புதிய பதிவுகள்
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏவுகணையின் தந்தை! Poll_c10ஏவுகணையின் தந்தை! Poll_m10ஏவுகணையின் தந்தை! Poll_c10 
66 Posts - 51%
heezulia
ஏவுகணையின் தந்தை! Poll_c10ஏவுகணையின் தந்தை! Poll_m10ஏவுகணையின் தந்தை! Poll_c10 
55 Posts - 42%
mohamed nizamudeen
ஏவுகணையின் தந்தை! Poll_c10ஏவுகணையின் தந்தை! Poll_m10ஏவுகணையின் தந்தை! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஏவுகணையின் தந்தை! Poll_c10ஏவுகணையின் தந்தை! Poll_m10ஏவுகணையின் தந்தை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஏவுகணையின் தந்தை! Poll_c10ஏவுகணையின் தந்தை! Poll_m10ஏவுகணையின் தந்தை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏவுகணையின் தந்தை! Poll_c10ஏவுகணையின் தந்தை! Poll_m10ஏவுகணையின் தந்தை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஏவுகணையின் தந்தை! Poll_c10ஏவுகணையின் தந்தை! Poll_m10ஏவுகணையின் தந்தை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏவுகணையின் தந்தை! Poll_c10ஏவுகணையின் தந்தை! Poll_m10ஏவுகணையின் தந்தை! Poll_c10 
6 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏவுகணையின் தந்தை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 21, 2012 3:57 pm

ஏவுகணையின் தந்தை! P5810


'இந்தியாவின் அக்னி - 5 சோதனை வெற்றி! 5,000 கி.மீ. பறந்து சென்று வெற்றிகரமாக இலக்கைத் தாக்கியது. சீனாவின் எந்தப் பகுதியையும் நம்மால் தாக்க முடியும்’ - நாளிதழ்களில் அவ்வப்போது இப்படியான செய்திகளைப் படித்திருப்பீர்கள். இதேபோல பாகிஸ்தான் ஏவுகணை சோதித்தால் சென்னை குறி வைக்கப்படும். வட கொரியா சோதனைக்கு தென்கொரியா அலறும். இரான் சோதித்தால் இஸ்ரேல் எகிறும். உலக நாடுகளைக் குளிர் ஜுரத்தில் கிடுகிடுக்கவைக்கும் ஏவுகணைகளுக்குக் காரணமாக இருந்தவர் ஒரு ஜெர்மானியர். அவரது பெயர் வெர்னர் வான் பிரவுன். நவீன ஏவுகணையின் தந்தை!

சீனர்கள் முதன்முதலில் ஏவுகணை தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தபோது, நாம் வில், வாளையே தாண்டவில்லை. ஒரு நீண்ட மூங்கில் கம்பு, அதன் முனையில் கூம்பு வடிவக் குழாயில் கருமருந்து... கிட்டத்தட்ட தீபாவளி ராக்கெட்டின் பெரிய வடிவம்தான், அப்போது சீனர்கள் மீது அச்சத்தை உண்டாக்கியது. ஐரோப்பிய நாடுகளுக்கு அதுவரை தெரியாத டெக்னாலஜி அது.

அதேசமயம், 'அகண்ட ஜெர்மன்’ என்ற கனவை நிறைவேற்ற நாஜி கொள்கையை உலகம் முழுக்கப் பரப்ப வேண்டும் என்ற தீராத தாகத்தில் இருந்தார் ஹிட்லர். ஒரே உலகம்... ஒரே தலைவன்! அதைச் சாத்தியப்படுத்தும் வழிகளை ஆராய்ந்தபோது ஏவுகணைகள் மீது ஹிட்லரின் கவனம் விழுந்தது. 'ஜெர்மன் ஆர்மி ராக்கெட் சென்டர்’ என்கிற அமைப்பை ஆரம்பித்த ஹிட்லர், அதற்குத் தலைவராக வெர்னரை நியமித்தார்.

அதுவரை ராக்கெட்களில் இருந்த திட எரிபொருளுக்குப் பதிலாக திரவ எரிபொருளைப் பயன்படுத்தினார் வெர்னர். எரிபொருள் எடை குறைந்ததால், அதுவரை 70 கிலோ மீட்டர் தூரம் தாண்டாத ஏவுகணைகள் அநாயாசமாக 300 கிலோ மீட்டரைத் தாண்டி பட்டாசு கிளப்பின. ராக்கெட்டின் வடிவத்தை இப்போதைய பாலஸ்டிக் வடிவத்துக்கு மாற்றியதும் வெர்னரே! (இப்போது வரை இந்த பாலஸ்டிக் ஏவுகணைகள்தான் செம ஹிட். இந்தியாவின் அக்னி 5-ம் இதே ரகம்தான்). V-4 என்று பெயரிடப்பட்ட ஜெர்மனியின் முதல் ஏவுகணை, பரிசோதனை சமயங்களிலேயே பல முறை வெடித்துச் சிதறியது. ஸ்பாட்டில் வெடித்தது, பாதி தூரத்தில் வெடித்தது என மொத்தம் 12 ஆயிரம் பேரைப் பலி வாங்கியது. அதற்கெல்லாம் ஹிட்லரா அசருவார்? வண்டி வண்டியாக ஆட்களை இறக்கினார். 10 ஆண்டுகள் ஆராய்ச்சியின் பலனாக 1,000 கிலோ வெடிபொருளைத் தூக்கிக்கொண்டு, 3,000 கிலோ மீட்டர் வேகத்தில் 300 கிலோ மீட்டர் தூர இலக்கை அடித்து நொறுக்கி அதகளப்படுத்தியது V-2.

'ரைட்டு... நாமதாண்டா ராஜா’ என்று ஹிட்லர் இறுமாந்திருந்த நேரம் ரஷ்யாவும் அமெரிக்காவும் கை கோத்துக் களத்தில் இறங்க... இனிதே ஆரம்பித்தது இரண்டாம் உலகப் போர். இங்கிலாந்து, பெல்ஜியம் என சுத்துப்பட்டு நாடுகளை V-2 கொண்டு சாத்தியது ஜெர்மனி. குத்துமதிப்பாக குண்டு போடும் விமானங்கள், ஒளிந்து நின்று சுடும் பீரங்கிகளைவிடக் குறைந்த நேரத்தில் அதிக சேதம் விளைவித்தது ஜெர்மனின் ஏவுகணைகள். ஏழாயிரத்துச் சொச்சம் ராணுவ வீரர்கள் பலியானர்கள். ரஷ்யாவும் அமெரிக்காவும் அசந்துபோயின.

அப்போது அமெரிக்கா விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தில் இருந்தார்கள். ரஷ்யாவும் செயற்கைக் கோள் தயாரிப்புக்கான மும்முரத்தில் இருந்தார்கள். இவ்விரு நாடுகளின் கண்களையுமே உறுத்தியது வெர்னரின் அசாத்திய திறமை. ஹிட்லரை அழிப்பது... வெர்னரைக் கடத்துவது... இது தான் அப்போது இரண்டுநாடு களின் இலக்கும்.

ஹிட்லர் தற்கொலைக்குப் பின் சரணடைந்த ஜெர்மன் ராணுவத்தினரை ரஷ்யர்கள் சித்ரவதைப்படுத்துவதாகச் செய்தி கிளம்ப, வெலவெலத்துப் போன வெர்னர், அமெரிக்காவிடம் சரணடைந்தார். வெர்னரின் ஜூனியர்களை அப்படியே அலேக்காகக் கொத்திச் சென்றது ரஷ்யா. அதட்டல், உருட்டல், மிரட்டல்களுக்குப் பிறகு அமெரிக்காவின் நாசாவுக்காக வேலை செய்யச் சம்மதித்தார் வெர்னர். ரஷ்யாவில் வெர்னரின் ஜூனியர்கள் ரஷ்ய விஞ்ஞானிகளுடன் இணைந்து செயற்கைக் கோள் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கி னார்கள். ஜெர்மனி வீழ்ச்சிக்குப் பிறகு, 'உலகின் வல்லரசு யார்’ என்ற பனிப்போர் அமெரிக்கா- ரஷ்யாவுக்கு இடையே உச்சத் தில் இருந்த சமயம் அது!

'அடப் போடா... வெர்னரே நம்ம பாக்கெட்ல!’ என்கிற மிதப்பில் அமெரிக்கா சொதப்ப, முந்திக்கொண்டது ரஷ்யா. 1957-ம் ஆண்டு ஸ்புட்னிக்-1 செயற்கைக் கோளை ஏவி உலகத்தையே மிரளவைத்தது. கடுப்பான அமெரிக்கா அடுத்த வருடமே எக்ஸ்ப்ளோரர்-1 என்கிற செயற்கைக்கோளை ஏவியது. நாயை ராக்கெட்டில் அனுப்புவது, விண்வெளியில் மனிதனை மிதக்கவைப்பது, நிலவில் மனிதனை நடக்கவைத்தது, மிர் விண்வெளி நிலையம் அமைத்தது, கண்டம் விட்டுக் கண்டம் பாயும்ஏவுகணை களைத் தயாரிப்பது, அதில் அணுகுண்டுகளைப் பொருத்துவது என அடுத்து 20 ஆண்டுகள் அமெரிக்கா வும் ரஷ்யாவும் விண்வெளிப் போரில் இறங்கின. உண்மையில் அது வெர்னருக்கும் அவரது ஜூனியர் களுக்கும் நடந்த மறைமுகப் போர்.

வெர்னர் மாபெரும் கனவுகள் கொண்டவர். நிலவுக்கு மனிதனை அனுப்பிவைத்ததில் வெர்னரின் பங்கு அளப்பரியது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்பது அவரது கனவுகளில் ஒன்று. 'நான் 'முடியாது’ என்கிற வார்த்தையை மிகுந்த யோசனைக்குப் பின், மிகுந்த எச்சரிக்கையோடு பயன்படுத்துவேன்!’ என்பது வெர்னர் ஸ்டேட்மென்ட். அவர் வகுத்த பாதையிலேயே நாசா பயணிக்க, ரஷ்யா சிதறுண்ட பின் இன்று விண்வெளியில் நம்பர் ஒன் ஆகிவிட்டது அமெரிக்கா. 1977-ல் வெர்னர் இறந்தபோது, பல நாடுகளும் ராக்கெட் தொழில்நுட்பத்தின் மேல் ஆர்வம் கொண்டு அதில் ஆராய்ச்சிகளைத் துவக்கி, செயற்கைக்கோளைத் தயாரிக்கத் துவங்கி விட்டன.

இன்று நாம் பயன்படுத்தும் செல்போன், சேட்டிலைட் டி.வி-க்கள், தொலைத்தொடர்புகள் எல்லாமே வெர்னரின் உபயம். மொட்டை மாடியில் நள்ளிரவில் மினுக்மினுக் புள்ளி யாக சேட்டிலைட் நகர்வதைப் பார்த்தாலோ, அதி பயங்கர வேகத்தில் ஏவுகணை கடந்து செல்வதைப் பார்த் தாலோ... ஒருமுறை வெர்னரை நினைத்துக் கொள்ளுங்கள்!

எஸ்.கலீல்ராஜா



ஏவுகணையின் தந்தை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 21, 2012 4:03 pm

ஏவுகணை பற்றிய கட்டுரை பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி சிவா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 21, 2012 4:12 pm

அருமையான புதிய தகவல் அளித்தமைக்கு நன்றி சிவா மாமா சூப்பருங்க
ஏவுகணை பற்றிய கட்டுரை பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி சிவா

முள்ளி அண்ணே சிவா மாமாவ பாருங்க கல்யாணத்துக்கு அப்புறமும் எப்பிடி ஜோரா சிரிக்கிராருனு ஜாலி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jul 21, 2012 6:52 pm

அருமையான தகவல் சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஏவுகணையின் தந்தை! 1357389ஏவுகணையின் தந்தை! 59010615ஏவுகணையின் தந்தை! Images3ijfஏவுகணையின் தந்தை! Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக