புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
5 Posts - 2%
i6appar
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
2 Posts - 1%
prajai
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
443 Posts - 47%
heezulia
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
30 Posts - 3%
prajai
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_m10பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)

Page 1 of 2 1, 2  Next

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Wed Aug 29, 2012 2:27 pm

2004 ஆகஸ்ட் 28 தேதி காலையில் முதன் முதலாய் சிங்கப்பூரில் வந்து இறங்கினேன்(வேலைக்கான விசாவில்),அப்போ 20 வயசு. 2001-ல் டிப்ளமோ முடித்து பின் பெங்களூரில் இரண்டு வருடம் குப்பைகொட்டிய பின் (ஏன் உங்க ஊருல குப்பை கொட்ட இடமில்லையான்னு கேட்கப்பிடாது ஆமா..புன்னகை).ஒரு முகவர் மூலம் சிங்கை செல்லும்வாய்ப்பு வந்தது.அதே முகவர் மூலம்தான் என் நண்பர்(கார்த்திக்) சிங்கைக்கு சென்றார் என்பதால் நானும் சரியென்று பணம் செலுத்தித் தயாரானேன். கொஞ்சம் பிரட்சனைக்கு பின் 2004 ஆகஸ்ட்-27 ஆம் தேதி இரவு சிங்கை பயணம் உறுதியானது. அதற்காக சென்று சென்னையில் தங்கியிருந்தபோது அந்த முகவர் "நீங்களே விமானச் சீட்டு எடுக்கவும் பின்னர் சிங்கையில் வந்தவுடன் அந்த பணத்தை தான் தருகிறேன்"என கூறிவிட்டார்.என்னோடு பாண்டிச்சேரியை சேர்ந்த சசிக்குமார் என்ற நண்பரும் சிங்கை செல்வதற்காக அதே முகவர் மூலம் வந்திருந்தார். அப்போது எங்களிடம் கையில் இருந்த எல்லா பணத்தையும் செலுத்திப் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு விமானநிலையம் வந்துவிட்டோம். எல்லாம் முடிந்து உடன்வந்திருந்த அப்பா,மாமா இருவரிடமும் விடைபெற்று செல்லும் நேரத்தில் என் மாமா தன் பட்டாபட்டி டாயரில் இருந்து 10 ,௦௦௦ ரூபாய் யை எடுத்து என் கையில் கொடுத்தார்.

சிங்கப்பூர் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது,சில மாதங்களுக்கு முன் அங்கு வேலைக்குச் சென்ற நண்பர் கார்த்திக்- தவிர வேறு யாரையும் தெரியாது, என்ன மொழி? எப்படிப் பட்ட மக்கள்? வாழும் முறை என்ன ? என எதுவும் தெரியாது, முகவருக்கு செலுத்திய பணம் என்பது எங்களுக்கு மிக மிக பெரிய தொகை கிட்டதட்ட முழுத்தொகையும் என் உறவுகள் கொடுத்ததுதான் அதில் எங்கள் பங்கு வெறும்10 % மட்டுமே. எல்லாம் என் மீதான அவர்களின் நம்பிக்கை. எந்த பிரச்சனையும் இன்றி வேலை செய்து கடனை அடைக்கணும். வீட்டு அரவணைப்பிலேயே வளர்ந்தவன் நான் பெங்களூரில் வேலை பார்த்த போதே வீடு/ஊரு நினைவுகள் வாட்டி எடுக்கும் அப்படி இருக்க வெகுதொலைவில் வெளிநாட்டில் அடுத்த 2 வருடங்கள் கழிக்கணும் இப்படியாக பல எண்ணங்களுடன் விமானப் பயணம் முடிந்து சிங்கப்பூரில் வந்து இறங்கினேன். எங்களை வேலை செய்யும் கம்பெனிக்கு அழைத்து செல்ல முகவர் வந்து இருந்தார் அவர்களோடு ஒரு டக்ஸ்யில் புறப்பட்டோம், "சிங்கப்பூர் உங்களை அன்புடன் வரவேற்கிறது" - என்று தமிழில் எழுதியிருந்ததை படித்தபடி விமான நிலையம் விட்டு வெளியேறினோம்.

சாலையின் இருபக்கமும் பச்சை பசேல் என மரங்கள்,அழகான சுத்தமான சாலைகள்,வாகனம் வழுக்கிக்கொண்டு செல்வது போல இருந்தது. விரைவுச்சாலையை கடந்து குடியிருப்புப் பகுதிக்குள் வாகனம் நுழைந்த போது ஏதோ கட்டிடக் காட்டுக்குள் வந்த உணர்வு. அதே முகவர் மூலம் ஏற்க்கனவே இங்கே வேலைக்கு வந்த சிலர் தங்கியிருக்கு ஒரு வீட்டில் எங்கள் பெட்டியை வைத்துவிட்டு பிறகு நாங்கள் வேலை செய்யப்போகும் இடத்தில் எங்களை அறிமுகம் செய்ய அவர் அழைத்துச் சென்றார். அன்று சனிக்கிழமை என்பதால் அறிமுகம் மட்டுமே,அது முடிந்ததும் எங்கள் கையில் ஆளுக்கு 10 வெள்ளி கொடுத்துவிட்டு விடைபெற்றுவிட்டார் அந்த முகவர்.அதைவைத்து ஒருநாளுக்கு சாப்பிட மட்டுமே முடியும்.

சிங்கப்பூரில் முதலில் நாங்க தங்கியது உட்லேண்ட்ஸ்(woodlands) பகுதிதான்.எங்களை தங்கவைத்து விட்டுச் சென்ற வீட்டில் இருந்தவர்கள் அன்று தங்களின் வேலையை முடித்துக்கொண்டு வந்தபின்தான் தெரிந்தது அங்கே ஏற்க்கனவே அளவுக்கு அதிகமாக ஆட்கள் தங்கியிருப்பதால் நாங்கள் வேறு வீட்டில் சென்று தங்க வேண்டும் என்று.அப்போது என்னிடம் என் மாமா கொடுத்திருந்த பத்தாயிரம் இந்திய ரூபாயை சிங்கை வெள்ளியாக மாற்றிய பணம் மட்டுமே இருந்தது.அந்தநேரத்தில் நாங்கள் வேலை செய்த இடத்தில் உடன்பணிபுரியும் அசோக் என்ற நண்பர் "பெட்டியை எடுத்துகிட்டு எங்க வீட்டுக்கு வாங்கடா " என்று உரிமையோடு அழைத்தார். எதையும் எதிர்பார்க்காமல் எங்களை அங்கே 15 நாட்கள் தங்கவைத்ததோடு பிறகு வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கவும் உதவி செய்தார். இதை என் அம்மாவிடம் தொலைபேசியில் சொன்னபோது "எப்பவுமே நம்ம சாமி உன் கூட வரும்டா.." என்று சொன்னார். ஆமாம் ஆமாம் இப்படியும் சில மனிதர்கள் உடன் வந்து இருக்கிறார்கள்

அந்த 2004 ஆம் ஆண்டில், 10 சிங்கப்பூர் வெள்ளிக்கு 30 நிமிடங்கள் ஊருக்கு அழைத்துத் தொலைபேச முடியும் இப்போது அதே தொகைக்கு கிட்டதட்ட 11 மணி நேரம் பேசலாம்.(இங்கே எந்த "ராசா"-வும் அமைச்சராக இல்லை என்பதையும் இங்கே குறிப்பிடணும்..புன்னகை) . அன்று ஒரு சிங்கை வெள்ளி 26 இந்திய ரூபாய் என்று நினைக்கிக்றேன் இன்று 44 இந்திய ரூபாய்.இப்படி எவ்வளவோ மாற்றம்.. என்னுள்ளும் கூட..புன்னகை . வழக்கமாக புதுவேலையிடத்தில் வரும் சிக்கல்கள் போல் இங்கேயும் சில மாதங்க்கள் சில சிக்கல்கள் இருந்தன பின் இடமும்/வேலையும் பழகிப்போனது. அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன் நெருங்கிப்பழக மாட்டேன் எனவே மிகக் குறுகிய நட்பு வட்டம்தான்,குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு பிரட்சனை இல்லை ஒரு அறைக்கு புதிதாய் வந்தவுடன் அன்று இரவு ஒன்றாய் குடித்தாலே போதும் அடுத்தநாள் முதல் மாமன் மச்சான் ஆகிவிடுவார்கள் நமக்கு அந்தத் தகுதியும் இல்ல..புன்னகை. பின்னர் உட்லேண்ட்ஸ் பகுதி நூலகம் எனக்கு நல்ல துணையாக இருந்தது, நிறைய புத்தகங்கள் நல்ல சுழல் வார இறுதி நாட்களை கழிக்க அதுவே எனக்கு நல்ல இடமாக இருந்தது .

கிரிக்கெட் என் விருப்ப விளையாட்டு, அதென்னவோ கிரிக்கெட் விளையாடும் போது எல்லாம் மறந்து முழு மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு கார்த்திக் என்ற நண்பன் மட்டுமே தெரியும் என்ற நிலையில் சிங்கப்பூர் வந்த எனக்கு நிறைய நட்புகளை தந்ததில் இந்த கிரிக்கெட் விளையாடுக்கும் முக்கிய பங்கு. சதிஸ்,பிரபு,முருகானந்தம்,குமார்,கண்ணன்,ராம்கி,சுரேஷ் என கிரிக்கெட் மூலம் நிறைய நட்புகள் கிடைத்து ஊரு/உறவு பிரிவை கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. விடுமுறை நாட்கள் என்றால் காலையில் துவங்கி சூரியன் மறையும் வரை ஒரே ஆட்டம்தான்..புன்னகை

இங்கே வாடகை வீட்டில் எல்லா வசதிகளும் இருக்கும். 5 -6 பேர் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கிக்கொள்வோம். எல்லா வீடுகளும் ஒருவருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுப்போம் பலவீடுகள் ஒருவருடகாலம் முடிந்ததும் எதாவது காரணம் சொல்லி காலி செய்ய சொல்லிவிடுவார்கள் எனவே எட்டு ஆண்டுகளில் பல வீடுகள் மாறியாச்சு, ஒவ்வொரு முறையும் மாறும் போது ஓன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே அடுத்த வீட்டுக்கு ஒன்றாக செல்வோம் இப்படியாக இத்தனை ஆண்டுகளில் பலருடன் தங்கி பேசி பழகும் வாய்ப்பு கிடைத்து நல்ல அனுபவம்.

வலைப்பதிவுகள் : 2008 ஆம் ஒரு சுபயோக சுபதினத்தில் இணையத்தில் எதையோ தேடியபோது வலைப்பதிவுகள் அறிமுகமானது விளையாட்டாக நானும் இந்த பக்கத்தை துவங்கி "ஆனாலும் காதலிக்கிறோம்" என்ற ஒரு பதிவிட்டேன்.பின்னர் வீட்டில் இருக்கும் எல்லா நேரங்களிலும் இணையம்தான். ஒரு நாள் கோவி கண்ணன் அண்ணனிடம் இருந்து ஒரு பின்னுட்டம் வந்தது, பின் மின்னஞ்சல் மூலம் கைபேசி எண் கொடுத்து சிங்கை பதிவர் சந்திப்புக்கு வருமாறு அழைத்தார், யாரிடம் அறிமுகப்படுத்தினாலும் "என் தம்பி மாதிரி " என்று சொல்லும் கோவிகண்ணன் அண்ணன் குழலி, ஜோதிபாரதி, பேசிகிட்டு இருந்தா சிரிச்சுகிட்டே இருக்கலாம் என்று சொல்லும் வகையில் பேசும் ரோச்விக் அண்ணன், பார்த்த அன்றே பல நாள் பழகியவர் போல் பேசிய நட்புடன் ஜமால், நிசமா நல்லவன்(?) இப்படியாக சிங்கை பதிவர் நண்பர்கள் பலரின் நட்பும் கிடைத்து (நான் தனியாள் இல்ல ஆமா....புன்னகை).

மொழி,வாழும் முறை, சுதந்திரம்,பாதுகாப்பு என்று எதுவும் இந்தியாவில் வேறு ஊரு/மாநிலங்களில் வேலை செய்யும் இந்தியர்களுக்கே முழுதாய் கிடைக்குமா என்ற உறுதி இல்லாத நிலையில் ஒரு அந்நிய நாட்டில்,பல மொழி/கலாசார மக்கள் வாழும் இடத்தில் எனக்கு எல்லாம் முழுதாய் கிடைத்தது என்றே சொல்வேன்.இன்று என் மனைவியையும் அழைத்துவந்து இங்கே வாழும் உறுதியையும் நம்பிக்கையும் இந்த சிங்கப்பூர் எனக்கு கொடுத்துள்ளது.ஏதொ இப்போதுதான் சாங்கி விமான நிலையத்தில் வந்து இறங்கியது போல இருக்கு ஆனால் இன்றோடு சிங்கை வந்து 8 ஆண்டுகள் முடிந்துவிட்டது. எங்கள் பழைய கடன்கள் அடைத்து, குடிசையை மாடி வீடாக்கி பொருளாதார ரீதியில் பாதுகாப்பான ஒரு நிலையையும்,அமைதியான பாதுகாப்பான ஒரு வாழ்வையும் இன்று வரை தந்துகொண்டிருக்கும் சிங்கைக்கு என் வணக்கங்களும்/நன்றிகளும் .

பிரியமுடன் பிரபு ..புன்னகை
http://priyamudan-prabu.blogspot.com/2012/08/pothanur-singapore.html

சிங்கப்பூர் தேசிய தின கொண்டாட்டம்-2012-புகைப்படங்கள்
http://priyamudan-prabu.blogspot.com/2012/08/2012-singapore-national-day-2012-photos.html

சிங்கப்பூர் தேசிய தின கொண்டாட்டம்2011- புகைப்படங்கள் பார்க்க
-singapore National Day-2011 http://priyamudan-prabu.blogspot.com/2011/08/blog-post.html

அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 29, 2012 3:05 pm

உங்கள் சிறந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 3:09 pm

ஆமா நீங்க அதிவேகப் பதிவாளர் போத்தனூர் பிரபு தானே! இப்ப சிங்கப்பூரிலா இருக்கீங்க.. என்னை தெரிகிறதா?

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Wed Aug 29, 2012 3:26 pm

உங்கள் சிறந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி
/////\\
நன்றி

அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Wed Aug 29, 2012 3:27 pm

நான் பிரபு தான் ,ஆனால் அதிவேகம் எல்லாம் இல்லைங்கோ..ரொம்பாஆஆஆ ஸ்லோ ...புன்னகை

அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 3:28 pm

priyamudanprabu wrote:நான் பிரபு தான் ,ஆனால் அதிவேகம் எல்லாம் இல்லைங்கோ..ரொம்பாஆஆஆ ஸ்லோ ...புன்னகை
சரி நீங்க போத்தனூர் பிரபு தானே! வேறு ஒரு தளத்தில்

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Wed Aug 29, 2012 3:38 pm

அமாம் ..நான்தான் அது...

அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 3:43 pm

priyamudanprabu wrote:அமாம் ..நான்தான் அது...
அப்பாடா ஒத்துக்கிட்டாரு.. மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 29, 2012 4:57 pm

அசுரன் wrote:
priyamudanprabu wrote:அமாம் ..நான்தான் அது...
அப்பாடா ஒத்துக்கிட்டாரு.. மகிழ்ச்சி
[quote="அசுரன்"]
priyamudanprabu wrote:அமாம் ..நான்தான் அது...
அப்பாடா ஒத்துக்கிட்டாரு.. :த

யாரு எங்க இருந்தாலும் பொறி வச்சி பிடிக்கிரிங்களே அது எப்படி அண்ணே சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 5:14 pm

இரா.பகவதி wrote:அப்பாடா ஒத்துக்கிட்டாரு.. யாரு எங்க இருந்தாலும் பொறி வச்சி பிடிக்கிரிங்களே அது எப்படி அண்ணே சோகம்
அதுவா தம்பி... சரி சொல்லவேனாமேன்னு பார்த்தேன்.... சரி சொல்றேன்.

என்னிடமுள்ள ஒரு மென்பொருள் மூலமாக நீங்க ஒருநாளைக்கு எந்த எந்த தளங்களை எல்லாம் சுற்றிவந்தீர்கள் என்று என்னால் பார்க்க முடியும்... அதற்கு நீங்க ஆன்லைனில் இருந்தாலே போதும், நமக்கு வேலை ஆயிடும். சிப்பு வருது

அந்த மாதிரி தான் நம்ம பிரபுவை பிடித்தேன். பாஸ்வேர்ட் முதற்கொண்டு எல்லாத்தையும் லவட்டிடலாம். மேலும் உங்கள் கணினியை இங்கிருந்தே ரிமோட் மூலம் ஆப்பரேட் செய்யலாம். நீங்க எங்கள் பள்ளியில் வந்தபோது பார்த்திருப்பீங்களே! மாணவர்களின் கணினித்திரையை நான் எனது மானிட்டரில் பார்த்தேனே பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)  745155 கண்ணடி கண்ணடி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக