ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”

+7
முஹைதீன்
சார்லஸ் mc
dhilipdsp
பிஜிராமன்
யினியவன்
அகிலன்
இரா.பகவதி
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” Empty உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”

Post by இரா.பகவதி Wed Jul 18, 2012 12:26 am

உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” 534666_451261554913467_889318601_n


அப்பாவும் பையனுமாக குற்றாலத்திற்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கே பல இடங்களில் “திருடர்கள் ஜாக்கிரதை” “திருடர்கள் ஜாக்கிரதை” என்று எழுதப்பட்டுள்ளது.

இதை வாசித்த அந்த சிறுவன் தந்தையிடம் கேட்கிறான் “திருடர்கள் ஜாக்கிரதை” என்று எழுதியிருந்தால் மட்டும் திருடர்கள் பயந்து விடவா போகிறார்கள். தந்தை பதில் கூறுகிறார். “இந்த எச்சரிக்கை திருடர்களுக்காக அல்ல. திருடர்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள நம்மை போன்ற சுற்றுலா பயணிகளுக்குக் கொடுக்கப்படும் அறிவுரை”. எனவே திருடர்கள் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

இது போலவே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற பழமொழி குழந்தைகளுக்காக அல்ல.

அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்குமான அறிவுரை இது. குழந்தைகள் பெற்றோரை தெய்வம் போல பார்க்கிறார்கள். ஒரு வழிகாட்டியாக (Role Model) கவனிக்கிறார்கள்.

ஆகவே நாம் நமக்காக மட்டுமல்ல நமது குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்காக குறையற்ற நல்ல பழக்க வழக்கங்களை, ஒழுங்குகளை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.

நமது ஒவ்வொரு செயல்களையும் நமது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஒவ்வொரு வார்த்தைகளையும் குழந்தைகள் ஆழ்ந்து கவனித்து பின்பற்றுகிறார்கள்.

நாம் அவர்களுக்கு என்ன சொல்கிறோம் என்ன அறிவுரை கூறுகிறோம் என்பதை அல்ல, என்ன செய்கிறோம் என்பதையே அவர்கள் பார்க்கிறார்கள் பின்பற்றுகிறார்கள்.

“என் வாழ்வே என் செய்தி” என்ற அண்ணல் காந்தி கூறியது போல நமது செயல்களே நம்மையறியாமல் நம்மை அவர்கள் பின்பற்ற காரணமாக அறிவுரையாகிறது. எனவே நமது நடவடிக்கைகள் சரியானதாகவும் ஒழுக்கமானதாகவும், திறமையானதாகவும், வழிகாட்டும்படியாகவும் இருக்க வேண்டும்.


சிவாஜியால் ஒரு சிவாஜியை உருவாக்க முடியவில்லை. நெப்போலியனால் ஒரு நெப்போலியனை உருவாக்க முடியவில்லை.
சாதிப்பது வேறு. சாதனையாளரை உருவாக்குவதுவேறு. சிறந்த குழந்தைகளை உருவாக்க நாம் நிறைய நேரத்தை அவர்களுக்காக செலவு செய்தாக வேண்டும்.

தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் இருந்து படிக்க லாயக்கில்லை என்று விரட்டப்பட்டார். அந்த குழந்தையின் தாய் என் மகனின் திறமைகளை இந்த உலகம் இன்று புரிந்து கொள்ளவில்லை. ஆனால் பின்பு புரிந்து கொள்ளும் என நம்பினார். தானே குழந்தைக்கு அத்தனை பாடங்களையும் சொல்லிக் கொடுத்து அவன் செய்யும் பரிசோதனைகளுக்கு உதவினார். மிகச் சிறந்த விஞ்ஞானியாக உருவாக்கினார். அந்த தாய்க்கு இன்று இந்த உலகே கடமைப்பட்டிருக்கிறது.

ஒரு மனிதன் சிறந்த குழந்தைகளை உருவாக்க வேண்டுமானால் தானும் சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டும். குழந்தைகள் கேட்கும் ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு அசராமல் பதில் சொல்ல வேண்டும். பதில் தெரியவில்லை என்றால் எனக்குத் தெரியாது நீயே கண்டு பிடித்துக் கொள் என்று சொல்ல வேண்டும்.

அப்படி இல்லாமல் தவறான பதில்களையோ, மழுப்பலான பதில்களையோ கூறக்கூடாது. குழந்தைகளின் வயிற்றுப்பசியை தீர்த்தால் போதாது. அவர்களின் அறிவுப்பசியை தீர்க்க வேண்டும்.

நமது எண்ணங்களும் நமது சிந்தனைகளும் நமது கருத்துக்களும் மிகச் சரியானவை என்று சொல்ல முடியாது. நாம் இந்த சமுதாயத்தால் உருவாக்கப்பட்டுள்ளோம். சமுதாயத்தின் சீர்கேடுகள், முட்டாள் தனங்கள் நம்முள் நிறைந்திருக்கின்றன
“உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” என்கிறார் எமர்சன்.
நம் குழந்தைகள் மட்டும் நமக்கு குழந்தைகள் அல்ல. நம்மைச் சுற்றியுள்ள குழந்தைகளையும் நம் குழந்தைகள் போல் நேசிக்க வேண்டும். அவர்கள் முன்னேற்றத்திற்கும் நாம் பல உதவிகளை செய்யலாம். அப்போதுதான் நம் குழந்தைகளுக்கும் ஒரு சமுதாயப் பார்வை வரும்.


இன்று நாம் குழந்தைகளுக்கு நல்ல வருமானம் வரக்கூடிய தொழிற்கல்விகளை கொடுக்கலாம். கூடவே சுயநலத்தோடு வாழவும் சொல்லித் தருகிறோம். நம்மிடம் ஒரு சமுதாய நோக்கு இல்லை.

நம் வீட்டை பளிங்கு போல வைத்திருப்போம். நம்மைச் சுற்றியுள்ள சாலைகள் படு மோசமாக இருக்கும். சாக்கடைகள் தேங்கி துர்நாற்றம் வீசும். அதைப்பற்றி நாம் கவலை கொள்ள மாட்டோம்.

நமக்கு பணம் வருகிறது என்னும் போது அந்த பணம் வரும் வழி நல்ல வழியாக இருக்கிறதா? நம் செயல் சமுதாயத்திற்கு பாதிப்பு வராமல் இருக்கிறதா? என்று சிந்தனையை உருவாக்க வேண்டும்.

இந்த குழந்தை தன்னை உயர்த்தினால் போதாது. தன்னைச் சுற்றியுள்ளவரும் உயர வழி காண வேண்டும். அப்போது அந்த குழந்தை நல்ல குடிமகனாக, நல்ல தலைவனாக நல்ல வழிகாட்டியாக உயரும்.


முகநுல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” Empty Re: உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”

Post by அகிலன் Wed Jul 18, 2012 12:36 am

எல்லோரும் சிந்திக்க வேண்டிய விஷயம்
நல்லது பகவதி


நேர்மையே பலம்
உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” Empty Re: உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”

Post by இரா.பகவதி Wed Jul 18, 2012 12:47 am

நன்றி அகில் அண்ணா எல்லோருமுனு எங்களை மாதிரி பேச்சிலர்ஸ் ஏன் உங்க கூட்டத்துல சேக்குரிங்க கோபம் அப்புறம் நான் எங்க சங்க தலைவர் மாணிக அண்ணா கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் நான் ரெடி, நீ ரெடியா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” Empty Re: உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”

Post by யினியவன் Wed Jul 18, 2012 1:08 am

நல்ல பகிர்வு பகவதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” Empty Re: உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”

Post by பிஜிராமன் Wed Jul 18, 2012 7:29 am

அருமையான சிந்த்தனைப் பதிவு...நன்றிகள் பகவதி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” Empty Re: உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”

Post by dhilipdsp Wed Jul 18, 2012 7:45 am

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” Empty Re: உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”

Post by சார்லஸ் mc Wed Jul 18, 2012 8:15 am

சூப்பருங்க அன்பு மலர்


உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” 154550உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” 154550உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” 154550உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” 154550உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” Empty Re: உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”

Post by முஹைதீன் Wed Jul 18, 2012 9:03 am

நல்ல தகவல்கள் தம்பி சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” Empty Re: உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”

Post by நாகசுந்தரம் Wed Jul 18, 2012 9:59 am

இரா.பகவதி wrote:உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” 534666_451261554913467_889318601_n

இது போலவே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற பழமொழி குழந்தைகளுக்காக அல்ல.

அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்குமான அறிவுரை இது. குழந்தைகள் பெற்றோரை தெய்வம் போல பார்க்கிறார்கள். ஒரு வழிகாட்டியாக (Role Model) கவனிக்கிறார்கள்.

ஆகவே நாம் நமக்காக மட்டுமல்ல நமது குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்காக குறையற்ற நல்ல பழக்க வழக்கங்களை, ஒழுங்குகளை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.

நமது ஒவ்வொரு செயல்களையும் நமது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஒவ்வொரு வார்த்தைகளையும் குழந்தைகள் ஆழ்ந்து கவனித்து பின்பற்றுகிறார்கள்.

நாம் அவர்களுக்கு என்ன சொல்கிறோம் என்ன அறிவுரை கூறுகிறோம் என்பதை அல்ல, என்ன செய்கிறோம் என்பதையே அவர்கள் பார்க்கிறார்கள் பின்பற்றுகிறார்கள்.

என் பெற்றோர் எனக்கு எப்படி ஓர் வழிகாட்டியாக வாழ்ந்து வருகின்றனர் என்பதை உணர்ந்து கொண்டேன். நானும் என் வாழ்கையை சீராக்கி கொள்ள முயற்சிக்கிறேன். நல்ல பதிவு நன்றி.



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” Empty Re: உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”

Post by விநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 10:07 am

மகிழ்ச்சி நல்ல கருத்துள்ள பதிவுக்கு நன்றி நண்பரே மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” Empty Re: உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum