Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு!
+2
யினியவன்
முரளிராஜா
6 posters
Page 1 of 1
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு!
கோவை: மூளைச் சாவு ஏற்பட்ட கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் ஏழு பேருக்குப் பொருத்தப்பட்டு அவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். அந்த ஏழு பேரின் குடும்பமும், இந்தக் கோவை மாணவிக்கு கண்ணீர் மல்க நன்றி கூறி நிற்கின்றனர்.
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் கே.மணியன். மதிமுக நகர அமைப்பாளராக இருக்கிறார். சொந்தமாக ஒர்க் ஷாப் வைத்திருக்கிறார். இவருக்கு சரண்யா என்ற 21 வயது மகள் இருந்தார். கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில், பிஇ எலக்ட்ரிகல் என்ஜீனியரிங் படித்து முடித்துள்ளார். படிப்பை முதல் வகுப்பில் பாஸ் செய்திருந்தார்.
இந்த நிலையில் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது தோழிகள், உறவினர்களுடன் கார் மூலம் சேலம் சென்றுள்ளார். கருத்தரங்கை முடித்துக் கொண்டு திரும்புகையில், சித்தோடு அருகே கார் மீ்து லாரி மோதியது. இதில் சரண்யாவுடன் வந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சரண்யாவும், அவரது தோழி பானுப்பிரியாவும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினார்கள். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சரண்யாவை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் மூளைச்சாவை சந்தித்தார்.
இதையடுத்து தனது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய தந்தை மணியன் முன்வந்தார். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளில் டாக்டர்கள் இறங்கினர். டீன் டாக்டர் குமரன் நேரடி மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
சென்னை அப்பல்லோ மருத்துவ குழுவினர் நேற்று காலை விமானம் மூலம் சென்று, சரண்யாவின் ஈரல் மற்றும் இருதய வால்வு உறுப்புகளை தானமாக பெற்று, உடனடியாக விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர்.
ஏற்கனவே தயாராக இருந்த ஒரு நோயாளிக்கு ஈரல் பகுதியை பொருத்தினார்கள். இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கு இருதய வால்வுகளை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் சரண்யாவின் இரு கண்களும், கோவையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் பெற்றுச்சென்றனர். மாணவியின் கண்கள் 2 பேருக்கு பொருத்தப்பட்டது.
இதேபோல் சரண்யாவின் 2 சிறுநீரகங்களும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உள்ள 2 நோயாளிகளுக்கு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சரண்யாவின் உடல் உறுப்புகளின் மூலம் சென்னை மற்றும் கோவையில் உள்ள 7 பேர் புது வாழ்வு பெற்றுள்ளனர். தனது மகளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்த தந்தை மணியன் கூறுகையில்,
என்னுடைய மகள் சிறுவயது முதலே படிப்பில் சுட்டி. மற்றவர்களின் நலனிலும் அக்கறை செலுத்தி வந்தாள். அதனால்தான் கல்லூரியில் படிக்கும்போதே சேவைப்பணிகளில் ஈடுபட்டு ரோட்ராக்ட் விருதுகளை அதிகமுறை பெற்று இருந்தாள். ரத்ததானமும் செய்வாள்.
விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த என்னுடைய மகளுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டதாக டாக்டர்கள் கூறியது, பேரிடியாக இருந்தது. பாசமாக வளர்த்த மகள் மரணம் அடைந்தது பெரும் வேதனையை அளித்தாலும், அவளுடைய உடல் உறுப்புகளை பலருக்கு தானமாக அளிக்க முன்வந்தேன்.
ஈரல், சிறுநீரகம், கண்கள், இருதய வால்வு ஆகிய உறுப்புகள் மூலம் 7 பேருக்கு மறு வாழ்வு கிடைத்து இருப்பது, மரணத்தை வென்று என் மகள் இன்னும் வாழ்வதாகவே உணர்கிறேன். உடல் உறுப்புகளை தானம் செய்ய எடுத்த முடிவின் மூலம் சேவை மனப்பான்மை மிக்க எனது மகளின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையும் என்று நம்புகிறேன்.
இந்த வேதனையான நிலையிலும், மற்றவர்களுக்கு நான் கூறிக்கொள்வது, உடலை புதைத்து உறுப்புகளை சிதைத்து விடாதீர்கள். இதன் மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்கும் என்றால் உடல் உறுப்புகளை தானம் செய்து அதன் மூலம் வாழ்க்கை அளியுங்கள் என்று கூறிக்கொள்கிறேன் என்றார் அவர்.
இதில் வேதனை என்னவென்றால் சரண்யாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சாலினா. பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர். இருவரும் எல்.கேஜி முதல் என்ஜீனியரிங் வரை ஒன்றாகப் படித்து வந்தனர். படிப்பிலும் இருவரும் சுட்டியாக இருந்துள்ளனர். இருவரும் படிப்பை தலா 93 சதவீத மதிப்பெண்களுடன் முடித்துள்ளனர். இருவருக்கும் ஒன்றாகவே இன்போசிஸ் நிறுவனத்தில் வேலையும் கிடைத்துள்ளது. பணியில் சேர காத்திருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மரணத்திலும் கூட இருவரும் பரிதாபமாக ஒன்று சேர்ந்துள்ளனர்.
நன்றி ஒன் இந்தியா

முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு!
மிக மிக பாராட்டப் படவேண்டிய செயல் இது.
தன் பெண்ணை இழந்தாலும் மற்றவர்களை வாழ வைக்க நினைத்த உள்ளங்களுக்கு தலை வணங்குகிறேன்.
படித்து வென்ற மாணவியை, மகளை இழந்த குடும்பத்திற்கு அனுதாபங்கள்.

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு!
இந்த மனித நேய செயல் பாராட்டாதக்கது ...தான் இறந்தாலும் பலருக்கு வாழ்வளித்த சரண்யா என்றும் வாழவாரக ... இதற்கு எனது கண்களின் கண்ணீரே சாட்சி ... உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய பதிவு ...நன்றி முரளி அண்ணா ...
arjunsugu- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
Re: அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு!
யினியவன் wrote:மிக மிக பாராட்டப் படவேண்டிய செயல் இது.
தன் பெண்ணை இழந்தாலும் மற்றவர்களை வாழ வைக்க நினைத்த உள்ளங்களுக்கு தலை வணங்குகிறேன்.
படித்து வென்ற மாணவியை, மகளை இழந்த குடும்பத்திற்கு அனுதாபங்கள்.
Re: அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு!
தான் இறந்தாலும் உறுப்புகளை கொடுத்து அடுத்தவர்களை உயிர் பிழைக்க செய்த அந்த உள்ளத்துக்கு மிக்க நன்றிகள்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு!
எனக்கு ஒரு சந்தேகம் தானாமா கொடுக்கும் இந்த உறுப்புகளை இன்னொருவருக்கு இலவசமா தானே அப்பல்லோ போன்ற மருத்துவமனைகள் பொறுத்துகின்றன....
Re: அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு!
எனக்கும் அந்த டவுட் தான் ராஜா அண்ணா அப்போல்லோ விற்கு வருகிறவர்கள் கொஞ்சம் பணம் உள்ள பார்ட்டி தான் வருவார்கள் அப்படியிருக்க அவர்களுக்கு இலவசமாக செய்வார்கள்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Similar topics
» ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா; மும்பையில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
» உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 458 பேருக்கு பாதிப்பு: 634 பேர் குணமடைந்தனர்
» கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேருக்கு தூக்கு : 20 பேருக்கு ஆயுள்: சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum