ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுமண வாழ்க்கையில் நறுமணம்..

3 posters

Go down

மறுமண வாழ்க்கையில் நறுமணம்.. Empty மறுமண வாழ்க்கையில் நறுமணம்..

Post by சிவா Thu Jul 26, 2012 10:27 am

மறுமண வாழ்க்கையில் நறுமணம்.. Love

இளமையில் மனைவியை இழக்கும் ஆண்களின் வாழ்க்கையை உள்ளபடியே ஒரு சூன்யம் சூழ்ந்துகொள்ளத்தான் செய்கிறது. மனைவியோடு வாழ்ந்து பாதி வேலையை அவள் தலையில் கட்டிவிட்ட அவர்கள், சுயமாக செயல்படவே தடுமாறிவிடுகிறார்கள். போதாக்குறைக்கு மனைவி ஒரு குழந்தையை கொடுத்துவிட்டுப்போயிருந்தால் அவர்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிடுகிறது. அதனை பராமரிக்க வேண்டிய பொறுப்பு, வீட்டு நிர் வாகம், அதற்கு மேல் தனிமை இதெல்லாம் அவர்களை நிம்மதி இழக்கச் செய்து விடு கிறது.

மனைவியை இழந்த அவர் இப்படி தடுமாறிக்கொண்டிருக்கும்போது பெற்றோரும் உறவினர் களும் அவருக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சி செய்வார்கள். இந்த மறுமணம் அவர்கள் வாழ்க்கையை நறுமணமாக்குமா என்பது கவனிக்கத்தகுந்த விஷயம்.

மறுமணம் அவசியம்தான். ஆனால் நன்றாக அறிமுகமான பெண்ணாக இருப்பது நல்லது என்று சொல்லி மனைவியின் தங்கையையே திருமணம் செய்து கொள்ள முற்படுகிறவர்கள் அதிகம். வீட்டுப் பெரியவர்களும் அதற்கு ஒத்துழைப்பார்கள். அதன் முடிவு, அந்த பெண் ணின் மனதிற்குப் பிடிக்காத ஒரு கட்டாய திருமணம் அங்கு அரங்கேறும். அந்தப் பெண் ஏற்கனவே யாரையாவது மனதில் நினைத்திருந்தால் அவனைத் தூக்கி தூரவீசிவிட்டு, இந்த தியாக வேள்வியில் இறங்க வேண்டியிருக்கும். பிறகு அந்த மறுமணத்தில் சந்தோஷம் எங்கிருந்து வரும்?!

இளம் மனைவியை இழந்த ரமேஷின் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். மனைவியை இழந்து தவித்த அவர் தனக்கு நன்கு அறிமுகமான, கணவனை இழந்த ஒரு பெண்ணை தேர்வு செய்து மணந்து கொண்டார். இவருக்கு முதல் மனைவி மூலம் இரண்டு குழந்தை கள். அந்தப் பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள். ஆறு பேர் இருந்ததால் அந்த குடும்பம் பெரிதாகிப்போனது. வருமானம் போதவில்லை. எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கவில்லை. வாழ்க்கையே போராட்டமாகிப் போனது.

அந்தப் பெண்ணுக்கோ குடும்ப பாரம் அதிமானது. இடப் பற்றாகுறை, பணப்பற்றாக்குறை, ஓய்வில்லாத உழைப்பு இதுவே வாழ்க்கையாகிப் போனது. இப்படி ஒரு மறுமணம் தேவை தானா என்று இருவரும் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். முடிவு மனமுறிவு, மண முறிவு, குடும்பத்தில் பிரிவு.

இந்த மாதிரி வாழ்க்கையில் மீண்டும் ஒரு சிக்கல் ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

மனைவியை இழந்தவரிடம் போய் நின்றுகொண்டு அவரை, மறுமணத்திற்கு கட்டாயப்படுத்த கூடாது. சூழ்நிலைகளை சாதகமாக்கிக்கொண்டு, அவசரப்படுத்தி மறுமணத்திற்கு சம் மதிக்க வைக்கக் கூடாது. அவர்கள் நன்றாக சிந்திக்கவேண்டும். சிந்தித்து தனக்கு மறுமணம் அவசியம் என்று உணரும்பட்சத்தில் அவசரப்படாமல் அவருக்கு பெண் தேட வேண்டும். அதற்கான திருமண தகவல் மையங்களில் தகவல் பெறுவதாக இருந்தால், அந்த தகவல்கள் உண்மையா என்பதை தீர விசாரிக்க வேண்டும். கூடுமானவரை நன்கு அறிமுகமான பெண்ணை தேர்வு செய்து அவர்கள் விருப்பத்துடன் மணமுடிப்பது அவசியம்.

நன்கு அறிமுகமானவர் என்றவுடன் சட்டென்று மனைவியின் தங்கை என்று தீர்மானித்து விட வேண்டாம். எடுத்த எடுப்பில் யாரும் இரண்டாம் தரமாக வர விரும்ப மாட்டார்கள். உறவுகள் மீது இருக்கும் பாசம் வேறு - திருமணம் வேறு. இரண்டையும் ஒன்றாக்கி குழப்ப வேண்டாம்.

விதவைப் பெண்ணை மணப்பது தவறல்ல. ஆனால் குடும்பப் பொறுப்பு பெரிதாகி விடாமல் இருக்க வேண்டும். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் வாழ்க்கையை பெரிய அளவில் பாரமாக்கி விடும்.

மறுமணம் செய்துகொள்ளும் ஆண்களும், பெண்களும் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை. `தங்களுக்கு மறுமணத்தில் அவ்வளவு பெரிய ஆர்வம் ஒன்றும் இல்லை. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துதான் அப்படி ஒரு முடிவை எடுத்தேன்' என்பார்கள். குழந்தை களுக்காக அப்பா செய்துகொள்ளும் மறுமணம் பெரும்பாலும் வெற்றியடையாது. வளர்ந்த குழந்தைகளால் சுலபமாக புதிய அம்மாவை ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகளை மட்டும் மனதில்வைத்துக்கொண்டு ஒரு பெண்ணை தேர்வு செய்தால், அவள் வீட்டில் ஆயா வேலை பார்ப்பவள் போல் ஆகிவிடுவாள். தனக்கும் அந்த ஆயா போன்ற பெண்ணுக்கும் தொடர்பு இல்லை என்பதுபோல் மறுமண கணவர் நடந்துகொள்வார். அதனால் அந்த பெண்ணுக்கும் திருப்தியான வாழ்க்கை கிடைக்காது. அவருக்கும் திருப்தி கிடைக்காது. மறுமணத்தில் வாழ வரும் பெண்ணின் மனநிலையும் மிக முக்கியம். மறுமண வாழ்க்கை நறுமணமாக வேண்டும் என்றால், இங்கே இரு இதயங்கள் அன்பு பூர்வமாக இணைய வேண்டும்.

பண்டித ஜவஹர்லால் நேரு தனது மனைவி கமலாவின் இறப்பிற்கு பின் மறுமணம் செய்து கொள்ளவில்லை. தன்னுடைய முழு நேரத்தையும் நாட்டு சேவைக்காக அர்ப்பணித்தார்.

புகழ் பெற்ற நடிகர் சுனில் தத், மனைவி நர்கீஸ் மறைவுக்கு பின் மறுமணம் செய்து கொள்ளவில்லை. அவர்களுடைய இல்வாழ்க்கையில் பரிசாக கிடைத்த மகனையும், மகளை யும் தனியாக நின்று வளர்த்து ஆளாக்கினார். சமூக சேவையில் ஈடுபட்டு தனிமையை போக்கிக் கொண்டார். அதனால் மறுமணம் கூடாது என்று சொல்வதிற்கில்லை. மறுமணத் தில் அவசரம் கூடாது. தக்க ஆலோசனையுடன் சூழ்நிலைகளை ஆராய்ந்து, எதிர்பார்க்கும் நிம்மதியை மறுமணம் தரும் என்றால் அதை செய்துகொள்ளலாம்.

தினத்தந்தி


மறுமண வாழ்க்கையில் நறுமணம்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறுமண வாழ்க்கையில் நறுமணம்.. Empty Re: மறுமண வாழ்க்கையில் நறுமணம்..

Post by விநாயகாசெந்தில் Thu Jul 26, 2012 10:36 am

மகிழ்ச்சி சூப்பருங்க வித்தியாசமான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

மறுமண வாழ்க்கையில் நறுமணம்.. Empty Re: மறுமண வாழ்க்கையில் நறுமணம்..

Post by சந்திரகி Thu Jul 26, 2012 11:40 am

சிவா wrote: மறுமண வாழ்க்கை நறுமணமாக வேண்டும் என்றால், இங்கே இரு இதயங்கள் அன்பு பூர்வமாக இணைய வேண்டும்.


மனமிணைந்து மணம் செழிக்க இதுவே வழி.

அருமையான பகிர்வுக்கு நன்றிகள்


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

மறுமண வாழ்க்கையில் நறுமணம்.. Empty Re: மறுமண வாழ்க்கையில் நறுமணம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum