ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்

4 posters

Go down

தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம் Empty தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்

Post by சிவா Thu Jul 19, 2012 11:45 am

தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம் Admk


தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டு உள்ளார். புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ள தோப்பு வெங்கடாசலம் இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்கிறார்.

கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது அமைச்சரவையை நேற்று மாற்றி அமைத்தார். அவரது ஆலோசனையின் பேரில், ஒரு அமைச்சரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக புதிய ஒரு அமைச்சரை நியமிக்க கவர்னர் கே.ரோசய்யா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக பணியாற்றியவர். கே.ஏ.செங்கோட்டையன். நேற்று மாலை இவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவருக்குப் பதிலாக புதிய அமைச்சராக பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்கிறார்.

இதுதொடர்பாக கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

புதிய அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று, கவர்னர் கே.ரோசய்யா கீழ்கண்ட உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் இருந்து வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்படுகிறார்.

அவருக்குப் பதிலாக பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாசலம், வருவாய்த் துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார். அவருக்கு வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை கலெக்டர்கள், எடைகள் மற்றும் அளவுகள், கடன் சட்டங்கள் மற்றும் நிவாரணம், சிட் பண்டு, கம்பெனிகள் பதிவு ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்படுகின்றன. புதிய அமைச்சர் வெங்கடாசலம் 19-ந் தேதி (இன்று) காலை 8.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவி ஏற்கிறார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

6-வது முறையாக அமைச்சரவை மாற்றம்

தமிழக அமைச்சரவை தற்போது 6-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 13-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது. கடந்த ஆண்டு ஜுன் மாதம் 27-ந் தேதி தமிழக அமைச்சரவை முதல்முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. கடைசியாக கடந்த ஜனவரி 26-ந் தேதி 5-வது முறையாக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.

3 துறைகளை நிர்வகித்தவர்

பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ள கே.ஏ.செங்கோட்டையன், 1991-1996-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். 2001-2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கே.ஏ.செங்கோட்டையன் அமைச்சராக இல்லை. தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் முதலில் விவசாயத் துறை அமைச்சராகவும், பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், அதையடுத்து வருவாய்த் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பதவி பறிப்பு ஏன்?

சில மாதங்களுக்கு முன்பு செங்கோட்டையனின் மனைவி ஈஸ்வரியும், அவரது மகன் கதிரீஸ்வரனும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, செங்கோட்டையனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக புகார் கூறியதாகவும், அதையடுத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா, செங்கோட்டையனை கடுமையாக எச்சரித்ததாகவும் பரபரப்பான செய்தி அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அந்த புகாருக்கு தொடர்ந்து இடமளிக்கும் வகையில் அவர் செயல்பட்டதாலும், மேற்கு மண்டல பகுதியில் அ.தி.மு.க.வினர் அவர் மீது அதிருப்தியுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் அவரது பதவி பறிக்கப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து செங்கோட்டையனிடம் நிருபர்கள் கருத்து கேட்க முயன்றபோது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கம்

சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மீது வந்த புகார்கள் போல் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மீதும் வருகிறது. தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தார்.

இந்த கூட்டம் முடிந்த சில மணி நேரத்திலேயே அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டதுடன், அமைச்சர் பொறுப்பில் இருந்தும் இறக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தினத்தந்தி


தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம் Empty Re: தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்

Post by மகா பிரபு Thu Jul 19, 2012 11:49 am

முதலமைச்சரை தவிர மற்றவர்களின் பதவி எப்ப வேணாலும் பறிபோகும்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம் Empty Re: தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்

Post by பேகன் Thu Jul 19, 2012 11:52 am

அமைச்சர் செங்கோட்டையனின் கள்ளகாதல் VS குடும்ப பாசம் = பதவி பறிப்பு

# பாஸ் இந்த வயதில் ஜீனும் டி-ஷர்ட் வேணுமா நமக்கு
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம் Empty Re: தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்

Post by ராஜா Thu Jul 19, 2012 11:59 am

மகா பிரபு wrote:முதலமைச்சரை தவிர மற்றவர்களின் பதவி எப்ப வேணாலும் பறிபோகும்..
சூப்பருங்க அதுவும் கூட நிரந்தரமல்ல , கோர்ட் தீர்ப்பு வந்தா கீழே இறங்கி தான ஆகணும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம் Empty Re: தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்

Post by மகா பிரபு Thu Jul 19, 2012 12:36 pm

ராஜா wrote:
மகா பிரபு wrote:முதலமைச்சரை தவிர மற்றவர்களின் பதவி எப்ப வேணாலும் பறிபோகும்..
சூப்பருங்க அதுவும் கூட நிரந்தரமல்ல , கோர்ட் தீர்ப்பு வந்தா கீழே இறங்கி தான ஆகணும்
ஆமாம் அண்ணா.. மாற்றம் ஒன்றே மாறாதது..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம் Empty Re: தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum