புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
87 Posts - 64%
heezulia
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
1 Post - 1%
prajai
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
423 Posts - 76%
heezulia
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
8 Posts - 1%
prajai
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
3 Posts - 1%
sram_1977
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காமராஜர் நினைவலைகள் Poll_c10காமராஜர் நினைவலைகள் Poll_m10காமராஜர் நினைவலைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமராஜர் நினைவலைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 15, 2012 9:56 am

காமராஜர் நினைவலைகள் Kamara10

இன்று கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள். விருதுநகர் என்று அழைக்கப்படும் அன்றைய விருதுபட்டியில் 1903-ம் ஆண்டு ஜுலை 15-ல் பிறந்தார். காமாட்சி என்பது அவரது பெற்றோர்கள் வைத்த பெயர். பின்பு அது காமராஜர் ஆனது.

வாழ்க்கையில் சிலபேர் சில நேரங்களில் போரா டுவார்கள். ஆனால் காமராஜரோ போராட்டமே வாழ்க்கையாக வைத்துக் கொண்டவர். அந்தப் போராட்டம் கூட தனக்காக அல்ல, தேசத்தின் நலனுக்காக. மக்களின் நலனுக்காக.

அவரது நாற்பது ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் மூவாயிரம் நாட்கள் ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் இரும்புக் கம்பிக்குள் சிறைவாசம் இருந்தவர். இரும்புக் கம்பிக்குள் இருந்தாலும் துருப்பிடிக்காதது காமராஜரின் விசித்திர இதயம்.

1964 மே 27-ல் நேரு மறைந்த நேரத்தில் தேசம் திகைத்து நின்றது. பிரதமர் நாற்காலிக் காக பலர் போட்டி போட்டார்கள். அப்போது காமராஜரின் சாதுர்யத்தால், ராஜதந்திரத்தால் லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக்கப்பட்டார். அப்பொழுது ஓர் அமெரிக்கப் பத்திரிகை "நேரு வுக்குப் பிறகு இந்தியா துண்டு துண்டாகி விடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் திரைக்குப் பின்னாலிருந்து ஒரு விசித்திர மனிதர் இந்தியாவைக் காப்பாற்றி விட்டார்'' என எழுதியது.

பிற்காலத்தில் தமிழக முதலமைச்சராகப் பொறுப் பேற்றார், காமராஜர். பொறுப்பேற்ற முதல்நாளி லேயே கோப்புகளைப் பார்க்க அமர்கிறார். அவருக்கு முன்னால் கோப்புகள் இரண்டு வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

`இது என்ன இரண்டு வரிசை?' என அவர் கேட்க, அவரது உதவியாளர், `முதல் வரிசை யில் உள்ளவை முக்கியமானவை. அடுத்து உள்ளவை முக்கியமில்லாதவை' என்றார். அதனைக்கேட்டு அதிர்ந்து போகிறார், கர்ம வீரர். `முதல்வருக்கு வரும் கோப்புகளில் முக்கியம் இல்லாதவையும் உண்டா? எனக்கு வரும் ஒவ்வொரு கோப்பும் முக்கியமானதுதான். நான் உடனுக்குடன் எல்லாவற்றையும் பார்த்து அனுப்ப வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கி யம்'- என்றார் காமராஜர். படிக்காத மேதை என்று ஒரு வார்த்தை சொல்லுவார்கள். அந்த வார்த்தைக்குச் சரியான இலக்கணமாகத் திகழ்ந்தவர் காமராஜர்தான். ஓர் அரசாங்கம் எப்படி நடக்கிறது என்பதை நாம் படித்துப் பார்ப்பது போல அவர் சோதித்துப் பார்க்கும் முறையே வியப்பானது.

கிங் மேக்கராக விளங்கிய அவர் வெளி மாநிலங்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்புவார். அவரைப் பார்க்க உயர் அதிகாரிகள் பலரும் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர் தன் உதவியாளர்களை அழைப்பார். தெருவிலே போகிற, மிகச் சாதாரண வாழ்க்கை நடத்தும் ஏழைகளை அழைத்து வரச் சொல்லுவார். அந்த அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களின் நலன்களை விசாரிப்பார்.

`உங்களுக்கு அரிசி பருப்பு ஒழுங்கா கிடைக்குதா? விலைவாசியெல்லாம் எப்படி இருக்குது?' என்றெல்லாம் அடிப்படையான பிரச்சினைகளைப் பற்றி உன்னிப்பாகக் கேட்பார். அந்த ஏழைகள் மூலம் அதிகாரிகளுக்கு நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது என்பதை புரியவைப்பார். இப்படி மக்களாட்சியின் தத்துவத்தை மிகச் சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டு ஆட்சி செய்தார்.

குஜராத் மாநிலத்தில் ஒரு முறை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டி ருந்தது. நேருவும் காமராஜரும் கலந்து கொண் டார்கள். அதில் காமராஜர் பேச வேண்டும் என்பது நேருவின் விருப்பம்.

பெருந்திரளான கூட்டத்தைப் பார்க்கிறார் பெருந்தலைவர் காமராஜர். சிறிது நேரம் பேசி விட்டு அமர்கிறார். அப்பொழுது அங்கிருந்த தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் இந்திக் காரர்களிடம் `காமராஜர் பேசிய போது கை தட்டினீர்களே. அவரின் தமிழ்ப்பேச்சு உங்களுக்கு புரிந்ததா?' என்று கேட்கிறார்.

அப்பொழுது அந்த இந்திக்காரர் சொன்ன பதில் பத்திரிகையாளரின் விழிகளை வியக்க வைத்தன. `ஒரு நல்ல மனிதன் பேசுகிறார் என்றால் நல்லதைத் தானே பேசுவார். அதற்கு எதற்கு மொழி தெரிந்திருக்க வேண்டும்? அந்த உத்தமர் பேசிய மொழி புரியாவிட்டால் என்ன, அவரின் நல்ல எண்ணம் எங்களுக்குத் தெரியுமே' என்றாராம்.

இப்படி இனம் மொழி எல்லைகளைக் கடந்து அனைவரின் இதயங்களிலும் இடம் பிடித்த அற்புத மனிதர்தான் கர்மவீரர் காமராஜர்.

- பேராசிரியர் க.இராமச்சந்திரன்



காமராஜர் நினைவலைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Jul 15, 2012 12:02 pm

தன்னலமில்லாத ஒரு முதல்வர்.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jul 15, 2012 3:49 pm

காமராஜர் நினைவலைகள் Kamst

ஜூலை 15 - இன்று காமராஜரின் பிறந்த நாள். இதையொட்டிய முக்கியப் பகிர்வு இது...

காமராஜர் 25

இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்... என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!

* காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு 'காலா காந்தி', பெரியாருக்கு 'பச்சைத் தமிழர்', காங்கிரஸ்காரர்களுக்கு 'பெரியவர்'. இன்று வரை பெருந்தலைவர் என்றால் அவரே!

* 'இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்', 'அப்படி ஏன் சொல்றேன்னேன்', 'ரொம்ப தப்புன்னேன்', 'அப்பிடித்தானேங்கிறேன்', 'அப்ப பாப்போம்', 'ஆகட்டும் பார்க்கலாம்' போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!

* நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!

* அரசியலில் அவருக்கு குரு தீரர் சத்திய மூர்த்தி. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜ் இருக்க... செயலாளராகச் செயல்பட சத்தியமூர்த்தி மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்!

* தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

* மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

* சினிமா அவருக்குப் பிடிக்காது. 'ஒளவையார்' விரும்பிப் பார்த்திருக்கிறார். 'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தைப் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அவர் கடைசியாகப் பார்த்த படம் 'சினிமா பைத்தியம்'!

* சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!

* மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

* பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்!

* இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

* பத்திரிகையாளர்களுக்கு அவரது அறிவுரை... 'ஒண்ணு, நீங்க பத்திரிகைக்காரனா இருங்க. அல்லது அரசியல்வாதியாவோ பிசினஸ்மேனாவோ இருங்க. மூணாகவும் இருக்க முயற்சி பண்ணாதீங்க!'

* மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்!

* ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!

* அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். 'இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்' என்று மட்டுமேசொல்லி விட்டு இறங்கினார்!

* நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!

* கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!

* 'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!

* தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!

* தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

* 'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்
பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!

* விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

* கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

* ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

* இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!
நன்றி பேஸ் புக் நண்பர்கள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jul 15, 2012 4:36 pm

பகிர்விற்கு நன்றி சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 15, 2012 5:00 pm

மிகவும் நன்று...பெருந்தலைவர் என்றால் இவர் ஒருவரே...வாழ்க இவர் புகழ் மகிழ்ச்சி

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Jul 15, 2012 5:34 pm

என்னையும் அறியாமல் கண்கள் கலங்கியது,
பெருந்தலைவரின் ஆட்சி முறையை திரும் எப்போழுது
பார்ப்போமோ.
நன்றி

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sun Jul 15, 2012 5:36 pm

பகிர்விற்கு நன்றி



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 15, 2012 6:25 pm

சுயநலமில்லா நிகரற்ற தலைவர் - இன்றைய காங்கிரசாரே மறந்த இவரை மற்ற அரசியல்வாதிகள் எங்கே ஞாபகம் வெச்சுக்க போறாங்க?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக