புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
96 Posts - 49%
heezulia
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
7 Posts - 4%
prajai
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
2 Posts - 1%
cordiac
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
223 Posts - 52%
heezulia
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
16 Posts - 4%
prajai
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
2 Posts - 0%
Barushree
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_m10எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை !


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Jul 26, 2012 11:16 pm

21/7/2012

என்னால் பெரிதும் மதிக்கபடுகிற எனது பெரிய அண்ணன் விவேகானந்தன் அவர்கள் உடல் சுகவீனத்தின் நிமித்தம் மதுரை அப்பெல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வரப்பெற்றது ! அவர் நான் இருக்கும் இடத்திலிருந்து 50 கி .மீ தொலைவிலுள்ள கிராமத்தில் உள்ளார் !அவரை காண்பதற்காக குடும்பத்துடன் மதுரை பயணமானேன் !

அவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ! அத்தோடு நடுநிலைப்பள்ளியின் நிர்வாகியுமாவார் ! காமராஜர் காலத்தில் பள்ளி கல்வி உத்வேகப்படுத்த பட்டபோது எனது தந்தையாரின் முயற்சியால் பட்டிகாடான கிராமத்தில் இப்பள்ளி துவங்கப்பட்டு ;எங்களை வளர்த்தது போலவே இப்பள்ளியும் கடுமையான் கஸ்ட்டத்திலேயே வளர்க்கப்பட்டது ! நல்ல தரமான சேவையால் ஏழை எளியவர்கள் பலரை உயர் பதவிக்கு அனுப்பியுள்ளது ! கடைசி--ஏழாவது மகனான நான் நான்காவது படிக்கும் போதே எனது மூத்த அண்ணனும் அண்ணியும் ஆசிரிய பணிக்கு வந்தபோதிலும் எனக்கு திருமணம் முடியும் வரை தனிக்குடித்தனம் போகவில்லை ! எனது அப்பாவின் பாரத்தை நல்ல மகனாக சுமந்து கொண்டார் ! எனது தந்தையின் அனைத்து கடமைகளிலும் தோள் கொடுத்தார் ! அவரின் இறுதிகால கடமைகளை செய்து எனக்கு திருமணமும் செய்து வைத்து அவரின் சொந்த வாழ்வை தனியாக அவர் துவங்கும் போது அவரின் பிள்ளைகள் +2 வ்ந்து விட்டனர் ! ஒரு பெரிய குடும்பத்தை இழுத்ததால் ஓயாது வேலை ;பள்ளி ,விவசாயம் ,கடன் ,உருட்டல் பெரட்டல் என்று உழைத்து கொண்டே இருப்பார் !

மற்ற சகோதரர்கள் வேலை நிமித்தமாக வெளியூரில் வசித்ததால் அவர்கள் மீது என் தகப்பனாரின் பாரம் ஏறவில்லை என்றே சொல்லலாம் ! ஆனாலும் முழுமனதோடு தகப்பனுக்கு அடங்கிய தமையனாக மூத்த மகன்கள் பலர் இருப்பதில்லை !மருமகள்களும் அமைவதில்லை ! இப்படித்தான் மூத்த மகன் வாழவேண்டும் என்பது கடவுளின் விருப்பமும் கூட ! எல்லா மதங்களின் வேதங்கள் கூட மூத்த மகன் பொறுப்பை சுமக்கவேண்டும் என்று தான் சொல்லுகிறது !யூதர்களின் தவ்ராத் வேதத்திலும் மூத்த மகன் சிரேஸ்ட்ட புத்திரன் --அவனுக்கு மற்ற பிள்ளைகளை விட இரண்டு மடங்கு சொத்து உரிமையாக படவேண்டும் என்கிறது !ஏனென்றால் அவன் தன் தகப்பனுக்காக் வாழ்ந்தாக வேண்டும் ! அப்படிபட்ட கடமையை அவர் சிறப்பாகவே நிறைவேற்றினார் என்பதே கடைசி தம்பியான எனது கருத்து ! ஆனால் அதன் மதிப்பை மற்ற அண்ணன்மார்கள் போதிய அளவு உணரவில்லை !

அவர் பொது குடும்ப சொத்து முழுவதையும் வைத்துதானே எல்லாம் செய்து கொண்டிருந்தார் என்கிற வாதம் அவர்களுக்கு போதுமானதாக தெரிகிறது !ஆனால் அதில் உழைத்து ஒரு பெரிய குடும்பம் மற்றும் பள்ளி நிர்வாக செலவுகளை இழுத்து வந்த உழைப்பு ;அவர் தனியாக எதையும் ஒதுக்கி கொள்ளவில்லை ! ஆனால் முழுமூச்சாய் வளர்த்த அந்த பள்ளியை மட்டும் சகோதரர்கள் அவர்களாக விட்டுகொடுத்து விடுவார்கள் என நம்பினார் ! எனாக்கு அது உடன்பாடாகவே பட்டது !மற்றவர்கள் ஒத்து கொள்ளவில்லை ! எனது தந்தையாருக்கு பின் பங்காளிசண்டயாய் அது மாறிவிட்டது ! நான் சொல்லி பார்த்தேன் ;தீமைகள் ,சண்டைகள் சச்சருவுகள் பெருகும் வேகத்தை அணை போட முடியவில்லை !நான் ஒதுங்கி என்ன காத்துகொள்வதை தவிர என்னாலும் எதுவும் முடியவில்லை !

என் அண்ணன்மார்களின் குடும்பங்களுக்குள் கைபட்டது குற்றம் கால் பட்டது குற்றம் என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பிணக்குகள் வளர்ந்து பெருகிகொண்டே இருந்தன ! எல்லாம் அந்த பள்ளியை மய்யமாக வைத்தே பூசல் முற்றிகொண்டிருந்தது ! எனக்கு திருமணம் நிச்சயம் செய்தவுடன் என் தந்தையார் சுகவீனமடைந்து அவரை மருத்துவமனையில் வைத்தே என் அண்ணன் பராமரித்து வந்தார் ! அந்த காலங்களில் அவரை பார்க்க வரும்போதெல்லாம் (வெளியூரில் வேலையிலிருந்தேன் ) பெரிய அண்ணாவிற்கு --அவரின் உழைப்பு வீணாகதபடி அந்த பள்ளியை எழுதி வைத்துவிடும்படியாகவே நானும் சொன்னேன் ! அப்பாவும் அதுதான் சரியென்றார் ! எழுதி வாங்கிக்கொள்ளும்படியாக அண்ணாவிடமும் சொன்னார் ! ஆனால் பார்த்துகொள்ளலாம் --சகோதரர்கள் சுமூகமாக முடித்து கொள்ளுவோம் என அலட்சியமாக இருந்து விட்டார் ! ஊழ் விணை வந்து உருத்தும் என பலவேலைகளில் முன்னெச்சரிக்கை வந்தாலும் அதனை வெல்ல முடியாத அளவு விதி வந்து அழுத்திகொள்ளுவதிலிருந்து தப்ப முடியாத அனுபவம் எனக்கு நிறைய உண்டு !

முக்கியமாக எனது மற்ற அண்ணன்மார்களை விட எனக்கு மூத்தவரையும் அவரது மனைவியையும் இவ்விசயத்தில் சமாதன படுத்தவே முடியாது ; பெரும் சிக்கலை தவிற்கவே முடியாது பங்காளிசண்டையில் எனது தகப்பனாரின் வாரிசுகள் அல்லொகலப்படுவார்கள் என பயந்தது நடந்தது ! பிதுரார்ஜித கர்மா என்பது வலிமையானது ! வாழ்ந்து கெட்ட குடும்பங்களில் முன்னோர்களின் பாவம் என்பது மீண்டும் மீண்டும் வந்து அடிமேல் அடித்து கொண்டிருக்கும் ! ஒரே அடியாய் அடித்தால் மனிதன் தாங்க முடியாது என்கிற கடவுளின் கருணை கொஞ்சம் அடியும்கொஞ்சம் ஆசுவாசமுமாய் வந்து கொண்டிருக்கும் !

எனது முப்பாட்டணார் காலத்தில் எற்பட்ட பங்காளி சண்டையில் வெள்ளைக்காரன் கோர்ட்டிற்கு பல ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார்கள் ! எனது தாத்தா வருமையில் உலன்றார் ! சிருவயதிலேயே தாயை இழந்த எனது தகப்பனார் எப்படியோ ஆசிரியரானார் ! கடும் உழைப்பாளி ! ஒரு பள்ளியையும் தொடங்கி அடிமட்டத்திலிருந்து வளர்ந்து ஆறு பேரை பட்டபடிப்பு படிக்கவைத்து அரசு ஊழியர்களாயும் மாற்றினார் !அவர்களுக்கு திருமணமும் முடித்து நான் படிக்க வரும் போது கடன் பிரச்சினை விஸ்வரூபமெடுத்து ஆட்டுவித்து கொண்டிருந்தது ! எனது சகோதரர்கள் அனைவரும் கல்லூரி படிப்பு விடுதி செலவு என்ற நிலையில் சிறுவயதிலிருந்தே நன்றாக படிக்கிற நான் பெரிய படிப்பு படிக்க ஆசைபட்டுவிடுவேனோ என்று எனது தந்தையார் ``கிருபா ! எனக்கு வயசாகிவிட்டது நீ காலகாலத்தில் படித்து நான் இருக்கவே வேலைக்கு வந்துவிடு !பாலிடெக்னிக் படிக்க போ `` என்று சொல்லி கண்ணீரும் விட்டுவிட்டார் ! சரி என்று சொல்வதைதவிற வேறு வழி இல்லை என்பதை விட ஏன் அப்பா அழுதார் ? அவர் சொன்னால் ஏற்றுகொள்ளாதவனா ? பார்க்க ஒற்றுமையாக பெரிய குடும்பம் போல இருந்தாலும் உள்ளார்ந்த பிரச்சினைகள் ; கடன் ; முழுக்க மகனை சார்ந்து வாழவேண்டிய வயது ; இது எல்லாமுமே என் தகப்பனாரின் அழுத முகம் எனக்குள் படிமானமாக தங்கிவிட்டது ! நான் விடுதியில் 9 & 10 படிக்கும் போதே வறுமையை உணற தொடங்கிவிட்டேன் ! மெஸ் பில் கட்ட அப்பா லேட்டாக வருவார் ! ஒரு முறை விடுதி மாணவர்கள் அனைவரும் சுற்றுலா செல்ல பணம் கட்டசொன்னார்கள் ! அப்பா உடனடியாக வரவில்லை !சீட் முடிந்து விட்ட பிறகு வந்தார் ! வேண்டாமப்பா இருக்கட்டும் என்று சொன்னேன் ! அவர் என்னை கொஞ்சம் இரு என்று சொல்லிவிட்டு அந்த ஆசிரியரிடம் தனியே சென்று கெஞ்சுவது தூரத்திலிருந்து எனக்கு புரிந்தது ! பலனில்லை ! அதை விட அந்த தேவையை குறைத்துகொள்ளுவது என் தந்தைக்கு நான் கொடுக்கிற மரியாதையாக எனக்குள் பட்டது ! இப்போது அவர் அழுததும் எனக்கு தேவைகள் என்ற ஒன்றை அப்படியே கடந்துவிடுவது நல்லது என மனம் வைராக்கியம் கொண்டுவிட்டது ! அது ஒரு வகையில் இந்த உலகின் அலங்காரங்களில் இருந்து விடுபட்டவனாக மாற அடித்தளமிட்டது !

எந்த தேவையயும் முடிந்த அளவு அவசியமற்றவனாக என்னளவில் விடுதி ; வகுப்பு ; நூலகம் ; இயற்கையான பரந்த புல் வெளிகளில் ஏகாந்தமாய் இருப்பது தூங்குவது அப்படியே தியானிப்பதுமாய் வாழ்வு திரும்பிவிட்டது ! உலக பரபரப்பு ,லவ்கீக மாயைகளில் மனம் ஈடுபாடு கொள்ளவில்லை என்பதை விட எங்கே என் தேவைகளுக்காக நான் பணம் கேட்டு என் அப்பா அழுதுவிட கூடுமோ ; அதை உருவாக்கிவிடகூடாது என்ற வைராக்கியம் ; தாய்தகப்பனை கணம் பண்ண வேண்டிய மகனுக்கான கடமை ;பாசம் என்பதைவிட மதிப்பு என்னை தனித்தவனாக எனக்குள்ளாகவே மூழ்கியிருப்பவனாக ஆன்மீக வாழ்வுக்குரிய அடிப்படையை அமைத்து கொடுத்தது ! சினிமா ; பெண்களின் பின்னால் அலைவது அதில் ஒரு சுவையை காண்பது இவை இல்லாமலேயே போய் விட்டது ! மதுரையில் விடுதியில் இருக்கும் மாணவர்கள் கூட்டம் கூட்டமாய் கோவிலுக்கு போய் சைட் அடிப்பதும் ; காதல் செய்வது என்ற பெரும்பேறை அடைவதற்கு மணவனாய் பிறவிஎடுத்து வந்திருப்பதாக சினிமாக்களும் கவிஞர்களும் உரத்து உரத்து சொல்லிகொண்டிருக்கும் போது நான் சத்சங்கங்களிலும் --சிவானந்தர் , ராமகிரிஸ்ணர் ஆன்மீக கூட்டங்களில் கலந்து கொள்ளுவேன் ! முதலாவது இங்கு வறுமை --ஏற்றத்தாழ்வு முக்கியப்படுத்த படாத ஒரு பாதுகாப்பு கிடைக்கும் ! ஒரு சன்னியாசி --ஞானவான் முன்னால் அரசனும் பணம்படைத்தவனும் ஒரு பொருட்டாக கருதப்படுவதில்லை !

சக மாணவர்கள் என்னை புரிந்து கொள்ளமுடியாமல் தவித்து பைத்தியம் அரக்கிருக்கு என முடிவுக்கு வராதபடி படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எனக்கு ஒரு பாதுகாப்பு ! விடுதியே 20 ,30 தடவை பார்த்து ``ராதா ராதா `` என புலம்பிக்கொண்டிருக்க 100 ஆவது நாளில் படம் தூக்கபோகிறார்கள் என கேள்விப்பட்டு அப்படி என்னதான் இருக்கிறது என தெறிந்து கொள்ளுவதற்காக `` அலைகள் ஓய்வதில்லை `` படம் பார்த்தேன் !எனக்கு சிவுக்கென்றிருந்தது !அந்த அளவிற்கு ராதா அழகில்லை ! மேக்கப் இல்லமல் பார்த்தால் கிராமத்தில் வேலை செய்யும் விவசாய கூலி பெண்களைக்காட்டிலும் சுமாரிலும்சுமார் ! ஆனால் மாயையால் பிரபலப்படுத்த பட்டு அன்றாடம் நாம் காண்கிறவர்களை விட சாதாரண ஒருவரை உரே உலகமே புலம்பி தவிக்க வைக்கிற மாயைகள் வெல்லபட வேண்டியவை என்கிற புரிதல் வந்தது ! உலக மாயைகள் இப்படி பல மனிதர்களை மயக்கியே வைத்திருக்கிறது !அதில் மகாமாயை --காதல் என்பது ! 8 ம் வகுப்பு தாண்ட முடியாத எனது சிறுவயது தோழர்களும் தோழிகளும் விவசாய கூலிகளாகி உடனடியாக திருமண வாழ்வில் இணைந்தவர்கள் அப்போதே எனக்கு உண்டு ! இந்த ஜோடிகள் எவ்வளவு அன்னியோன்யமாய் -பாடுபட்டு வாயைகட்டி வகுத்தை கட்டி பிள்ளைகளை ஆளாக்குகிறார்கள் என்பதை அறிவேன் ! இவர்களுக்குள்ளிருப்பதே நேசம் -காதல் என்பது ! எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இன்னாடே என்ற பாரதியின் வரிகள் உண்மையானவை ! இவர்கள் வறுமையை ஒரு பொருட்டாக கருதாதவர்கள் அல்லது மகிழ்சியில் துள்ளிகுதிக்காதவர்கள்! சின்ன சின்ன மூக்குத்தியாம் சிவப்பு கல்லு மூக்குத்தியாம் என்ற பாடலை போலவே ஒரே மூக்குத்தி அழகிலேயே மனம் திருப்தியானவர்கள் ! அவர்கள் அலைவதுமில்லை ; வாழ்வை வீண்மாயைகளில் வீணாக்குவதுமில்லை !

அதன் பிறகு வேலைக்கு வந்ததும் சத்சங்க நண்பர்களே எனக்கு உறுதுனையாக இருந்தார்கள் ! ஞானமார்க்க குருமார்களின் தொடர்பும் எனக்கு வழிகாட்டியாய் அமைந்தது ! என் தேவைகளை மாதம் 400 ரூபாயளவில் முடித்து கொண்டு அப்படியே பணத்தை அப்பாவிடம் கொடுத்து விடுவேன் ! அது அவருக்கு பேரன்பேத்திகள் அதிகம் ! அவர் மடி நிறைய பணம் வைத்துகொண்டு பிள்ளைகள் கேட்க கேட்க காசு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் !அப்போதுதான் அவருக்கு மன நிறைவாக இருக்கும் ! என்னையும் அப்படித்தான் வளர்த்தார் ! 8 ம் வகுப்பு படிக்கும் வரை காசாக வாங்கி எனது நண்பர்கள் சூழ எதையாவது அரைத்து கொண்டிருப்பேன் ! அப்பாவை சுற்றி வந்து கொண்டே இருப்பேன் !அவர் வெளியூர் போனால் எனக்கு வெறுமையாக தெறியும் ! கத்தாளை வழியாக ஊருக்கு வரும் பாதையையே பார்த்து கொண்டிருப்பேன் !அதில் தொலைவில் அப்பா வருவதை பார்த்தவுடன் மட்டுமே ஆறுதலடைவேன் ! அப்பாவை சார்ந்த மனனிலை ஒருவகையில் கடவுளை சார்ந்த மனனிலையாக மாற அடித்தளமானது ! அவரிடம் ஓயாமல் காசு வாங்கியதும் கடன் பிரச்சினைக்கு காரணமோ என்ற ஒரு எண்ணமே அப்படியே என் தேவைகளை குறைத்து கொள்ளுகிற வைராக்கியம் கொடுத்தது ! அதனால் அவர் மீதுள்ள மதிப்பை முன்னிலைபடுத்தி அவர் இருக்கும் வரை அவரிடம் பணம் கொடுத்து விட்டு உலகமாயைகளை விட்டு ஒதுங்கி சத்சங்களில் புகளிடம் தேடிக்கொள்ளுவது அவசியமாயிற்று ! இதை நான் சொல்லுவதன் காரணம் : தாயையும் தகப்பனையும் மனதாலும் செய்கையாலும் கணம் பன்னும் மனிதனை கடவுள் தன் மீது பக்தி செலுத்தியதாகவே எடுத்துக்கொள்ளுகிறார் என்பது உண்மை !அதற்கு என் வாழ்வில் கடவுள் அருளிய ஆசிர்வாதங்ககளே ஒரு சான்று !

அப்பாவின் இறப்புக்கு பின்பே எனக்கு திருமணம் ஆனது ! ஆனால் அன்னியமாக இருந்தாலும் என் தகுதிக்கு மீறிய ஒரு குடும்பம் என்னை மருமகனாக சுவீகரித்துகொண்டது !என்னை அரைசாமியார் என்று நன்கு தெரிந்தே விரும்பி ஏற்றுகொண்டார்கள் ! அதன் காரணம் எனது மாமனாருக்கு வழிகாட்டிய நாமக்கல் மகான் ஜட்சு அவர்களே !(நாமக்கல்லில் ஒரு மகான் !!http://godsprophetcenter.com/rich_text_52.html) நானும் எனது அண்ணன்மார்களின் பங்காளிசண்டைகளிலிருது விலகிக்கொள்ள அது மிக வசதியானது ! ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் ஒருவர் சொத்துகளை முன்னேபின்னே வைத்து கொண்டார் என்பதற்காக யுத்தம் செய்யலாகாது ! அதை விட விட்டுகொடுத்து விட்டு கடவுளை நம்பி நமக்கு உள்ளதிலிருந்து வாழ தொடங்கி விட்டால் நாம் எவ்வளவு விட்டுகொடுத்தோமோ அதை விட பல மடங்கு நமக்கு உண்டாகும் படியாக கடவுள் பார்த்துகொள்ளுவார் !அதில் சந்தேகமேயில்லை ! பங்காளிசண்டை போடுவதை விட விலகி செல்லுவதே உத்தமம் !அவர்களுள் குறைந்த படிப்பு படித்த எனக்கே முதலாவது நல்ல வீடு உண்டானது ! 10 ஆண்டுகளுக்கு மேலாக கார் வைத்துள்ள நபராகவும் உள்ளேன் ! இவையெல்லாம் கடவுள் மிச்சங்களை குடுத்தால் மட்டுமே சாத்தியமாகும் ! வரவும் வருவாய்க்கு அடங்கிய செலவீணமும் மிச்சங்களும் கடவுளின் கரத்திலேயே உள்ளது !

ஆனால் என் அண்ணன்மார்கள் வம்பு வழக்கடி ஒருவருக்கொருவர் தீங்கு செய்து கொண்டது முன்னோர்களின் பாவமே ஆகும் ! கடைசியாக சிவில் வழக்கில் போய் முடிந்து ஆளாலுக்கு பல லட்சம் செலவும் செய்தார்கள் ! என் சகோதர்களின் கேடுகளுக்காக மனம் வருந்தி பிரார்த்தனை செய்து வந்ததை தவிற எனது பல முயற்சிகள் வெற்றிபெறவில்லை !ஆனாலும் கடவுளின் கிருபையால் -எனது ஓயாத அறிவுரையால் அந்த வழக்கிலிருந்து எனக்கு மூத்தவரை தவிற மற்றவர்கள் விலகிக்கொண்டனர் ! சிவில் வழக்கும் பெரிய அண்ணனுக்கு சாதாகமாக தீர்ப்பு வந்தது ! அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் வேலை போட்டுகொண்டார் ! தற்போது ஓரளவு வெற்றியின் பேரில் முன்னேற்றங்கள் உண்டாகி உள்ளன ! அவரவர்கள் சமாதனமாகி அவரவர் பாதையில் உள்ளதை வைத்து நல்ல வாழ்வு வாழ்வார்கள் என்ற நம்பிக்கை உண்டாகி உள்ளது !

இந்த வழக்குகளால் அதிகம் பாதிப்படைந்த எனது பெரிய அண்ணா தற்போது அவைகளில் இருந்து ஏறக்குறைய மீண்டுவிட்டார் ! ஆகவே இனியும் உலக கடமைகளுக்காக அவர் பாடுபட வேண்டியதில்லை ! இப்போது அவர் கடுமையாக சுகவீணம் அடைந்து ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணமுடியாமல் மிகவும் மெலிந்து எழும்பும் தோலுமாகிவிட்டார் ! மருத்தவமனைக்கு வரமாட்டேன் என்றவரை வம்பாகத்தான் அப்பெல்லோவில் சேர்த்திருக்கிறார்கள் ! ரத்தம் வயதானதால் கெட்டுவிட்டது --டையலிஸ் செய்தால் சரியாகிவிடும் --அதற்கு சில சோதனைகளின் முடிவு வரவேண்டும் என்ற நிலை !

முடிவு காலம் நெருங்கிவிட்டால் அது சில வியாதிகளாக மனிதர்களுக்கு வெலிப்படுத்த படுகிரது !முன்பு காலங்களில் கடவுளை வேண்டிவிட்டு ஏற்றுகொள்ளுவார்கள் ! இப்போதோ பெரிய மருத்துவமனைகளில் மனதிருப்திக்காக சில லட்சம் செலவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் மரணத்தை அடைகிறார்கள் ! இது அண்ணனுக்கு முடிவு காலமாகவே தெறிகிரது ! இந்த காலங்களில் ஒரு மனிதன் உலக காரியங்களை சிந்தித்து வருத்த பட்டுகொண்டிருந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை ! ஆனால் இக்காலத்திலேனும் ஆத்துமாவிற்காக கடவுளை பிரார்திக்கிற வேலையை மட்டுமே செய்து கொண்டிருதால் அது அந்த ஆத்துமாவிற்கு நல்ல பலனை அளிப்பதோடு அவரின் சந்ததிக்கும் செயல்முறை பூர்வமாக நற்பலனளிக்கும் ! இதை ஏற்றுகொள்ளுகிற பக்குவம் அவருக்கும் புரியவைக்க சந்தர்ப்பமும் அருளும்படி பிரர்தித்து கொண்டே இருந்தேன் ! கடவுள் நாடினால் மரண காலம் வரை நோய் வாட்டாமல் அவரை காத்துகொண்டு நித்திரை அளிக்க முடியும் ! அவருக்காக பிரார்திக்கிறவர்களின் பிரார்தனையின் வேண்டுதலுக்கு கடவுள் நிச்சயம் செவிசாய்ப்பார் ! அப்படிபட்ட பிரார்தனையை ஏறெடுப்பதே நம்மால் செய்யகூடிய உதவி !

அவரிடம் பணியாற்றுகிற பல ஆசிரியர்கள் வரவும் போக்குமாய் இருந்தது ! நான் எதிர்பார்த்தது போல சந்தர்ப்பம் வந்தது !நானும் அண்ணாவும் மட்டுமே தனித்து விடப்பட்டோம் ! அப்போது பேசினேன் `` அண்ணா ! உன் கடமைகள் அனைத்தையும் மிக நேர்த்தியாகவே நீ செய்திருக்கிறாய் ! அப்பாவிற்கு நல்ல மூத்த மகனாக அவரது பாரத்தை சுமந்தாய் ! அவரின் இறுதி காலத்திலும் தொண்டு செய்தாய் ! அம்மாவையும் நீயே தூக்கி சுமந்தாய் ! சிவில் வழக்கும்முடிந்து உன் பிள்ளைகள் பதவியில் அமர்த்திவிட்டாய் ! திருமண காரியங்களும் முடிந்தது !நல்ல நிறைவான வாழ்வையே வாழ்ந்திருக்கிறாய் ! இனி உன் பிள்ளைகள் எல்லாவ்ற்றையும் பார்த்து கொள்ளுவார்கள் ! ஆகவே போதும் இனி உலக கடமைகளை எண்ணாதே ! உனக்காக உனது ஆத்துமாவிற்கு மட்டுமே நீ உழைத்தாகவேண்டிய தருணம் இது !இருக்கும் வரை கடவுளை பிரார்தித்து கொண்டு மறுமையை அடைய மனம் ஒப்பிக்கொள் அண்ணா என்று பேசிக்கொண்டிருக்கும் போதே கண்ணை மூடி புண்ணகை பூத்தவாறு இரு கைகளை கூப்பி பிரார்திக்க தொடங்கிவிட்டார் !எனக்கு மன நிறைவாய் இருந்தது !சிலர் மரணத்தை கண்டு பயப்படுவார்கள் ! அண்ணன் அப்படியில்லை ! இருக்கும் வரை பிரார்திக்கவும் செய்வார் ! மாலையில் டயலிஸ் செய்ய அழைத்தார்கள் !வேண்டாம் வீட்டிற்கு செல்வோம் என்றார் ! நானும் சமாதனப்படுத்தி அவரை தொட்டு தூக்குகிற சாக்கில் அவர் தலைமீது கை வைத்து பிரார்தித்தேன் ! அவரை உள்ளே விட்டுவிட்டு வெளியேஅமர்ந்து பிரார்தித்தவாரே இருந்தேன் !கடவுள் நாடினால் அவர் மரணம் வரை நோவில்லாமல் காத்து மரணம் தர முடியும் !மறுமையிலும் அவருக்கு நற்பேறுகள் தரமுடியும் !அவரை அருளுக்குள் புகுத்த முடியும் !

அறையில் சென்று தங்கியவாறு பிரார்தித்து கொண்டிருந்தேன் ! மறுனாள் அவரை காண சென்றபோது தெம்பாக தெளிவாக இருந்தார் ! சில நாளில் வீட்டிற்கு அனுப்புவதாக மருத்துவர்கள் சொன்னார்கள் ! அவ்வறு வந்த பிறகும் அவர் தொடர்ந்து பிரார்த்தனை வாழ்வில் இருந்து அருளுக்குள் நுழைய கடவுள் அருள் புரிவாராக ! அந்த நாள் வரை அவருக்காக பிரார்திப்பேன் !இதுவே அவருக்கு மற்றவர்கள் செய்ய வேண்டிய வழியனுப்புதல் ஆகும் !!


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jul 26, 2012 11:58 pm

அண்ணா உண்மையிலேயே அருமையான பாச போராட்டம் மேலு எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை , அவர் சிக்கிரம் குணமடைய கடவுளை பிராத்திக்கிறேன் அன்பு மலர்

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Fri Jul 27, 2012 10:32 am

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:கண்ணை மூடி புண்ணகை பூத்தவாறு இரு கைகளை கூப்பி பிரார்திக்க தொடங்கிவிட்டார் !எனக்கு மன நிறைவாய் இருந்தது !சிலர் மரணத்தை கண்டு பயப்படுவார்கள் ! அண்ணன் அப்படியில்லை ! இருக்கும் வரை பிரார்திக்கவும் செய்வார் !

அவரது மன சஞ்சலங்களில் இருந்து உங்கள் வாக்கியங்கள் அவரை விடுவித்தன போலும். இளவலாய் அவருக்கு நல்லன செய்தீர் ஐயா. நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும், உங்கள் வரிகள் கண்டு

மனம் நிறைந்த பிராத்தனைகளும் அவர்களுக்காக. :வணக்கம்:







மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 27, 2012 10:52 am

உங்கள் பதிவை படித்தபோது ஒரு தமிழ்மணம் வீசும் பாசபினைப்பான படம் பார்த்ததை போல உணர்வு ஏற்பட்டது, உங்கள் அண்ணனுக்கு நான் தலை வணங்குகிறேன் , அனர நலம் பெற என் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக