பாக்கி சுடுதலில் தான் லண்டன் ஒலிம்பிக்கின் முதலாவது தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் மட்டும் இந்தியாவின் விஜய்குமார் கலந்து கொள்கிறார். அவருடன் மொத்தம் 45 பேர் களத்தில் உள்ளனர்.

முதலில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தகுதி சுற்று நடக்கும். இதில் இருந்து 8 பேர் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள். இரவு 8 மணிக்கு இறுதி சுற்று நடைபெறும். 2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் 3 தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியவரான விஜய்குமார், குவாங்ஷூவில் நடந்த ஆசிய விளையாட்டில் 2 வெண்கலம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ்: டென்னிஸ் போட்டிகள் விம்பிள்டனில் இன்று ஆரம்பிக்கின்றன. முதல் நாளில் பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா-ருஷ்மி சக்ரவர்த்தி ஜோடி களம் இறங்குகிறது. இவர்கள் முதல் சுற்றில் சீனத்தைபேயின் சுவாங் சியா ஜங்-ஹூசைய் சு வெய் இணையை (இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு) சந்திக்கிறார்கள்.

ஒற்றையரில் நம்பர் ஒன் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கொலம்பியாவின் அலெஜான்ட்ரோ பல்லாவையும், பெண்கள் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், செர்பியாவின் ஜான்கோவிச்சையும் சந்திக்க இருப்பது முதல் நாளில் நடக்கும் குறிப்பிடத்தக்க ஆட்டங்கள் ஆகும். ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் வைல்டு கார்டு வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் முதல் ரவுண்டில் பின்லாந்தின் ஜார்க்கோ நிமினனுடன் மோதுகிறார்.

ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி, பெலாரசின் மேக்ஸ் மிர்னி-அலெக்சாண்டர் பரி ஜோடியையும், லியாண்டர் பெயஸ்- விஷ்ணு வர்தன் இணை, நெதர்லாந்தின் ஜுலியன் ஜீன் ரோஜர், ராபின் ஹாஸ் இணையையும் எதிர்கொள்கிறது.

பளுதூக்குதல்: சில ஆண்டுகளாக ஊக்கமருந்தினால் அல்லோலப்பட்டு வரும் இந்திய பளுதூக்குதல் அணியை தூக்கி நிறுத்தும் உத்வேகத்துடன் ரவிகுமார் (69 கிலோ), சோனியா சானு (48 கிலோ) ஆகியோர் ஒலிம்பிக்குக்கு வந்துள்ளனர். இதில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவிற்கான போட்டி இன்று நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடக்கும் இந்த பந்தயத்தில் 14 வீராங்கனைகள் போட்டியிடுகிறார்கள்.

இதில் ஸ்னாட்ச் மற்றும் கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் போட்டி நடைபெறும். இரு பிரிவிலும் மூன்று முறை எடை தூக்க அனுமதிக்கப்படும். சிறந்த நிலையை கணக்கிட்டு, ஒட்டுமொத்தத்தில் அதிக எடையை தூக்கும் வீராங்கனைக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும்.

டேபிள் டென்னிஸ்: டேபிள் டென்னிசில் 19 வயது நிரம்பிய அங்கிதா தாஸ், சவும்யாஜித் கோஷ் ஆகிய இரு இந்தியர்கள் மட்டுமே இந்த முறை ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். முதல் முறையாக ஒலிம்பிக்குக்கு வந்திருக்கும் இருவரும் இன்று களம் காணுகிறார்கள். அங்கிதா தாஸ் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ஸ்பெயினின் சாரா ராமிரெசுடனும் (மாலை 4.30 மணி), ஆண்கள் ஒற்றையரில் சவும்யாஜித் கோஷ், பிரேசிலின் குஸ்தவோ சுபோயுடனும் (இரவு 8.30 மணி) மோதுகிறார்கள்.

துடுப்பு படகு: துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் ஸ்கல் பிரிவின் தகுதி சுற்றில் இந்தியாவின் ஸ்வரன் சிங் (மாலை 5 மணி) களம் காணுகிறார்.

பேட்மிண்டன்: பேட்மிண்டனில் மூன்று ஆட்டங்களில் இந்தியா இன்று பேட்டை சுழற்ற இருக்கிறது. ஆண்கள் ஒற்றையர் குரூப் பிரிவில் (பிற்பகல் 2 மணிக்கு பிறகு) இந்தியாவின் காஷியாப், பெல்ஜியத்தின் யுஹான் டானுடன் மோதுகிறார்.

கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-திஜு கூட்டணி, குரூப் சுற்றில் இந்தோனேஷியாவின் டோன்டோவி அகமது-லிலியானா நாட்சிர் ஜோடியை (மாலை 5.30 மணி) எதிர்கொள்கிறார். இதே போல் பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி, ஜப்பானின் மிசூகி புஜீ-ரெய்கா காகீவா இணையுடன் (இரவு 8 மணி) மோதுகிறது.


லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Empty Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by யினியவன் Sat Jul 28, 2012 6:39 pm

சிவா wrote:
பிஜிராமன் wrote:ஒலிம்பிக்ஸ் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்த பாடல் இருந்தால் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன் உறவுகளே..... புன்னகை

நம்ம பிஜிக்கு யாருமே உதவவில்லையே!

இதோ கேளுங்க: http://www.mediafire.com/?bv5666iitypaszc



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Empty Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by பிஜிராமன் Sun Jul 29, 2012 7:08 am

யினியவன் wrote:
சிவா wrote:
பிஜிராமன் wrote:ஒலிம்பிக்ஸ் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்த பாடல் இருந்தால் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன் உறவுகளே..... புன்னகை

நம்ம பிஜிக்கு யாருமே உதவவில்லையே!

இதோ கேளுங்க: http://www.mediafire.com/?bv5666iitypaszc

நன்றிகள் அண்ணா......எப்டி புடிகிறீங்க.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Empty Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by மகா பிரபு Sun Jul 29, 2012 7:19 am

குத்துச்சண்டை: விஜேந்தர் சிங் வெற்றி...

ஒலிம்பிக் குத்துசண்டை 75 கிலோ எடை பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் விஜேந்தர் சிங் வெற்றி பெற்றார். விஜேந்தர் சிங், கஜகஸ்தான் வீரர் சுஷானோவை 14-10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, முதல் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.


dinamalar
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Empty Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jul 29, 2012 9:02 am

பதக்க பட்டியல்

முதல் நான்கு இடங்கள்


லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Scaled.php?server=442&filename=capturezsn


-மாலை மலர் லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 678642


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Empty Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jul 30, 2012 7:11 am

துடுப்பு படகு: ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் சவரண் சிங் வெற்றி


லண்டன்,ஜுலை.29-

துடுப்பு படகு போட்டியின்
ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவு போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30
மணிக்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய வீரர் சவரண் சிங் முதல்
இடம் பெற்றார்.லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 52ab1486-7a37-465c-9102-feef9d15256b_S_secvpf

இவருடன் கலந்து கொண்ட கொரிய வீரர் கிம் இரண்டாவது இடத்தையும், பெரு நாட்டு
வீரர் அலெய்சா 3-வது இடத்தையும், துனுசியா வீரர் மெஜ்ரி 4-வது இடத்தையும்,
கேமரூன் வீரர் என்டௌம் 5வது இடத்தையும் பிடித்தனர்.

-மாலை மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 2 Empty Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 21 Previous  1, 2, 3 ... 11 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum