ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..!

5 posters

Go down

நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..! Empty நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..!

Post by அருண் Mon Jul 09, 2012 2:53 pm

நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..! 5542-2826-2g-raja1

கடந்த சனிக்கிழமை இரவு 9 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை (நேற்று)மதியம் 1 மணிக்கும் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் ஸ்பெக்ட்ரம் பற்றிய புதிய புளுகல் ஒப்புவித்தல் நேர்காணல் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதை பார்த்தபோது ஒரு தேர்ந்த வழக்கறிஞரின் மறுபக்க வாதம் போன்றே இருந்தது. ஏற்கனவே சொல்லப்பட்ட பிதற்றல்கள், பல்லவிகளையே அவர் திரும்ப சொன்னார் என்பது தவிர வேறில்லை. தமிழ்ச்சூழலின் இயல்பான மறதி காரணமாக தற்போது ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தை பலபேருக்கு மறந்து போயிருக்கும். அவரின் புளுகல்களுக்கான சில எதிர்வினைகள்.

பார்க்காதவர்களுக்கு அவர் புளுகியவை உங்களுக்காக..

1. குருவிற்கு தப்பாத சிஷ்யன் என்பது மாதிரி ஊழல் விஷயத்தில் திமுக தலைவருக்கு தப்பாமல் ஆ.ராசா அப்படியே இருக்கிறார். மரவள்ளி கிழங்கை எடுப்பதற்கு சாதாரண விவசாயி வேரோடு , செடியோடு சேர்த்து பிடுங்கி விடுவார். ஆனால் இவர்கள் செடிக்கு அடியில் வேரோடு இருக்கும் கிழங்கை மட்டும் தான் எடுப்பார்கள். செடி அப்படியே இருக்கும். அது தான் ஊழல் விஷயத்தில் திமுகவின் வரலாறு. அப்படியே ராசா முயற்சிக்கிறார்.

2. தொலை பேசி அழைப்புகளின் கட்டணம் குறைந்தால் பேசுவோர்களின், பேசும் நேரம் அதிகரிக்கும். அதன் காரணமாக அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து தொலைபேசி நிறுவனத்திற்கு வருமானம் அதிகரிக்கும். இது தொலைதொடர்பில் சாதாரண உளவியல். இதனை புரிந்து கொண்டு தான் 2002 ல் BSNL நிறுவனம் சில பகுதிகளில் உள்ளூர் தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை குறைத்து இம்முறையை வெற்றிகரமாக சோதனை செய்தது. அதை மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் முடிவு செய்தது.

3. இது தான் மொபைல் விஷயத்திலும் நடந்தேறியது. 1999 தொலைதொடர்பு கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட சூழலில் மொபைல் போனின் விலை அதிகமாக இருந்தது. அழைப்பு கட்டணம் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. Incoming அழைப்பிற்கு கூட கட்டணம் வசூலிக்கப்பட்டது அப்போது. ஆனால் பிந்தைய கட்டத்தில் சீனாவின் வரவு காரணமாக மொபைல் போன்களின் விலை குறைந்தது. இது தான் எல்லோரும் மொபைல் வாங்க மிக முக்கிய காரணம். அழைப்பு கட்டணம் அதிகம் இருந்தால் போனில் உரையாடும் நேரம் குறையும். ஆனால் போன் பயன்படுத்துவார்கள். இது தான் முக்கிய அடிப்படை.

4. அவர் நேர்காணலில் சொன்னபடி இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்ட 2G அலைக்கற்றை அளவு 100 மெகா ஹெர்ட்ஸ். அதில் 65 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. மீதி 35 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை. அதை நான் வெளிக்கொண்டு வந்தேன். அது தான் நான் செய்த தவறு என்று கொஞ்சம் கூட வாய்கூசாமல் தன் தலைவருக்கு தப்பாமல் பதில் சொல்கிறார். 35 சதவீதம் என்பதை தொழில்நுட்ப ரீதியாக 122 நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாது. அது மிகப்பெரும் தொழில்நுட்ப நெருக்கடியை ஏற்படுத்தும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கூட கோடிகள் காரணமாக மறந்த காரணம் என்ன? கவனிக்க தவறியது ஏன்? இது தொடர்பாக தொழிற்சங்கங்கள், தொலைதொடர்பு பொறியாளர் கூட்டமைப்பு, அதிகார பூர்வ அமைப்புகள் சொன்ன ஆலோசனைகளை நீங்கள் கேட்க தவறியது ஏன்?

5. மீண்டும் மிகப்பெரும் புளுகல் என்பது "முதலில் வருபவருக்கு முன்னுரிமை" என்பது ஏற்கனவே பின்பற்றப்பட்ட கொள்கை தான் என்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் இங்கு பிரச்சினையே 2001 விலையை 2008 க்கும் நிர்ணயித்த காரணம் என்ன? நீங்கள் பெரம்பலூரில் வாங்கி குவித்த சொத்துக்களின் மதிப்பு இப்போதும் அதே நிலையில் தான் இருக்கிறதா? நாட்டின் வளம் குறித்த பிரச்சினையில் நீங்கள் யோசிக்காதது ஏன்? எல்லாம் சி.ஐ.டி காலனியின் ஆலோசனை தானே? அந்த ஏழு வருட வித்தியாச விலையை நீங்கள் அவர்களிடமிருந்து கமிஷனாக பெற்றீர்கள் என்பதை நீங்கள் சொல்லாமல் சொல்கிறீர்கள். அது தானே முக்கிய காரணம்.மேலும் கட் ஆப் தேதியை மாற்றியது குறித்து கேள்வி கேட்கும் போது மட்டும் உங்கள் முகபாவனையை நான் கவனித்தேன். அது திருட்டு முழி சுதாரிக்கும் சமயத்தில் இருப்பது மாதிரி இருந்தது. உடனே அது தவறான வார்த்தை பிரயோகம் என்கிறீர்கள். அதாவது அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தன. அதனை முன்னுரிமை அடிப்படையில் கட்டுப்படுத்துவதற்காக தேதி அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்கிறீர்கள். இங்கு தான் பிரச்சினையே... வெறும் 35 மெகா ஹெர்ட்ஸ் எந்த அடிப்படையில் கொடுக்க முடியும் என்பதன் ஆலோசனையை திட்டமிட்டு மறுதலித்தது ஏன்? முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்பதை விண்ணப்பம் என்பதை விட நுழைவு கட்டணம் கட்டியவர்கள் என்று மாற்றியது ஏன்? வரைவோலை எடுப்பதற்கு மும்பை வங்கியின் அதிகாரிகளுக்கு எங்கிருந்தெல்லாம் உத்தரவுகள் போடப்பட்டன என்பது தனி வரலாறு. அதில் விதிமுறைகள் மீறப்பட்டன. அதைப்பற்றி நீங்கள் சொல்ல தயாரா?

6. நீரா ராடியா உரையாடல்கள் இவை எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வந்து விட்டனவே. இது பற்றி நீங்கள் வாய் திறக்காதது ஏன்?

7. இன்று பெரம்பலூரில் உள்ள உங்கள் சொத்துக்களின் மதிப்பு என்ன? உங்களின் முன்னாள் பணி சாதாரண ஜுனியர் வழக்கறிஞர் தானே?

8. கலைஞர் டிவிக்கு கொடுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் குறித்து வாய்திறக்காதது ஏன்? நீங்கள் சட்டப்படி தான் செய்தீர்கள் என்றால் யுனிடெக் நிறுவனத்திற்கும் கோபாலபுரத்திற்கும் என்ன சம்பந்தம்.?

9. தயாநிதி மாறன் உங்களுக்கு முன் இதே வேலையை தான் செய்தார் என்பது உண்மை தான். ஆனால் அந்த வருமானம் முரசொலி மாறன் குடும்பத்திற்கு மட்டுமே சென்றது. தங்களுக்கு வரவில்லை என்பதால் தானே உங்கள் தலைவர் ஆரம்பம் முதலே தயாநிதி மாறன் மேல் கடுப்பாக இருந்தார். அதனால் தான் தற்குறியான உங்களை அந்த இடத்திற்கு கொண்டு வந்தார். இது உங்களுக்கு தெரியும் தானே. அதனால் தான் இவ்வளவு துணிகர செயலில் இறங்கினீர்கள்.

10.மேலும் உங்களுக்கு கிடைக்கப்பெற்ற தொகையில் காங்கிரஸுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தானே இந்த மொத்த கொள்ளையுமே நடைபெற்றது. அதனால் தான் பிரதமர் உங்களுக்கு எழுதிய கடிதங்களை கூட அலட்சியப்படுத்தினீர்கள். நீங்கள் கடைசியாக எழுதிய கடிதத்திற்கு பிரதமர் ஒருமாதம் கழித்து "Received your letter" என்பதாக பதில் எழுதினார். உலகத்தில் இது மாதிரி எங்கு நடக்கும்? இதிலிருந்தே உங்களுக்கு அந்த தைரியத்தை யார் கொடுத்தார் என்பது புரிகிறது.

7நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..! Spectrum-raja

11. திமுகவில் உள்ள மற்றவர்கள் போலல்லாமல் நீங்கள் சிறந்த வாசிப்பாளர். பெரியாரை நேசிப்பவர். இருந்தும் பெரியாரின் நெறிமுறைகளுக்கு மாறாக இவ்வளவு பெரிய துணிகர செயலில் இறங்கியது ஏன்? எல்லாம் கோபாலபுரம் கொடுத்த தைரியம் தானே? அதனால் தானே சி.பி.ஐ விசாரணையில் மிகவும் பிடிவாதமாக இருந்தீர்கள். சாதாரண மனிதனை விசாரிப்பது போல் சி.பி.ஐ தன்னை விசாரிக்க முடியாது என்ற தைரியத்தில் தானே அவ்வாறு பிடிவாதமான பதிலை சொன்னீர்கள். மொத்தத்தில் ராசா அவர்களே நீங்கள் சரியான மனிதராக இருந்து தவறான மனிதராக மாறி, தவறான இடத்தில் இருக்கும் மனிதர்.

12. தலைமை தணிக்கையாளரை நான் நீதிமன்றத்திற்கு இழுப்பேன் என்கிறீர்கள். ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி என்று குறிப்பிடுவதற்கு, அவருக்கும் அல்லது திமுகவிற்கும் என்ன முன்விரோதம்? அல்லது சொத்து தகராறா? பங்காளி சண்டையா? சந்தை விலையை அடிப்படையாக வைத்து தானே அவர் முடிவு செய்தார். அதாவது உங்களிடமிருந்து லைசன்ஸ் பெற்ற நிறுவனங்கள் அதை பல மடங்கு அதிகப்படியான விலைக்கு விற்றன. அன்றைய தொலைபேசி பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை இவற்றை வைத்து தானே அவர் முடிவு செய்தார். கூட்டி கழித்து பாருங்கள் உங்கள் மனசாட்சிக்கே அது தெரியும்.

13. சர்க்காரியா ஊழல் கூட விஞ்ஞானமுறைப்படி தான் நடைபெற்றது. அது மாதிரி தான் இதுவும். ஆகவே நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்று தலைவர் கொடுத்த தைரியம் தானே உங்களுக்கு.... உங்கள் காரணமாக தானே அவர் ஈழப்போரில் நாடகமாடினார். போரை நிறுத்துவதற்கு இந்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க முடியாமல் பல்லாயிரம் உயிர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு காரணமானார்.இந்த ஆன்மாக்களின் பழிபாவம் உங்களை சும்மா விடுமா?

14. நீங்கள் ஒரு விஷயத்தை மட்டும் வெளியில் சொல்வதில்லை. லாவகமாக தவிர்த்து விடுகிறீர்கள். அதாவது உங்கள் அதிகார காலத்தில் மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனம் எவ்வளவு நட்டமடைந்தது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? இதன் காரணமாக தொலை தொடர்பு ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுப்பதற்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவு செய்திருக்கிறதே? அவர்களின் கண்ணீர் உங்களை சும்மா விடுமா? கண்டிப்பாக ஒரு காலத்தில் உங்களை தீண்டிக்கொல்லும்.

15. திமுகவின் இணையதள அல்லக்கைகளே, செம்புகளே நீங்கள் இதற்கு குருட்டுத்தனமாக வக்காலத்து வாங்கினால் நீங்களும் இதன் பங்காளிகளாவீர்கள்.


நன்றி! எச்பீர்-முஹம்மது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..! Empty Re: நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..!

Post by ராஜா Mon Jul 09, 2012 3:03 pm

திராவிடர் கழகங்கள் , தமிழ்நாட்டை பிடித்த சனி.....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..! Empty Re: நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..!

Post by dhilipdsp Mon Jul 09, 2012 3:07 pm

அதிர்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..! Empty Re: நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..!

Post by விநாயகாசெந்தில் Mon Jul 09, 2012 3:23 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ராஜா wrote:திராவிடர் கழகங்கள் , தமிழ்நாட்டை பிடித்த சனி.....


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..! Empty Re: நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..!

Post by T.N.Balasubramanian Mon Jul 09, 2012 10:16 pm

" முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்பதை விண்ணப்பம் என்பதை விட நுழைவு கட்டணம் கட்டியவர்கள் என்று மாற்றியது ஏன்? வரைவோலை எடுப்பதற்கு மும்பை வங்கியின் அதிகாரிகளுக்கு எங்கிருந்தெல்லாம் உத்தரவுகள் போடப்பட்டன என்பது தனி வரலாறு. அதில் விதிமுறைகள் மீறப்பட்டன"

ஒரு டிடி எடுப்பதற்கு எத்தனை நேரம் ஆகும் என்று மிக சிறந்த எத்தனை கேட்டாலும் தெரியும். ஆனால் 2G லைசென்ஸ் பெறுவதற்கு எத்தனை எத்தனை டிடிகள் எத்தனை இலகுவாக பெறமுடிந்தது என்று அறியும்போது எத்தனை வியப்பு. எத்தனை சுறுசுறுப்பு நம் வங்கி அதிகாரிகளிடம். எத்தனை லாவகம் நம் முதலாளிகளிடம்.எத்தனை ஒத்துழைப்பு நம் மந்திரிகளிடம்.எத்தனை பலமுறை பல முகங்களில் பலமுறை பார்க்கமுடிந்தது. எத்தனை தவம் பண்ணிய பூமி இது.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..! Empty Re: நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி கலந்துகொண்ட முதல் பொது விழா: எஸ்.பி. முத்துராமன் : காணொளி
» ஒருதடவை இன்சுலின், நீண்ட நாட்களுக்கு நீரிழிவு நோய்க்கு நிவாரணம்
» ஒருதடவை இன்சுலின், நீண்ட நாட்களுக்கு நீரிழிவு நோய்க்கு நிவாரணம்
» ஸ்பெக்ட்ரம் ‘வசூல் ராஜா’ தயாநிதி.. தயாநிதியேதான்!
» கவரிங் நகை நீண்ட நாட்களுக்கு புது நகைபோல் பளபளப்பாக இருக்க…! – வீட்டுக்குறிப்புகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum