ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி? - Page 2 Empty எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by இரா.பகவதி Mon Jul 09, 2012 6:33 pm

First topic message reminder :

கல்வி கரையில! கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குறுகின் தெரிந்து. – நாலடியார்.

ஒரு மாணவனின் படிப்பு வாழ்க்கையை தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி என்று பொதுவாக பிரித்துக்கொள்ளலாம். எனக்கு தெரிந்த நடைமுறை உண்மைகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது. (மாணவன் என்பது என் வசதிக்கான குறியீடு அதில் மாணவியும் அடக்கம் எனக் கொள்க)

தொடக்கப் பள்ளி

நகரத்து பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மாணவனை விட அவன் பெற்றோர் படும் பாடு இங்கே ரொம்ப ரொம்ப அதிகம். எல்.கே.ஜி சீட்டுக்கு எம்.எல்.ஏ விலிருந்து ஜனாதிபதி வரை பரிந்துரை பெற்றாலும் எந்த பள்ளியும் அதை எல்லாம் மதிப்பது இல்லை. சரி, அப்ப நேரடியா சாதாரணமா அப்ளிகேசன் போட்டு வாஙக வேண்டியது தானே? என்று தானே கேட்கிறீர்கள். அட போங்க அப்படி எல்லாம் எளிதில் தர மாட்டாங்க. ஒரு மாநகரத்து பள்ளியில் எல்.கே.ஜி சீட்டு வாங்க நீங்க என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று சும்மா தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.



முதலில் நீங்க இரவு பூரா கண் விழித்து வரிசையில் நின்று நம்ம ”மன்னன் சினிமா” ரஜினி மாதிரி முதல் எண் அப்பிளிகேசன் வாங்க வேண்டும். சில பள்ளிகளில் முதல் 50 பேருக்கு கண்டிப்பா இடம் உண்டுன்னு வெளியே பேசிக்குவாங்க. முதல் 50- ல நீங்க இல்லைன்னா பள்ளி நிர்வாகம் என்ன உங்க குழந்தை மேல உங்களுக்கு அக்கறை இல்லையா? இப்படி 500வது அப்பிளிகேசன் வாங்கிட்டு சீட்டு கேட்டா எப்படின்னும் கேப்பாங்க.



ஸ்கூல்ல இருந்து 2 கீ.மீக்குள்ள உங்க வீடு இருக்கனும். சரி. வீட மாத்திரலாம்னு நினைக்கிறீங்களா? (ஆசை, தோசை, அப்பள வடை.?!)



அப்பா, அம்ம ரெண்டு பேரும் மாஸ்டர் டிகிரி படிச்சிருக்கனும். சில ஸ்கூல்ல ரெண்டு பேரும் வேலைக்கு போனா முன்னுரிமை. சில ஸ்கூல்ல நேர் எதிர். சில ஸ்கூல்ல குடும்ப வருமானம் எவ்வளவு இருக்கனும்னு அளவு எல்லாம் இருக்காமுங்க.



உங்க குழந்தைக்கு ”பப்புவானா நியு கினியா” நாட்டின் உள்துறை மந்திரி யாரென்று எதுக்கும் சொல்லி வைங்க? குழந்தைக்கு இண்டெர்வியூ இருக்கே.



இந்த சாதி இருக்கு பாருங்க அது ரொம்ப முக்கியம். அதை யோசிச்சு அப்ளிகேசன் போடுங்க. எல்லா ஸ்கூல்லயும் எல்லாரையும் சேர்த்துட மாட்டாங்க. அப்படி சேர்த்துட்டா ஸ்கூலோட காலிபர் (Caliber) என்ன ஆகுறது? சில ஸ்கூல்ல குறிப்பிட்ட சாதிலயும் குறிப்பிட்ட பிரிவுக்கு தான் சீட் உண்டு.

(குலத்தால் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் – பாரதி பாவம்)



ஒரு பெரும் தொகையை டொனேசனாக தர தயார இருக்க வேண்டும். (அட, பள்ளிக்கு இல்லைங்க அப்படின்னு அவங்க சொல்லுவாங்க). எல்லா பள்ளியும் ஒரு சொசைட்டியாகவோ அல்லது ஒரு டிரஸ்ட்டாகவோ தான் இருக்கும். நீங்க அந்த சொசைட்டி அல்லது டிரஸ்ட்டுக்கு தான் அந்த டொனேசனை தரவேண்டும்.



பள்ளி நிர்வாகத்துடன் யாருக்கு நல்ல தொடர்பு இருக்குன்னு நீங்க துப்பறியனும். யாருக்கு இருக்கும் என்று அப்பாவியாக நீங்க கேள்வி எல்லாம் கேட்க கூடாது. யாருக்கு வேணும்னாலும் இருக்கும். தொடர்பு இருக்கின்ற ஒரு சிலருக்கு பள்ளி நிர்வாகம் ஒண்ணு ரெண்டுன்னு சீட் ஒதுக்கி இருப்பாங்க.

இதோ எனக்கு தெரிந்த அந்த லோக்கல் லிஸ்ட்.



அ) லோக்கல் இன்ஸ்பெக்டர் (லா & ஆர்டர்)

ஆ) டிராஃபிக் போலீஸ்

இ) பள்ளி வாகன பரிசோதகர்

ஈ) மின்சார அலுவலக என்ஜினியர்

உ) போஸ்ட்மான்

இது தவிரவும் ஒரு லிஸ்ட் இருக்கு. அது ”பெரும் புள்ளி”ங்க லிஸ்ட்.

அ) டிரஸ்ட், சொசைட்டி கணக்கு சரி பார்க்கிற அலுவலத்துல சொன்னா சீட் தருவாங்கலாம்.

ஆ) ஜனாதிபதி, முதல்வர், கல்வி மந்திரி இவங்க கிட்ட போனா சில சமயம் சீட் கிடைக்குமாம். சில சமயம் இவங்களை எல்லாம் பள்ளி நிர்வாகம் மதிக்கவே மாட்டாங்க. எல்லாம் உங்க நேரத்த பொறுத்தது.



இ) ஊரின் வேறு சில முக்கிய புள்ளிகள் ( இது அந்த அந்த ஸ்கூல பொருத்த மாட்டர். சினிமா துறை, டிராமா துறை, மருத்துவம், நீதி, இன்னும் பிற.,)



ஈ) (ஸ்ஸ்ஸ்…. காதை கொண்டாங்க) சொன்னா நம்ப மாட்டீங்க. எதிர்காலம் குறித்து பள்ளி நிர்வாகி ஜோசியம் பார்க்கும் ஜோசியக்காரருக்கு ரெண்டு சீட்டு உண்டாம்ங்க.

உ) பள்ளி நிர்வாகம் அக்கௌண்ட் வச்சிருக்கும் பாங்க் மானஜேருக்கு ஒரு சீட் உண்டு.

இது தவிரவும் இன்னும் இருக்கும். நீங்க தேடனும்.



ஏதாவது ஒரு வழியை மட்டும் பிடித்து சேர்ந்து விடலாம் என்று ஈசியா நினைத்துவிடாதீர்கள். நீங்கள் பல வழிகளில் முயற்சி செய்யவேணும். அப்ப தான் வேற வழியே இல்லாம சரி போனா போகுதுன்னு சீட் தருவாங்க.



இந்த வழி எல்லாம் நமக்கு சரிப்படாது என்று நினைத்தீர்களானால், சீட் வாங்கி தருவதற்கு வெளியே புரோக்கர்கள் எல்லாம் இருப்பாங்க. நீங்க எந்த முயற்சியும் செய்யாம சரியான புரோக்கரை பிடித்து விட்டீர்கள் என்றால் பணம் மட்டும் தான் செலவு செய்யவேண்டும். ஸ்கூல பொறுத்து வகுப்பை பொறுத்து இந்த பணம் அளவு மாறுபடும். சொன்னா நம்ப மாட்டீங்க. 1 லட்சத்துல இருந்து 7 லட்சம் வரைக்கும் தர வேண்டுமாம்.



சரி, அப்படி எதுக்கு இந்த ஸ்கூல்ல படிக்க வேண்டும் என்று தானே நினைக்கிறீர்கள்? என்னங்க உங்க குழந்தையின் எதிர்காலம் குறித்த அக்கறையே இல்லையா? இப்படி எல்லாம் அலைந்து சீட் வாங்கினா தானே நாம பெருமையா வெளிய சொல்லிக்க முடியும். நீங்கள் சீட் வாங்குன கதைய 40 பேருக்கு சொல்வீர்கள். அது 400 பேரை சென்றடையும். அப்ப தானேங்க உங்க குழந்தை படிக்கிற ஸ்கூலுக்கு ஒரு பெருமை. ஈசியா கிடைச்சா நீங்க மதிக்க மாட்டீங்கங்கிற தீர்க்க தரிசனம் ஸ்கூலுக்கு இருக்காதா என்ன?



இந்த வழி எல்லாம் சரியா வராது. அப்ப நல்ல ஸ்கூல்ல படிக்க வழியே இல்லையா என்று யோசிக்கிறீர்களா? ஒண்ணும் கவலை படாதீர்கள். சில சமயம் நீங்க எந்த முயற்சியும் செய்யாமலேயே கூட சீட் கிடைக்கும். என்ன சார் நீங்க, மேலே சீட் கிடைக்கிறதுக்கு அவர பிடி, இவர பிடின்னு எல்லாம் சொன்னீங்க, இப்ப சும்மாவே இருங்க சீட் கிடைக்கும் என்று குழப்புகிறீர்கள்னுதானே நினைக்கிறீங்க? பொறுமை. பொறுமை.

அப்ப ஒரு ஸ்குல்ல சீட் கிடைக்க என்ன தான் சார் அளவுகோல் வச்சிருக்காங்க? அது தாங்க யாருக்குமே தெரியாது. அது ராணுவ ரகசியம். நீங்க அப்ளிகேசன போட்டுட்டு வைத்தீஸ்வரன் கோவில்ல போய் ஓலைச் சுவடி பாருங்க. குழந்தைக்கு யோகம் ஓலைச் சுவடில இருந்தா சீட் கிடைச்சிடும். எல்லாம் உங்க நேரம் நல்லா இருக்கனும்.

(நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் எழுத முயற்சிக்கிறேன்)


நன்றி திண்ணை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down


எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி? - Page 2 Empty Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by அசுரன் Mon Jul 09, 2012 10:46 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:அட தம்பி.... எங்க பள்ளி ஆண்பிள்ளைகள் படிக்கும் பள்ளி... அதனால் எனக்கு ஆண் மகன் என்றால் எங்க தலைமை கிட்ட போயி கெஞ்சி காலை பிடிக்கனும்... லேசுல மசிய மாட்டாங்க...

பெண் பிள்ளை படிக்க வைக்க எங்கள் வீட்டருகிலேயே நல்ல பள்ளிகள் இருக்கு.. அதைத்தான் சொன்னேன்
அப்படி வெவரமா சொல்லுங்க - நீங்க பெண் குழைந்தைனா படிக்க அனுப்ப மாட்டீங்கன்னு நெனச்சுடுவோம்ல.
கன்னத்தில் அறை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி? - Page 2 Empty Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by அசுரன் Mon Jul 09, 2012 10:49 pm

இரா.பகவதி wrote:
அட தம்பி.... எங்க பள்ளி ஆண்பிள்ளைகள் படிக்கும் பள்ளி... அதனால் எனக்கு ஆண் மகன் என்றால் எங்க தலைமை கிட்ட போயி கெஞ்சி காலை பிடிக்கனும்... லேசுல மசிய மாட்டாங்க...

பெண் பிள்ளை படிக்க வைக்க எங்கள் வீட்டருகிலேயே நல்ல பள்ளிகள் இருக்கு.. அதைத்தான் சொன்னேன்

இதிலிருந்து தாங்கள் குறவருவது தாங்கள் பள்ளி நல்ல பள்ளி இல்லை என்று தானே


அப்படி வெவரமா சொல்லுங்க - நீங்க பெண் குழைந்தைனா படிக்க அனுப்ப மாட்டீங்கன்னு நெனச்சுடுவோம்ல.

அதானே நான் மகளிர் அணியை கஊபுடலமானு நினைச்சேன்

எங்கள் பள்ளியில் பெண் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாது.. ஏன்னா இது ஆண்கள் பள்ளி. மேலும் எங்கள் பள்ளி நல்ல பள்ளி தான்.. நீங்க சொன்ன மற்ற விசயங்கள் அட்மிசன் சமயத்தில் அனைத்தும் பொருந்தும் என்று சொன்னேன்..

எனக்கு மகன் பிறந்திருந்தால் எங்கள் பள்ளியில் தானே சேர்த்திருக்க வேன்டும். அதற்காக சொன்னேன் பகவதி...

ஸ்ஸொப்ப்ப்ப்பா என்னா கேள்வி கேக்குறாரு.... ஆமா குண்டக்கன்னா என்ன மண்டக்கன்னா என்ன அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி? - Page 2 Empty Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by யினியவன் Mon Jul 09, 2012 10:50 pm

அசுரன் wrote:கன்னத்தில் அறை
அரை குறையா சொன்னதுக்கு மகளிர் அணிதான் உங்களுக்கு குடுப்பாங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி? - Page 2 Empty Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by இரா.பகவதி Mon Jul 09, 2012 10:54 pm


எங்கள் பள்ளியில் பெண் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாது.. ஏன்னா இது ஆண்கள் பள்ளி. மேலும் எங்கள் பள்ளி நல்ல பள்ளி தான்.. நீங்க சொன்ன மற்ற விசயங்கள் அட்மிசன் சமயத்தில் அனைத்தும் பொருந்தும் என்று சொன்னேன்..

எனக்கு மகன் பிறந்திருந்தால் எங்கள் பள்ளியில் தானே சேர்த்திருக்க வேன்டும். அதற்காக சொன்னேன் பகவதி...

ஸ்ஸொப்ப்ப்ப்பா என்னா கேள்வி கேக்குறாரு.... ஆமா குண்டக்கன்னா என்ன மண்டக்கன்னா என்ன

அண்ணே என்ன அட்மிஷனுக்கு ஒடுரிங்களா , அலேக்சாண்டரோட குதிரை பேரை படிச்சிட்டு போங்க அந்த கேள்வி வினாத்தாலுல இருக்குதாம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி? - Page 2 Empty Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum