புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகள் 2012
Page 1 of 1 •
“வாக்கிங்’ சென்ற சுவாமிநாதனால் தொடர்ந்து நடக்கமுடியவில்லை. சோர்ந்து போனார். சோர்ந்து போனது அவருடைய உடல்நிலை இல்லை, மனநிலை!
வேலையில் இருந்து ஓய்வு பெற்று பத்து வருடங்கள் ஓடிவிட்டன. என்றாலும் வேலையில் இருக்கின்ற அதிகாரியைப் போலவே ஒரு கம்பீரமான உடல்வாகு.
வழக்கமாக அந்த விளையாட்டு மைதானத்தை பத்து முறை வேகமாக நடந்து முடிக்க கூடியவர். தினசரி ஐந்து கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி செய்வது என்பது அவருடைய குறிக்கோள்.
ஆனால், அன்று இரண்டுமுறை கூட அந்த விளையாட்டு மைதானத்தைச் சுற்றி வர முடியவில்லை. சோர்ந்து போய் மைதானத்தின் ஓரத்தில் மரத்தடி நிழலில் உட்கார்ந்தார்.
மனவேதனை! எந்த விஷயத்திற்கும் கவலையே அடையாதவர். துவண்டு போனார்.
அடுத்த என்ன செய்வது என்று விளங்கவில்லை. தான் வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமில்லாமல் போய் விட்டதோ என்ற கவலை மனத்தைப் பிசைந்தது.
முப்பத்தைந்து வருஷ அரசாங்கப் பதவியில் கண்டிப்பான அதிகாரி என்ற பெயரை நிரந்தரமாக தக்க வைத்துக் கொண்டவர்.
“சிங்கம்’ என்று அவருக்கு கீழ் பணிபுரிந்த ஊழியர்களிடம் பெயர் பெற்றவர். எந்தக் கஷ்டம் வந்த போதிலும் சம்பளத்தைத் தவிர ஒரு பைசா கிம்பளம் பெறாதவர்.
நேர்மை என்றால் நூறு சதம் நேர்மை! அவருக்கும் மேல் உள்ள அதிகாரிகளிடம் ஒரு மரியாதையைப் பெற்றவர்.
அவருக்கும் கீழ் உள்ள ஊழியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்.
அந்த அதிகாரத் தோரணையும், நேர்மையும் இந்த இயந்தரத் தனமான உலகில் வாழ உதவாதோ என்ற கவலையும் வந்தது.
சரியோ, தவறோ எந்தக் காரியத்திற்கும் கை நீட்டி கையூட்டு வாங்கிச் சம்பாதித்தவர்கள் எல்லாம் கார், பங்களா என்று செட்டில் ஆகிவிட்டார்கள்.
அதிகாரம் இருந்தபொழுது வலிய வலிய வந்து பழகிய சொந்தம் எல்லாம் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் மெல்ல விலகிக் கொண்டார்கள்.
பணியில் இருந்தபோதே பெரிய மகள் பவித்ராவுக்கு ஜாம் ஜாம் என்று திருமணத்தை நடத்தி பேரன் பேத்தி என்று பார்த்துவிட்டார்.
சின்ன மகள் மைதிலிக்குத் திருமணம் செய்யும் பொழுது பணியில் இரந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற போது வந்த பணத்தின் பெரும் பகுதியை மைதிலியின் திருமணத்திற்காகச் செலவு செய்துவிட்டார்.
சேமிப்பு என்று பெரிதாக எதுவும் இல்லை. செலவுக்கு என்று பென்ஷன் மட்டுமே!
எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் இருந்தார்.
மைதிலியின் திருமணம் முடிந்த பிறகு நகரத்தில் இருந்து வாடகை வீட்டைக் காலி பண்ணிக்கொண்டு கிராமத்தில் இருக்கும் ஓட்டுவில்லை வீட்டுக்குச் சென்று விடுவதாக முடிவு செய்தார்.
பவித்ரா விடவில்லை.
“அப்பா, இவ்வளவு காலமும் டவுன் வாழ்க்கையை பழகிப் போயிட்டீங்க. இனி போய் கிராமத்தில் தனியா இருக்கிறது கஷ்டம், பேசாமல் எங்களோடு இருங்க.’
யோசித்தார்.
“என்னப்பா யோசிக்கிறீங்க. இத்தனை காலமும் வேலை வேலைன்னு ஓடிட்டு இருந்தீங்க. கடமையை எல்லாம் முடிச்சிட்டீங்க. இனியாவது பேரன் பேத்தியை பார்த்திட்டு நிம்மதியா இருங்க.’
மறுக்க முடியவில்லை.
பவித்ராவோடு கூட்டுக் குடும்பமாக இருக்க முடிவு செய்தார்.
அதுவரையும் மனைவியிடம் கொடுத்து வந்த பென்ஷன் பணத்தை மகளிடம் கொடுத்தார்.
மளிகை சாமான் வாங்கிக் கொண்டு வருவதில் இருந்து, மின்சார கட்டணம் கட்டுவது, போன் பில் கட்டுவது என்று அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்.
பேரன் பேத்திகளை பள்ளிக்கு அனுப்புவதில் கூடவே இருந்து பொறுப்பாகப் பார்த்துக் கொண்டார்.
சும்மா இருந்து கொண்டு வயதான காலத்தில் தண்டச்சோறு சாப்பிடவில்லை என்ற ஒரு நிம்மதி!
காலம் நிம்மதியாக நகர்ந்து கொண்டு இருந்தது. அந்த நிம்மதி வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை.
அன்று நகரப்பேருந்துவில் ஏறி நண்பர் வீட்டிற்குச் சென்ற பொழுது இறங்க வேண்டிய நிறுத்தத்தில் மனைவி கமலி இறங்கவில்லை.
இத்தனைக்கும் வழக்கமாகச் சென்று வரும் வழிதான். காலங்காலமாக போய் வந்து கொண்டிருக்கும் வழித்தடம் தான்.
கமலியைக் காணவில்லை.
அடிவயிற்றில் நெருப்பு பற்றிக் கொண்டது. எங்கும் தேடியும் காணவில்லை.
பவித்ராவுக்கு, மைதிலிக்கு என்று அனைவருக்கும் தகவல் கொடுத்துவிட்டு பதற்றத்துடன் அலைந்தார் சுவாமிநாதன்.
ஒருநாள் முழுதாகக் கடந்தும் ஏதும் தகவல் இல்லை.
கடைசியில் எல்லோரும் சுவாமிநாதனைப் பிடித்துக் கொண்டார்கள்.
“வயசான காலத்தில் சும்மாவே இருக்க மாட்டீங்களா? அதென்ன எப்போ பார்த்தாலும் வெளியில் அலைஞ்சுட்டே இருக்கிறது?’
“நடேசன் வீட்டுக்குப்போய் ரொம்ப நாள் ஆயிடுச்சு. அவனோட மகளுக்கு குழந்தை பிறந்ததா தகவல். போய் பார்த்துட்டு வரலாம்னு கிளம்பினோம்.’
“அது சரி. நண்பர் வீட்டுக்குப் போறதா இருந்தால் ஒரு ஆட்டோ வச்சுக்க வேண்டியது தானே? டவுன் பஸ்ஸில் எதுக்கு அம்மாவை அழைச்சிட்டுப் போறீங்க?’
“ஆட்டோவுக்கு எதுக்கு வெட்டிச் செலவு?’
“காசைப் பெரிசா நினைச்சீங்க. இப்போ அம்மாவை தொலைச்சிட்டு நிற்கறீங்க.’
பெற்ற மகள்கள் மாறி மாறிப் பொரிந்து தள்ள சுவாமிநாதனின் மனசுக்குள் குற்ற உணர்வு ஊசியாகக் குத்திக் குதறியது.
இரண்டு நாள் தேடலுக்குப் பிறகு துடியலூர் மகளிர் காவல் நிலையத்தின் மூலம் கமலி கிடைக்கப் பெற்றாள்.
போலீஸில் கையெழுத்துப் போட்டு கமலியை அழைத்துச் செல்லும் பொழுது, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேறு தன் பங்குக்கு அறிவுரை வழங்கினார்.
“என்ன சார் ஒரு பொறுப்பான பதவியில் இருந்த நீங்களே இப்படி நடந்துக்கலாமா? வயதான காலத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையாக இருக்கணும் இல்லையா?’
“ஸாரி சார். வழக்கமா இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப்பில் இறங்காமல் கூட்டத்தில் வேறு ஸ்டாப்பில் இறங்கிட்டாங்க. அதனால் வந்த பிரச்சனை.’
“நல்ல வேளை. உங்க மனைவி வழி தெரியாமல் அலை மோதிட்டு இருந்ததை கவனிச்ச காலேஜ் மாணவர்கள் கொண்டு வந்து எங்ககிட்ட ஹேண்டோவர் பண்ணினாங்க.’
“உங்க உதவியை மறக்கவே முடியாது. ரொம்ப நன்றி சார்.’
“இது காவல் துறையின் கடமை! இன்னொரு விஷயம். உங்க மனைவி எங்ககிட்ட வந்ததும் முகவரியை ஒழுங்காகச் சொல்லி இருந்தால் உடனே உங்களுக்கு தகவல் கொடுத்திருப்போம். அவங்க பயத்தில் எல்லாம் மறந்துட்டாங்க போல! விஷயத்தை அவங்ககிட்ட மிக நிதானமாகத்தான் தெரிஞ்சிக்க முடிந்தது. எப்படியோ நல்லவிதமா அழைச்சிட்டுப் போங்க.’
வீட்டுக்கு வந்த பிறகு சுவாமிநாதனிடம் ஒரு குண்டை தூக்கிப் போட்டாள் பவித்ரா.
“எனக்கென்னவோ அம்மாகிட்ட ஒரு மாற்றம் தெரியறது.’
“என்னம்மா சொல்றே?’
“எதை வச்சு சொல்றே?’
“பின்னே, பஸ் ஸ்டாப்பில் மாறி இறங்கிப் போறதுக்கு அம்மா என்ன சின்னக் குழந்தையா?’
சுவாமிநாதன் மனசுக்குள் ஒரு பயம் துளிர்விட்டது.
“நீ சொல்றது எனக்கு புரியவில்லை பவித்ரா.’
“நான் நினைக்கிறது சரியா தவறானு தெரியலை. ஆனால் அம்மா முன்னே மாதிரி இல்லைனு மட்டும். தெரியறது. அடிக்கடி எதையாவது மறந்து போய் நிற்கறாங்க.’
“உண்மையாகவா?’
“உண்மைதான். இத்தனை நாளும் இதை நான் சீரியஸாக எடுக்கலை. ஆனால் இப்போ யோசித்துப் பார்க்கும் போது அம்மாவோட நடைமுறையில் ஒரு மாற்றம் தெரியறது.’
சுவாமிநாதன் மௌனமாக மகளைப் பார்க்க அவள் தொடரந்தாள்.
“கதவைத் திறந்து வைத்தால் மறுபடி மூட மறந்திடாங்க. கேட்டால், சரியான பதில் சொல்றது இல்லை. பாலை அடுப்பில் வச்சு பார்க்கச் சொல்லிட்டுப் போனால் பால் பொங்கி வழிந்தாலும் அடுப்பை நிறுத்துவதில்லை. குளிக்கப் போனால் பாத்ரூமில் சும்மா நின்னுட்டு வந்திடறாங்க. கொஞ்ச நாளாவே சில முரண்பாடுகள் தெரியுது.’
கமலியில் போக்கில் சில முரண்பாடுகள் இருப்பதை சுவாமிநாதனும் உணரத் தொடங்கினார்.
காப்பி கலந்து எடுத்து வரச் சொன்னால் தண்ணீர் கொண்டு வந்து நிற்கிறாள். தினசரி சாப்பிடும் மாத்திரையை எடுத்து வரச் சொன்னால் முகத்திற்கு போடும் பவுடர் டப்பாவை எடுத்து வருகிறாள்.
கேட்டால் சரியான பதில் இல்லை.
மொத்தத்தில் கமலியிடம் மாற்ம் நாளுக்கு நாள் அதிகமாகத் தெரிந்தது.
குடும்ப டாக்டரிடம் அழைத்தப் போக அவர் நம்பியல் சிகிச்சை நிபுணரை பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்தார்.
அங்கு போனால் இரத்தப் பரிசோதனை, மூத்திரப் பரிசோதனை, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்று வரிசையாக ஏகப்பட்ட பரிசோதனைகள் செய்தார்கள்.
முடிவாக கமலிக்கு வந்திருப்பது நினைவு இழப்பு நோய் என்று கண்டுபிடித்துச் சொன்னார்கள்.
சுவாமிநாதன் அதிர்ந்து போனார்.
“டாக்டர் என்ன சொல்றீங்க? மறதி நோயா?’
“ஆமாம், ஒரு பொருளை வைத்த இடம் தெரியாமல் தேடுவது. புதிதாகச் சென்ற பாதையில் குழப்பம் அடைவது. இதெல்லாம் இயல்பானவை. கவனச் சிதறலால் வருபவை. ஆனால், உங்கள் மனைவிக்கு வந்திருப்பது அல்ஸைமர் எனும் மறதி நோய்.’
“ஸார் கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க.’
“சொல்றேன். வைத்த பொருளைக் காணாமல் தேடுவது சாதாரண மறதி. ஆனால் அல்ஸைமர் பாதிப்பில் காணாமல் போன பொருள் பற்றிய பிரக்ஞையே இருக்காது. அந்தப் பொருள் கையில் இருந்தாலும் அதை என்ன செய்வது என்று தெரியாது.’
“அப்புறம்?’
“வயது ஆக ஆக மூளையில் உள்ள நியூரான்கள் அழிந்து போய் நினைவிழப்பு ஏற்படும். இந்த நினைவிழப்பின் தீவிரமான ஒரு கட்டம் தான் அல்ஸைமர்’
“வேறு என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும்?’
“அல்ஸைமர் பாதிப்பில் அறிவு சார்ந்த செயல்பாடுகள் முதலில் பாதிக்கப்படும். எந்த வேலையில் இருந்தோமோ அந்த வேலை சார்ந்த அறிவு மழுங்கிப் போகும். ஒரு டாக்டருக்கு இந்த நோய் வந்தால் அவருக்கு ஒரு நோயாளிக்கு என்ன மருந்து எழுதுவது என்று மறந்து போகும். அதில் குழப்பம் வரும். இரண்டாவது கட்டத்தில் பாதைகள், முகங்கள், பெயர்கள் தெரியாமல் போகும்.’
சுவாமிநாதன் கவலையில் உறைந்து போக, டாக்டர் தொடர்ந்தார்.
“மூன்றாவது கட்டத்தில், ஞாபகங்கள் மொத்தமாக அழிந்து போய்விடும். உங்களோடு குடும்பம் நடத்தியதே மறந்து போய் உங்களையே மறந்து போகும்.’
“ஸார் நீங்க சொல்லச் சொல்ல ரொம்பவும் பயமா இருக்கு.’
“பயப்படாதீங்க மிஸ்டர் சுவாமிநாதன். இந்த மாதிரி ஒரு பிரச்னை, ஒரு நோய் யாருக்கும் வரக்கூடாது தான். ஆனால் உங்க மனைவிக்கு வந்திருக்கு. இந்த நேரத்தில் நீங்க மனதை தளரவிடக்கூடாது. வந்த பிரச்சனையை எதிர்கொள்ள பழகிக்கணும். சமாளிக்கக் கற்றுக் கொள்ளணும்.’
“வேறு என்ன அறிகுறிகள் தெரியும்?’
“அடுத்து வாயில் போட்டுக் கொண்ட உணவை விழுங்கத் தெரியாது. துப்பி விடுவார்கள். நடக்க முடியாமல் தள்ளாடுவார்கள். கடைசியில் படுத்த படுக்கையாகி விடுவார்கள். தான் யார் என்பதையே மறந்து போவார்கள்.’
“இந்த நோய்க்கு என்ன காரணம்?’
“அல்ஸைமர் வருவதற்கான பிரத்யேகமான காரணம் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. வயதான காலத்தில் சிலருக்கு வரும். வந்தால் எதிர்கொள்ள வேண்டியது தான்.’
“அப்போ அதைக் குணப்படுத்த முடியாதா?’
“சரியான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.’
“அப்புறம் என்ன சார் செய்வது?’
“இனி மேற்கொண்டு உங்க மனைவியை அக்கறையோடு பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். சில மருந்துகள் எழுதித் தரேன். கவனமா கொடுத்துட்டு வாங்க. குணமாக்கச் சொல்லி கடவுளை வேண்டிக்க வேண்டியது தான். வேறு வழி?’
சுவாமிநாதனின் பாதங்களுக்குக் கீழ் பூமி பிளந்து உள்ளே விழுந்ததைப் போல் ஒரு அதிர்வு!
- அமுதகுமார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கதையின் முடிவு வருத்தம் தருவதாக உள்ளதே
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
என்னுடன் பணிபுரியும் நண்பனின் தந்தைக்கு இந்த நோய் இருந்தது.
சமீபத்தில் அவர் இறந்து விட்டார்.
சமீபத்தில் அவர் இறந்து விட்டார்.
- Sponsored content
Similar topics
» ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க மட்டுமே!
» நட்சத்திர பலன்கள் - 31.3.2012 முதல் 6.4.2012 வரை
» நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை)
» வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை)
» வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» நட்சத்திர பலன்கள் - 31.3.2012 முதல் 6.4.2012 வரை
» நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை)
» வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை)
» வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1