ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்

+4
ராஜா
யினியவன்
பாலாஜி
சிவா
8 posters

Go down

டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Empty டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்

Post by சிவா Thu Jul 12, 2012 12:25 pm

டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? என்பதற்கு கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வவுனியா சிறை

கேள்வி:- 2013-ம் ஆண்டு செப்டம்பரில் இலங்கை வடக்கு பகுதியில் தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சொல்லியிருக்கிறாரே?.

பதில்:- ஆனால் தேர்தல் நடைமுறைகள் என்று வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டுமென்றெல்லாம் சொல்லியிருப்பதில் ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாக தெரிகிறது. தேர்தல் நடத்துவதுகூட பிறகு இருக்கட்டும். இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் சிலர், கடந்த மாதம் பூசா முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதை எதிர்த்த மற்ற விடுதலைப்புலிகள்; பூசா முகாமுக்கு மாற்றப்பட்டவர்களை மீண்டும் வவுனியா சிறைக்கே மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். இதை மறுத்த சிறை அதிகாரிகள், மூன்று விடுதலைப்புலிகளை ஒரே அறையில் தள்ளி பூட்டிவிட்டனர். இதனால் வவுனியா சிறையில் கடந்த மாதம் 30-ந் தேதி கலவரம் ஏற்பட்டிருக்கிறது.

`டெசோ' மாநாடு

இதைத் தொடர்ந்து வவுனியா சிறையில் இருந்த 201 கைதிகளும், அனுராதபுரத்தில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் தமிழ் கைதிகள் பலர் காயமடைந்துள்ளதோடு, கணேசன் நிமலரூபன் என்பவர் இறந்து விட்டார். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிமலரூபன் உடலை பெற்றுக்கொண்ட அவரது பெற்றோர், தங்கள் மகன் உடலை வவுனியாவில் தகனம் செய்யப்போவதாக கூறினர்.

ஆனால் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு கூட அனுமதி மறுத்து கொழும்புக்கு அருகே உள்ள சுடுகாட்டில் நிமலரூபனின் உடலை தகனம் செய்துவிட்டார்களாம். நிமலரூபனின் உடல் முழுக்க ரத்தம் படிந்திருந்ததாகவும், அவருடன் காயம் அடைந்த மற்றொரு கைதி கோமா நிலையில் மருத்துவமனையிலே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில்கூட மண் உரிமை மறுக்கப்பட்டது, மாபாதகம் அல்லவா? இதற்கெல்லாம் ஓர் விடிவு காண வேண்டும் என்பதற்காகத்தான் "டெசோ'' மாநாடு நடைபெறுகிறது.

சத்துணவு அமைப்பாளர் பணி

கேள்வி:- "தீண்டாமை'' அறவே ஒழிக்கப்பட்டு விட்டது என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிலே "தலித்''களையே அனுமதிக்காத போக்கு இன்னமும் உள்ளதாக சொல்லப்படுகிறதே?.

பதில்:- அண்மையில் ஒரு செய்தி படித்தேன். ஸ்ரீவில்லிப்புத்தூர், கம்மாபட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளி ஒன்றில் தலித் பெண்கள் சத்துணவு சமைத்த காரணத்தால், வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு மாணவர்களை பள்ளிக்கே அனுப்ப மாட்டோம் என்று தடுத்து விட்டார்களாம். அதைவிட கொடுமை, வேற்று சாதியினரின் எதிர்ப்புக்கு அரசு பணிந்து, சத்துணவு கூடத்தில் பணிபுரிந்து வந்த தலித் ஊழியர்களான மரகதவல்லி, வீரலட்சுமி ஆகியோரை அங்கிருந்து பணி மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார்களாம். தீண்டாமைக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. இந்த அலுவலர்களை மாற்றம் செய்திருக்கின்ற இடத்திலும் இது போலவே வேறு சாதியினர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட விட மறுத்தால் அப்போது அரசு என்ன செய்யும்?.

கல்வித்துறை பிரிப்பு

கேள்வி :- பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் செய்துள்ள மாணவர்களில் 50 சதவிகிதத்தினர் கல்லூரிக்கு செல்லும் முதல் தலைமுறையினர் என்று ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறதே?.

பதில்:- ஆமாம், உண்மை. 2006-க்கு முன்னர் ஒரே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்த கல்வித்துறையை, தி.மு.க. ஆட்சியிலே தான் பள்ளி கல்வித்துறை எனவும், உயர் கல்வித்துறை எனவும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இரண்டு அமைச்சகங்கள் உருவாக்கப்பட்டன.

கிராமப்புற மற்றும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையற்ற ஒரு சுமையாகவும், செலவுமிக்கதாகவும் இருந்த தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு 5-3-2007 அன்று பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டது. நுழைவுத்தேர்வு இருந்தபோது, 2006-ல் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையின் மூலம் சேர்ந்த கிராமப்புற மாணவர் எண்ணிக்கை 24,670 மட்டுமே. நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டபின், பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை 2007-ல் 34 ஆயிரத்து 69 எனவும், 2008-ல் 50 ஆயிரத்து 589 எனவும், 2009-ல் 54 ஆயிரத்து 73 எனவும், 2010-ல் 76 ஆயிரத்து 73 எனவும் அதிகரித்தது.

முதல் தலைமுறை மாணவர்கள்

இந்தியாவிலேயே முதன்முறையாக 2010-2011-ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து கலந்தாய்வு முறையில் தொழிற்கல்வி பட்டப்படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டு; அரசுக்கு 168 கோடி ரூபாய் கூடுதல் செலவில் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டில் சேர்ந்து பயிலும் 67,405 மாணவ மாணவியரும்; இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் சேர்ந்து பயிலும் 10,750 மாணவ மாணவியரும் பயனடைந்தனர்.

பொறியியல் கல்லூரிகளில் மேலும் அதிக மாணவர்கள் சேர்ந்து பயில்வதற்கு உதவும் வகையில் 2008-2009-ம் ஆண்டு முதல், பொறியியற் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை தி.மு.க. அரசு அனைத்து பிரிவினருக்கும் குறைத்தது. அதாவது, பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 55 சதவீதம் என்பதை 50 சதவீதம் எனவும்; பிற்படுத்தப்பட்ட கிறித்துவ வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 50 சதவீதம் என்பதை 45 சதவீதம் எனவும்; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்க்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 45 சதவீதம் என்பதை 40 சதவீதம் எனவும்; பட்டியல் இனத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தேர்ச்சி இருந்தால் போதும் என்பதை 35 சதவீதம் எனவும் இந்த அரசு குறைத்ததால் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது.

உயர் கல்வித்துறை

தி.மு.க. ஆட்சியில் மேற்கொண்ட முன்னுதாரணமான முயற்சிகளின் பயனாகத்தான் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர 1,80,071 மாணவர்கள் விண்ணப்பித்ததில், 86,997 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்ற பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்களாவர். தமிழ் மொழியில் படித்தவர்கள், பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால், 2006-ம் ஆண்டு 15,000 பேர் என்ற அளவில் இந்த எண்ணிக்கை தற்போது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை என்ற அளவிற்கு உயரவும் தி.மு.க. அரசுதான் காரணம் என்பதையும் அந்த ஆங்கில நாளேடு எழுதியுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் தாய்மொழியில், அதாவது தமிழ் மொழியிலேயே படிக்கும் வசதியும் தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் செய்யப்பட்டது. உயர் கல்வித்துறையிலே தி.மு.க. ஆட்சியில் எந்த அளவிற்கு முன்னேற்றங்கள் செய்யப்பட்டன என்பதை இந்த விவரங்கள் தெளிவாக்குமென்று நம்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

தினத்தந்தி


டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Empty Re: டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்

Post by பாலாஜி Thu Jul 12, 2012 12:32 pm

நீங்கள் (வயதவனர் என்பதால் ) , சரியான முடிவுகளை , சரியான நேரத்தில் எடுத்து இருந்தால் ஈழத்தில் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது .

இப்போ எதற்கு இந்த பொய் வேஷம் .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Empty Re: டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்

Post by யினியவன் Thu Jul 12, 2012 12:53 pm

இவரையும் இன்னும் பேட்டி எடுக்கப் போற பத்திரிக்கைகளை சொல்லணும் - அவனுகளும் திருந்த மாட்டாங்க, இவனுகளும் திருந்த மாட்டாங்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Empty Re: டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்

Post by ராஜா Thu Jul 12, 2012 1:11 pm

பைத்தியங்கள் தான் தனக்கு தானே கேள்வி கேட்டு பதில் சொல்லிக்கும் என படித்துள்ளேன்.

இதற்கு மேல் இதில் கருத்து சொல்ல ஏதும் இல்லை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Empty Re: டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்

Post by அசுரன் Thu Jul 12, 2012 3:43 pm

ராஜா wrote:பைத்தியங்கள் தான் தனக்கு தானே கேள்வி கேட்டு பதில் சொல்லிக்கும் என படித்துள்ளேன்.

இதற்கு மேல் இதில் கருத்து சொல்ல ஏதும் இல்லை.
ஆமோதித்தல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Empty Re: டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்

Post by கேசவன் Thu Jul 12, 2012 8:04 pm

இன்னுமா இவர்களை நம்புகிறார்கள் .இபொழுது டெசோ மாநாட்டை கூட்டி என்ன செய்ய போகிரார்கலாம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் 1357389டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் 59010615டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Images3ijfடெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Empty Re: டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்

Post by T.N.Balasubramanian Fri Jul 13, 2012 8:04 am

"கேள்வியும் நானே ---பதிலும் நானே " என்று நிரந்தரமாக ஒரு தலைப்பிட்டு, திரி ஆரம்பித்தால் , பல பொன்னான செய்திகளை நாம் நினைத்த போது படித்து, உலக அறிவை பலப்படுத்திக் கொள்ளலாமே!

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Empty Re: டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்

Post by யினியவன் Fri Jul 13, 2012 9:44 am

கேசவன் wrote:இன்னுமா இவர்களை நம்புகிறார்கள் .இபொழுது டெசோ மாநாட்டை கூட்டி என்ன செய்ய போகிரார்கலாம்
ஏன் கூடினோம்ன்னு டிஸ்கஸ் பண்ணத் தான் k7



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Empty Re: டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்

Post by பேகன் Fri Jul 13, 2012 10:08 am

தலைவா!! மரண பயம் எப்படி எல்லாம் பேச வைக்கிறது???
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Empty Re: டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரையில் டெசோ மாநாடு!
»  டெசோ மாநாடு நடத்த ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகள்: தீர்ப்பு முழு விவரம்
» தமிழீழம் இந்தியாவுக்கு எதிரானது - டெசோ மாநாடு அறிவிப்புக்குப் பின் மத்திய அரசு அறிவிப்பு
» டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு
» டெசோ மாநாட்டுக்கு எதிர்ப்பு: கொழும்பில் கருணாநிதி, சம்பந்தன் உருவபொம்மைகள் எரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum